பெங்களூர் நகரில் குப்பையை கொட்டி கொண்டு இருக்கும் போது கற்றுக்கொண்ட ஒரு டிஷ் தான். வெரி ஈஸ்ட் டு மேக்.
தேவையானவை :
முந்தா நேத்து வடிச்ச சோறு ( எந்த நொடியிலும் கெட்டு போகலாம்னு ஒரு வாசத்தோட இருக்கணும்)
போனவாரத்து சாம்பார்.. (ஏற்கனவே குறைந்த பட்சம் நாலு முறையாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து சூடு பண்ணி மீண்டும் பிரிட்ஜில் வைச்சி இருக்கணும்)
போன மாசத்து ரசம் ( இது ஒரு முறை செஞ்ச ரசம் இலை ஒரு மாசமா செஞ்சி மீதமான ரசத்தை எல்லாம் ஒரே பாத்திரத்தில் போட்டு வைச்சி இருப்போம் இல்ல, அது தான்)
மத்தபடி.. பிரிட்ஜில் இருக்க பழைய காய், கீரை ஐட்டம் ..
செய்முறை :
முதலில் அடுப்பை கடாயில் ஏற்றி பாத்திரத்தை சூடு படுத்தவும்.
பின்னர் அதில் ரசத்தை ஊற்றவும். ரசம் கொதிக்கும் நிலை வந்ததும் அந்த பழைய சோறை அதில் போடவும். இரண்டும் கொதித்து வரும் போது சாம்பாரை அதில் ஊற்றவும்.
இவை அனைத்தையும் குறைந்த பட்சம் அரை மணிநேரம் அதிக சூட்டில் வேக வைக்கவும். முதலில் சோறு பொங்கும் வாசனை வரும், அதை தொடர்ந்து சாம்பார் வாசம், அதை தொடர்ந்து ரசம் வாசம். பொறுமை காக்கவும்.
அரை மணி நேரம் கழித்து இது என்ன வாசனை என்று நாம் வியக்கும் வகையில் ஒரு வாசனை வரும். அப்போது தயாரான நிலையில் உள்ள அந்த காய் கறிகளை கொட்டி நன்றாக கலக்கவும்.
சிறிது நேரம் சென்ற பின், து திடமா, திரவமா, வாய்வா என்று நாம் குழம்பி போகும் நிலைக்கு வந்தவுடன்..
புதிதாக பிரெஷாக செய்தது என்று மற்றவர்களை ஏமாற்ற பிரெஷ் கருவேப்பிலை , பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.
பரிமாறும் முறை :
இலையோ தட்டோ இதற்கு வேலைக்கு ஆகாது. ஒரு சொம்பில் ஊற்றி கொடுத்து கூடவே ஒரு ஸ்டரா சொருகி பரிமாறவும்.
உப்பை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். இதற்கென்று உப்பு அளவு ஒன்று கிடையாது. சாம்பார் மற்றும் ரசத்தில் எவ்வளவு உப்பு இருக்கின்றதோ அதை ஒட்டி உப்பை சேர்த்து கொள்ளவும்.
பின் குறிப்பு:
இதை பெங்களூரில் "பிசி பெடா பாத்" என்பார்கள். இந்த பெயர் எப்படி வந்தது என்று விசாரித்தேன். பிஸியான இந்நாட்களில் பாத் எடுக்கவே நேரம் இல்லா வேளையில் படா பேஜார் இல்லாமல் செய்யும் ஒரே ஐட்டம் என்பதால் இந்த பெயராம்.
இதை செய்து பார்த்து ருசியை விரும்பினால் பின்னூட்டத்தில் நன்றி தெரிவியுங்கள். அடுத்த பதிவில் அதே பங்களூரில் கற்றுக்கொண்ட "மசூரன்னா" எப்படி செய்வது என்று அறிவோம்!

அட நாராயணா ...
பதிலளிநீக்குபிளிபேளாபாத்க்கு வந்த நிலையை நினைச்சு கண்ணீர் வருது..
இன்றைக்கு எங்க வீட்டில் பிளிபேளாபாத் செஞ்சு ஆஹா என்ன சுவை ன்னு சந்தோசமா இருக்கும் நேரத்தில் ...இப்படி ஒரு கலவையா அதுக்கு இப்படி ஒரு பேரா ன்னு பயந்துட்டேன் ..
பிசி பெடா பாத்....பேடா...எனக்கு இது வேணாம்
நீங்க சொல்றத பார்த்தா நான் என்னமோ தவறா சொல்லி கொடுத்த மாதிரி இருக்க.. என்ன தவறுன்னு எடுத்து சொல்லுங்க !
நீக்குஎல்லாமே தவறா இருக்கே ...இல்ல ன்னா நீங்க சொல்ற முறை எனக்கு புதுசு ன்னு சொல்லி இந்த ஆட்டத்தில் இருந்து விலகிறேன்...
நீக்குஐயோ.. எனக்கு இப்படி தானே சொல்லி கொடுத்தாங்க.. நீங்க சொல்றத பார்த்தா என்னை வைச்சி காமடி கீமடி பண்ணி இருப்பாங்களோ.
நீக்குஅய்யகோ.. இதவிடுங்கோ.. இன்னொரு ஐட்டம் "வாந்தி பாத்துன்னு " இன்னொன்னு சொல்லி கொடுத்தாங்க. அதுக்கு பெயர் வந்த காரணத்தை சொன்ன நீங்க மயங்கியே விழுந்துடுவீங்க.
Just Kidding. I was meant to be a humorous joke. I Love "Bisipedabath". Its awesome, when done right!
"வாந்தி பாத்துன்னு " ..ஐயோ அம்மா\...அடி பலமா விழும் போலவே ...
நீக்குJust Kidding..me too enjoying...have a nice day