புதன், 20 பிப்ரவரி, 2019

நூலை போல் சேலை !

குட்டி போட்ட பூனை போல் படபடப்பாக  அந்த பிரசவ வார்டின் எதிரில் அமர்ந்து இருந்தான் அவன் . மனைவிக்கு தலை பிரசவம். அவள்  வார்டின் உள்ளே போய் ஏறகுறைய இரண்டு மணி நேரமாகியது.

"இன்னும் ஒரு மணிநேரத்தில் இயற்கையாக பிறக்காவிடில் சிசேரியன் செய்ய வேண்டி வரும்" மருத்துவமனையின் நர்ஸ் சொன்னார்கள்"!

"குழந்தைக்கு  எதுவும் ஆகாதுதானே"

அவன் மனதில் குழந்தை, குழந்தை, குழந்தை...மட்டுமே.

பேசி கொண்டே இருக்கையில் அறையில் இருந்து வெளியே வந்த  இன்னொரு நர்ஸ்...

"வாழ்த்துக்கள், உங்களுக்கு பெண் குழந்தை"

என்று சொல்ல அறையின் உள்ளே ஓடினான்!

திங்கள், 18 பிப்ரவரி, 2019

பள்ளிக்கூடம் போகாமலே...

"வாழ்த்துக்கள் மாலதி.. இந்த வருடம் பள்ளிக்கூடத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றாய். இதே   போல் தொடர்ந்து கடினமாக முயற்சி செய். வாழ்வில் நிறைய சாதிப்பாய்".

வாய் முழுக்க பல்லாய்  இருந்த மாலதியிடம் அவளின் ஆசிரியை தமிழரசி கூறினார்கள்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...