மற்றொரு நாள்...
மூத்த ராசாத்தி காலை 5 .45 க்கு பள்ளிக்கு சென்றுவிடுவாள். அடியேனும் இளையவளும் வியாழன் தவிர மற்ற நாட்கள் 6 .45 போல் கிளம்புவோம். வியாழன் அன்று சற்று சீக்கிரமாக கிளம்பி அருகில் உள்ள சிற்றுண்டிக்கு சென்று அங்கே காலை உணவை "DADDY-DAUGHTER-DATE" என்று ஒரு உண்டு செல்வோம். இது வருடக்கணக்காக பழக்கம்.
இந்த வியாழன் காலை சற்று தாமதமாக ... காலை உணவை தவிர்த்து விட்டு அவளை பள்ளியில் இறக்கும் போது.. ஒன்னுமே சாப்பிடாமல் வந்து விட்டேன் .. 8 .50 போல் சாப்பிட ஏதாவது எடுத்து வாருங்கள் என்று சொன்னாள்.
அடியேனின் அலுவலகமும் அவள் பள்ளிக்கு அருகில் தான். நேராக அலுவலகம் வந்து சற்று நேரம் இருந்து விட்டு அருகில் இருந்த "ஸ்டார் பக்ஸ்" கடையில் அவளுக்கு பிடித்த பலகாரம் மற்றும் அவள் விரும்பும் டீ ஒன்று வாங்கி கொன்டு பள்ளியை நோக்கி சென்றேன்.
பள்ளிக்கு அருகில் இருக்கும் ட்ராபிக் சிக்கனலில் நிறைய காவல் துறை வண்டிகள்.. மற்றும் தீயணைப்பு வண்டி.. ஒவ்வொன்றும் சிவப்பு நீல விளக்குக்களை சுழல விட்டு ... அலறி கொண்டே பள்ளிக்கூடத்தில் நுழைய.. அடி வயிறு கலக்கியது..
பள்ளியின் உள்ளே நுழைந்த என் வண்டியை ஒரு காவலர் நிறுத்தி.. எங்கே செல்கிறாய் என்று கேட்க.. நானோ.. மகளுக்கு உணவு எடுத்து வந்துள்ளேன் என்று சொல்ல.. அவரோ.. அவள் கொடுத்து வைத்தவள்.. "Make Sure you tell her that you love her" என்று சொல்ல.. குழம்பினேன்.