Thursday, June 8, 2017

இது யாரு தெச்ச சட்டை...

என்ன ஒரு அநியாயம். தமிழனாக பிறந்தது இவ்வளவு பெரிய குற்றமா? என்ன தான் நடக்குது இங்கே.

இந்த சட்டையை பாருங்கள். தமிழக அரசாங்கத்தால் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அளிக்க பட்ட சட்டை.

இதை  பார்த்தவுடனே நெஞ்செல்லாம் பற்றி எறிகின்றது. ஊழல் - லஞ்சம் - கமிசன் இவை மூன்றின் ஒட்டு மொத்த உருவமே  தமிழக அரசு தான்.

மக்களை பற்றி ஒரு சிறு துளி அளவிற்கு கூட அக்கறை இல்லை, இதில் ஆளும்  கட்சி எதிர் கட்சி என்றும் பிரித்து சொல்ல இயலாது. இருவருமே ஒன்று தான்.


படங்கள் : Palanivel Manickam  முகநூல் பக்கத்தில் இருந்து. 

என்னே ஒரு கேவலம். பிஞ்சு நெஞ்சங்களின் தன்னம்பிக்கையிலா ஊழல். வளரும் ஒரு உள்ளதை போற்றி அல்லவா வளர்க்க வேண்டும். இம்மாதிரியான கேவலமான ஆடையை கொடுத்தால் அவனுக்கு என்ன ஊக்கம் வரும்.

இதை மாணவர்களுக்கு இலவசமாக தந்தோம் என்று கோடி கணக்கில் கொள்ளை அடித்து இருப்பார்கள்.

இந்த சுயநலமிக்க வெறிபிடித்த நாய்களை அடித்து துரத்த வேண்டாமா? தங்களின்  பதவி எந்த நேரமும் பறி போகலாம் என்று இவர்கள் தற்போது செய்யும் ஊழலுக்கு அளவே இல்லை.

கொள்ளைக்காரி ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என்று எவ்வளவு தைரியமாக வெளிப்படையாக சொல்கின்றார்கள். வேறு எங்கேயாவது இப்படி சொல்ல முடியுமா?

அந்த திருடி இருந்து இருந்தால் இன்னேரம் சிறையில் தானே. அந்த ஆட்சி தொடரும் என்று சொல்வதின் மூலம் நாங்கள் தொடர்ந்து கொள்ளையடிப்போம்   என்று தானே சொல்லி வருகின்றார்கள்.

எதிர் கட்சியோ அதை விட மோசம். ஊழல் என்பதை தமிழகத்திற்க்கு அறிமுக படுத்தியது மட்டும் அல்லாமல்.. குடும்பம் முழுக்க கோட்டீஸ்வரர்கள்.

இந்த குடும்பத்தின் மொத்த சொத்தையும் சேர்த்தால் தமிழகம் உலகிலேயே செல்வந்த நாடாக வாய்ப்புண்டு. அவ்வளவு பேராசை .. அவ்வளவு மோசம்.

இந்த கேவலமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாலையில் செல்லும் போது  பசியும் பட்டினியுமாய் அலையும் பொது ஜனங்களை பார்க்க மாட்டார்களா?

அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து.. இவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை எல்லாம் நான் திருடி பதுக்கி வைத்து இருக்கின்றேன் என்று சற்றும் குற்ற உணர்ச்சி பட மாட்டார்களா?

நெஞ்சு பொறுக்குதில்லையே..


ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

இந்த கேவலமான சீருடையை திருப்பி அனுப்புங்கள். இப்படி பட்ட ஊழல் நிறைந்த அமைப்பில் இருப்பதை விட பிள்ளைகள் நிர்வாணமாக பள்ளிக்கு வருவதே மேல்.

இனியும் பொறுக்காதே தமிழா.. 

2 comments:

 1. எல்லோரும் அவலத்தைப் பதிவு
  செய்கிறோம்

  மாற்று எது,ஆகக் கூடியது என்பது
  குறித்து யாருக்கும் ஒருதெளிவில்லை

  இதை அவர்கள் தெளிவாய்
  அறிந்திருக்கிறார்கள்

  அதுதான் தமிழகத்தின் பிரச்சனை

  ஏன் இந்தியாவின் பிரச்சனை கூட...

  ReplyDelete
 2. அடுத்த கல்வி ஆண்டில் சீருடை மாற்றப் பட உள்ளது. தற்போது நான்கு செட் சீருடைகள் வழங்கப் பட்டிருகின்றன. இரண்டு செட் ஒழுங்காகப் கொடுத்தால் போதுமானது. பொதுவாக அரசு நல திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் தொகை மிகக் குறைவானது. அத தொகையில் தரமான பொருட்கள வாங்கவே முடியாது. இந்த லட்சணத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் நோடுப்புத்த்டகங்கள். சீருடை உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிகளுக்கே எடுத்து சென்று வழங்க வேண்டுமாம்.15பள்ளிகள் கொண்ட வழித்தடத்திற்கு 3000 மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது.லாரி வாடகை ஏற்று இறக்கக் கூலி அனைத்தும் உள்ளடக்கம். அனைத்தும் பொருட்களும் ஒரே நேரத்தில் வராது . ஒரே இடத்திலும் இருக்காது. மாவட்ட மையங்களில் இருந்து வேறு கொண்டு வர வேண்டும். தங்களை பள்ளிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் பணிகளைக் கூட ஆசிரியர்கள் செய்யக் கூடாதாம். ஒன்றிய அளவிலான அலுவலர்கள்படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. பணிச்சுமாயையும் கைக் காசு செலவழிக்கும் நிலையும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியவை. இதில் மூன்று பருவங்களுக்கும் இதே வேலையை செய்து கொண்டிருக்க வேண்டிய சூழல். உண்மை நிலவரம் தெரியாமல் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு நாளுக்கொரு அறிவிப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களை அறிய கள அலுவலர்கலின் ஆலோசனைகளை கேட்பதே இல்லை. நான் சொல்கிறேன் செயல் படுத்து என்பார்கள். எந்த வசதியும் செய்து தராமல் வெறுங்கையில் முழம் போடவேண்டும் . சில உயர் அதிகாரிகளின்செயல்பாடுகள் சைக்கோத் தனமாகக் கூட இருக்கும்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...