செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பாக்யராஜின் "தில்" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா?

சில மாதங்களுக்கு "கத்தி" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களின் திறமை மேல் சந்தேகம் வந்தது அனைவரும் அறிந்ததே.

அது மட்டும் அல்லாமல் அப்படத்தில் வந்த சில காட்சிகள் , ஏற்கனவே ஆங்கில படத்தில் வந்த  காட்சிகளின் அப்பட்டமான நகல் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் இசை அமைப்பாளரும் சில ராகங்களை காப்பி அடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மொத்தமாக சொல்லபோனால் இந்த படமே "சுட்ட பழம்" என்று தான் நான் நினைத்தேன்.

அதன் பின் வந்த "லிங்கா" பென்னி என்ற உத்தமனின் உண்மை கதை என்றும் கேள்வி பட்டோம். "லிங்கா"வில் வந்த சாவி திருடும் காட்சியும் ஆங்கில படத்தில் இருந்து சுடப்பட்டதை பார்த்தோம்.


இந்த மாதிரி "சுட்ட பழங்களை" இயக்க - இசை  அமைக்க இம்மாதிரியான   இயக்குனர்கள் - இசை அமைப்பாளர்கள் தேவையா? இவர்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் தர அவசியமா என்ற கேள்வியும் மனதில் வருகின்றது.

இங்கே இன்னொரு விஷயம் .. "த்ரீ இடியட்ஸ் " என்ற ஹிந்தி படம். அமீர்கான் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் . அந்த படத்தை தமிழில் "நண்பன்" என்று இயக்க "சங்கர்" அவர்களுக்கு கோடி கணக்கில் சம்பளம். இங்கே ஒரு விஷயம் புரியவில்லை.

ஒரு மிக பெரிய வெற்றி படத்தை மொழியை மட்டும் மாற்றி தர ஒரு இயக்குனர் தேவையா ? ஒரு உதவி இயக்குனரை வைத்து இந்த காரியத்தை செய்ய முடியாதா ? சினிமா துறையில் பணி புரியும் யாராவது தங்கள் கருத்தை இங்கே பகிருமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்.

இயக்குனர் சங்கர் படம் எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை. அங்கே இங்கே சில காட்சிகள் மற்றும் பாடல்களை பார்த்துள்ளேன். ஒரு முறை விமான பயணத்தின் போது " இந்தியன்" என்ற படத்தின் ஒரு பாடலை முறை காண நேர்ந்தது. " மாயா மச்சம் ... " என்ற பாடல் . மைக்கல் ஜாக்சன் அவர்களின் "Remember the Times" என்ற பாடல் காட்சியை அப்படியே  காப்பி செய்து இருந்தார்கள். அதை பார்த்து கொண்டு இருந்த நபர் இந்த பாடலை பார்த்தவுடன், அருகில் இருந்த என்னிடம்.. "சங்கர் சங்கர் தான் "என்றார். நானும் கூடவே தலையை ஆட்டி "சங்கர் சங்கர் தான்" என்றேன்.

சரி தலைப்பிற்கு வருவோம். பாக்யராஜின் "தில்"! என்னை பொறுத்தவரை  திரைகதையை ரசிகர்களுக்கு அளிப்பதில் இவருக்கு நிகர் இவரே. பாக்யராஜின் "தில்" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா?



வளரும் பருவத்தில் பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் "மௌன கீதம்" என்ற படம். அவரே கதை, திரைகதை எழுதி நடித்து வெளிவந்த படம். இந்த படத்தின் கதையை படம் வெளிவரும் முன்பே ஒரு வார இதழில் தொடர்கதையாக எழுதி வந்தார். இந்த காலத்து இயக்குனர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் இந்த தில் வருமா ?

தொடர் கதை மட்டும் எழுதாமல், அங்கே இங்கே வேறு போட்டிகள் சில வைத்து அந்த போட்டிகளில் (வசனம் எழுதும் போட்டி) வெற்றி பெற்றவர்களுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

தொடர் கதையில் சில "ஸ்டில்" போட்டு படிப்போரின் ஆர்வத்தை தூண்டி விட்டார். தொடர்கதையை படிப்பவர்கள் அனைவரும் இந்த படம் எப்போது வெளிவரும் என்று எதிர் பார்க்க வைத்த திறமைசாலி "பாக்கியராஜ்".  இந்த காலத்து இயக்குனர்கள் யாருக்கவாது இந்த "தில்" இருக்கா?

சரி, "தில்" இல்லை விடுங்க. குறைந்த பட்சம் .. எந்த ஆங்கில படத்தில் இருந்து காப்பி பண்ணோம் என்று சொல்லும் மனசாட்சியாவது இருக்கா ?

4 கருத்துகள்:

  1. தாங்கள் திரைத்துறைப் பக்கம் போனால் தெரியும்,,,,,,,, தில்,
    அது என்ன திரைத்துறைப் பற்றிய பதிவாகவே,,,,, படம் எதுவும் எடுக்க போகிறீர்களா???
    அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பாக்யராஜின் திரைக்கதை திறமை பாராட்ட தக்கதுதான்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...