செவ்வாய், 5 ஜனவரி, 2021

இலவசத்திலேயே வாழ பழகிய இந்திய கிரிக்கெட்டர்கள்.

இன்று ஒரு செய்தி படித்தேன். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட சென்ற இந்திய அணியை சார்ந்த ஐந்து வீரர்கள் ஏதோ ஒரு உணவகத்தில் கோவிட கட்டுப்பாட்டை மீறி உணவருந்தியதாகவும் அதற்காக அணியோடு சேர்ந்து பயிற்சில் ஈடுபடுவதை தவிர்த்து தனியாக பயிற்சி செய்யவும் அறிவுறுத்த பட்டுளார்கள்.


இவர்கள் அந்த உணவகத்தில் அமர்ந்து இருந்த செய்தியை வெளியிட்டது எந்த ஒரு செய்தி நிறுவனமும் அல்ல. இதை ஒரு கிரிக்கெட் விசிறி தன் சமூக வலைதளத்தில் "இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இமேஜ் நான் இருக்கும் உணவகத்தில் தான் இருக்கின்றார்கள். அவர்களை சந்தித்தேன். அவர்களுக்கான மொத்த செலவையும் நான் தான் கட்டினேன்" என்று எழுதியிருந்தார்.

என்ன  ஒரு முட்டா பய மருமகன் இந்த ரசிகன்!

இந்த ஐந்து கிரிக்கெட்டர்களும் கோடி கணக்கில் பணத்தை ஈடுபவர்கள். அவர்கள் ஐந்து பேர் சாப்பிட்ட தொகையை இவர் ஏன் அதிக பிரசங்கியாக தர வேண்டும். எல்லாம் ஒரு அற்ப சந்தோசம்தான்.

இன்னும் சொல்ல போனால், இந்த ரசிகர் இவ்வாறக ஒரு பதிவு போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

"நான் நேற்று ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன். என் மேசையின் அருகில் ஐந்து இந்திய கிரிக்கெட்டர்கள் சாப்பிட்டு கொண்டு  இருந்தார்கள் . என் பில்லை நான் கட்ட முற்படுகையில் அந்த ஐவரில் ஒருவர்  அதை ஏற்கனவே கட்டி இருந்தார் என்று அறிந்தேன்"

இப்படியான ஒரு செய்தியை என்றாவது படித்து இருக்கின்றோமா?

எல்லா கிரிக்கெட்டர்களும் அவ்வாறு இல்லை. உண்மை தான். There are exceptions, and exceptions cant be examples.

நான் நேரில் கண்ட நிகழ்ச்சி ஒன்றை சொல்கிறேன்.

1999 ம் வருடம்,  இந்திய அணி இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேற்ற பட்டு "என்னடா இந்த அணி, ஜிம்பாபவேவை  கூட ஜெயிக்க முடியலையே" என்று அனைவரும் நொந்து கொண்டு இருந்த தருணம்.

அப்போது  பணி நிமித்தம் நான் துபாய் செல்ல வேண்டி இருந்தது. துபாய்விமான நிலையத்தில் அமர்ந்து கொண்டு இருக்கையில் எதிரில் சாம்பல் நிற பேண்ட் மற்றும் நீல நிற கொட்ட அணிந்து கொண்டு பலர் நடந்து வர, இவங்க யாரு தெரிஞ்ச மாதிரி இருக்காங்களே என்று  நினைக்கையில், அடேடே நம்ம கிரிக்கெட் அணி.

 அனைவரும் " காத்திருக்கும் அறையில் " தம் தம் பைகளை வைத்து விட்டு  அதற்கும் சற்று வெளியே அமைந்துள்ள டூட்டி பிரீ கடைக்கு சென்றனர். கடையில் அவர்கள் நுழைந்தவுடன் அங்கே இருந்த இந்தியர்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐஸ் க்ரீம் கடை சென்ற குழந்தைகள் போல் பார்த்தன. தற்போது போல் அந்த காலத்தில் அனைவரிடமும் கேமரா இல்லை. ஒரு சிலர்  போட்டோ எடுத்து கொள்ள, அநேகர், அந்த கிரிக்கெட்டர்கள் வாங்கிய பொருள்களுக்கு போட்டி போட்டு பணத்தை கட்டி கொண்டு இருந்தார்கள்.

ஷூஸ், கூலிங் கிளாஸ், ஷார்ட், சோம பானம், சாக்லேட்ஸ் மற்றும் லொட்டு லொசுக்கு என்று.

சில வீரர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்துவிட்டு "பலிகடா" ஏதாவது மாட்டுமா என்று ஏக்கத்தோடு காத்து கொண்டு இருந்ததையும் காண நேர்ந்தது.

எனக்கோ மனதில் 

அட பாவிகளா...

 போன ஒரு மாதத்தில் மட்டும் இவர்கள் உலக கோப்பை ஆடுவதற்காக பெற்றபணம் எவ்வளவு தெரியுமா?

போங்கடா போய் புள்ளைகுட்டிகளுக்கு ஏதாவது வாங்கின்னு போங்கடான்னு  சொல்ல தோன்றியது.




3 கருத்துகள்:

  1. பிச்சை போடுறவன் இருக்க வரைக்கும் பிச்சை எடுக்கிறவன் இருக்கத்தான் செய்வான்.

    யார் தப்பு? பிச்சை போடுறதா? இல்லை பிச்சை எடுக்கிறதா? விவாதிப்போமா? We will get nowhere!

    எதையும் இனாமா வாங்கினால் என்னைப் பொறுத்தவரையில் அது பிச்சைதான். அந்த அமவுண்ட் ஒரு டாலர்னாலும் சரி, ஒரு பைசானாலும் சரி, இல்லை 1 கோடியா இருந்தாலும் சரி. Rich are the worst when it comes to getting free stuff.

    இதெல்லாம் ஒரு ஹாபிட் ஆயிடும் விசு.

    நம்ம ஊர்ல எப்போவுமே சேல்/க்ளியரன்ஸ் ல வாங்கி பழகினவன் ரெகுலர் ப்ரைஸ்ல வாங்குவானா? அதேபோல்தான் இந்த "வீரர்களும்". நம்ம ப்ரெசிடென்ட் கூட ஸ்டாமி டேனியல்க்கு கேம்பயின் பணத்தை கொடுத்ததா சொல்றாங்க. அப்போ இது பத்தி பேசினப்போ, பணக்காரனுகதான் படு பிச்சைக்காரனுகனு எல்லாரும் விளக்கினார்கள்.

    கார்ல போகையிலே ஹோம்லெஸ்க்கு ஒரு டாலர், 5 டால்ர்னு கொடுக்கிறவன் எல்லாம் ஏழைகள்தான். பணக்காரன் ஒரு பெண்ணி கொடுக்க மாட்டான்..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கார்ல போகையிலே ஹோம்லெஸ்க்கு ஒரு டாலர், 5 டால்ர்னு கொடுக்கிறவன் எல்லாம் ஏழைகள்தான். பணக்காரன் ஒரு பெண்ணி கொடுக்க மாட்டான்..:)//

      Well Said,

      அந்த துபாய் சம்பவத்துள்ள கூட First Class Longue ல் இருந்த ஒரு பய இவனுங்கள கண்டுக்கல. வெளியே Duty Free Shop ல் தான் அடிச்சி பிடிச்சி போட்டி போட்டாங்க.

      திரும்பவும் விமானத்துல கூட First Class Passengers ஒண்ணுமே கண்டுக்கல. மத்தவங்க தான்.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...