புதன், 2 ஏப்ரல், 2014

கொடி அசைந்ததும் _____ ___(2 வார்த்தை போட்டி முடிவு)



இந்த வார்த்தை போட்டியில் பங்கேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் தமிழ் அறிவையும் கற்பனையையும் வளர்த்துக்கொள்ள இந்த போட்டி மிகவும் உதவி புரிகிறது. இந்த 3 வது வார்த்தை போட்டியில் கொடி அசைந்தது என்று நான் எழுதிய முதல் இரண்டு வார்த்தைக்கு அடுத்த இரண்டு வார்த்தைகளை பதிவு செய்த ஏறக்குறைய 400 பேருக்கும் நன்றி. தொடர்ந்து இந்த ப...ோட்டிகள் நடக்கும், பங்கேற்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

இந்த போட்டியில் எனக்கு பிடித்த சில பதிவுகள்.

கொடி அசைந்ததும்...

உதயகுமார் க. இரா. "வண்டி புறப்பட்டது".
Sundarii Selvaraj "விடைபெற்றனவோ விழிகள்"
Kosala Nataraj "மல்லிகை உதிர்ந்தது"
Malathi Karthikeyan "சிசு மலர்ந்தது"
enkataramani Natarajan "கண்களில் சுதந்திரம்"
Vaduvur Rama "வேர் விழித்தது"
Sathish Kumar C "கோவில் கும்பாபிஷேகம்"
Venkataramani Natarajan "காந்தியின் சிரிப்பில்"
Lakshmi Ramakrishnan "தாலி மின்னியது"

கவிஞர் வாலிதாசன் "குதித்தன பனித்துளிகள்"

இவைகளை தவிர பல அட்டகாசமான வார்த்தைகளை அள்ளி தெளித்த அன்பர்களுக்கு நன்றி.

ஆட்ட விதி படி இந்த போட்டியில் இம்முறை அதிக பட்சமாக 27 லைக் வாங்கி வெற்றி பெற்ற பதிவு

Sundarii Selvaraj "விடைபெற்றனவோ விழிகள்"

வாழ்த்துக்கள் சுந்தரி செல்வராஜ் அவர்களே. உங்கள் பரிசு தொகையான 1000 ருபாய் உங்களை ஒரு வாரத்தில் வந்து சேரும்.

அடுத்த போட்டியில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை.. வார்த்தை போட்டி என்னும் முகநூல் பாகம் செல்வதே. அங்கே செல்ல இங்கே சொடுக்குங்கள்.
 https://www.facebook.com/pages/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/229470097258207?ref=hl

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி .. இந்த பரிசு நான் கூவி கூவி நண்பர்களை இந்த வார்த்தை போட்டியில் கலந்து கொள்ள அழைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் அதிக லைக் விழ காரணமாக இருந்த அத்தனை நட்புக்களுக்கும்,சண்முகவடிவு ,மற்றும் வார்த்தைபோட்டிக்கும் நன்றி !!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...