செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

டிக் டிக் டிக்... அந்த இறுதி நொடிகள்..

பள்ளி கூட நாட்களில் அடியேனும் சரி அடியேனின் நண்பர்களும் சரி.. ஒரு விடயத்தில் உறுதியாய் இருந்தோம். கூட படிக்கும் மாணவர்களில்  (மாணவிகள் அல்ல) யாராவது விளையாட்டில் விருப்பம் காட்டாவிட்டால் அவனை நம்பாதே...அதுமட்டும் இல்லாமல் விளையாட்டில் ஈடுபாடு உள்ளர்வர்களை எப்போதுமே கூட வைத்து கொள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு  வரை தானே ..இந்த பழக்கம் இன்னும் அடியேனோடு ஒட்டி கொண்டுள்ளது. இப்போது கூட நமக்கு நெருங்கி அமைந்த தோழர்கள் "விளையாட்டு விரும்பிகள்"


இந்த வருடம் சூப்பர் பௌல் போட்டியை கண்ணால் ஒத்தி கொள்ளலாம். அம்புட்டு சூப்பர். இந்த மாதிரி போட்டியை பார்த்து எத்தனை வருடங்கள். ஆட்டத்தின் கடைசி நொடி வரை ...

இந்த ஆட்டத்தை "Football" என்பார்கள். "Foot Ball" என்றால் கால் பந்து என்று நம் நினைவிற்கு வந்தால் தவறே இல்லை. அமெரிக்கா இதற்கு விதி விலக்கு. இங்கே கால்பந்தை "Soccer " என்பார்கள்.

அமெரிக்கா வந்த புதிதில் இது என்ன ஆட்டம்? இதை ஏன் Football  என்று அழைக்கின்றார்கள் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்த என்னை.. அருமை தமிழ்  நண்பர் ஒருவர் ..

அட பாவி... இந்த ஆட்டத்தை  போல் ஒரு ஆட்டமே இல்லை. This is mother of all Sports...என்று சொல்லி 800$ டிக்கட்ஸ் சில வாங்கி  (அவரு வசதியானவருங்க)  எங்களில் சிலரை மைதானத்திற்கு அழைத்து சென்றார்.

"Love  at First Sight" என்று சொல்வார்களே.. அது தான் நடந்து. என்ன ஒரு ஆட்டம்.. என்ன ஒரு ஓட்டம்.. என்ன ஒரு துல்லியமான கணிப்பு.. அலறியே விட்டேன். அன்றில் இருந்து.. இந்த ஆட்டத்திற்கு நான் அடிமை.

ராசாத்திக்கள்  இங்கேயே வளர்ந்தாலும் மற்றும் இவர்கள் இருவருமே விளையாட்டில் ஈடுபட்டு இருப்பதாலும்.. இவர்களும் "Football" ரசிகைகள்.

இந்த  ஆட்டத்தை பற்றி ஒரு சிறிய விளக்கம்..

கால்பந்து மைதானத்தை போலவே அமைப்பு.. இரண்டு பக்கமும் கோல் போஸ்ட்கள்  கூட இருக்கும்.

மொத்த மைதானத்தில் அளவு (நீளம்) 100  யார்டு (கஜம்...?) .ஒரு பக்கத்தில் இருந்து அந்த பந்தை எதிரியின் பக்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். எதிரியின் கடைசி எல்லையை கடந்து விட்டால்.. அது "Touch Down". அதற்கு  சில புள்ளிகள். சில நேரங்களில் பந்தை காலால் எட்டி உதைத்து அந்த கோல் போஸ்ட் உள்ளே அடித்தால் சில புள்ளிகள்.

பந்தை தூக்கி கொண்டு ஓடலாம் (தற்கொலை செய்யும் தைரியம் இருந்தால்... எதிர் அணியின் தாக்குதல் அப்படி இருக்கும்). ஒருவர் பந்தை  எரிய எதிரியின் எல்லையை தாண்டி அதை எட்டி பிடிப்பார்கள்..

இந்த ஆட்டத்தின் Nerve Center  ( "நரம்பு மையம்'  அம்மணி தமிழில் சொல்லுறாங்க) இந்த பந்தை எரிபவர். இவரை "Quarter Back" என்பார்கள். மொத்த ஆட்டமும் இவரை சார்ந்தே இருக்கும்.

ஒருவர் பந்தை "Quarter Back"கிடம் கொடுக்க.. எதிர் அணியினர் இவரை கீழே தள்ள முயல.. இவர் அணியினர் இவரை பாதுக்காக்க ... இவரோ அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த பந்தை எரிய .. அதை இவர் அணியை சார்ந்த ஒருவர் எல்லையில் ஓடி சென்று பிடிக்க.. அடேங்கப்பா..

இந்த வருடம் நடந்த ஆட்டத்தில் இதை எப்படி செய்தார்கள் என்று இங்கே காணவும்.
Youtube SEarch Words : 

Nick Foles Drops Perfect TD Dime to Corey Clement!


என்னே ஒரு துல்லியமான ஆட்டம் ..

இந்த வருடம் இரண்டு சிறந்த அனிங்கள் இறுதி ஆட்டத்திற்கு வர எதிர் பார்ப்பு அதிகம்.

இதில் "Patriot  (நீல நிறம்) அணியின் "Quarter Back"  Tom Brady யை அந்த அணியின் ரசிகர்கள் Foot Ball இந்த கடவுள் போல் வழிபடுவார்கள். அவ்வளவு பெரிய ஜாம்பவான். எதிர் அணியின் "Eagles"    "Quarter  Back " Nick  Foles .. புதிய ஆட்டக்காரர். இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னரே Tom Brady யின் அணி தான் வெற்றி பெரும் என்பதே அனைவரின் கணிப்பும்.

You tube Search words  :  

 Nick Foles Hits Zach Ertz for the Go-Ahead TD



ஆட்டம் முடிய 2  நிமிடம் இருக்கையில் Tom  அணி 33  - 32  என்று முன்னியிலையில் இருக்கையில்.. Nick எறிந்த பந்தை இன்னொருவர் லாவகமாக பிடித்து எல்லையை கடக்க.. ( இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்)... ஸ்கோர் 41  - 33  என்று மாறியது.


இன்னும் சில நொடிகளே இருந்தாலும்.. பந்து "Tom"  கையில் உள்ளதே என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்து நகத்தை கடிக்க..

அடுத்த ஒன்பது நொடிகளில் என்ன நடந்தது  என்பதை நீங்களே இங்கே பாருங்கள்.

You tube Search words  :  

 Tom Brady hail mary incomplete, Philadelphia Eagles win the 2018 Super Bowl




PS: I dont own any of these videos and am not using it for commercial purpose.

2 கருத்துகள்:

  1. இதுவரை பர்ர்த்து இறாத விளையாட்டு
    மிகச் சரியாகச் சொன்னால் கேள்விப்பட்டும்
    இறாத விளையாட்டு தங்கள் பதிவின் மூலம்
    புரிந்துபார்த்து இரசிக்க முடிந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புதிய தகவல் விசு. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. பார்க்கிறோம் நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்...

    கீதா: இந்த விளையாட்டை ஓரிரு முறை பார்த்ததூண்டு. மகன் அங்கு பள்ளியில் படிக்கும் போது அவர்கள் பள்ளியில் ஃபுட் பால் (அவர்கள் ஊர்) கண்டிப்பாக விளையாடுவார்கள். அப்போது மகன் சொன்னான் வித்தியாசங்களை. நம்ம ஊர் ஃபுட் பால் அங்கு சாசர் என்றும்... இப்போது உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...