புதன், 29 செப்டம்பர், 2021

ஆம்! அறிவாலயத்தின் எதிரில் அமர்ந்துள்ள பிச்சைக்காரன் சுப வீ!


கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. அதில் பேசிய H ராஜா சுபவீயை "அறிவாலயத்தின் வாசலில்  அமர்ந்துள்ள பிச்சைக்காரன்" என்று சொல்ல  அருகில் இருந்தோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இதற்கு சுபவீயின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று நினைக்கையில், சுபவீயின் பதிலை காண நேர்ந்தது. அவரோ,

"எனக்கு ஒருவர் இலவச பட்டம் தந்தார். மற்றும்   "சாக்கடையில் இறங்கி சண்டை இட விரும்பவில்லை. அந்த நபரின் தகுதி அதுவே" என்று பெருந்தன்மையாக கூறி கடந்து சென்றார்.

நாம் சுபவீ அவர்களுக்கு சொல்ல வந்தது.

ஐயா, அறிவாலயத்தின் எதிரில் பிச்சைக்காரனாக அமர்வது கமலாலயத்தின் பூஜை அறையில் அமர்வதை விட பாக்கியம்.இங்கே பிச்சைக்காரனாக அமர்ந்தோருக்கு பெரியார், அண்ணா , கலைஞர் போன்றோரின் ஆற்றல்களை காண, கற்க ஒரு வாய்ப்பு இருந்து இருக்கும். அங்கே பூஜை அறையில் இருந்தால் என்ன காண முடியும்? காலை நீட்டி கொண்டு KT ராகவன் "காட்டுங்க, காட்டுங்க"  என்று பிச்சை எடுக்கும்  ஈன புத்தியை  தான் காண முடியும்.

நாம் இங்கேயே அமர்ந்து இருப்போம்.  கற்க இன்னும் பல இருக்க இவர்கள் சொற்கள் நம்மை சோரம் போக ஒரு நாளும் அனுமதிக்க கூடாது.


கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...