வெள்ளி, 31 மார்ச், 2017

குடி குடியை ....சிதறடிக்கும்...

மற்றொரு நாள்...
மூத்த ராசாத்தி காலை 5 .45  க்கு பள்ளிக்கு சென்றுவிடுவாள். அடியேனும் இளையவளும் வியாழன் தவிர மற்ற நாட்கள்  6 .45  போல் கிளம்புவோம். வியாழன் அன்று சற்று சீக்கிரமாக கிளம்பி அருகில் உள்ள சிற்றுண்டிக்கு சென்று அங்கே காலை உணவை "DADDY-DAUGHTER-DATE" என்று ஒரு உண்டு செல்வோம். இது வருடக்கணக்காக பழக்கம்.

இந்த வியாழன் காலை சற்று தாமதமாக ... காலை உணவை தவிர்த்து விட்டு அவளை பள்ளியில் இறக்கும் போது.. ஒன்னுமே சாப்பிடாமல் வந்து விட்டேன் .. 8 .50  போல் சாப்பிட ஏதாவது  எடுத்து வாருங்கள் என்று சொன்னாள்.

அடியேனின் அலுவலகமும் அவள் பள்ளிக்கு அருகில் தான். நேராக அலுவலகம் வந்து சற்று நேரம் இருந்து விட்டு அருகில் இருந்த "ஸ்டார் பக்ஸ்" கடையில் அவளுக்கு பிடித்த பலகாரம் மற்றும் அவள் விரும்பும் டீ ஒன்று வாங்கி கொன்டு பள்ளியை நோக்கி சென்றேன்.

பள்ளிக்கு அருகில் இருக்கும் ட்ராபிக் சிக்கனலில் நிறைய காவல் துறை வண்டிகள்.. மற்றும் தீயணைப்பு வண்டி.. ஒவ்வொன்றும் சிவப்பு நீல விளக்குக்களை சுழல விட்டு ... அலறி கொண்டே பள்ளிக்கூடத்தில் நுழைய.. அடி வயிறு  கலக்கியது..

பள்ளியின் உள்ளே நுழைந்த என் வண்டியை ஒரு காவலர் நிறுத்தி.. எங்கே செல்கிறாய் என்று கேட்க.. நானோ.. மகளுக்கு உணவு  எடுத்து வந்துள்ளேன் என்று சொல்ல.. அவரோ.. அவள் கொடுத்து வைத்தவள்.. "Make Sure you tell her that you love her" என்று சொல்ல.. குழம்பினேன்.




அடுத்த ஒரு ஐம்பது அடி இருக்கும்..அலறியே விட்டேன்.

பள்ளி வளாகத்திலேயே ஒரு பெரிய விபத்து. காரின் முன் பக்கத்து  கண்ணாடி சிதறி இருக்க ஒரு மாணவன் அதன் மேல் இரத்த காயத்தோடு இறந்து கிடந்தான். சற்று தள்ளி பார்க்கையில் இரு தீயணைப்பு வீரர்கள் ஒரு படுக்கையில்  இன்னொரு மாணவனையோ மாணவியையோ தூக்கி செல்ல.. எனக்கோ..


விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கை என்ற நாடா  இருக்க அதை சுற்றி பள்ளிக்கூட மாணவர் மாணவியர் பயத்தோடு அமர்ந்து இருக்கையில்...

இரண்டு தீயணைப்பு வீரர்களை உதறி தள்ளி விட்டு  மீறி ஒருவர்  அந்த விபத்துக்காளான வண்டியை நோக்கி ஓடினார். அவரின் நடவடிக்கையிலே தெரிந்தது விபத்தில் பாதிக்க பட்ட பிள்ளையின் தகப்பன் என்று.



ஓடி சென்று வண்டியின் பின் இருக்கையை பார்த்த அவர் .. "ஓ" என்று  கதறி அழ .. கூட இருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடிக்க.. இரண்டு தாய்மார்கள் ... பின் இருக்கையில் இருந்து ஒரு மாணவியை வெளியே எடுத்தனர்.

அய்யயோ.. இறந்து விட்டாளோ என்று என் மனம் துடிக்க.. அந்த தகப்பனின் ஒப்பாரி நிற்கவே இல்லை.

அனைத்து  மாணவர் மாணவிகளும் துயரமாக நிற்கையில்...

எனக்கோ.... மயக்கமே வந்து விட்டது...

வண்டியை நிறுத்தி வெளியே வந்து..மாணவ மாணவியரை நோக்கி என் கண்கள் சுழல... ராசாதிக்களோ .. கண்ணில் படவில்லை..

அலை பேசி ஒரு சிறிய ஒலி வர .. குறுந்செய்தி ...

"We can see you Dad.. Dont Worry " என்று மூத்தவள் ...

அடுத்த சில நொடியிலேயே..

"Be there only Dad....I would come in a minute" என்று இளையவள்..


பெருமூச்சு விட்டு மீண்டும் இருக்கையில் இருக்கையில் என்னை அறியாமலே அழுதே விட்டேன். அந்த பெற்றோர்களில் ஒப்பாரியை நினைத்து .


இளையவள் வந்தாள்..

என்ன ஆச்சி மகள்?

எங்கள் பள்ளிக்கூட ஸ்டுடென்ட்ஸ் தான் டாட்.. குடி மற்றும் - ட்ரக்ஸ் எடுத்து விட்டு வண்டி ஒட்டி விபத்து.

அலறியே விட்டேன்..இங்கே 21  வயதிற்கு முன்னால் குடித்தாலே அவர்களுக்கு பெரும் பிரச்சனை .. 18 வயதிற்கு முன் சிகரெட் பிடிக்க கூடாதே.. எப்படி .. மகள்?

"Dad.. some of these kids break law..."

இல்லை மகள்..something is wrong..

என்று நான் சொல்ல.. அவளோ.. சரி. .. எங்கே என் சாப்பாடும்  டீயும்  என்றாள்..

என்ன ராசாத்தி.. நான் இவ்வளவு சீரியஸா இருக்கேன்.. நீ சாப்பாடு டீயினு..

டாடா .. திஸ் ஐஸ் நாட் ரியல். குடித்து விட்டு வண்டி ஓட்டினால் என்ன என்ன இழப்பு என்று எங்கள் பள்ளியின் நாடக குழுவினர் நடித்து காட்டினார்கள்.

அப்ப தீயணைப்பு .. மற்றும் காவல் துறை..

அவங்க தான் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்..

ரொம்ப பயந்துட்டேன் மகள்...

நானும் தான்.. But,  DAD .. I promise myself to be very careful while driving. Its life and death...

சரி மகள்... That Cop told me to tell you that I love you..

Dada..

என்ன..?

You dont need to tell me that the Cop told you tell me ... Just say, you love me.. thats enough..

I love you...

என்று  சொல்லிவிட்டு கிளம்ப..

இந்த காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த தகப்பனின் அலறலை கண்ட ஒவ்வொரு பிள்ளையும்  குடியை தொடும் முன் ஒரு முறை யோசிக்கும்.

நல்லதோர் பாடம்.

8 கருத்துகள்:

  1. சொல்லிச்சென்றவிதம் அற்புதம்.நாங்களும் அதிர்ந்துப் பின்தான் தெளிந்தோம்

    பதிலளிநீக்கு
  2. படித்து முடிப்பதற்குள் பதறிவிட்டேன் நண்பரே! கடைசியில் வெறும் ஒத்திகை தானா? அப்பாடா!
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  3. படித்துக் கொண்டு வரும் போதெ கொஞ்சம் புரியத் தொடங்கிவிட்டது....இது உண்மையான விபத்து அல்ல என்று. ..ஆனால் மிக மிக பாராட்ட வேண்டிய ஒன்று. இப்படிப் பிள்ளைகளுக்கு நல்ல விழிப்புணர்வை உண்மையான விபத்தைப் போன்று காட்டும் போது மனதில் ஒரு வித பயம் கலக்கம் ஏற்படும்...பாராட்டுகள் குழுவினருக்கு..

    விழிப்புணர்வுச் செய்தி என்று ஊகிக்க முடியாவிட்டாலும், விபத்தில்லை என்று தோன்றியதற்கு முதல் காரணம்...பள்ளி வளாகத்திற்குள் என்பது.....அங்கெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் மிக மிக மெதுவாகத்தானே செல்ல முடியும்...இத்தனை சீரியஸாக விபத்து ஏற்படும் படியான வேகம் இருக்காதே....இரண்டாவது குழுமியிருந்த கூட்டம் பார்வையாளர்கள் போல் உட்கார்ந்திருந்தது....

    என்றாலும் படங்கள் மனதைப் பதற வைக்கைத்தான் செய்கின்றன...உண்மையான விபத்து போல்...ஆனால் நீங்கள் சொல்லும் விதத்தில் அசத்திவிட்டீர்கள்...விசு...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பதறிப்போனது மனது... தலைநகர் தில்லியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அதை அசுர வேகத்தில் ஓட்டும் இளைஞர்கள் என பார்க்கும்போது பதட்டமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அருமை
    இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம்

    பதிலளிநீக்கு
  6. "படித்ததில் பிடித்தது, முழுதும் படித்தவுடன்தான் தெளிந்தது!!!" எடுத்து சென்ற விதம் அற்புதம்...விசு அண்ணா!!!

    பதிலளிநீக்கு
  7. Raised the heart beat for a minute! Is this a real story? Meaning, this type of mock-up happening at high schools sponsored by Police dept?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...