சனி, 29 டிசம்பர், 2018

துணி துவைக்கவா அல்ல பாத்திரம் கழுவவா?

ஓகே.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வசித்து கொண்டு வருடத்தின் கடைசி வாரத்தில் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் விரும்பி செய்யும் ஒரு காரியம்.
LA Lakers  அணியின் பாஸ்கெட் பால் போட்டிக்கு செல்வது.  கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் இந்த போட்டிக்கான கட்டணம் மற்றவைகளை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் We gotta bite the bullet and போகவேண்டும். அவ்வளவு அருமையான atmosphere.

இந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் அடியேன் வேலை செய்யும் நிறுவனத்தில்..

"விஷ்... இந்த வருடம் கம்பெனி கிறிஸ்துமஸ் பார்ட்டியில் லக்கி லாட்டரி ப்ரைஸ்  என்ன வைக்கலாம்"?

"நல்ல விலை உயர்ந்த Lakers  டிக்கட் ரெண்டு போடுங்க"

"குட் ஒன்..."

பிறகு, ஒரு நாள்.. மூத்த ராசாத்தி..

"டாடா... பாஸ்கட் பால் டிக்கட் வாங்கிட்டிங்களா"?

"இல்ல மகள்.. கம்பெனியில் லக்கி ப்ரைஸ் லாட்டரி .. அது எனக்கு வரலையனா வாங்குறேன்."

"You are Pathetic Dad... இந்த வருஷம் லேப்ரான் ஜேம்ஸ் LA Lakers  டீமில் இருக்கார். டிக்கட் பயங்கர விலை.சீக்கிரம் வாங்குங்க"!



"ஆமா இல்ல.. "

லேப்ரான் ஜேம்ஸ்..  அந்த பெயரை சொன்னாலே இங்கே அதிரும். தற்போதைய நிலவரப்படி இன்றைக்கு இவர் தான் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்.  ஆட்டத்திலேயும் சரி, விளம்பரங்களிலும் சரி பல லட்ச கோடிகளை தன் விரல் சொடுக்குக்காக பெறுபவர்.

"இல்ல மகள்...Something tells me I am going to win the tickets. Lets see"!

கம்பெனி பார்ட்டி வந்தது. அன்றைய இரவின் க்ளைமாக்ஸ் LA Lakers  டிக்கெட்.. அன்ட் டி வின்னர் இஸ் ...

என்று ஒருவர் கூற ..

அனைவரும் ஆவலுடன் தம் தம் டிக்கட் எண்களை பார்க்க..

அவரும் ஒரு எண்ணை சொல்ல...

திக் திக் திக்...

எனக்கு இல்லை.. சரி வேறு யாருக்கு தான் என்று நோட்டமிட்டால் யாரும் கை தூக்கவில்லை.

அருகில் இருந்த என் வூட்டுக்கார  அம்மணி,

"என் நம்பரில் இருக்கா பாருங்க"

என்று சொல்ல..

அதே தான்...

அனைவரின் கண்பட முன்னே சென்று வாங்கி கொண்டேன்.

கம்பெனி முதல்வரோ..

"இது உன் மனைவி வென்றது தானே.. அவர்கள் இந்த ஆட்டத்துக்கு யாரை அழைத்து செல்ல போகின்றார்கள்""

என்று கேட்க..

இது என்ன வம்பா போச்சி..

"நான் தான் புருஷன் .. என்னை தான் கூட்டினு போவாங்க.."

"நல்லா சொன்ன போ.. Lakers  கேம்ன்னு வந்துட்டா .. புருஷனாவது.. பொண்டாட்டியாவது, புள்ளை குட்டியாவது?  எதுக்கும் போய் கன்பார்ம் பண்ணிக்கோ .. "

என்று கூற..

அம்மணியை நோக்கி பார்வையை திருப்பினால்.. அங்கே இருந்த அணைத்து அம்மணிகளும் அவர்களை சுற்றி.. நான் நீ என்று...

நானோ ஒரு பரிதாபமான பார்வையை அவர்கள் மேல் பதித்து விட்டு..மனதில்.. ஆட்ட நாள் வரை அம்மணியை பட்டாம் பூச்சி போல் வைத்து கொள்ளவேண்டும் (இல்லாட்டியும் அப்படிதான்.. இல்லாட்டி பிச்சி புடுவாங்க பிச்சி) என்று கங்கணம் கட்டி...

இதோ நேற்று LA Lakers  ஆட்டத்தில்.

சரி, தலைப்பிற்கும் இதற்கும்.. வெயிட் எ நிமிட பார் பைவ் நிமிட்ஸ்.

ஆட்டம் ஆரம்பிக்கையில் தான் தெரிந்தது, இன்று உடல் நிலை சரியில்லா காரணத்தினால் லேப்ரான் ஜேம்ஸ் ஆடமாட்டார் என்று.. மனதில் சற்று சோகம் வந்தாலும் .. .Lakers  Lakers  தானே... ரசித்து பார்த்து கொண்டு இருந்தோம்.

இடைவேளை நேரத்தில் ஒரு அறிவிப்பு... பெரிய திரையில் லேப்ரான் ஜேம்ஸ் வர... அவரிடம் ஒருவர்..

வீட்டில் துணி துவைப்பது, பாத்திரம் கழுவது.. இது இரண்டில் நீங்கள் ஒன்றை செய்ய வேண்டுமெனில் எதை செய்வீர்கள்...

என்று கேட்க..

ஜேம்ஸ்..

சிரித்து கொண்டே .. பாத்திரம் கழுவது..

ஏன்..?

என் வீட்டில் நான் , என் மனைவி, இரண்டு மகன்கள் ஒரு மகள். எங்கள் அனைவரின் துணியை துவைத்து மடித்து தனி தனியே பிரித்து வைப்பது என்பது ரொம்ப ட்ரிக்கி மற்றும் கஷ்டம். அதனால் அதற்கு பதிலகாக நான் பாத்திரம் கழுவி வைப்பேன்.  அனைத்தையும் கழுவி துடைத்து வைத்து விட்டால் போதும் என்று புன்னகையோடு சொல்ல.. .

நான் மிகவும் மகிழ்ந்தேன்..

இவ்வளவு பெரிய ஆட்டக்காரன்..  கோட்டீஸ்வரன்.. வீட்டில் பாத்திரம் கழுவுவதை  சிரித்து கொண்டே சொல்கிறான். இவனை தான் எத்தனை சிறுவர்கள் ஒரு முன்னுதாரணமாக பார்க்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துகாட்டாக இருக்கிறானே.

இல்லத்து வேலைகளை ஆண் பெண் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக எடுத்து சொல்கின்றார்கள் ..

என்று மகிழ்ந்தேன்.


பின் குறிப்பு :

இதை படித்தவுடன் உங்கள் மனதில்..

விசு.. வீட்டில் நீ துணி துவைக்க விரும்புகிறாயா  அல்லது பாத்திரம் கழுவ விரும்புகிறாயா...

என்று கேட்க துடிப்பது புரிகின்றது..

நமக்கு அந்த விருப்பு வெறுப்பு சாய்ஸ் எல்லாம் இல்லீங்கோ.. ரெண்டுமே நான் தான்.. இல்லாட்டி அடுத்த கிறிஸ்துமஸ்க்கு பாஸ்கெட்பால் ஆட்டத்தை ஸ்டேடியத்தில் மட்டும் அல்ல வூட்டுல டிவி யில கூட பாக்க முடியாது.

4 கருத்துகள்:

  1. "ஆமா இல்ல.. "//

    ஆமாவா இல்லையா? ஹா ஹா ஹா ஹா ஹையோ நான் எங்கேயோ போய்ட்டேன்...

    //இது என்ன வம்பா போச்சி..

    "நான் தான் புருஷன் .. என்னை தான் கூட்டினு போவாங்க.."//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரித்துவிட்டேன்...

    //அம்மணியை நோக்கி பார்வையை திருப்பினால்.. அங்கே இருந்த அணைத்து அம்மணிகளும் அவர்களை சுற்றி.. நான் நீ என்று...

    நானோ ஒரு பரிதாபமான பார்வையை அவர்கள் மேல் பதித்து விட்டு..மனதில்.. ஆட்ட நாள் வரை அம்மணியை பட்டாம் பூச்சி போல் வைத்து கொள்ளவேண்டும் (இல்லாட்டியும் அப்படிதான்.. இல்லாட்டி பிச்சி புடுவாங்க பிச்சி) என்று கங்கணம் கட்டி..//

    நல்லா மாட்டிக்கிட்டீங்க...ஹா ஹா ஹா

    மிகச் சிறந்த உதாரணம்..சிரித்துக் கொண்டே வந்தப்ப அவர் சொன்ன பதில் ஹையோ மேலதான் சொல்லிருந்தீங்க அவர் விரல் சொடுக்குல பல கோடிகள் சம்பாதிப்பவர் என்று. அப்படிப்பட்ட கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்வது மனைவிக்கு உதவுவது என்பது வாவ்!! மிகச் சிறந்த உதாரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பி கு வழக்கம் போல உங்க நகைச்சுவை!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...