Wednesday, March 9, 2016

கலாய்க்க போவது யாரு .. போட்டி முடிவு!

சென்ற வாரம் நாம் நடத்திய இந்த கார்ட்டூன் வசன போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.இதற்காக மொத்தம் 45 பின்னோட்டங்கள் வந்து இருந்தது. நாற்காலியை பார்த்ததும் அனைவரும் அதை ஒரு முதல்வரின் இருக்கை  என்றே குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள்.


அனைத்தையும் ரசித்தேன்.


நான் ஏற்கனவே கூறியது போல், நகைசுவையை அதிகம் ரசிப்பவன் அடியேன். அந்த விதத்தில்,  ஒவ்வொரு பின்னூட்டத்தையும் அதே  கண்ணோட்டத்தில்  நான் பார்த்தேன்.   இவை அனைத்தையும் நான் ரசித்தாலும்  என்னையே மறந்து சத்தமிட்டு சிரிக்க  செய்த பின்னூட்டம் ..

இதோ.. அந்த கார்டூனில் இணைக்கப்பட்டு உள்ளது.


இதை நமக்கு அளித்த மலரின் நினைவுகள் " மலர் வண்ணன்னுக்கு
" வாழ்த்துக்கள்".  நண்பர் நம்மோடு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால், அவருக்கான கிபிட் கார்ட் அவர் விரும்பும் உணவகத்தில் இருந்து வழங்க ஏற்பாடு செய்ய படும்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இம்மாதிரியான கார்ட்டூன் வசன போட்டியை அடியேன் மாதம் ஒரு முறை நடத்தலாம் என்று இருக்கின்றேன்.  (நம்ம என்ன விஜய் மல்லையாவா ? கடன் வாங்கி கண்ணாலம் பண்ண, வாரம் ஒரு முறை கட்டுபடியாகாது).

இந்த போட்டிக்கான பரிசான "உணவக  கிப்ட் கார்ட்",  நம்மோடு எழுதும் வலைதள நண்பர்களை உற்சாகபடுத்தவும் மற்றும் அவர் தம் குடும்பத்தோடு தம் எழுத்தின் பயனால் கிடைத்த சிறிய சந்தோசத்தை குடும்பதோடு அனுபவிக்க உருவானது.

தங்களில் யாராவது இம்மாதிரியான போட்டி வைக்க விருப்பபட்டால் தெரிவிக்கவும். சேர்ந்தே செய்வோம்.

என்ன.. அடுத்த போட்டிக்கு தயாரா?

13 comments:

 1. மிகச்சரியான தேர்வு...வாழ்த்துகள் அவருக்கு..நன்றிகள் உங்களுக்கு...

  அது சரி..விஜமல்லையாவோடா உங்களை ஒப்பிடுவது..போங்க சார்

  ReplyDelete
 2. மலர்வண்ணனுக்கு, இதோ என் வாழ்த்து மலர்ச் செண்டு :)

  ReplyDelete
 3. உண்மையிலேயே சரியான தேர்வுதான்.
  வாழ்த்துகள் நடத்தியவர்க்கும், வென்றவர்க்கும்.
  (ஆமா மலர்வண்ணன் என்ன அதிமுக வா? (அ) ம.ந.கூ.வா? என்று மட்டும் கேட்டுச் சொல்ல வேண்டுகிறேன்)

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   நான் வி.ம.ந.ந.க. (விஜய மல்லய்யா நலிவடைந்தோர் நலக் கட்சி)
   - கொ.ப.செ. - அண்டார்டிகா

   Delete
 4. மலர்!!!! வாங்க வாழ்த்துகள்! பொக்கே இந்தாங்க பிடியுங்க!

  வாழ்த்துகள் விசு! மிகச் சரியான தேர்வு! விசு வாழ்த்துகள்!!! அவரு செமையா கலக்குவாரு! நினைத்தோம் அவர் வந்தா கண்டிப்பா செம நக்கலா எழுதிடுவாருனு..

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசியாரே...
   எம்மேல இம்புட்டு நம்பிக்கை வெச்சிருக்கீங்களே...!!
   நன்றி யேசப்பா!!

   Delete
 5. அருமையான போட்டி முடிவு! வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. நண்பர் மலர்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. வலையுலக தமிழ்ப் பதிவர்கள் வட்டத்தில் உங்களில் ஒருவனாக என்னையும் ஆதரித்து அளித்த நட்பு வட்டத்திற்கு நன்றிகள் பல...
  இப்படியொரு போட்டியை ஆரம்பித்து, பரிசளித்து, உற்சாகப் படுத்தும், தொடர்ந்து நடத்த முற்படும் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு வலைப்புரட்சி வித்தகர் விசுAWESOME அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். தொடர்ந்து சிறக்கட்டும் உமது பணி...!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...