வெள்ளி, 27 ஜூன், 2014

வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...


வகுப்பறையில் கடிகாரம் இல்ல, உன் கையில வாட்ச் இல்ல. அது எப்படி உனக்கு மட்டும் எந்த வகுப்பு எந்த நேரத்தில் முடியும்னு சரியா தெரியுது?
பல வருடங்களுக்கு முன் சீர்காழியில் பள்ளிகூடத்தில் படிக்கையில் பக்கத்தில் அமர்ந்து இருந்த சீதாராமன் கேட்ட கேள்வி இன்று நினைவிற்கு வந்தது. இது எப்படி இப்ப நினைவிற்கு வந்தது என்று கேட்கின்றீர்களா? சொல்லுறேன்.

போன இடுகையில்

("நோ தங்கமணி நஞ்சாய்!"

  http://vishcornelius.blogspot.com/2014/06/blog-post_27.html )

சொன்ன மாதிரி அம்மணியும் ராசாதிகளும் விடுமுறை சென்று ஒரே மணி நேரத்தில் சளி, இருமல், தலை வலி மற்றும் காய்ச்சல். வேலைக்கு வர முடியாது என்று தகவலை அனுப்பிவிட்டு வீட்டிலேயே சோபாவில் படுத்து விட்டேன்,. நேரம் என்ன என்றே தெரியவில்லை. எழுந்து போய் பார்க்கவும் சோம்பேறித்தனம்.

அப்படி இருக்கும் போது என் அருகிலேயே சன்னல் வழியாக வந்த சூரிய வெளிச்சம் தான் இந்த கதைய நினைவிற்கு கொண்டுவந்தது.
1980 போல் இருக்கும் என்ன ஒரு அருமையானா நாட்கள்.
ஒருவரிடம் கூட கடிகாரம் இல்லாமல் இருக்கும் போது எல்லாரும் எல்லா வேலைகளையும் சரியாக செய்த காலம்.

அந்த காலத்தில் என் வகுப்பு அரை தென்னை கீற்றையும் தாண்டி உள்ளே வந்த அமருமே அந்த சூரிய ஒளிகதிர், அது தான் என் கடிகாரம். அது கரும்பலகையில் பட்டால் 9 மணி, அப்படியே தாண்டி ஆசிரியையின் மேசையில் அமர்ந்தால் 10. அங்கு இருந்து இறங்கி முதல் வரிசையில் அமர்ந்துள்ள சித்ராவை தொட்டால் 11, என்னிடம் வந்தால் 12, என்னை தாண்டி சென்றால் 1 என்று அந்த ஒளிகதிரை வைத்து மணி பார்த்த நேரம்.


வெயில் இல்லாத நாட்களில்,புடுபுடு காரன் வந்தால் காலை 3 பால்காரன் வந்தால் 5:30. செய்தித்தாள் வந்தால் 6. தபால் வந்தால் 9, தந்தி வந்தால் கேட்ட நேரம். காய் கரி  விற்பவன் வந்தால் 10. மீன் விற்பவன் வந்தால் 11 மதிய உணவிற்கு பிள்ளைகள் வந்தால் 12.  ஐஸ் கிரீம் விற்பவன் வந்தால் மாலை 5 தெரு விளக்கு எறிந்தால் 6. என்று எது ஒன்றுக்கும் ஒரு சரியான நேரம் ஒதுக்க பட்டு இருந்தது.


என்ன ஒரு நாட்கள். மீண்டும் வருமா? அருமை அருமை.


4 கருத்துகள்:

  1. ஒ! interesting அண்ணா!
    //ஒருவரிடம் கூட கடிகாரம் இல்லாமல் இருக்கும் போது எல்லாரும் எல்லா வேலைகளையும் சரியாக செய்த காலம்.// நச்சுனு இருக்கு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோட்டத்திற்கு நன்றி மைதிலி...நான் ஏற்கனவே கூறியது போல்...அந்நாட்கள் என்வாழ்வின் பொற்காலம்.

      நீக்கு
  2. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது ,மதிய உணவுக்குப்பின் அறிவியல் பாடம் எடுத்ததால்தான் எனக்கு அது வரவில்லையோ ?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...