90களின் ஆரம்பம். அந்த காலத்தில் எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்க கண்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஊருக்கு ஒரு இந்திய மளிகை கடை இருந்தாலே பெரிய காரியம். இப்படி இருக்கையில் ஒரு வாடகை அபார்ட்மெண்டில் அடியேன் மற்றும் அப்சர் பாய், தீபக் மூவரும் குப்பை கொட்டி கொண்டு இருந்தோம்.
அப்சரோ ஹோட்டல் சமையல் அறையில் செஃப். தீபக் ஒரு பொறியாளர். அடியேனோ கணக்கு பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக காலம் கடந்து கொண்டு இருந்தது. வாரம் தோறும் அட்டவணை போட்டு சமையல் செய்து காலத்தை தள்ளி கொண்டு இருந்த நாட்கள். காய்கறி சமைக்க தானே இந்திய மாசாலா தேவை படும், மீனிற்கு மிளகாய் மஞ்சள் உப்பு போதுமே. அதனால் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வடிச்ச சாதம் மீன் பொரியல், ரசம். அந்த வாரம் அப்சரின் சமையல் வாரம்.
காலையில் எழுந்தவன் பிரட் டோஸ்ட் செய்து கூடவே வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு ஆம்லெட்டும் தயார் செய்து ஒரு காபியையும் மேசையில் வைத்து தன் அறையில் இருந்தான்.
அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்த நானும் தீபக்கும் மேசையில் அமர..