Friday, July 6, 2018

வருமுன் காப்போம் (Go Fund Me)

இந்த பதிவை எழுதும் போதே மனதில்..

இதை நாம் எழுதி தான் ஆகவேண்டுமா என்ற ஒரு கேள்வி வந்தது. அது மட்டும் இல்லாமல், இந்த பதிவிற்கான சரியான நேரம் இது தானா? என்ற கேள்வியும் வந்தது.

இரண்டாம் கேள்விக்கு பதில்.. இந்த பதிவிற்கென்று ஒரு சரியான நேரம் அமையாது. எப்போது இதை பற்றி எழுதினாலும் யாராவது தவறாக நினைக்க வாய்ப்புள்ளது அதனால் இப்போதே எழுதிவிடலாம் என்பது சரியாக பட்டது.

முதல் கேள்வி!

அமெரிக்காவிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் பல வருடங்கள் வாழ்ந்தவன். இரண்டு இளவயது பெண்களின் தகப்பன். அம்மணியின் கணவன். எங்கள் கூடவே வசிக்கும் அம்மா. மற்றும் தொழில் ரீதியாக நிதி துறையில் படித்து பணிபுரிபவன். இவை அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது இதை நான் எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது.சரி பதிவுக்கு வருவோம்!

நாம் அனைவரும் பிறந்த அன்று நமக்காக எழுத பட்ட ஒன்று நம் இறப்பு. அதை யாராலும் மாற்ற இயலாது. இந்த மரணம் எந்நேரத்திலும் வரலாம்.  கடந்த இரண்டு வருடங்களாக முகநூலிலும் சரி மற்றும் அறிந்த தெரிந்த நண்பர்களிடம்  இருந்தும் சரி..

Gofundme என்ற ஒரு அமைப்பில் இருந்து விண்ணப்பம் வரும். அதில் பொதுவாக ஒரு நடுத்தர வயதானவர், குடும்பம் பிள்ளை குட்டியோடு அமெரிக்காவில் வாழும் ஒருவர் இயற்கை எய்தினார் என்றும், அவரின் இறுதி செலவிற்கும் பிள்ளைகளின் படிப்பிருக்கும் மனைவியின் வாழ்விற்கும்  பண உதவி தேவை என்று சொல்லுவார்கள்.

இந்த விண்ணப்பத்தை பார்த்தவுடன் மனது பதறும். நம்மை போல் ஒருவர். கடல் தாண்டி வந்து வாழ்ந்தவர். திடீரென்று தவறி விட்டாரே என்று அவரின் இடத்தில நம்மை பார்த்து கொள்ள நேரும்.

பிறகு நம்மால் ஆன சிறு உதவி செய்துவிட்டு காரியம் எல்லாம் முடிந்த பின்பு அந்த குடும்பத்திடம் விசாரித்தால்.. பாவங்க.. அவருக்கு இன்சுரன்ஸ் பாலிசி கூட இல்லை. இங்கே வந்து சில வருடங்கள் தான் ஆச்சி. ரொம்ப கஷ்டம். யாருமே நினைக்காத நேரத்தில் இந்த மாதிரி ஆகிவிட்டது என்ற செய்தி தான் வரும்.

நான் ஏற்கனவே கூறியது போல் மரணம் சொல்லி வைத்து விட்டு வராது. யாருக்கும் எப்போதும் வரலாம். ஆனால் இவ்வாறாக வெளிநாடு வரும் ஆட்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம், இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது.
இந்தியாவில் புதிதாக வந்தவர்களுக்கு (ஆறு மாதம் வரை) இங்கே அந்த விடயங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பல வருடங்கள் இங்கே வாழ்ந்தவர்கள் எப்படி ஒரு இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வாழ்வார்கள் என்பது எனக்கு புதிராகவே உள்ளது.

இன்சுரன்ஸ் என்பது மிகவும் அத்தியாசமானது. நம் அனைவருக்கும் அது மிகவும் அவசியம். ஒரு குடும்ப தலைவனோ தலைவியோ தவறினால் அந்த இழப்பை சொல்லி மாளாது. ஆனால் அந்த இழப்பை விட பெரிய சோகம், இவர்கள் மரணத்திற்கு பின் அந்த குடும்பம் பணத்திற்காக (அதுவும் வெளிநாட்டில் தனியாக) கஷ்டப்படுவது.

இந்த பதிவின் மூலம் ஒரு சிறிய விண்ணப்பம். இதை படிக்கும் அனைவரும்  முதலில் தங்களுக்கென்று ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுங்கள். அது மட்டுமில்லாமல் தங்கள் சொந்த பந்தங்கள் நடப்புகள் அனைவரிடமும் இவ்வாறு செய்ய சொல்லுங்கள்.

ஊரில் இருந்து புதிதாக வருபவர்களிடம் இந்த முக்கியமான விஷயத்தை பகிருங்கள்.

மற்றும் இங்கே உள்ள தமிழ் சங்கங்கள் தாங்கள் கூடும் போது இந்த இன்சூரன்ஸ் எடுப்பதை பற்றி எடுத்து கூறுங்கள். இது முக்கியமான விஷயம்.

இங்கே இன்னொரு விஷயம். இதை போன்ற இன்சூரன்ஸ் பாலிசி பிரீமிய தொகை அதிகமாக தான் இருக்கும். அதை நாம் சிறிது தியாகம் செய்து கட்டி தான் ஆகவேண்டும்.

சிலரால் இந்த தொகையை கட்ட முடியாது. அதையும் நான் புரிந்து கொள்கிறேன். இப்படி கட்ட முடியாதோர் இல்லத்தில் மரணம் நடந்தால் இந்த Gofundme மிக பெரிய உதவி என்பதையும் நான் அறிவேன்.

பின் குறிப்பு :


இதை எழுதியதால்.. விசு, உனக்கு இவர்களுக்கு உதவி செய்ய தோன்றாவிட்டால் அமைதியாக போ இந்த அறிவுரை எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்புள்ளது. அதையும் நான்  மதிக்கின்றேன். என்னால் முடிந்த, என் தகுதிக்கேற்ப உதவிகளை உங்களை போல நானும் எப்போதும் செய்ய தயாராக இருக்கின்றேன்.

நமக்கு பின் நாம் விட்டு செல்பவர்கள் பணத்திற்காக கஷ்டம் படுவதை நாம் யாரும் விரும்ப மாட்டோம் அல்லவா.. அதனால் தான் இந்த பதிவு.

12 comments:

 1. மரண செலவுக்கான 10 euro கட்ட தவறினால் 5000 euro நான் ஏங்கே சாகப்போகிறேன் .என ஜேயலலிதா மாதிரி நினைத்துக்கொள்கிறார்கள் உறவினர் ஒருவர் 45 வயது கார் சிலிப்பாகி * வந்த சகோதரர்கள் ஆளுக்கு 1000 கொடுத்தார்கள்

  ReplyDelete
 2. எந்த நாடாக இருந்தாலும் காப்பீடு மிகவும் அவசியம்.
  ஒருவரின் முதல் சேமிப்பாக காப்பீட்டு பிரிமியம் அமைவது நல்லது.
  நல்ல ஆலோசனை வழங்கி உள்ளீர்கள்

  ReplyDelete
 3. இன்சூரன்ஸ்எடுக்கச் சொன்னது சரி அப்படியே ரிலயென்ஸ் இன்சூரன்ஸ் மட்டும் எடுத்து விடாதீர்கள் எனத் தவறாமல் எழுதவும் பக்கா Fraud company நான் ஏமாந்த கதையைத் தனியாக எழுத இருக்கிறேன்.இது தகவலுக்காக

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அனுபவத்தை கண்டிப்பாக எழுதவும். மற்றவர்களும் நம்மை போல் அவதி பட கூடாது அல்லவா!வருகைக்கு நன்றி!

   Delete
 4. தேவையான பதிவு.
  //இங்கே இன்னொரு விஷயம். இதை போன்ற இன்சூரன்ஸ் பாலிசி பிரீமிய தொகை அதிகமாக தான் இருக்கும். அதை நாம் சிறிது தியாகம் செய்து கட்டி தான் ஆகவேண்டும்.//

  Risk மட்டும் cover ஆவது போல் இருந்தால் மிகவும் குறைந்த பிரிமியமே தேவைபடும். இந்த வகை இன்சூரன்ஸில் இறப்பு ஏற்பட்டால் அதிக தொகை கிடைக்கும். இல்லாவிட்டால் அதன் இன்சூரன்ஸ் முடியும் போது எந்த தொகையும் கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. இதை பற்றி சற்று விவரமாக தாம் ஒரு பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி.

   Delete
  2. Term life insurance or term assurance is life insurance that provides coverage at a fixed rate of payments for a limited period of time, the relevant term. After that period expires, coverage at the previous rate of premiums is no longer guaranteed and the client must either forgo coverage or potentially obtain further coverage with different payments or conditions. If the life insured dies during the term, the death benefit will be paid to the beneficiary. Term insurance is typically the least expensive way to purchase a substantial death benefit on a coverage amount per premium dollar basis over a specific period of time.

   Term life insurance can be contrasted to permanent life insurance such as whole life, universal life, and variable universal life, which guarantee coverage at fixed premiums for the lifetime of the covered individual unless the policy is allowed to lapse. Term insurance is not generally used for estate planning needs or charitable giving strategies but is used for pure income replacement needs for an individual. Term insurance functions in a manner similar to most other types of insurance in that it satisfies claims against what is insured if the premiums are up to date and the contract has not expired and does not provide for a return of premium dollars if no claims are filed. As an example, auto insurance will satisfy claims against the insured in the event of an accident and a homeowner policy will satisfy claims against the home if it is damaged or destroyed, for example, by fire. Whether or not these events will occur is uncertain. If the policyholder discontinues coverage because he or she has sold the insured car or home, the insurance company will not refund the full premium.

   Delete
  3. Thanks Dude... Appreciate you taking time to write this.

   Delete
 5. Not my original writing, sharing what was seen in a public domain. Thanks

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...