திங்கள், 12 ஏப்ரல், 2021

அமுதன் சாந்தி - போய் வா நண்பா...




அமுதன் சாந்தி என்ற நண்பர். விட்ட குறை தோட்ட குறை என்று ஒன்றும் இல்லை. முக நூலில் பொது நண்பர்கள் மூலம் என் சுவரை தொட பரிச்சயமானார்

ஆரம்ப நட்ப்பு எப்போதும் போல குதுகூலமாக இருந்தது. அவர் வாழ்ந்த மாடுங்க நகரில் நகரில் நானும் சில வருடங்கள் வசித்ததால் அடிக்கடி அதை பற்றி பேசி வந்தோம். 


இருவருமே எங்கள் குடும்பங்களில் நடக்கும் இம்சைகளை வைத்து எங்களை நாங்களே கலாய்த்து கொண்டு இருந்த காலத்தில்  நண்பர் தீவிர மோடி பக்தரானார்.


மோடியின் ஏனைய பக்தர்கள் போல இவரும் மோடி என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று ஒரு முடிவிற்கு வந்து தமிழகத்தில் BJP ADMK கூட்டு என்று வந்ததால், கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக தம் கருத்தை தன் பாணியிலே சொல்லிவந்தார்.

அவருடைய நகைசுவை பதிவுகள் (குறிப்பாக இட்லி தத்துவதங்கள்) மிகவும் ரசிக்கும் படியாக இருந்தாலும் அரசியல் பதிவுகள் சற்றே முக்கால் சுளிக்க வைத்தது. 

சில நேரங்களில் அவர் அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கும் போதுமனதில், இவர் எதற்கு திமுகவை வெறுப்பதற்காக அதிமுகவை இப்படி போற்றுகின்றார் என்று தோன்ற   வைக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் சொல்லிவிட்டு முகநூல் நடிப்பை விளக்கி கொண்டேன்.

ஏன் என்றார்?

தங்களின் அரசியல் பதிவுகள் என்றேன்.

அதில் அப்படி என்ன கண்டீர்கள் என்றார்...?

You are very biased, and I can't take it anymore..

நட்ப்பில் இருந்து விலகினோம்.

நேற்று இவர் கொரோனாவினால் பாதிக்க பட்டு இறந்தார் என்று கேள்வி பட்டேன். மனது மிகவும் வலித்தது. 

அவருக்கான இரங்கல் பதிவுகளில் அநேகர்.. 

"நல்ல நண்பராக இருந்தார். இருந்தாலும் அவரின் அரசியல் பதிவுகளினால்  விலகி கொண்டோம் என்று நிறைய பேர் எழுதி இருந்ததது கண்டவுடன் மனதில் என்னையும் அறியாமல் ஒரு பயம்.

இந்த பாழாய் போன அரசியல்வாதிகளினால் நாம் எதற்கு நட்ப்புக்களை இழக்க வேண்டும். தேவையே இல்லையே.. 

சில வருடங்களுக்கு முன் நானும் அரசியல் பதிவுகளை போட்டவன் தான்.  ஆனால் இது நமக்கு தேவை இல்லை என்று உணர்ந்து அரசியல் பதிவுகள் மட்டும் இல்லாமல் முகநூலில் இருந்தே விலகி விட்டேன்.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒன்னும் இல்லை என்று புரிந்து கொண்டு.

அமுதன் சாந்தியின் மரணத்தில் கற்ற பாடம்... அரசியலுக்காக நட்ப்பை ஒருபோதும் இழக்க வேண்டாம்.

If we dont have anything good to say, lets just Shutup.....

RIP Amuthan Shanthi... We will miss you...

3 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல் . கொரானா காரணம் எனும் போது மிக வருத்தம்

    பதிலளிநீக்கு
  2. ஆம் இந்தத் தேர்தல் காலங்களில் இது போல் நட்பில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை...இதுபோன்ற இழப்பு கூடுதல் சோகம்..

    பதிலளிநீக்கு
  3. பேஸ்புக்கிலும் பார்த்தேன்.  இவரை நான் அறியமாட்டேன்.  ஆழ்ந்த இரங்கல்கள்.  அவரவர் அரசியல் கருத்துகள், நிலைப்படுகள் நட்பைக் கெடுக்கக் கூடாது என்பதே என் எண்ணமும்.  

    இதே பெயரில் ஒரு அயராத பெண் உழைப்பாளி எனக்கு மதுரையில் தெரியும்.  மாற்றுத்திறனாளி.  பெயர் பார்த்ததும் அவர்தான் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...