கென்னடியிடம் பாப்பின்ஸ் கடன் வாங்கி அதை காட்டி சண்முகம் ஸ்டோர்ஸில் ஆட்டையை போட்டு இன்னொரு பாப்பின்ஸ் எடுத்து வந்தது தெரிந்த கதை.. (படிக்காதவர்கள், மஞ்சுளா பாப்பின்ஸ் ! இங்கே சொடுக்கவும் ).
சரி, அந்த பாப்பின்ஸின் தொடர்கதையை பார்ப்போம்.
Total :48
Present :46
ஏற்கனவே கூறியது போல அடியேன் லீடர் தானே, கரும்பலகையில் இதை எழுதும் போதே, கடன்காரன் லிங்கன் அருகில் வந்து,
"என்ன விசு நேத்து 48க்கு 48 ன்னு எழுதுனே, இன்னைக்கு 2 பேர் லீவா"
"ம், 2 பேர் தான், லீவ் இல்ல, சிக், உடம்பு சரி இல்ல "
"சரி, நேத்து மஞ்சுளா வந்தா தானே, அவளுக்கு எதிரில் ஸ்டைலா முழு பாப்பின்ஸை பிரிச்சி இருப்பியே.. என் பங்கை தா!"
"டே , நேத்து மஞ்சுளா வந்தா, ஆனா நான் பாப்பின்ஸை பிரிக்குறதுக்குள்ள கென்னடி முந்திட்டான்"
"அவன் தான் ஒரு வாரமா பாக்கெட்டில் வைச்சினு சுத்தின்னு இருக்கானே"
"சரி, அவன் கொடுத்தவுடன் நீ கொடுக்க வேண்டியது தானே?"
"அப்படி தான் பிளான் பண்ணேன், ஆனா அதுக்குள்ள"!?
"அதுக்குள்ள, என்ன ஆச்சி?!"
"டே.. உனக்கு விஷயம் தெரியாதா.. "?
"என்னாது"?"
"2 பேர் உடம்பு சரி இல்லன்னு சொன்னேன் தானே "
"ஆமா , நீ ஏன் பேச்சை மாத்துற?"
"அந்த உடம்பு சரி இல்லாத 2 பேர், மஞ்சுளாவும் கென்னடியும் தான்"
"ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் உடம்பு சரி இல்லையா, என்ன சொல்ற.. ஒரே பாப்பின்ஸில் "சிக்"ன்னு பொய் சொல்லி லீவ் போடுற அளவு போய்ட்டாங்களா?"
"டே, உண்மையாவே சிக்"
"ரெண்டு பேருக்குமே எப்படி , ஒரே நேரத்துல?"
"எல்லாம் அந்த பாப்பின்ஸ் தான் "
"புரியல"
"நேத்து கென்னெடி பாப்பின்ஸை பிரிச்சி கொடுத்தான் தானே, அதை ரெண்டு பேரும் பங்கு போட்டு சாப்பிட்டாங்களாம்"
"அட பாவி, எனக்கும் தரேன்னு சொன்னானே .. மொத்தமும் காலியா? நீயும் அப்படி பண்ணிடாத.. ப்ளீஸ்!"
"விஷயத்துக்கு வா"
"சொல்லு"
"பிரிச்சி சாப்பிட்ட அஞ்சே நிமிசத்தில் ரெண்டு பேருக்கும் ஒரே வாந்தி மயக்கம்"
"ஐயோ, ஏன்?"
"ஹாஸ்ப்பிட்டல் போய் பார்த்தா, என்னமோ "Food Poisoning" ன்னு சொல்லிட்டாங்களாம்.
"ரெண்டு பேரும் வீட்டுல என்ன டிப்பன் சாப்பிட்டு வந்தாங்களோ ... "
"வீட்டு டிப்பன் இல்ல"
"வேற?"
"அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டது பாப்பின்ஸ்"
"ஓ .. அந்த பாப்பின்ஸ் தான் கெட்டு போச்சா "?
"அப்படி தான் !"
"அவன் அதை பாக்கெட்டில் ஒரு வாரமா வைச்சினு சுத்தும் போதே யோசிச்சேன், அது வெயிலில் கெட்டு போக போதுன்னு"
"ம் "
"சரி, மஞ்சுளா திரும்பவும் வர நாள் ஆகும் போல இருக்கு, நம்ம பாப்பின்ஸ்ஸை பிரி"
"நம்ம பாப்பின்ஸ்ஸா? "
"ம்"
"நீ உண்மையாவே இம்புட்டு பெரிய முட்டாளா, இல்லாட்டி நடிக்கிறியா ?"
"ஏன்?"
"ஒரு வாரம் அவன் பாக்கெட்டில் இருந்த பாப்பின்ஸ் கெட்டு போய் இருக்கு, இது அந்த கடையில் ரெண்டு வாரத்துக்கு மேலே விழுந்து இருக்கு"
"அதுக்கு"
" இதுவும் கெட்டு போய் இருக்கும்னு குப்பையில் போட்டுட்டேன்"
"நல்ல வேளை , அவசர பட்டு சாப்பிட்டு இருந்தா நாளைக்கு Total 48 Present 44 ன்னு வேற யாராவது எழுதி இருக்கணும்"
பின் குறிப்பு:
மாலை விடுதிக்கு வந்து பெட்டியை திறந்து பார்த்தேன். அதில் கென்னடியின் பெரியம்மா வாங்கி வந்த புது பாப்பின்ஸ் அப்படியே இருந்தது. மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. கென்னடி, லிங்கன் இப்படி ரெண்டு அமெரிக்க அதிபர்களை ஏமாத்தி இந்த பாப்பின்ஸை மஞ்சுளாவுட ஷேர் பண்ணவேண்டுமா? தப்பு பண்ணிட்டோமா? சொல்லிடலாமா?
அப்படி என்ன தப்பு பண்ணி இருப்பேன்!?

தம்பி விசு நல்லவேளை உங்க வகுப்பிலே கிளின்டன்னு யாரும் இல்லை .
பதிலளிநீக்குமறுபடியுமா...?
பதிலளிநீக்குதொடருமா...?
தொடரும் தான்....இப்பத்தானே லிங்கன், கென்னடி...இன்னும் புஷ், கிளிண்டன் எல்லாரும் வரணுமே..குறிப்பா மஞ்சுளா!!.அதுவரை ஈப்ப அந்த பெரியம்மா கொடுத்த பாப்பின்ஸ் பாக்கெட்ல சுத்தும் !! ஹா ஹா ஹா
நீக்குகீதா
மஞ்சுளாவிற்கு கொடுத்தாலும் அவ சாப்பிடமாட்டா அதனால வேற் பொண்ணுக்கு கொடுத்தீங்களா இல்லைன்னா நீங்கலே சாப்பீட்டீங்களா
பதிலளிநீக்குபாப்பின்ஸ் எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறேன் ஆனா இப்படியும் சாப்பிடலாம்ன்றது அப்ப தெரியாம போச்சே!!
பதிலளிநீக்குரசித்தேன் பாப்பின்ஸ் கதையை?! விசு!
துளசிதரன்