வணக்கம் பதிவர்களே...சென்ற மாதம் அடியேன் ஆரம்பித்து வைத்த "கலாய்க்க போவது யார் ?என்ற போட்டியின் முடிவு அனைவரும் அறிந்ததே. அடியேன் ஒரு கார்டூன் போட்டு அதில் வாசகர்களை ஒரு வசனத்தை எழுத அழைத்து இருந்தேன். அநேகர் பங்கேற்ற இந்த போட்டியில் நண்பர் மலர்வண்ணன் அளித்த கார்ட்டூன் வெற்றி பெற்றது.
இந்த போட்டியை நான் ஆரம்பிக்கும் போது என் மனதில் வந்த ஒரே எண்ணம் "பதிவர்களாக இருக்கும் நமக்கு இந்த பதிவுகளினால் வரும் ஒரே வருமானம் ஒரு மகிழ்ச்சி தான்". இந்த மகிழ்ச்சியை நாம் எப்படி நம் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள போகிறோம்.
அதனால் தான் இந்த போட்டியை உருவாக்கி வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து 2,500 ருபாய்க்கு கிப்ட் கார்ட் கொடுத்து அதை அவர்கள் தம் குடும்பத்தோடு சேர்ந்து மகிழும் படி அமைத்தேன்.
முதல் போட்டியில் வெற்றி பெற்ற மலர்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றார். அவர் அதை எப்படி கொண்டாடினார் என்பதை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார் .அதை படிக்க இங்கே சொடுக்கவும்.
சரி, இந்த போட்டியை மாதம் ஒரு முறை வைக்கலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். அடுத்த போட்டிக்கான கார்ட்டூன் இது தான்.
மயங்கி விழுற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?
அப்படி அவர் கேட்ட செய்தி என்னவாய் இருக்கும்?
உங்கள் காலாய்ப்பை பின்னூட்டத்தில் தாருங்கள்...போட்டிக்கு வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
போட்டியை பற்றி சில விதிமுறைகள்.
மொத்த பரிசு தொகை ருபாய் 2,500.
- உணவகத்தின் "கிப்ட் கார்டாக" மட்டுமே வழங்கப்படும். பணமாக அளிக்க படமாட்டாது.
- ஏற்கனவே வென்றவர்களும் பங்கேற்கலாம்.
- ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
- ஏப்ரல் மாதத்தின் போட்டி இன்று (மார்ச் 27) துவங்குகின்றது.
- முடிவுகள் ஏப்ரல் 9ம் தேதி வெளிவரும்.
நண்பர்கள் சிலரின் யோசனையால் போட்டியின் நாட்கள் மாற்ற பட்டுள்ளது.
மார்ச் 27ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். இவ்வாறு செய்வதின் மூலம் போட்டியின் முடிவிற்காக பங்கேற்பவர்கள் ஆவலோடு இருக்கும் போதே அறிவிக்க படும் வாய்ப்பு. இந்த யோசனை சரியாக பட்டதால் போட்டியின் முடிவு ஏப்ரல் 9ம் தேதி மாலை 7 மணி (இந்திய நேரப்படி) அறிவிக்கப்படும்.
தங்கள் புரிதலுக்கு நன்றி.
பின் குறிப்பு :
இது ஒரு சராசரி மனிதனால் இன்னொரு சராசரி குடும்பத்திற்காக நடத்தபடும் சராசரி போட்டி. வரும் பின்னூட்டங்களில் எனக்கு பிடித்ததை தேர்வு செய்கிறேன்.
தங்களில் யாரவது இந்த முறையில் வெற்றியை தீர்மானம் செய்வதை விட, வேறு மாதிரியாக வெற்றியை தீர்மானித்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தால், எனக்கு தெரிவியுங்கள்.
மற்றும்.. ஒரே ஒரு பரிசிற்கு பதிலாக முதல் மூன்று பரிசு தரலாமே என்ற ஒரு எண்ணமும் சில நாட்களுக்கு முன் வைக்கப்பட்டது. அதை பற்றி உங்களின் கருத்தையும் கூறுங்கள்.
கடந்த போட்டியில் மலர் வண்ணன் அவர்களின் வெற்றி பெற்ற கார்ட்டூன், இதோ...