Sunday, October 2, 2016

ரோஸ்ட் (ROAST ) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி.

மனித இனத்தை மற்ற ஜீவன்களோடு வேறுபடுத்தும் ஒரு விஷயம் நகைச்சுவை. பசி - தாகம் - கோபம் - காமம் என்ற உணர்வுகள் அணைத்து ஜீவன்களுக்கும் இருந்தாலும் நகைச்சுவை என்ற ஒரு உணர்வு மானிட குலத்திற்கு மட்டுமே சொந்தம்.

வளரும் வயதில் சார்லி சாப்ளின்  -  ஐ லவ் லூசி - நாகேஷ் - சந்திரபாபு போன்றோர்களின் நகைசுவையை ரசித்தவன் தான்.  இவர்களின் நகைச்சுவை யாரையும் புண் படுத்தாமல் இருக்கும். ஒரு பாத்திரத்தை நையாண்டி தானம் செய்தாலும் அந்த பாத்திரத்தில் தானே நடித்து அதை நையாண்டி செய்வார்கள்.

அதன் பின்னர்.. என்னை அறியாமலே நான் முட்டாள் தனமாக ரசித்தவர்கள் ..கௌண்டமணி - செந்தில் ஜோடியின் மாற்று திறனோரை  விமர்சிக்கும் நகைச்சுவை. ஒருவரையொருவர் திட்டும் போது ... மற்றவரின் நிறத்தையும் - முக வடிவையும்  ஏளனம் செய்து  சொல்லும் வார்த்தைகள்.

இவைகளை இன்று பார்த்தால் மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. ஆனால் அன்று என்னை அறியாமலே நானே சிரித்து இருக்கின்றேன் என்பதை நினைக்கையில் விசனம் தான் வருகின்றது.

ஒரு திரைப்படம் ..  கே பாலச்சந்தரின் படம் என்று நினைக்கின்றேன் .  அதில் ஒரு காட்சி. தொலை காட்சியில் செய்தியாளர் ஒருவர் செயது படிப்பார். அப்போது அதன் ஓரத்தில் விவேக்  அவர்கள் அதை காது கேட்காதவர்களுக்கு சைகை மொழியில் சொல்லுவார்.

அந்த காட்சியை நான் பார்க்கையில் அன்று குலுங்கி குலுங்கி சிரித்ததை இன்றும் நினைத்து , நான் எவ்வளவு ஒரு கேவலமான மனநிலையில் வாழ்ந்து இருக்கின்றோம் என்று தலை குனிகிறேன்.

இன்னொரு படத்தில் மாற்று திறன் கொண்ட ஒருவர் ஒரு கால் விளங்காத நிலையில் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நடந்து வருவதை விவேக் பார்த்து ..

"இவன் ஏன் சைடு ஸ்டென்ட் போட்ட பைக் போல வரான் "

அதையும் பார்த்து சிரித்தவன் தான் நான்.

இப்போது வருந்தி  என்ன பிரயோஜனம்?

சரி தலைப்பிற்கு வருவோம்.

மேலை நாடுகளில் ஒரு ROAST என்ற நகைச்சுவை நிகழ்ச்சி உண்டு.  அதில் ஒரு நபரை அழைத்து நடுவில் அமர வைத்து அவரை மற்றவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் வறுத்து எடுத்து விடுவார்கள்.

அவருடைய பிறப்பில் ஆரம்பித்து - வளர்ப்பு - திருமணம் - குடும்பம் - பிள்ளைகள் - நிறம் - மதம் - சாப்பாடு பழக்கம் என்று எதையும் விட்டுவிடாமல்  வறுத்து எடுத்து விடுவார்கள். அதை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள், பாதிக்க பட்டவரும் கூட.

மேலை நாட்டில் நடக்கும் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் Cursing Words  அதிகம் இடம் பெரும். அதிகமான கெட்டவார்த்தைகளை உபயோகித்து பேசுவார்கள். இதை காண வருவர்களும் அதை கேட்டு அதிகம் சிரிப்பார்கள்.

இந்த ROAST நிகழ்ச்சி இப்போது இந்தியாவில் ஆரம்பித்து உள்ளது. இங்கே தான் சில பிரச்சனைகள்.

முதலாவதாக...நம் நகைச்சுவை உணர்வு மேலை நாட்டினரின் உணர்வு போன்று அல்ல. பொது இடத்தில் கெட்ட வார்த்தைகள் பேசினால் முகம் சுளிப்பவர்கள் நாம்.

நூற்று கணக்கான மக்கள் கூடி மேடை போட்டு கெட்ட வார்த்தையில்  ஒருவரையொருவர் பேசி கொள்வதை நாம் இன்னும் நகைசுவை என்று ஏற்று கொள்ளவில்லை.

சென்ற வாரம் ... தனிஷா சட்டர்ஜி என்ற நடிகையை ROAST  செய்கிறேன் என்று அழைத்து வந்து நகைச்சுவை என்ற பெயரில் பேச ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் பாதியிலே தனிஷா கோபத்துடன் வெளியேறினார்.

ஏன்..?

அவர்கள் சொன்ன  ஜோக்ஸ் அனைத்தும் அவரின்  கருமையான நிறத்தை சுட்டி காட்டியே அமைந்தது.  பேசியவர்கள் அனைவரும் நீ எப்படி இவ்வளவு கருப்பு?என்று சுட்டி காட்டும் வகையில் பேசினார்கள்.

நம் சமுதாயம்  இந்த மாதிரி ROAST  நிகழ்ச்சிக்கு தாயாரா ?  நமக்கு இது  தேவையா?

ஆண்டவனுக்கே வெளிச்சம்.!

8 comments:

 1. இன்னும் ரோஸ்ட் மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை..நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிக்கு நம் மக்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்

  ReplyDelete
 2. இந்திய மக்கள் இதுபோன்ற நகைச்சுவைக்குப் பக்குவப்பட்டவர்கள் இல்லை. ஏற்கனவே ஜாதி, மதப்பிரச்சனை இருக்கும் நாட்டில், நகைச்சுவை நிகழ்ச்சிகள் வெகு தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமும், கலவரத்தைத் தூண்டும் அபாயமும் உண்டு.

  ReplyDelete
 3. புதுமையான நிகழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ரோஸ்ட் எல்லாம் இங்கு வொர்க்ட் அவுட் ஆகும் என்று தோன்றவில்லை .மட்டுமல்ல நகைச்சுவை என்பது பிறரின் மனதைப் புண்படுத்தாமல் தரக்குறைவாக இல்லாமல் இருத்தல் தான் நகைச்சுவை.

  ReplyDelete
 5. இந்த நிகழ்ச்சியில நம்ம "ஆப் கி பார்"ஐ உக்கார "வச்சு" நம்ம ரெண்டு பேரும் கேள்வி கேட்டா எப்படியிருக்கும்?
  கரன் தப்பார் கிட்டயே முடியாம ஒரு தபா தண்ணி குடிச்சார்...
  நம்ம கேட்டா டைரக்ட்டா "பா_டா_ல்.." தான்!!

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு ROAST பிடிக்காது. TOAST தான் பிடிக்கும்!

   Delete
 6. bro areyou not aware that ridiculing a community over their food habits do prevail here in your blogs too...
  you have to stop that first....

  ReplyDelete
 7. நேக்கு ஒரு சந்தேகம்?
  அதிமுக ஆண் பெண் மந்திரிகள் மற்றும் அல்லக்கை அம்மணிகள்...பீச் மண்ணில் மண் சோறு சாப்பிடுவாகளா?

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...