திங்கள், 6 ஜூன், 2016

தூக்கம் போச்சிடி... யம்மா..

அலை பேசி அலறியது...

வாத்தியாரே.. எங்கே ஆளையே காணோம்...

ஒரு மனைவி .... ரெண்டு ராசாதிக்காங்க.. என்னத்த சொல்வேன்.. விஷயத்த சொல்லு தண்டம்...

இந்த சனி என்ன பண்ற?

இந்த சனி... கழுதை கெட்டா குட்டி சுவர்.. ராசாதிக்களோடு கோல்ப் தான்...வேற என்ன?

அது எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி வர?

காலையில் 7 மணிக்கு ஆரம்பிச்சு மதியம் ரெண்டு வரைக்கும்.

எப்படி வாத்தியாரே..  7 மணிக்கு விளையாட்டு ஆரம்பிக்கனும்னா குறைந்த பட்சம் 5.45 இல்ல 6 மணிக்கு எழனுமே.. எப்படி சனியும் அதுவுமா?

தண்டம் .. நான் சின்ன வயதில் ஹாஸ்டலில் படிச்சவன். வெயிலோ மழையோ . அம்மாவாசையோ பௌர்னமியொ... ஆடியோ ஆவணியோ...  கொடையோ  குளிரோ...

விட்டா போதும்! இயற்பியல் வேதியியல்ன்னு ஆரம்பிச்சு சரித்திரம் பூகோளம் வரை சொல்லி கொடுப்பியே.. நேரமாகுது, சீக்கிரம் விஷயத்த சொல்லு...

என்ன நாளா இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழனும், அப்படியே பழகிடிச்சு..

நீ எப்ப தூங்குனா எனக்கு என்ன எப்ப  எழுந்தா எனக்கு என்ன? ராசாத்திக்களை எப்படி சனியும் அதுவுமா சீக்கிரமா எழுப்புற?

ஒ அதுவா?

சொல்லு...

தண்டம்.. சின்ன வயசில இருந்தே வீட்டில் ஒரு ரூல் ...

என்ன அப்படி ரூல்.. எல்லாரும் காம்ப்ளான் தான் குடிப்பீங்களா?

டேய்..

சும்மா தான் ப்ரெட்ன்ஷிப்பில் தமாஸ் பண்ணேன்.. பீலிங் ஆகாத.. என்ன ரூல்.?

திங்கள் இருந்து வெள்ளி வரை இவங்க எப்ப எழுந்தாலும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்.

பள்ளிகூடத்துக்கு லேட்டா போனா...

அங்கே தான் நான் வரேன். இவள்க பள்ளிகூடம்ன்னா லேட் பண்ண மாட்டாங்க.

காலையில் 6 மணிக்கெல்லாம் எழனும் இல்ல அதனால நேரத்துக்கு தூங்க போய்டுவாங்க. நேரத்துக்கு எழுந்துடுவங்க.

அது சரி.. சனிஞாயிறு தான் பள்ளி கூடம் இல்லையே.. எப்படி 6 மணிக்கு எல்லாம் எழுப்புற..

அதான் சொன்னேனே.. சின்ன வயதில் இருந்தே ஒரு ரூல்..திங்கள் இருந்து வெள்ளி வரை எப்ப வேனும்ம்னா தூங்குங்க....எழுங்க ..  அது உங்க பிரச்சனை.. சனி கிழமை அது அப்பா - மகள்கள் நேரம்..வாரத்துக்கு ஒரே நாள், அன்னைக்கு  கண்டிப்பா காலையில் எழுந்தே ஆகணும்னு, 7-8 மணி நேரம் கோல்ப் ஆட்டம்.. அங்கேயே மதிய உணவுன்னு   ஒரு   எழுதாத சட்டத்தை போட்டு பழக்கி வைச்சிட்டேன்..

சனி சரி.. ஞாயிறு..

நல்ல கேள்வி.. வாரம் முழுக்க எப்ப வேணும்னா எழுங்க .. ஞாயிறு மட்டும் என் தினம்ன்னு அம்மணி என்னையும்  சேர்த்து மூணு பேருக்கும் ஒரு எழுதாத சட்டம் போட்டுடாங்க.. காலையில்  கோயிலுக்கு அதுக்காக..

சரி சின்ன வயதில் கேட்டாளுங்க.. இப்ப தான் வளர்ந்துடாங்க்களே ..இப்ப எப்படி?

டேய்.. இப்ப பழகிட்டளுங்க .. அதுவும் இல்லாம கோல்ப் ஆட்டம் ரொம்பவும் பிடிச்சி போச்சு. சனி காலையில் இவளுக  எழுந்து என்னை
எழுப்பிவிடுவாங்க.

நல்லா ஏமாத்தி வைச்சு இருக்க, வாத்தியாரே..  சரி சனி மதியம் என்ன பண்ற?

ஒன்னும் இல்ல தண்டம்.. சின்னவ ரொம்ப வருசமா டென்னிஸ் கூட ஆடினு இருந்தா. அடுத்த வருஷம் உயர்நிலை பள்ளி ஆச்சே.. அந்த கோச் கோல்ப் டென்னிஸ் ரெண்டுக்கும் நேரம் இருக்காது.. சின்ன வயசில் பரவாயில்லை . இப்ப முடியாது.. ஏதாவது ஒரு ஆட்டத்தில் கவனத்தை செல்லுத்தன்ம்னு சொல்லிட்டார்..

அதுவும் சரி தானே..

சரிதான், நாங்களும் அவளோட பேசி கோல்ப் ஆடலாம் .. டென்னிஸ் வேண்டாம்னு முடிவு பண்ணிடோம்.

அது சரி, சனி மதியம் என்ன பண்ற?

நிதானம்.. இவளுக்கு டென்னிஸ்க்கு எக்கச்சக்கமா சாமான் வாங்கி வச்சி இருக்கேன்.. பந்து எரியிற மிசன், மட்டை, பந்து .. லொட்டு,  லொசுக்கு அது இதுன்னு.

அதுக்கு ...

இங்கே ஒரு அமைப்பு இருக்கு .. அவங்க இந்த மாதிரி நமக்கு அவசியம் இல்லாத விளையாட்டு சாமான்கள் கொடுத்துட்டு அங்கே இருக்குற விளையாட்டு சாமான்களில் நமக்கு ஏதாவது வேணும்னா எடுத்துக்கலாம்.

அடே.. நல்லா இருக்கே... வாத்தியாரே.. ஒரே நிமிஷம்..இந்த டென்னிஸ் சாமான் எல்லாத்தையும் கொடுத்துட்டு, என்ன எடுத்துன்னு வர போற?

கோல்ப் பந்து .. வேற வேற கோல்ப் விஷயங்கள்.. தான்..

வாத்தியாரே.. இங்கே எங்க ராசாத்தியும் இந்த வருஷம் உயர்நிலை பள்ளி தான்...

ஆமா.. அவளும் டென்னிஸ் கோல்ப் ரெண்டும் ஆடுவாளே.. ஒன்னுல கவனம் செலுத்து ... பாணி..

ஆமா வாத்தியாரே.. இவளுக்கு கோல்ப் சுத்தமா பிடிக்கல.. டென்னிஸ் தான் ரொம்ப இஷ்டம்.. நீ இப்படி பண்ணு.... அங்கே இருக்க டென்னிஸ் சமாசாரதைஎல்லாம் எடுத்துன்னு சனி மத்தியானம் இங்கே வா.. இங்கே இருக்க கோல்ப் சமாசாரத்த எடுத்துன்னு போ..

நல்ல ஐடியா, தண்டம்.. இதுக்கு தான் படிச்சவங்கள கூடவே வைச்சிக்கனும்ன்னு சொல்றது ...

இருக்கட்டும் .. இருக்கட்டும்.. சனி பார்க்கலாம்..

வெள்ளி இரவு...

டென்னிஸ் விஷயங்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தேன்..
நல்ல மட்டைகள்.. நூற்று  கணக்கில் பந்துகள்.. விலையுறந்த பந்து எரியும் மிசன்..ஒவ்வொன்றாகே எடுத்து வைக்கையில்.. சுயநலமும் திருட்டு தனமும் மனதில் வந்தது..

இம்புட்டையும் கொடுக்கனுமா ?

எல்லாத்தையும் எதுக்கு தண்டத்திற்கு கொடுக்கணும்.. ரெண்டு மட்டை  .. கொஞ்சம் பந்துகள்.. இன்னும் சில விஷயங்கள் கொடுக்க தேவையில்ல.. பின்னாலே நமக்கு உதவும்..

என்ற எண்ணம் வர.. இருப்பவைகளில் சிலவற்றை எடுத்து இல்லத்திலேயே வைத்து கொண்டு.. மீதியை மட்டும் வண்டியில் அடுக்கினேன்.

சனி மதியம்..

வண்டியை அவன் இல்லத்தை நோக்கி செல்லுகையில்..மனசாட்சி பேச ஆரம்பித்தது..

என்னையா மனுஷன் நீ... இவ்வளவு சீப்பா ... ஒரு நல்ல நண்பனுக்கு செய்யும் துரோகம் அல்லவா?  நீயெல்லாம் ஒரு மனுசனா..?

இன்னொரு புறம்.. அட போ விசு.. இப்ப என்ன கொலையா பண்ணிட்ட.. இது ஒரு விஷயமே இல்ல.. சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. தண்டதுக்கு என்ன தெரியவா போது?

வா விசு.. எல்லாத்தையும் எடுத்துன்னு வந்தியா..

நான் .. ஆமா.. எல்லாத்தையும் தான்...

சரி, எங்க அந்த கோல்ப் சாமான்க..

இதோ..

டேய்.. தண்டம்.. இது எல்லாம் ரொம்ப விலையாச்சே..

ஆமா.. நீ எடுத்துன்னு வந்தது மட்டும் என்ன சீப்பா? எடுத்துனு கிளம்பு..

வரும் வழியில்.. ஐயகோ.. இப்படி பண்ணிட்டோமே.. ஒரு வேளை .. ஒரு வேளை..

இரவு ...

என்ன டாடி  ..என்னமோ தப்பு செஞ்ச மாதிரி  முழிக்கிறிங்க...

மூத்த ராசாத்தி கேட்டு கொண்டே வந்தாள்..

ஒன்னும் இல்ல..

டாடி... உங்கள 16 வருசமா பார்த்துன்னு இருக்கேன்.... சம்திங் இஸ்  பாதரிங் யு .. இப் யு வான்ட் டு டாக் டு மீ, யு நோ வேர் டு பைன்ட் மீ .. குட் நைட் ன்னு சொல்லிட்டு போய்ட்டா.

நானும் தூங்க போனேன்.. தூக்கம் வரவே இல்லை.மனதில் என்னமோ பெரிய தவறு நடந்து விட்ட மாதிரி ஒரு உணர்ச்சி.. புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராதலால்.. மூத்தவளின் அறைக்கு சென்றேன்..

தூங்கிட்டியா?

நோ.. ஐ வாஸ் வெய்டிங் பார் யு.. நீங்க வருவீங்கன்னு தெரியும்.. வாட் இஸ் பாதரிங் யு..? டெல் மீ..

நடந்ததை எல்லாம்.. அவளிடம் எடுத்து சொன்னேன்.. எல்லாவற்றையும் கேட்டு விட்டு..

டாடி.. நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கூட எதிர் பார்க்கல..அதனால தான் உங்களுக்கு தூக்கம் வரல..  சரி விடுங்க.. உடனே தண்டம் மாமாவுக்கு போன் போட்டு ..

போன் போட்டு ..

இந்த மாதிரி நான் எல்லாத்தையும் கொடுக்கல.. கொஞ்சம் தனியா எடுத்து வச்சிட்டேன்.. என்ன மன்னிச்சிடுன்னு சொல்லுங்க..

ஏன்..

உடனே உங்க குற்ற உணர்ச்சி எல்லாம் போயிட்டு தூக்கம் தானா வரும்..

குற்ற உணர்ச்சினால எனக்கு தூக்கம் போச்சின்னு உனக்கு யார் சொன்னாங்க?

வேற எதனாலே தூக்கம் போச்சு..?

ஒரு வேளை .. தண்டம் இருக்கிறதுல நல்லது எல்லாம் வைச்சின்னு  தேவை இல்லாததை மட்டும் எனக்கு கொடுத்து இருப்பானான்னு  நினைச்சேன் .. தூக்கம் வரல..

கெட் அவுட் ஆப் மை ரூம்.. ரைட் நொவ் ..

என்று அவள் சத்தம் போட..

நானோ.. ஒரு வேளை.. ஒரு வேளை.. ன்னு முனவி கொண்டே தூங்க முயன்றேன்..

அடுத்த நாள் என்ன நடந்தது என்று அறிய இங்கே சொடுக்குங்கள்..

குற்றம் புரிந்தவன்.. வாழ்க்கையில்.. 

15 கருத்துகள்:

  1. ஹாஹாஹா! பைனல் பன்ச் வைக்கிறதுலே நீங்க எப்பவுமே கில்லாடி!

    பதிலளிநீக்கு
  2. "தண்டம்..."

    "சொல்லு வாத்யாரே, என்ன இந்த நேரத்துல!"

    "அது ஒண்ணுமில்ல, உன்னை பாத்துட்டு வந்ததுல இருந்து தூக்கமே வர்ல.."

    "...!! பரவாயில்ல, எதுவா இருந்தாலும் சொல்லு"

    "இல்ல, நம்ம போட்ட ஜெண்டில்மென் அக்ரீமென்ட்ட நான் மீறிட்டேன்.."

    "அதான், பரவாயில்லைன்னு சொல்லிட்டனே, தயங்காம சொல்லு.."

    "இந்த ஸ்போர்ட்ஸ் கூட்ஸ் எல்லாம் எக்ஸ்சேன்ஜ் பண்ணினோம் இல்லியா..."

    "ஆமா, அதுக்கென்ன?"

    "அதுல கொஞ்சம் காஸ்ட்லியா இருந்த பொருளெல்லாம் உனக்குத் தராம நான் தனியா எடுத்து வெச்சுட்டேன்.."

    "ஓ... அப்படியா?"

    "குற்ற உணர்ச்சியில எனக்குத் தூக்கமே வரல, அடுத்த வாரம் எடுத்துனு வந்து தந்துடுறேன்..."

    "வாத்தியாரே..."

    "இல்ல தண்டம், நான் என்ன சொல்ல வர்றேன்னா... ... !!"

    "வாத்யாரே...?"

    "நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு... ... !!"

    "வாத்யாரே, நான் சொல்றத மொதல்ல கேளு.."

    "சரி, சொல்லு"

    "நானும் அக்ரிமென்ட மீறிட்டேன்..."

    "?! !? ?! !?"

    "நீ தூக்கம் வரலன்னு சொன்ன பாத்தியா, அங்க நிக்குற..., நான் எந்த உணர்ச்சியும் இல்லாம நல்லா தூங்கிட்டேன் வாத்யாரே, நல்ல வேளை, என் மனசாட்சியையும் சேத்து எழுப்பி விட்டுட்ட.."

    "?! !? ?! !?"

    பதிலளிநீக்கு

  3. இது கதையா? நிஜமா? என்று நினைத்து என் மண்டை காயது. இப்ப மாலை நேரம் ஆகுது சீக்கிரம் பதில் நீங்க சொல்லவில்லை என்றால் எனக்கும் இன்று இரவு தூக்கம் போய்விடும் ஹும்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்வேன் மதுர... என்னத்த சொல்லுவேன்..

      நீக்கு
  4. அருமை. உங்களை கண்டு நிஜமாகவே பொறாமையா இருக்குதுப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி.. தமிழா... ஏதோ நம்மால் முடிந்ததை எழுதும் வரை எழுதுவோம்..

      நீக்கு
  5. அருமை...உண்மையான மனித உணர்வுகள்!!!

    பதிலளிநீக்கு
  6. என்ன மனுஷன் சார் நீங்க? இப்படியெல்லாம் எழுதவும் முடியுமா?

    கலக்கிட்டீங்க விசு...அதிலும் பைனல் டச்..நச்...

    பதிலளிநீக்கு
  7. யோவ் தம்பி விசு , நீ எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமா ?
    அது சரி ஞாயிற்றுக்கிழமை பாவ மன்னிப்பு கேட்டியா இல்லையா ?

    பதிலளிநீக்கு
  8. ஐயோ விசு நான் எழுத நினைத்து வந்ததை ஏதோ பெரிய பின்னூட்டமா இருக்கேனு மலர் எழுதியத பார்த்தா அட! நான் எழுத நினைத்த கருத்து. என்ன வார்த்தைகள் மட்டும்தான் கொஞ்சம் மாற்றம்...அப்படியே....

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...