செவ்வாய், 21 ஜூன், 2022

கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

 கெட்டி மேளம் கெட்டி மேளம், மோதிரத்தை மாத்துங்கோ!

அலை பேசி அலறியது...

சனியும் அதுவுமா மதியம் மூணு மணிக்கு  நாம ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு இருக்கையில் அலை பேசி அலறுதுன்னா அது நம்ம தண்டபாணியா தான் இருக்கும், என்ன அவசரமோ ?

"சொல்லு தண்டம்!!"

"என்னத்த சொல்லுவேன்” வாத்தியாரே"

"சரி, சொல்லாத, அப்புறம் பாக்கலாம்"

"வாத்தியாரே, எம் பொண்ணு கல்யாணத்தை பத்தி  முக்கியமான விஷயம்"

"தண்டம், ஈஸ்வரி கல்யாணத்தை பத்தி இன்னும் ஏன் டென்ஷன் ஆகுற? இட்ஸ்  ஓகே டு மேரி எ வொய்ட்  பாய், அவன் நல்லவனா, நம்ம பொண்ணை நல்லா வைச்சி காப்பாத்துவானான்னு நம்ம ரெண்டு பெரும் பிரிச்சி ஆரஞ்சிட்டோம், அவனும் பாஸ் ஆகிட்டான்"

"வாத்தியாரே, மனசுல இனம் இனத்தோட சேரணும்ன்னு எனக்கு ஒரு ஆசை, இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே ஈஸ்வரி கேட்ட எதுக்குமே நான் இல்லனு சொன்னது இல்ல"

"தண்டம், கொஞ்சம் மாத்தி யோசி! இதுவரைக்கும் நீ முடியாதுன்னு சொல்ற எதையுமே ஈஸ்வரி உன்கிட்ட கேட்டது இல்ல, ஈஸ்வரி உலகம் அறிஞ்சவ, நல்ல பையனைத்தான் பாத்து இருக்கா, சும்மா கண்டதையும் போட்டு மண்டை காயாத. என்ஜாய் தி மொமெண்ட், தண்டம்."

"ஐயோ,வாத்தியாரே, நான் தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேனே"

"அப்புறம் என்ன முக்கியமான விஷயம், கெட்டி மேளம் கொட்டி மோதிரத்தை மாத்த வேண்டியதுதானே"!"

"கெட்டி மேளம், மோதிரம், நல்ல  சொன்ன வாத்தியாரே, நான் இப்ப சொல்ல வந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல.."


"கல்யாணத்தை பத்தியா. சரி சுந்தரிட்ட போனை கொடு, அவங்க சொல்லட்டும்"

"நானும் அதையே தான் சொன்னேன், நீயே டீல் பண்ணுன்னு என்னை டீலில் விட்டுட்டா "

"தண்டம், எல்லாம் நல்ல முடியும், இங்கே தான் டவுரி, லொட்டு லொசுக்குன்னு எதுவும் இல்லையே.. "

"அப்படி இருந்தா கூட பரவாயில்லை, வாத்தியாரே, சமாளிச்சிட்டு இருப்பேன்., இது அதைவிட பெரிய பிரச்சனை!! "

"தண்டம், அப்படி என்ன பிரச்சனை?"

"கல்யாணத்துக்கு மொத்தமே எண்பது பேரு தான் வரணுமாம்"

"ஓ, அதுவா !??"

"என்ன வாத்தியாரே, அதுவான்னு அம்புட்டு ஈஸியா கடந்து போற? உன்னை என்னை எல்லாரையும் சேர்த்து எண்பது பேர் தானாம், என் கல்யாணத்துக்கு  சுந்தரியை பொண்ணு பாக்க போகும் போதே எண்பது பேருக்கு மேல போனோம், மொத்தமே எண்பது பேருன்னா, நான் யாரை கூப்பிடுறது, யாரை விடுறது!!!?"

"தண்டம், வெயிட் ... வெயிட்.. வெயிட்.. ரெண்டு விஷயம். முதல் விஷயம், எண்பது பேர் மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேருக்கும் சேர்த்து, ,மாப்பிள்ளைக்கு நாப்பது, பொண்ணுக்கு நாப்பது?"

"கிழிஞ்சது போ! ரெண்டாவது விஷயம்!!!"?

"யாரை கூப்பிடுறது யாரை விடுறதுனு, நீ முடிவு செய்ய தேவை இல்லை, அதையும் மாப்பிள்ளை பொண்ணே முடிவு பண்ணிடுவாங்க"

"வாத்தியாரே, நீ தமாஷ் பண்ணல தானே?"

"தண்டம், என்ன புரியாத மாதிரி பேசுற?"

"வாத்தியாரே, எங்க கல்யாணத்துக்கு  ஊரில் இரணடாயிரம் பேர் வந்தாங்க, அப்படி இருந்தும் ஒரு இருநூறு பேரு நாங்க அழைப்பு வைக்கலைன்னு கோச்சிக்கினாங்க"

"அதுக்கு இப்ப என்ன?"

"எண்பது பேருன்னா நான் யாரை கூப்பிடுவேன், யாரை விடுவேன்?"

"தண்டம், எண்பது இல்லை, நாப்பது, அதுவும் உனக்கு இல்ல, ஈஸ்வரிக்கு!" 

"அப்ப நான் யாரையுமே கூப்பிட முடியாதா"

"சே .. சே.. அப்படி இல்லை தண்டம், உனக்கும் சுந்தரிக்கும் குறைந்த பட்சம் ஒரு பத்தாவது கிடைக்கும்"

"மீதி எழுவது..!!"?

"யு மீன் முப்பது!!!?"

"அது தான், முப்பது "

"அது, ஈஸ்வரி முடிவு பண்ணனும்"

"வாத்தியாரே, நீ கணக்கு பிள்ளை தானே., தோராயமா சொல்லேன்"

"சரி, பொண்ணு வீடு, மாப்பிள்ளை வீடுன்னு தலைக்கு நாப்பது!!!  இல்லை, இல்லை, முப்பத்தி எட்டு"

"முப்பத்தி எட்டா, என்ன வாத்தியாரே, முப்பத்தி எட்டும் முப்பத்தி எட்டும் எழுபத்தி   ஆறு தானே, மொத்தம் எண்பதுன்னு சொன்ன?"

" தண்டம் , பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் பொதுவா ஒரு நாலு பேரு இருப்பாங்க"

"நாம இந்தியன், மாப்பிள்ளை வெள்ளை, இதுல பொதுவா யாரு இருக்க போறாங்க?"

"சொந்தகாரு இல்ல தண்டம்,  அது  கல்யாணத்தை நடத்தி வைக்க போறவர், கல்யாணம் கோ ஆர்டினேட்டர், அவங்களோட அசிஸ்டன்ட், ரிசெப்சன் டீ ஜே"

"சரி முப்பத்தி ஆறு"

"அவங்களோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் அந்த க்ளோஸ் பிரெண்ட்ஸோட பாய் பிரெண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் ஒரு பத்து பேர்"

"மீதி இருபத்தி ஆறு"

"ஈஸ்வரிக்கு பிடிச்ச எலிமென்டரி ஸ்கூல் டீச்சர் மற்றும் மிடில் ஸ்கூல் டீச்சர் ஒருத்தவங்க, ஹை ஸ்கூல் டென்னிஸ் கோச் அப்புறம் காலேஜ் ப்ரொபஸர் ரெண்டு பேர்,  மொத்தம் பத்து பேர்"

"நீ சொன்னவங்களை கூட்டி  பார்த்தா அஞ்சி பேர் தானே வராங்க, பத்துன்னு ஏன் சொல்ற?!!"

"தண்டம், அவங்க மற்றும் அவங்களோட பார்ட்னர்ஸ்"

"மீதி பதினாறு..!!?"

"ஈஸ்வரி கூட வேலை செய்யுற ஒருத்தங்க அவங்க புருஷன் , ஈஸ்வரியோட பாஸ் அவரோட மனைவி "

"மீதி பனிரெண்டு, அப்ப நானும் சுந்தரியும் , வாத்தியாரே!!?"

"அவசரப்படாத தண்டம், 

"ஈஸ்வரிக்குன்னு சொந்தமா விருப்பு வெறுப்புன்னு இருக்கும் இல்ல, யார் வாரங்களோ இல்லையோ, இவங்க என் கல்யாணத்துக்கு வரணும்னு நாம எல்லாரும் நின்னைப்போம் இல்லையா அந்த மாதிரி ரெண்டு பேர்"

"மீதி பத்து தான் வாத்தியாரே"

"அந்த பத்து தான் உனக்கு"

"அதை வைச்சினு நான் என்ன பண்ணுவேன்? சுந்தரியோட அப்பா, அம்மா, என்னோட அப்பா அம்மா, சுந்தரியோட அக்கா அவங்க புருஷன், என்னோட தங்கச்சி அவங்க புருஷன், மொத்தம்  எட்டு பேர்!!”

“:இப்ப எத்தனை மீதி வருது?”

“மீதி ரெண்டு, என் வயித்துல பாலை வார்த்த வாத்தியாரே.. அந்த மீதி ரெண்டு பேர், நீயும் அம்மணியும்"

"அட பாவத்த!!!, மீதி ரெண்டை எனக்கும் அம்மணிக்கு கொடுத்துட்டா, நீயும் சுந்தரியும் கல்யாணத்துக்கு எப்படி போவீங்க?, அந்த கடைசி ரெண்டும் உனக்கும் சுந்தரிக்கும்"

"வாத்தியாரே, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. நான் ஈஸ்வரிக்கிட்ட சொல்லி மாப்பிளையோட முப்பத்தி ஆறில் இருந்து ரெண்டு சீட் கேக்க போறேன்"

"தண்டம், புரியாம பேசாதா, அங்கே மாப்பிள்ளை வீட்டுல, எப்படியாவது பொண்ணு வீட்டுல இருந்து ரெண்டு இடம் கேட்கலாம்னு பேசின்னு இருப்பாங்க"

"நீயும் அம்மணியும் இல்லாத கல்யாணம்"

"பரவாயில்லை, தண்டம்"

"வாத்தியாரே, சின்ன வயசுல ஒரு முறை அவளும் சுந்தரியும் இந்தியா போய் இருந்தப்ப, என்னமோ டெங்கு அது இதுன்னு அவளுக்கு வந்து ஆஸ்பிடலில் இருக்கும் போது, உன் வீட்டுக்காரம்மா அடுத்த நாளே இந்தியா கிளம்பி போய் கூடவே இருந்தாங்க"

"ஆமா , அதுக்கு என்ன இப்ப?!!"

"வாத்தியாரே, என்ன பேசுற? அந்த சமயத்துல அவளோட பிளட் க்ரூப் அம்மணியோட பிளட் க்ரூப் ரெண்டும் ஒன்னுன்னு.. அம்மணி தான வாத்தியாரே ஈஸ்வரிக்கு மறுவாழ்க்கை தந்தாங்க.. அவங்க மட்டும் அப்ப இல்லைனா.. "

தண்டபாணியின் குரல் ததும்பியது.

"சரி, விடு பாணி "

"வாத்தியாரே , எத்தனை முறை, நான் இங்கே பிசியா இருக்கும் போது நீ ஈஸ்வரியை ஸ்கூல் , டென்னிஸ், ஏர்போர்ட்டுனு தெரு தெருவா அலைஞ்சி  இருக்க?, நீங்க ரெண்டு பெரும் இல்லாம இந்த கல்யாணம்..."

"பாணி, பரவாயில்லை, இதே மாதிரி உதவி நீ எனக்கும் பண்ணி இருக்க, பரவாயில்லை, கல்யாணாம் எல்லாம் நல்லா முடியும், நீ சந்தோசமா இரு, ஓகே"

"இல்ல வாத்தியாரே, இதுல எனக்கு விருப்பம் இல்ல"

அழவே ஆரம்பித்து விட்டான், நண்பன் தண்டபாணி. நட்பிற்கான இலக்கணம்  அல்லவா நம் நண்பன்.

"சரி, விடு பாணி"

விடை கொடுக்காமலே விடை பெற்றான்.

தூக்கம் கலைந்தது, நேராக மணியிடம் சென்று,

"பாவம் தண்டபாணியும், சுந்தரியும், கல்யாண விஷயத்துல ரொம்ப குழம்பி இருக்காங்க, வா ஒரு எட்டு எட்டி பார்த்து வரலாம்."

கிளம்பினோம்.

டிங் டாங் !

கதவை திறந்தான்.

"வா வாத்தியாரே, வாங்க.. " 

முகத்தில் சற்றே துயரம்..

பேச ஆரம்பிக்கும் முன்பே மறுபடியும் டிங் டாங் என்ற சப்தம் கேட்க, பாணி கதவை திறக்க எதிரில் ஈஸ்வரி மற்றும் மாப்பிள்ளை.

"ஹெலோ விஷ் "

"எத்தனை முறை அங்கிள்னு கூப்பிடணும்னு சொல்லி இருக்கேன் "

மீண்டும் ஒருமுறை  கடிந்து கொண்டான் நண்பன்.

"விடு பாணி, இந்த மாதிரி சின்ன பசங்க நம்ம பேர் சொல்லி கூப்பிடும் போது  நமக்கும் ஒரு நல்ல பீல் தான். நீ பொறாமை படாத"

"கங்கிராட்ஸ் ஈஸ்வரி, வாழ்த்துக்கள்"

"விஷ், எக்ஸ்குயூஸ் அஸ்"

என்று சொல்லி ஈஸ்வரியும் மாப்பிள்ளையும் வீட்டின் மாடி அறைக்கு செல்ல, தண்டபாணியோ,

"குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது, உன்னை கல்யாணத்துக்கு கூப்பிட முடியாதனால இங்கே இருந்து ஓடிட்டா"

"விடு பாணி"

அடுத்த நிமிடமே ஈஸ்வரி மீண்டும் வந்தாள், கையில் திருமண அழைப்பிதழோடு! 

"விஷ், ஆன்டி , என் கல்யாண இன்விடேஷன். யு போத் ஆர் இன்வைட்ட்! ப்ளீஸ் கம் அண்ட் பிளஸ் அஸ்"

 தண்டபாணிக்கோ கையும் காலும் புரியவில்லை!

அம்மணியோ...

"ஈஸ்வரி, இந்த ஊர் கல்யாணத்துக்கு ரொம்ப கம்மியா தான் கூப்பிடுவாங்க, உனக்கு சொந்தம் ப்ரெண்ட்ஸ்ன்னு நிறைய பேர் இருப்பாங்க, அவங்களை  யாரையாவது கூப்பிடு. வி அண்டர்ஸ்டாண்ட்"

'ஆன்டி.. நீங்கள் விஷ் ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். அவரு என்னை கூப்பிட்டுனு எப்படி தெரு தெருவா ஸ்கூல் டென்னிஸ்னு அலைஞ்சி இருக்கார்.. அண்ட் நீங்க.. யு ஆர் லிவிங் வித்தின் மீ, உங்க ரத்தம் என் மேல ஓடுது, நீங்க இல்லாம என் கல்யாணமா!!!?  பை !!!!"

பதில் எதுவும் எதிர் பார்க்காமல் மாப்பிளையோடு கிளம்பினாள். 

தண்டபாணியோ..

"வாத்தியாரே, நீ போட்ட கணக்கில் நீயும் அம்மணியும் இல்லையே, இப்ப எந்த ரெண்டு பேரை கட் பண்ண போறா?"

"கணக்கை திருப்பியும் ஒரு முறை பாரு, தண்டம்"

"நீ தான் சொல்லேன் "

""ஈஸ்வரிக்குன்னு சொந்தமா விருப்பு வெறுப்புன்னு இருக்கும் இல்ல, யார் வாரங்களோ இல்லையோ, இவங்க என் கல்யாணத்துக்கு வரணும்னு நாம எல்லாரும் நினைப்போம் இல்லையா அந்த மாதிரி ரெண்டு பேர்"

"ஓ.. அந்த ரெண்டு பேர் தான் நீங்களா"

"எங்களை எப்படியும் கூப்பிடுவானு எனக்கு நல்லா தெரியும் தண்டம்".


4 கருத்துகள்:

  1. நல்ல நட்பு. என் நண்பன் சூசை என்னை வாத்தியாரே என்றுதான் கூப்பிடுவார். படிக்கும்போதும் வர நினைவு வருகிறது. நேற்றுதான் அவரைச் சந்தித்து விட்டு வந்தேன்!

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா விசு! தண்டபாணி is back!!!

    அமெரிக்க கல்யாணம் பற்றியும் அப்படியே சொல்லிட்டீங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவை நீண்ட நாட்களாய் எதிர்பார்த்து இன்று வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...