வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஆம்பிளையா பிறக்க கூடாது ..

இன்று முக நூலில் ஒரு சிறு துணுக்கு போட்டு இருந்தேன். மேலே தொடருமுன் முதலில் அதை படிக்கலாமே..

ஜோடியா  ஊர் சுத்த வந்து இருக்கியே...லைசன்ஸை எடு...

இதோ..

இது ஒரிஜினல் இல்ல ....ஒரிஜினல் எங்கே..?

காணமல் போச்சி.

அது கிடைக்குற வரை வண்டிய சீல் பண்ணி உள்ளே வைக்க போறோம்.

சார்.. என் கல்யாண ஒரிஜினல் செர்டிபிகேட் கூட காணாம போச்சி சார்


இப்பொது பதிவிற்கு வருவோம்.

இந்த பதிவை படித்த சிலர் லைக் - சிரிப்பு என்று சொல்லி இருந்தாலும் பலர்... உள் டப்பியில் வந்து சிறிது கோவமாக அறிவுரையை அள்ளி தந்தார்கள்.

இதில் என்ன கோவம்...

ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்து கொள்வது நல்லது தான். இருந்தாலும் அது கையில் இல்லாவிடில் இன்றைய முன்னேற்ற சூழ்நிலையில் தொலைபேசியின் மூலம் காட்டலாம். அல்ல நகல் வைத்து கொள்ளலாம் ... அதை விட்டு விட்டு ஒரிஜினல் இல்லாவிடில் கைது என்பது பெரிய தண்டனை தானே..

அதை தானே சொன்னேன். அதற்கு என்ன கோவம் என்று சொன்னேன்.

அதற்கு பலர்...

நாங்கள் அதை பற்றி பேசவில்லை.. வேறொரு விஷயம் பற்றி பேசினோம் என்று சொல்ல...

நானோ..

ஆமாம்.. இந்த மாதிரி வண்டியை சீல் செய்து ஸ்டேஷனில் வைப்பது வண்டிக்கு நல்லது அல்ல.. மற்றும் வண்டி இல்லாமல் ஒருவன் எப்படி தன் தினந்தோர வேலையை செய்ய முடியும் ...

என்று என் வாதத்தை எடுத்து வைத்தேன்.

இவ்வளவு சொல்லியும் பலரின் கோவம் தணியவில்லை.

கடைசியாக ஒரு அம்மணி..

மனைவி முகநூலில் இல்லை என்ற காரணத்தினால் தானே இம்புட்டு தகிரியமாக எழுதிகின்றீர்கள் என்று போட்டார்களே ஒரு போடு.

அப்போது தான் எனக்கு இவர்களின் கோவத்திற்கான காரணம் புரிந்தது.

என் இனிய தமிழ் மக்களே..

இந்த முழு உரையாடலும் அம்மணிக்கும் - போலீஸ்காருக்கும் நடந்தது தான் என்று நான் சொல்ல வந்தேன்.

இப்போதாவது என் மேல் உள்ள கோவத்தை குறைத்து கொண்டு பரிதாப படுங்கள்.

நன்றி.. 

3 கருத்துகள்:

  1. ரூல்ஸ் தெரியாம மேரேஜ் சர்டிஃபிகேட்டை தொலைச்சுட்டீகளோ!

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹாஹா அது சரி வண்டியில ஆணும் பெண்ணும் போனாக் கூட அதுக்கும் லைசன்ஸ் வேணுமா?!!! விசு?!!! ஹையோ முதல்ல அப்ப என் கல்யாண சர்டிஃபிக்கேட் எங்க இருக்குனு பார்க்கனூம்...எடுத்தமா இல்லையா அதுவே நினைவு இல்லையே!!ஹிஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...