Thursday, March 3, 2016

கலாய்க்க போவது யாரு? உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டி!

சில நாட்களாகவே நான் பதிவுகள் எழுதுவதை சற்று நிறுத்தி விட்டு கார்ட்டூன் கலாய்த்தலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த கார்ட்டூன் முகநூலுக்கு ஏற்றவாறு உள்ளதால் அதில் போட்டு விட்டு அதையே அந்த நாள் இறுதியில் பதிவாக மாற்றி வருகிறேன்.


இந்த கார்ட்டூன் பொதுவாக அரசியலை நையாண்டி செய்வது போல் அமைந்தாலும் அன்றைக்கான செய்தித்தாள்களில் வரும் செய்தியை கொண்டு எழுதுகிறேன்.

தலைப்பிற்கு வருகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் படத்திற்கு நகைச்சுவையாக நையாண்டி தனமாக ஒரு விமரிசனம் வேண்டும். அதை பின்னூட்டத்தில் போடுங்கள்.எனக்கு பிடித்த வசனத்திற்கு பரிசாக ஒரு கிப்ட் கார்ட் வழங்கப்படும். கிப்ட் கார்டின் மதிப்பு 2,500 ரூபாய். இதில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் இருந்தால் இந்த கிப்ட் கார்ட் சென்னையில் அமைந்துள்ள ஒரு சிறந்த உணவகத்தில் இருந்து வரும். வேறு இடங்களில் இருந்து வந்தால் அந்த ஊரில் தாம் விரும்பும் உணவகத்தில் இருந்து வரும்.

இதை வெளிநாட்டில் வாழும் என் இனிய தமிழர்கள் யாராவது வென்றால்... அவர்கள் வாழும் நாட்டில் உள்ள ஒரு சிறந்த உணவகத்தில் இருந்து கிப்ட் கார்டு. (தயவு செய்து இந்திய வாழ் மக்கள் வெற்றி பெறுங்கள், வெளிநாட்டு ஆள் வெற்றி பெற்றால் எனக்கு செலவு அதிகமாயிடும். )

வெற்றி பெற்றவர் தம் குடும்பத்தோடு தாம் எழுதிய வசனத்தை கொண்டாடவே இந்த ஏற்பாடு.


இதோ இந்த போட்டிக்கான கார்ட்டூன்...
யார் வேண்டுமானால் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். வெற்றி பெற்ற பின்னூட்டத்தை அடுத்த புதன் அறிவிப்பேன். அதுவரை எழுதுங்கள்.

மறந்து விடாதீர்கள். நகைச்சுவை முக்கியம்.

ஸ்டார்ட்...

பின் குறிப்பு : அது சரி.. தலைப்பில் மாபெரும், உலகளவு அது இதுன்னு பில்ட் அப் கொஞ்சம் ஓவரா போகுதேன்னு நீங்க நினைப்பது சரிதான். எல்லாம் ஒரு கவர்ச்சி தான்.

கலாய்க்க போவது யாரு .. போட்டி முடிவு! (Click Here)47 comments:

 1. இந்தத் தமிழ்நாட்டு நாற்காலிப் போட்டி நல்லால்ல. நானே உட்கார்ந்துரலாமோ!!!

  ReplyDelete
 2. 2 இந்த நாற்காலியில் அமரும் தகுதி தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என்பதால் எனக்கே எனக்கு!!!

  3. யாரப்பா அங்கே? இந்த நாற்காலில உட்கார யாருமில்ல. ஓரங்கட்டுப்பா இத..

  ReplyDelete
 3. ஜெயிக்கப் போவது யாரு?
  நீதான்!!
  எனக்கே எனக்கா??!!
  130058 கிமீ2 (50216 சதுர மைல்) பரப்பளவு எனக்கே எனக்கா!!!

  ReplyDelete
 4. இதுல யாரு உட்காரப் போறீங்க? ஒரே கன்ஃப்யூஷன். சரி யாரு உக்காந்தாலும் பார்த்து உக்காருங்க. இல்ல விழுந்துருவீங்க..சேர் ஆடுது அதான்..

  ReplyDelete
 5. பிரதமர் பதவின்னு நினைச்சேன்..அட முதல்வர்தானா? அட அது இல்லியா? ஓ மாவட்டச் செயலர்தானா? என்ன? அதுவும் போச்சா? அப்ப அமெரிக்கா போயிட வேண்டியதுதான்... மிஸ்டர் ஒபாமா! ப்ளீஸ் வெயிட்! ஐம் கமிங்யா!..வரேன் மக்களே..ங்!

  ReplyDelete
 6. எனக்குக் கிடைக்கும் பதவியை நான் துளசிகீதாவுக்குக் குடுத்திர்ரேன்பா. மனுசர்(கள்) நாலு கமெண்ட் அடிச்சிருக்காப்ல..? நா ஒன்னுதான?! சரிவுடுறா நிலவா! நம்ம சகாக்கள்தான? வுடு வுடு!

  ReplyDelete
  Replies
  1. தலைவரே! நாங்கள் எத்தனை சொன்னாலும் நீங்க ஒண்ணு சொன்னா போதுமே அது எல்லாத்துக்கும் சமம்... ரஜனி டயலாக்....ஹஹஹ நாங்க சும்மா ஒரு ஜாலிக்குத்தான் இதுல...படம் அழகு. மனசுல என்னவெல்லாமோ தோணுது அதனால சும்மா எப்படி எல்லாம் கலாய்க்கலாம்னும், கலாய்ப்போம்னுதான் பரிசு எல்லாம் நோக்கமில்லை....நம்ம விசுதானே..

   நம்ம தமிழ்நாடு இப்படி ஆகிப் போச்சுப்பாருங்க.

   Delete
 7. இன்னா வாத்யாரே தேர்தல் வருதுன்ன உடனே சேர் டெஸ்டிங்கா?!!! அப்படி ஒண்ணும் நல்லா இருக்கற மாதிரி தெரியலையே..

  பாணி நல்ல காலம் "ஷேர் டெஸ்டிங்கா"னு கேக்காம போன...சேர் நல்லாத்தான் இருக்கு..அதுல உக்காரப் போறவங்களைப் பத்திதான் எனக்கு ஒரே கடுப்பு யோசனை..கன்ஃப்யூஷன்...யாரும் வேலைக்கு ஆவுற மாதிரி தெரியல..

  ReplyDelete
 8. வாத்தியாரே அந்தச் சேர சரியா பாரு...அதுல "அம்மா" னு ஸ்டிக்கர் அடிச்சுருக்காங்களானு...

  அடப் பாவி! பாணி உன் வாய ஃபினாயில் போட்டுக் கழுவு எனக்கு வர்ற கோவத்துல...(ஒருவேளை பாணி சொல்றாப்புல அடிச்சுருப்பாய்ங்களோ!!!)

  ReplyDelete
 9. யப்பா தம்பி நாற்காலியை நல்லா புடி நான் உட்காரனும். பயப்புள்ளையை நம்ப முடியாதே,, நானே புடுச்சிக்கிட்டு உக்காரேன்.அய்யோ அவன வேற கூட்டு சேர சொல்லிட்டேனே,, ஒரு நாற்காலி தானா, தம்பி இன்னொன்னு இல்ல,,

  ReplyDelete
 10. டண் டண் டண்...மக்களே உங்களுக்கு ஒரு போட்டி

  இந்த நாற்காலியில் அமரப் போவது யாரு? அ: அம்மா ஆ: அப்பா/மகன் இ: அக்கா ஈ: மற்றவர்/மாமன், மச்சான்
  வாங்க வந்து சொல்லிட்டுப் போங்க...

  ReplyDelete
 11. தண்டபாணி சொன்னது போல நாற்காலில அம்மா ஸ்டிக்கர்தானா? அப்படித்தான் சர்வே சொல்லுதாமே. தமிழக மக்களுக்கு டோட்டல் அம்னீஷியாவா! ஐயகோ! தமிழ்நாட்டின் தலைவிதி! ஆண்டவரே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாத்த முடியாதோ...

  ReplyDelete
 12. தண்டபாணி அங்க வேற ஏதாவது நல்ல நாற்காலி இருக்கானு பாரு இது சுத்த மோசமா இருக்குது

  வாத்யாரே! உனக்குமா தெரியல? எல்லாமே உடைஞ்சு இல்லனா கீறல் விழுந்து கிடக்குதே....

  அடப் பாவி அப்ப இந்த ஒண்ணுதான் இருக்கா?

  ஹாங்க் வாத்தியாரே நீ இப்ப பிடிச்சுனு இருக்கற மாதிரி யாராச்சும் பிடிச்சுனுவாங்க...ஏன் வாத்யாரே இப்படி டென்ஷான் ஆவுற. போனா போவுதுனு வுடாம

  நெஞ்சு பொறுக்குதிலையே பாணி..

  ReplyDelete
 13. வாத்யாரே நானும் அப்போலேருந்து பாத்துகினு இருக்கேன். யாரை உக்காத்தி வைக்க இப்படி நாற்காலிய பிடிச்சுனு இருக்க?

  அதான் தெரில பாணி ஒரே கன்ஃப்யூஷன்....

  ReplyDelete
 14. இந்த போட்டி வெகு ஜோர்...

  ReplyDelete
  Replies
  1. இப்படி எல்லாம் பதில் சொல்லி தப்பிக்க கூடாது, படத்திற்கு ஏற்ற கருத்து சொல்லுங்க

   Delete
  2. அப்ப நீங்க ஏன் இப்படி கருத்து போடுறீங்க என்று என்னிடம் கேட்க கூடாது..

   Delete
  3. நான் கருத்து போடாதற்கு காரணங்கள் சில 1. போட்டியில் நான் ஜெயித்தாக வரலாறே கிடையாது. 2. இந்தியாவில் உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று போட்டி நடத்துபவரே விருப்படுகிறார்.... 3 நான் ஜெயிச்சா நீயூஜெர்ஸியில் உள்ள ஹோட்டலுக்குதான் கிப்ட் கார்டு தருவேன் என்று சொல்லி இருக்கிறார். இங்குள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்கு பதிலாக சாப்பிடாமேலே இருக்கலாம். 4. சரி பரதேசி இருக்கும் நீயூயார்க்கில் உள்ள ஹோட்டலுக்கு கிப்ட் கார்டு தந்தால் அது அங்கு போவதற்கு ஆகும் டோல் கட்டணம் பரிசைவிட அதிகம்.

   இறுதியாக என்ன கருத்து போடலாம் என்று யோசிச்சு கொண்டிருக்கையில் எங்க வீட்டம்மா பூரிக்கட்டையால் தலையில் அடித்துவிட்டார்கள் அதனால் யோசிச்ச கருத்து எல்லாம் மறந்துடுச்சு..

   திரும்ப அது மாதிரி யோசிக்கனும் என்றால் சரக்கு வேண்டும்.... சரக்கு வீட்டில் ஸ்டாக் இருந்தாலும் தனியாக அடிச்சு பழக்கம் இல்லை.. சரக்கு அடிக்காமல் கருத்து சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன் ஒகே வா

   Delete
  4. ஹஹஹஹ் இது இதுதான் மதுரைத் தமிழன்...!!!

   Delete
 15. போட்டி சூப்பர்.
  மக்களே! நாற்காலி காலியா இருக்கு. உட்கார காலிகளுக்கு மட்டுமே அனுமதி

  ReplyDelete
  Replies

  1. பதிவுகள் எழுதாமல் ஒளிந்து கொண்டு போட்டி என்றவிடனே வந்து சூப்பராக கருத்து சொல்லிட்டு பரிசை தட்டப் போகும் கில்லாடி நீங்க..... கருத்து மிக அருமை... இதைவிட நான் என்ன கருத்து சொல்லிடமுடியும் ஹும்ம்...போச்சே போச்சே எல்லாப் பரிசு பணத்தையும் இந்த முரளிதரன் அடிச்சுகிட்டு போகப் போகிறார்...

   Delete
 16. நல்ல வேளை, யாரும் பார்க்கல, யாரவது வர்ரதுக்குள்ள நாற்காலியைத் தூக்கிட்டு ஓடிடுவோம்.

  ReplyDelete
 17. அய், மே 19 வரைக்கும் நாற்காலி எனக்குத்தான்.

  ReplyDelete
 18. சின்ன நாற்காலி ; பெரிய லாபம்.

  ReplyDelete
 19. நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் எதிர்ப்போம்.. கவிழ்ப்போம்!

  ReplyDelete
 20. "நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் ஷாக் அடிக்கறா மாதிரியோ, கவிழறா மாதிரியோ நைஸா டிஸைன் பண்ணிடலாமா?"

  ReplyDelete
 21. "அய்யய்யோ... சக்கரம் இல்லையே..!! தலீவரு எப்படி உட்காருவாரு..?!"

  ReplyDelete
 22. தலீவரு என்னடான்னா சேரை இட்லி பக்கத்துல போட சொல்றாரு..., தளபதி என்னடான்னா முறைக்கிறாரு...!! ச்சே!! என்ன வாழ்க்கைடா?!

  ReplyDelete
 23. இருக்கிறது ஒத்த சேரு.., இதுல இம்புட்டு பேரு எப்படி உக்காருவாங்க..!?
  ம.ந.கூ-ன்னு பேரு சரியாத்தான் வெச்சிருக்காங்க..!!

  ReplyDelete
 24. சேரு.. சிறுசா இருக்கே!!
  இவர்ட்ட குடுத்தா தூக்கி அடிச்சிருவாரோ!?

  ReplyDelete
 25. சத்தியமா இந்த சேர் உனக்குத்தான் தல.., தயவு செய்து மூணெழுத்து, மூணெழுத்துன்னு கவுஜ மட்டும் பாடாத..!!

  ReplyDelete
 26. எனக்குப் பிடிக்காதவர் யார் உட்கார்ந்தாலும் கவுத்துடுவேன் கவுத்து///!

  ReplyDelete
 27. பசை லேசா காஞ்சுச்சுனா குந்திக்லாம்... அப்பால கீதுடா ஒங்கள்க்கு... அத்துக்கு மின்னாடி மர்க்காமே சேர்ல ஒரு ஓட்டை போட்றணும்... பின்னாடி ரெம்ப யூஸ்புல்லா இர்க்கும்...!

  ReplyDelete
 28. பணம் திண்ணும் பிணங்கள் இங்கே அமரும்.
  பணம் பண்ண வழியறியா அப்பாவிகளின் ஆசியினால்! -நற்
  குணம் காணா இத்தேசத்தில்
  இனமே குணமாகும். ஈனமே முடிவாகும்.

  ReplyDelete
 29. மோடி வித்தை அறிந்தோர் மட்டும் இஙகே நிலையாய் அமர முடியும்! குணம்
  நாடி வாழ்வோர் வீழ்வார் தலைகீழாய், எச்சரிக்கை!

  ReplyDelete
 30. வணக்கம் , வாழ்த்துகள் !

  " இந்த ஆடற நாற்காலிக்கே இப்படி ஓடிவர்றோமே ! 94 வயசுலயும், 68 வயசுலயும் அடிச்சுக்கறாங்களே ..நியாந்தானோ ! "

  ReplyDelete
 31. இந்த நாற்காலியில் யார் உட்காரணும்னு நான்தான் முடிவெடுப்பேன் ,அதில் உட்கார எனக்கு தகுதி இருக்கான்னு .யாராவது கேட்டீங்க ..தூக்கி அடிச்சிருவேன் ..ஹாங் ..சொல்லிப்புட்டேன் !

  ReplyDelete
 32. சொக்கா...இத்தனை போட்டியா?
  நான் இந்த நாட்டைவிட்டு போறத தவிர வேற வழியில்ல...

  ReplyDelete
 33. வாஸ்து சரியான்னுதான் முதல்ல பாக்கோனும்! எந்த திசையில் சேரை போட்டால் கவிழாமல் உட்காரலாம் என்று பாருடே! ஜாதி, ஜோஸியம்தான் நம் தேர்தலின் வெற்றியை தீர்மாணிக்கும் கேட்டியோ! தொண்டு சேவையெல்லாம்.... ச்சு... வீணா.. பேசிகிட்டு...!

  ReplyDelete
 34. மக்களே! நான் தொண்டு செய்துக்கிட்டே கொள்ளை அடிக்கவா?
  அல்லது, கொள்ளை அடித்துக்கிட்டே கொஞ்சம் தொண்டு செய்யவா? நீங்கதான் சொல்லனும்! அப்பதான் சேரில் உட்காருவேன், பாத்துக்கோ!

  ReplyDelete
 35. "உனக்கு 70 எனக்கு 94"
  "நயினா... எனக்கு 64"

  ReplyDelete
 36. நான் விரும்பினாலும் கொள்ளை அடிப்பேன். விரும்பாவிட்டாலும் கோள்ளை அடிக்க வேண்டும். இதுதான் இந்த சேரின் தலை எழுத்து! இதில் இருந்து யாரும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது- இன்று இருக்கிற நிலையில்-யார் வந்தாலூம், இதுதான் உண்மை!

  ReplyDelete
 37. டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்காரவைக்கிறதுக்கு வச்சுருக்கோம் ...

  ReplyDelete
 38. அம்மாவின் ஆணை வரும்வரை நான் இப்படி பிடித்துக்கொண்டுதான் நிற்பேன். அதில் உட்கார மாட்டேன்!

  ReplyDelete
 39. தமிழ்நாட்டுக் 'குடி'மகன்.....
  (தள்ளாட்டத்துடன்)
  இது ஒரு சேர்ரு...
  இதனால் வந்த எளவுக்கு அடிச்சுகிறானுக!!!!!!

  ReplyDelete
 40. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  இந்த லிஸ்ட்ல ஹன்சிகா, ஆண்ட்ரியா எல்லாம் வர மாட்டாங்களா? அவங்களும் தானே தமிழ்ல கலக்குறாங்க?!

  ReplyDelete
 41. அச்சச்சோ..., மதுரைத் தமிழன்-ட்ட போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டுட்டேன் போல இருக்கு

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...