திங்கள், 14 ஜனவரி, 2019

ஹாப்பி பொங்கலும் , லவ்லி பொங்கலும்

"ஹாப்பி பொங்கல்..."

என்று கூறிவிட்டு தோலை பேசியை துண்டித்தேன்,

"ஹாப்பி பொங்கல்..!? டாடி.. வெளிநாட்டில் இத்தனை வருசமா வாழுறீங்க, ஆனா இன்னும் இங்கிலிஷ் சரியா பேச தெரியலையே!"

"அது என்னமோ சரிதான், இருந்தாலும் இப்ப சொன்னது ரெண்டே வார்த்தை.,  ஹாப்பி பொங்கல், அதுல என்ன தப்பு?!"



"பொங்கல் எவ்வளவு தான் டேஸ்ட்டா இருந்தாலும் ஹாப்பி பொங்கல்ன்னு சொல்ல கூடாது டாடி., யு கேன் செ ... குட் பொங்கல், லவ்லி   பொங்கல், கிரேட் பொங்கல், பட் நாட் ஹாப்பி பொங்கல்"

"மகள், நீ சொல்றது சரி தான், இருந்தாலும் இது சாப்பாட்டு பொங்கலுக்கு சொன்னது இல்லை. நம்ம ஊரில் பொங்கல்ன்னு ஒரு விழா. இங்கே மெரி  கிறிஸ்துமஸ், ஹாப்பி நியூ இயர் சொல்றோம் இல்ல, அந்த விதத்தில் ஹாப்பி பொங்கல்ன்னு இந்த நாளுக்கு வாழ்த்து சொல்வோம்"!

"அப்படியே சொல்றதுன்னாலும்.. வொய் பொங்கல்.. வொய் நாட் பிரியாணி. சிக்கன் 65 ஆர் நெத்திலி ப்ரை, வொய் பொங்கல்"

"இப்படி வா.. "

என்று அருகில் அழைத்து, விக்கிப்பீடியாவில் பொங்கல் விழா          என்று தட்டி விட்டு,

"ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழா"

என்று அவளுக்கு புரியும் வழியில் விவரித்தேன்.

"ஓ.. தட் மேக்ஸ் சென்ஸ். ஓகே.. யு கேன் செ ஹாப்பி பொங்கல், இருந்தாலும் எனக்கு இந்த பொங்கலில் பெப்பர்  அண்ட் சால்ட்டை  விட அந்த ஆரஞ் கலர் இனிப்பு பொங்கல் தான் பிடிக்கும்".

"மகள், பொங்கல் எப்பவுமே பெப்பர்  அண்ட் சால்ட் தான். சில நேரத்தில் அதை செய்யறவங்க சொதப்பும் போது அதுக்கு கொஞ்சம் சக்கரை, திராட்சை முந்திரி போட்டு வெள்ளையா செய்வாங்க.. பட்  இட் இஸ் நெவெர் ஆரஞ்ச"

"ஐயோ போன வாரம் கூட அம்மா செஞ்சாங்களே"

"போன வாரம் ஆரஞ்சு பொங்கல் செஞ்சாங்கங்களா?" நான் எங்கே இருந்தேன்"

"இங்கேயே தான் இருந்தீங்க.. நீங்களும் தான் சாப்பிடீங்க "

"அம்மணியை அழைத்து, போன வாரம் ஆரஞ்சு கலர் போங்க செஞ்சீயா? இவ என்ன சொல்றா "

"அவளோட எத்தனை வருஷம் குப்பை கொட்டறீங்க"

"நான் உன்னோட தான குப்பை காட்டுறேன், அவ என் புள்ளையாச்சே.. "

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அவ கூட 16 வருஷம் இருக்கீங்க.. அவ ஆரஞ் பொங்கல்ன்னு எதை சொல்றான்னு உங்களுக்கு தெரியல?"

"சாத்தியமா தெரியல, போன வாரம் கூட செஞ்சோம்னு சொல்றா"

"அவ சொல்றது கேசரி"

மகளை அழைத்து..

"மகள், நீ சொல்றது வேற .. அது கேசரி, இது இனிப்பு பொங்கல்"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்!?"

"நல்ல கேள்வி .."

அம்மணியிடம்.. சின்னவ கேட்டா பாரு ஒரு கேள்வி.. பதில் தெரியாம திணருறேன்.. கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்"

"என்ன கேட்டா" ?

"இனிப்பு பொங்கலுக்கும் கேசரிக்கும் என்ன வித்தியாசமுன்னு கேக்குறா"

"அவளுக்கு தெரியல ஓகே, நீங்க ஏன் திணறுறீங்க..?, என்ன வித்தியாசம்னு சொல்லுங்க"

"மகள், ரெண்டுமே இனிப்பு"

"அப்புறம் "

 "ரெண்டுத்துக்கும் நெய், முந்திரி, திராட்சை போடுவாங்க"

"அப்புறம்"

"அப்புறம்.. அப்புறம்.. அப்புறம்..."

அம்மணி குறுக்கிட்டு ..

"நீங்க சொல்றது ரெண்டுத்துக்கும் இருக்க ஒற்றுமை. அவ கேக்கறத்து வித்தியாசம் .. முக்கியமான வித்தியாசத்தை சொல்லுங்க"

" என்ன.. வித்தியாசம்.."?

"நல்லா யோசிச்சி பாருங்க.. ரொம்ப முக்கியமான வித்தியாசம்..."

"ஓ.. சாரி .. ஞாபகம் வந்துடிச்சி.. கேசரியை சாப்பிட்டா உடனே சுகர் கொலஸ்ட்ரால் லெவல் ஏறிட்டு  அம்புலன்ஸ் கூப்பிடனும், பொங்கலை சாப்பிட்டு தூங்குனா மூணு நாள் எழ முடியாது".

"அனைவருக்கும்  ஹாப்பி பொங்கல் "

"போன வாரம் கேசரியை  சாப்பிடுறதுக்கு முன்னாலே வருமுன் காப்போம் பாணியில் அம்புலன்சுக்கு ஒரு போன் போட்டேன்"

2 கருத்துகள்:

  1. அருமை உங்கள்பாணி பொங்கல் வாழ்த்து ரொம்ப ருசி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...