இந்த வாரம் முகநூலில் ஒரு பதிவு போட்டு இருந்தேன்.. அதற்கான வினையும் எதிர் வினையும் கொஞ்சம் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். முதலில் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது...
என் பதிவு
//ஏங்க.....ரெண்டு மூணு பாத்திரம் தான்.. கொஞ்சம் அலசிடுறிங்களா?
பை ஆல் மீன்ஸ்...நீ இங்கே இருந்து கிளம்பு.. கழுவுறேன்.
நான் இங்கே இருந்தா தான் என்ன?
நமக்கு சின்ன வயசில் இருந்தே யாராவது சூப்பர்விஷன் செஞ்சா கை கால் வேலை செய்ய்யாது !
என் இனிய ஆண் குலமே.. உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கா? //
இந்த பதிவிற்கு ... சிவ குமரன் என்ற நண்பர்...
//கரெக்டுதான், பக்கத்துல இருந்து பாத்துகிட்டே, நூத்தியெட்டு நொள்ளை சொல்லுவாங்க. தேநீர்ப் பாத்திரத்துல, அந்த ஓரமா, கருப்பா புள்ளி மாதிரி தெரியுதுன்னு, சொல்லி வெறுப்பேத்துவாங்க. இதுலாம், சகிச்சுக்கிட்டு கழுவுற அளவுக்கு, ஆண் வர்க்கத்துக்கு பொறுமையிருக்காது, யுவர் ஆனர்.....//
என்று பின்னூட்டம் இட்டது.. மனதிற்கு சற்று ஆறுதல் தந்தது.
சிவ நடராஜன் என்ற மற்றொரு நண்பர் .. சுருக்கமாக
//same blood //
என்று கூறியது மனதில் சற்று தைரியத்தை வரவழைத்தது என்று தான் சொல்லவேண்டும்.
டைட்டஸ் துரைராஜ் என்ற நண்பர்..
//வீட்டிற்கு வீடு வாசற்படி //
என்று கூற.. நமக்கு மட்டும் இப்படி இல்லை என்று என்னை நானே தேற்றி கொண்டேன்..
இப்படி இருக்கையில் தான் பூகம்பம் வெடித்தது......
கவிதா சுந்தர் என்ற தோழி ...
//செய்யுற வேலையில கவனம் இருந்து ஒழுங்கா செஞ்சா நாங்க ஏன் சுபெர்வைஸ் பண்ணனும்....?!
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்துட்டு அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச கதையா.... நீங்க பாத்திரம் துலக்கிறதும், அலசுறதும் லட்சணம் தெரியதாகும்.... ம்க்கும்....//
என்று போட்டார் ஒரு போடு...
இந்த அம்மணி வெறுங்காலிலே குச்சிப்புடி ஆடுவாங்க.. இப்ப சலங்கை வேற கட்டினு வந்து இருக்காங்களே என்று.. மதுரை தமிழனை உதவிக்காக
//எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்// என்று நான் அழைக்க..மதுரையோ நேரே வந்து..
//விசு மூன்று பாத்திரத்துக்கே மூக்கால் அழுதா எப்படி நன் எல்லாம் எல்லா பாத்திரத்தையே கழுவிவிட்டு அமைதியா இருக்கேன் . உங்க மனைவி தெய்வம் அய்யா போங்க போயி அவர்களுக்கு ஒரு கோவில் கட்டுங்கய்யா//
என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச..அந்த வழியில் துடித்து கொண்டு இருக்கும் போது..
மற்றொரு தோழர் பிரபு சின்னத்தம்பி ...உடுக்கன் இழந்த நடிப்பை காப்பாற்ற ஓடோடி வந்து..
//எனக்கு மட்டும் தான் இந்த வியாதின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்//
என்று ஒரு பின்னூட்டம் இட.. அதை கண்ட கவிதா சுந்தர் மீண்டும் வந்து..
//உங்களுக்கு இப்படின்னா... எங்களுக்கு....
சமைக்க ஆரம்பிக்க கிட்சேனுக்கு வந்த உடனே, இன்னைக்கு என்ன மெனு... ஒஹ் அதுல கொஞ்சம் தூக்கலா பூண்டு போடு, காரத்தை கம்மி பண்ணு... கூடவே ரசம் வச்சுடு, அன்னிக்கு வாங்குன பாவக்காய் இருக்குமே - இல்ல வேஸ்ட்டா ஆயிடும் அதை எதாவது பன்னேனு instructions-ஆ வருமே.... எங்களுக்கு எவ்வளவு கடுப்ப்ஸ் வரும்...
அங்கிட்டு இருந்தவன் இங்கிட்டு வந்தானாம், இங்கிட்டு இருந்தவன் அங்கிட்டு போனானாம்.... ம்க்கும்//
என்று கூற..
நமக்கு தான் வாயில் சனியாச்சே.. அதனால் ...நான் அதற்கு பதிலாக...
//நீங்க செய்யும் போதே பூண்டை தூக்கலா போட்டு காரத்தை கொஞ்சம் கம்மி பண்ணி கூடவே ரசத்தை வைச்சி பாவக்காய் கூட்ட பண்ணா நாங்க ஏன் இன்ஸ்ட்ரக்சன் தரோம்//
என்று கேட்க.. பிரபுவோ அதற்கு ..
//சரியா சொன்னீங்க// என்று ஒரு இசை பாடல் பாட..
கவிதா அம்மணியோ..எங்கள் இரவுரின் ஒப்பாரியை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ..
//கூட்டத்தை போடுறதை நிறுத்திப்புட்டு போயி பாத்திரத்தை ஒழுங்கா இப்பாவது கழுவுங்க... போங்க போங்க....//
என்று கூவ.. மற்றொரு தோழி ராஜி வஞ்சி ...
//எம் குலத்திற்கு குரல் கொடுத்த தெய்வமே!.. //
என்று முழங்கினார்..
இதன் இடையில் மற்றொரு நண்பர் முனியாண்டி ..
//துவைக்க வாசிங் மிசின் கண்டுபிடிச்சவர நாம கடவுளா கும்புடனு பாத்திர கழுவுவது ஒரு வேலையா//
என்று சொல்ல..
டாஸ் இளங்கோவோ...
//எனக்கும் அதே என்றார்//
கடைசியாக பிரபு மீண்டும் வந்து...
//என்னமோ இவங்கள கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி நாம ஏதோ நாடோடியாவோ இல்ல காட்டு வாசியா வோ இருந்த மாதிரியும் இவங்க தான் நம்மள இரட்சிக்க வந்தா மாதிரியும்...
மிடியல//
என்று இன்னொரு புள்ளையார் சுழியை போட்டு சென்றார்..
என் கேள்வி..
இந்த இனிய.. ஆண் வர்க்கமே.. உங்கள் இல்லத்திலும் இந்த சூப்பர் விஷன் உள்ளதா? அதை எப்படி சமாளிக்கின்றீர்கள்.
சொல்லுங்கள்.. ப்ளீஸ்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக