வெள்ளி, 8 நவம்பர், 2013

இன்றைய வார்த்தை: " கலாய்த்தல்"


இன்றைய வார்த்தை:  "கலாய்த்தல்"

டோக்கியோ நகரில் தமிழ் கற்று வரும் ஜப்பானிய நண்பர் "நிக்கிமோ நிக்காதோ" என்பவர் நமக்கு அனுப்பிய கேள்வி. " கலாய்த்தல்" என்றால் என்ன? அந்த வார்த்தையின் பூர்வீகம் எது?

உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே. இப்போது பதிலுக்கு வருவோம்.கலாய்த்தல் என்பது வழிப்பறி சொல். அதாவது, போற வழியில் என்ன என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே சுட்டு கொண்டு செல்லுதல்.கலாய்த்தல் என்பதிற்கு கிண்டல், ...நக்கல், உடையல் என்ற மற்ற அர்த்தங்களும் உண்டு. 

பூர்வீகம்:

கலாய்த்தல் என்ற வார்த்தை சுத்தமான தமிழ் வார்த்தை. இந்த வார்த்தையை பிரித்து எழுதினால் "கலந்து + ஆலோசித்தல்" என்றாகும். கலைக்கிறாயா "கலந்து+ ஆலோசிக்கிறாயா" என்று அர்த்தமாகும். இப்போது இந்த வார்த்தையை வாழ்வின் நடைமுறையில் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தந்தை மகனை கலாய்த்தல் "உன் வயசில் ஆபிரகாம் லிங்கன் ஆங்கில இலக்கியத்த கரைச்சி குடித்தார்".
மகனின் பதில் கலாய்த்தல் " உன் வயசில் அதே லிங்கன் என்னவா இருந்தார்னு தெரியுமா?
காதலனின் கலாய்த்தல் " உனக்காக நான் வானவில்லை வளைக்கட்டுமா"?

காதலியின் பதில் "கூரை ஏறி கோழி புடிக்க தெரியில, வானத்தில ஏறி வைகுண்டம் போனாராம்"
ஆசிரியர் கலாய்த்தல் "கஸ்துரி பாய் பற்றி சிறு குறிப்பு வரை (out of syllabus question)"
மாணவனின் பதில் " கஸ்துரி பாயே இல்ல அவ கேர்ள்"
மனைவியின் "இந்த புடவையில நான் அழகா இருக்கேன்ன?
கணவன் பதில் " இந்த புடவையினால தான் நீ அழகா இருக்கே"

இந்த "கலாய்த்தல்" பற்றி கேட்ட நண்பர் நிக்கிமோ நிக்காதோ அவர்களுக்கு இந்த வார பரிசு " தினம் ஒரு வார்த்தை கோனார் உரை" நீங்களும் ஒரு வார்த்தை கேட்டு இப்பரிசை கலாய்க்கலாம்.

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...