ஞாயிறு, 11 மார்ச், 2018

கீரை வாங்கலையோ.. கீரை!

சுனாமியோ பூகம்பமோ  வெள்ளமோ. காட்டு தீயோ.. நாட்டுல என்ன நடந்தாலும் ஞாயிறு காலை 7  மணிக்கு நம்ம கோயிலுக்கு போக தயாரா இல்லாட்டி..  அடியேனின் வீட்டில் இந்த நாலுல ஏதாவது ஒன்னு ஆரம்பிச்சிடும்.

ஆரம்பிச்ச அது ஞாயிறு காலையோடு  நிக்காது.. சனி இரவு வரை போகும். இத அறிந்ததால்.. நானும் சரி  இளையவளும் சரி (மூத்தவ தான் கல்லூரி போய்ட்டாளே).. "I am a Complan Boy  - I am a Complan Girl" ன்னு கோரஸ் பாடினே பைபிளோடு காரில் காத்திருப்போம்.

இன்றும் அப்படி தான்.

காரில் ஏற வந்த  அம்மணி ஒரு ஷாப்பிங் பையோட வர..

அது எதுக்கு. இந்த வார காணிக்கையை உனக்கு தரேன்னு சொல்லிட்டாங்களா?

வேணாம்.. வாயை கிளறாதிங்க..

பின்ன எதுக்கு?

கோயில்களில் இருந்து அப்படியே உழவர் சந்தைக்கு போறோம்.

உழவர் சந்தையான்னு நான் அலற..



அதுக்கு ஏங்க திருடனுக்கு  தேளு கொட்டுன மாதிரி கத்துறிங்க..?

திருடனுக்கு தேளு கொட்டுனா கத்த மாட்டான்..

அது  எப்படி உங்களுக்கு தெரியும் ?

ரொம்ப முக்கியம்... சந்தைக்கு என்?

கீரை வாங்கணும்..

அழுதே விட்டேன்.

இந்த உழவர் சந்தை கீரை என்றால்.. ஞாயிறு காலை 10  -12  நம்ம கதை  கந்தல் !

இன்னைக்கு உண்மையாவே எனக்கு கொஞ்சம் தலை சுத்துது. அதனால்..

நானும் யோசித்தேன்.. பார்க்க கொஞ்சம் டல்லா தான் இருக்கீங்க.. அந்த கீரையை சுத்தம் பண்ணி வெட்டி கொடுத்துட்டு .. நீங்க போய்   ரெஸ்ட் எடுங்க.

நம் நினைவுகளை கூட அறிஞ்சு வைச்சினு இருக்காங்களே என்று நொந்து கொண்டே...  கோயில் மற்றும் சந்தையில் இருந்து வந்து சேர...

கீரைகள்..

சந்தையில் இருந்த அம்புட்டையும் வாங்கினு வந்தது இல்லாமல் .. சாம்பாருக்கு வாங்கிய முள்ளங்கி தலையில் இருந்ததை கூட பிரிச்சி வைச்சு..

ஸ்டார்ட் ம்யூசிக்..

இந்த கீரை ... எப்படி வெட்டணும்  ( கேட்டுடறது நல்லது.. ஏன்னா நம்ம எப்படி வெட்டினாலும் தப்பு தானே..)

இது நீளமா மெலிசா... உங்களுக்கு ஒன்னு தெரியுமா... எங்க ஊரில் இதுல நெத்திலி கருவாடு போட்டு செய்வாங்க.. வடிவா இருக்கும்.

நெத்திலி கருவாடு இங்கேயும் இருக்கே.. போட்டு செய்..

என்ன சொல்றீங்க.. சின்னவ நாப்பது நாள் வெஜிடேரியன் ... மறந்துடீங்களா..

மறக்க மாதிரியா நீ சமைக்கிற...

இந்த கீரை..

இதை வட்ட வட்டமா.. இதுல எங்க ஊரில் கொத்து கரி  போட்டு...

கொத்து கரி .. இருக்கே..

சின்னவ...

பேசி கொண்டு இருக்கும் போது..

சின்னவ மாடியில் இருந்து டாடா என்று அலற..

கை  முழுக்க கீரை.. என்னன்னு விசாரி..

அது ஒன்னும் முக்கியமா இருக்காது.. நீங்க வேலைய கவனியுங்க..

டாடா..

ப்ளீஸ் ...விசாரி..

அவசியம் இல்ல.. வேணும்னா..

கையை கழுவி விட்டு.. மேலே செல்ல..

கொஞ்ச நேரம் தூங்க போறேன்.. கதவை பாதி மூடுங்க..

ஓகே.. என்று சொல்லியது செய்து முடித்து விட்டு ..கீழே வர..

என்னவாம் ..?

ஒண்ணுமில்ல...

மறைக்காதீங்க..

சின்னவளோ.. .. அது தான் ஒன்னும் இல்லைனு சொன்னாரு இல்ல.. திருப்பியும் ஏன் அவரை கேக்குறீங்க..

எனக்கு தெரிஞ்சே ஆகணும்.. மேலே எதுக்கு போனீங்க..

அது வந்து...

எதுவும் முக்கியமா...

அது வந்து..

டாடா.. சொல்லாந்திங்க.. அவங்களுக்கு நம்ம ரிலேஷன்ஷிப் மேலே பொறாமை..

என்னமோ ஊரில் இல்லாத அப்பா மாதிரி.. எங்க அப்பாவோடவா..

மம்மா... உங்க அப்பாக்கு எல்லாம் இருக்கலாம். ஆனா என்னை போல பொண்ணு இல்லையே..

நினைப்பு தான் பிழைப்பை ...நீங்க போய் கீரை வெட்டுங்க..

அடுத்து இந்த கீரையை.. எப்படி..

சதுரமா.. இது எங்க ஊரில்..

முயல் கரி போட்டு செய்வாங்களா...

எப்படிங்க..

லக்கி கெஸ்.. ஆனா நீ செய்யவேண்டாம் சின்னவ தான் சாப்பிடறதில்லையே..

இப்படியே அடுத்த கீரைகளும் வெட்டி  முடிய...

குட் ... ஒன்னு மட்டும் சமைக்கிறேன்.. அடுத்ததை எல்லாம் நல்லா.. பிளாஸ்டிக் பையில் போட்டு காத்த எடுத்துட்டு பிரிட்ஜில்  வையுங்க..

பிளாஸ்டிக் பை எடுத்து வர..

என்ன ஒரே ஒரு பை..ஒவ்வொன்னுத்துக்கும் வேற வேற பை..

அது தான் நெத்திலி கொத்து கரி முயல்ன்னு ஒன்னும் போடலையே.. வித்தியாசம் தெரியாது.. ஒன்னாவே வைப்போம்.

ஏங்க...

ஓகே... சாரி..

நாலு பையில் போட்டு வைக்க..

காலையில் எழுந்து தினந்தோறும் ஒன்னை வெங்காயம் சீரகம் போட்டு வதக்கிடுங்க..

ஐயோ..நீயே செஞ்சிடு.. ப்ளீஸ்.

எனக்கு துணி  மேலே சமையல் வாசனை வந்துடும்.. நீங்களே..

எனக்கும் தான் அந்த வாசனை வரும்..

ஆபிஸ் போனவுடன் கண்ணாடி கதவை மூடினு யாருட்டையும் பேசாத சூடு மூஞ்சி தானே உங்க ரெப்புட்டேஷன் .. பரவாயில்லை..

நமக்கு அமைஞ்சது இம்புட்டுத்தானு பெருமூச்சு விட்டு .. கம்ப்யூட்டரில் அமர..

அங்கே என்ன பண்றீங்க.. இதை வைச்சே ஒரு பதிவா..?

சே சே..

பின்ன.,.?

"இங்கே நன்றாக கீரை வெட்டி தரப்படும்ன்னு"  ஒரு போர்டு தயார் பண்றேன்.

ஏன்..?

நம்ம ஊரில் மீன் மார்க்கெட்டில் க்ளீன் பண்ணி தருவாங்க இல்ல.. அடுத்த வாரத்தில் இருந்து உழவர்  சந்தையில் போய் இந்த போர்டை மாட்டி நாலு காசு பண்ணலாம்னு இருக்கேன்..

நீங்க.. நினைப்பு தான் பிழைப்பை.. எனக்கு மட்டும் தான் இப்படியா? ன்னு அம்மணி புலம்புறாங்க. என்னவா இருக்கும்?

6 கருத்துகள்:

  1. மிக அருமையா அரியிரீங்க கீரையை...

    பதிலளிநீக்கு
  2. இங்க சிறுகீரை, கொத்தமல்லி, புதினா இருக்கு. வந்து ஆய்ஞ்சு கொடுத்துட்டு போ தம்பி

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா முருங்கைக்கீரையும் வாழைப்பூவும் இங்கே வாழைப்பூ வடை ஆச்சு. கீரை .. எங்கே என் ஆத்துக்காரர்தான்? :))))))

    பதிலளிநீக்கு
  4. Ivvalavu varusham keerai arinjum pulambal pogalaye..paavam avanga 😆

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...