Thursday, August 17, 2017

டேக் இட் ஈஸி பாலிசி...!

அலை பேசி அலறியது...

விசு..

திஸ் இஸ் ஹிம்...

ஓ.. கிரேட்.. இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து கூப்பிடுறேன்...

ஓ.. தேங்க்ஸ் பட் நோ தேங்க்ஸ்.. எனக்கு நல்ல பாலிசி இருக்கு..

ஹே.. திஸ் இஸ்யுவர் பிரென்ட் ... உனக்கு நல்ல பாலிசியை கொடுத்ததே நான் தான்..

ஓ.. சாரி.. ஹொவ் ஆர் யு?

இருக்கேன்.. எனக்கு சில இன்பர்மேஷன் வேணும்.. கொடுத்தீனா... உன் ஆட்டோ பிரீமியம் கம்மி பண்ணுவேன்...

ஆட்டோ பிரீமியம் கம்மி ஆகுதுன்னா... கொஞ்சம் என்ன நிறைய இன்பர்மேஷன் தரேன்... சொல்லுங்க..

நீ என்ன படிச்சி இருக்க?

படிப்புக்கும் பெர்மியத்துக்கும் என்ன சம்மந்தம்...?

சொல்லு.. மாஸ்டர்ஸ் முடிச்சியா?

ஆமா..

அந்த காப்பிய கொஞ்சம் அனுப்பு..

அம்மணி?

அவங்க ரொம்ப ஸ்மார்ட்....

அப்புறம் எப்படி உன்னை  கல்யாணம் பண்ணாங்க..?

விதி.... விஷயத்துக்கு வா.. அவங்களுக்கு என்ன?

மாஸ்டர்ஸ் முடிச்சி இருக்காங்களா?நானே முடிச்சி இருக்கேன் ... அவங்க முடிக்காமல் இருப்பாங்களா?

அந்த காப்பியையும் அனுப்பி வை..

மூத்த பிள்ளை..

அவளுக்கு இப்ப தான் 18 ஆரம்பிச்சி இருக்கு..மாஸ்டர்ஸ் முடிக்கல..

இந்தியன்ஸ் ஆச்சே... முடிச்சி இருந்தாலும் இருக்கும்ன்னு கேட்டேன்.

அவ இந்த வருஷம் தான் காலேஜுக்கு போற..

அவள் ஸ்கூல் முடிக்கும் போது அவளுடைய GPA 3 .00  மேலே இருந்ததா?

என்னையா கேள்வி இது.. ஒரு இந்திய தகப்பனை பார்த்து கேக்குற கேள்வியா இது? அதுக்கும் மேலே தான்.

அந்த காபியும் ஒன்னு அனுப்பி வை.

அடித்து பிடித்து அனைத்தையும் அனுப்பி வைத்தேன்... அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஓரு போன் வந்தது..

விசு..

சொல்லு...

யு ஓ மீ எ லஞ்ச்.

ஏன்..

உனக்கு மாசம் 110 டாலர்ஸ் இன்சூரன்ச்ஸ் ப்ரீமியம் கம்மி பண்ணி இருக்கேன்.
தேங்க்ஸ்..

போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டேன். அம்மணியின் குரல் கேட்டது..
என்னங்க..

சொல்லு..

செர்டிபிகேட் இருக்க பெட்டியை ஏன் திறந்தீங்க..

அத நான் திறந்தேனு உனக்கு எப்படி தெரியும்...?

ஒழுங்கா மறுபடியும் இருந்த இடத்தில வைக்கலையே..

சும்மா .. .எல்லாத்துலையும் தப்பு கண்டு பிடி..இன்சூரன்ச்ஸ் பாலிசியில் இருந்த எல்லா விஷயத்தையும் அலசி ஆராஞ்சி நம்ம ப்ரீமியத்தை 110  டாலர் கிட்ட கம்மி பண்ணி இருக்கேன்.

எப்படி?

நம்ம மூணு பேரு படிப்பையும் காட்டி தான்.

படிப்புக்கு ப்ரீமியம் கம்மி பண்றங்களா...

அழகுற  குழந்தைக்கு தான் பால்.. நானா கேட்டு வாங்கினேன்..

என்னாலே நம்பவே முடியலைங்க... நீங்க கண்டு பிடிச்சு.. போன் பண்ணி.. எப்படிங்க...?

இந்த மாதிரி விஷயத்துல நம்ம எப்பவும் கறாரா இருக்கணும்.

உண்மையா சொல்றங்க.. நீங்க இம்புட்டு கறாருன்னு என்னாலே நம்பவே முடியல.

இப்பவாது புரிஞ்சா சரி..

அது சரி.. சின்னவளும் நல்ல படிக்குறா தானே... அதையும் காட்டி இன்னும் கொஞ்சம் கம்மி பண்ண சொல்லுங்க..

இவ்வளவு யோசிச்சவன் அதை விட்டுடுவேனா?அவ  இன்னும் வண்டி ஓட்ட ஆரம்பிக்கலையே..அதனால முடியாதுன்னு சொல்லிட்டாங்க..'

ஏங்க.. ஒன்னு கேக்கட்டும்மா? தப்பா நினைக்க மாட்டீங்களே..

மனதில்.. அடே.. அடே .. ஒரு 110  டாலர் கம்மி பன்னதுக்கே இப்படி அன்பு சொட்ட சொட்ட கொஞ்சி பேசுறாங்களே..

என்ன வேணும்னாலும் கேளு..

இவ்வளவு வருசமா இந்த பதிவு, முகநூல் லொட்டு லொசுக்குன்னு இல்லாமல் இந்த மாதிரி நல்ல விஷயத்துல இறங்கி இருந்தீங்கனா...இம்புட்டு ப்ரீமியமும் என்னிக்கோ கம்மி ஆகி  இருக்குமே.

பின் குறிப்பு:

இந்த பதிவின் மூலம் ஆண்களுக்கான அறிவுரை. இந்த மாதிரி சில நேரத்தில் நம்மை அறியாமலே காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா சில விஷயங்கள் நடக்கும். அதை நாமே செஞ்ச மாதிரி காட்டி நல்ல பேரு வாங்கிக்கணும்.

பெண்களுக்கு ... இன்சூரன்ஸ் கம்பெனியில் இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கு... படிப்பு.. வேலை.. பிள்ளைகளின் ஒழுக்கம்...உடனே வூட்டுக்காரிடம் சொல்லி இந்த மாதிரி தள்ளுபடியெல்லாம் உங்க பாலிசியில்  இருக்கானு செக் பண்ணுங்க..

BTW .. யு ஆல் ஆர் வெல்கம்.

5 comments:

 1. எங்கூட்டுல நான் பைனான்ஸ் மினிஸ்டரா இல்லாததால எனக்கு கவலை இல்ல

  ReplyDelete
  Replies
  1. ராஜி நான் என்ன சொல்ல வந்தனோ அதையே நீங்க உங்கூட்டுலனு சொல்லிட்டீங்க...எங்கூட்டலயும் அதேதான்..கதை....மினிஸ்டர் என்ன ஃபினான்ஸ் துறைல உள்ள கடைக்கோடி ஸீட் கூடக் கிடையாது எனக்கு எங்கூட்டுல ஹஹஹஹ்

   கீதா

   Delete
  2. எங்கவீட்டுல் கிச்சனைவிட்டு வெளியே வர அனும்தியில்லை அதனால பைனான்ஸ் மினிஸ்டரான்னா என்ன என்று கூட தெரியாது எனக்கு தெரிந்ததெல்லாம் பைன் ஆப்பிள் கேக் சாலட்தான்

   Delete
 2. அப்ப எங்களை போல படிக்காதவர்களுக்கு ப்ரிமியம் குறைக்க மாட்டாங்களா? இது அநியாயமாக அல்லவா இருக்கிறது

  ReplyDelete
 3. //சில நேரத்தில் நம்மை அறியாமலே காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா சில விஷயங்கள் நடக்கும்.//

  என் விஷயத்தில் காக்கா உக்கார பன மரம்தான் விழும் அதனால் நான் கம்முனுகிறேன்

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...