வெள்ளி, 5 நவம்பர், 2021

பரத்வாஜ் ரங்கன் - கதறு ... கதறு... " ஜெய் பீம்"

 "I am so sorry.. so sorry for your unhappiness, Mr. Baradwaj Rangan"!

Marshall என்ற ஆங்கில படத்தில் நீதி மன்றத்தில் சாட்சி கூண்டில் விசாரிக்கையில் நிற்கும் ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு எதிராக வாதாடும் வக்கீல் கூறுவார்... 

" I am so, so sorry for your unhappiness"  என்று!


அந்த படத்தை பார்க்கையில் அந்த காட்சியை பார்க்கையில் அந்த வக்கீலோடு  சேர்ந்து நாமும் மனதில் அந்த பொய் சொல்லும் பெண்ணை பார்த்து அவர் செய்வது சொல்வது அனைத்தும் பொய்யாக இருந்தாலும் ...

வியாழன், 4 நவம்பர், 2021

ஜெய் பீம் - ஒரு பார்வை.

பல வருடங்களுக்கு முன் வளைகுடா பகுதியில் வாழுகையில் ஒரு நாள் பாலைவன பகுதியில் விரைவாக வாகனத்தை செலுத்தி கொண்டு இருக்கையில் திடீரென்று  ஒரு பறவை தன் குஞ்சுகளோடு சாலையை கடக்க வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவைகள் மேல் வாகனம் செல்ல அந்த தாய் பறவை மற்றும் குஞ்சுகளின் சிறகுகள் இரத்தத்தோடு  வெள்ளை நிற வாகனத்தில் சிதற..

அடுத்த சில நாட்கள் தூக்கத்தையே இழந்தேன்.

அதற்கும் இந்த தலைப்பிற்கும் என்ன? இதோ சொல்கிறேன்.


"விசு, ஜெய் பீம் என்ற படம் வந்துள்ளது, கண்டிப்பாக பார்"

என்று நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து சொல்ல, ஜெய் பீம் என்று கூகிளில் தேடுகையில்  பல நல்ல விமர்சனங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு விமர்சனத்திலும், தேம்பி தேம்பி அழுதேன், மனது கனத்து விட்டது. என்ன ஒரு அநியாயம் , என்ன ஒரு சோகம் என்று இருக்க..

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...