புதன், 7 மார்ச், 2018

டாக்டர் .. என் பிரெண்டுக்கு என்று ஆரம்பித்தால்!

டாக்டர்...

சொல்லுங்க .. உடம்புக்கு என்ன?

என்னத்த சொல்வேன்..

அப்ப சொல்லாதீங்க.. வெளியே பீஸ் மட்டும் கட்டிட்டு போங்க..

டாக்டர்..

சொல்லுங்க...

உடம்பு OK .. மனசு தான் சரியில்லை..

அதுக்கு இங்கே ஏன் வந்திங்க...அதுக்கு வேற டாக்டர் இருக்காங்க..

அது இல்லை டாக்டர்..

சரி சொல்லுங்க..

என் பிரென்ட் ஒருத்தருக்கு..

இதுல பொய் எதுக்கு... அதுக்கெல்லாம் இப்ப புது புது ஊசி வந்து இருக்கு..இனிமேல் அந்த மாதிரி தவறு செய்யாதீங்க..

டாக்டர்... என்ன சொல்றீங்க..?

நீங்க தானே சொன்னீங்க.. என் பிரென்ட் ஒருத்தருக்குன்னு...

அப்படி சொன்னா ?



பொதுவாவே டாக்ட்டரிடம்  வந்து பிரென்ட் ஒருத்தருக்குன்னு சொன்னாலே.. சொன்னவருக்கு அந்த பிரச்சனை தானே.. அதுதானே வழக்கம்.. பழக்கம்.. சாரம்.. கலாச்சாரம்..

சரி .. விடுங்க.. பிரெண்டுக்கு இல்ல.. எனக்கு தான்.. ஆனா அந்த பிரச்சனை இல்ல..

வேற என்ன பிரச்சனை..?

என்ன பிரச்சனை..தினமும் ஒரு கனவு..

நல்லா தூங்கினா தான் கனவு வரும்... உங்களுக்கு நல்லா தூக்கம் வருது..சந்தோச படுங்க..

டாக்டர்..!

என்ன கனவு?

தினமும் காலையில் ஆறு மணிக்கு  கனவுல என் மனைவி வந்து...

கனவிலும் அவங்கதானா?

டாக்டர்...

சொல்லுங்க...மனைவி வந்து...

மனைவி வந்து ஓரு விஷயம் சொல்லுவாங்க.. அடிச்சி பிடிச்சி  எழுவேன்..

கனவுலேயும் அடிச்சி பிடிச்சா?

டாக்டர்...

சொல்லுங்க.. என்ன சொல்லுவாங்க..

வெக்கமா இருக்கு டாக்டர்..

கனவுல என்ன வெக்கம் சொல்லுங்க.. என்னிக்குமே டாக்டரிடமும் வக்கீலிடமும் எதையும்  மறைக்க கூடாது.. சொல்லுங்க..என்ன சொல்லுவாங்க..

 கனவில் மனைவி  ஒரு விஷயம் சொல்லுவாங்க.. அடிச்சி பிடிச்சி.. எழுந்தா அது அப்படியே நடக்கும்..

அதை தான் சொன்னீங்களே.. அப்படி என்ன சொன்னாங்க?

தினந்தோறும் அதே கனவு தான்..

என் பொறுமைய சோதிக்காதிங்க.. என்ன சொல்லுவாங்க..?

நாளைக்கு  உப்மானு சொல்லுவாங்க.. அடிச்சி பிடிச்சி பார்த்தா உப்புமாவா இருக்கும்.

யோ .. தினந்தோறும் வீட்டுல உப்மான்னு சொல்லிட்டு போ..  இதுல கனவு அது இதுன்னு பில்ட் அப் வேற .

இல்ல டாக்டர்.. ஒரே மாதிரி இல்ல.. வேற வேற மாதிரி நடக்கும்?

எப்படி..

போன வாரம்.. நாளைக்கு உப்புமாவில் பச்சை பட்டாணி போட்டு இருக்கேனு சொன்னாங்க.. அதே மாதிரி ... அடுத்த நாள்.. பச்சை பட்டாணியோட உப்மா ..

ஓ ஐ சி..

இதுக்கெல்லாம் ஐ சி வார்டுக்கு போகணுமா  டாக்டர்..

அந்த ஐ சி இல்ல.. இது I See..இந்த பச்சை பட்டாணி தற்செயலா நடந்து இருக்கலாம்.

இல்ல டாக்டர்.. கொஞ்ச  நாள் முன்னால.. ரவை கொஞ்சம் கம்மியா இருக்கு அதனால கொஞ்சம் அவல்  சேர்த்து உப்புமா பன்றேன்னு சொன்னாங்க..

அடுத்த நாள் அவல்  உப்புமாவா?

எப்படி டாகடர்.. சரியா சொன்னீங்க.?

லக்கி கெஸ்.. சொல்லுங்க....

ரெண்டு நாளைக்கு முன்னாலே.. தக்காளி ரெண்டு கெடுற மாதிரி இருக்கு.. அதை உப்புமாவில் போட்டு  கிச்சிடி மாதிரி கிண்ட போறேன்னு சொன்னாங்க.. அதே மாதிரி கிச்சிடி தான் மேசையில் இருந்தது..

ஹ்ம்ம்..

எப்படி டாக்டர்.. இதுக்கு ஏதாவது சிகிச்சை..?

இது ஒரு மன  பிராந்தி..

எனக்கு குடி பழக்கம் இல்லை டாக்டர்..

அந்த  பிராந்தி இல்லை.. இது வேற..

டாக்டர்... இதுக்கு சிகிச்சை..

இருக்கு.. இந்த மாத்திரையை  தினந்தோறும் தூங்க போறதுக்கு முன்னாடி போட்டுட்டு படுங்க..

தேங்க்  யு டாக்டர்.. வேணும்னா இந்த மாத்திரையை நாளைக்கு இரவில் இருந்து போட்டுக்குறேன்..

நாளைக்கு ஏன்.. இன்னைக்கே ஆரம்பியுங்க..

இல்லை டாக்டர்.. நாளைக்கே ஆரம்பிக்கலாம்..

அது தான் ஏன்?

நேத்து கனவில் இன்னைக்கு உப்புமாவில்  கொஞ்சம் "மட்டன்  கொத்து கறி" போட்றேன்னு சொன்னாங்க..."


3 கருத்துகள்:

  1. இதுக்குதான் சொல்லுறது அப்துல் கலாம் பேச்சை கேட்ககூடாதுன்னு.. அவர் பேச்சை கேட்டு கனவு காண ஆரம்பித்தால் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  2. உப்புமாக்குலாம் ஒரு பதிவா?! அண்ணி அந்த பக்கம் திரும்பினா உப்புமாவை ஜன்னல் வழியா தூக்கி போட்டுட்டு ஹோட்டல் சாப்பிடுவியா?! அதை விட்டு இங்க வந்து புலம்புறியேண்ணே!

    பதிலளிநீக்கு
  3. இந்த உப்புமா விடாது துரத்தும் கறுப்பு போல?)))

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...