சென்ற வாரம் நான் எழுதிய நிறவெரி இன வெறி சரி, இது என்ன உணவெறி என்ற இடுக்கை படித்து விட்டு அதற்க்கு கருத்து கூறுகையில் அன்பு அண்ணன் அல்ப்ரெட் அந்த பெண் டொமினிக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டதா என்று கேட்டார். அவருக்கு பதில் தரும் வகையில் இந்த தொடர்ச்சி இடுகை. இதை படிக்குமுன் இதற்கு முன் எழுதிய இடுகையை ஒரு முறை மேய்ந்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அதை படிக்க இங்கே சொடுக்கவும்.
http://vishcornelius.blogspot.com/2014/03/blog-post.html
அந்த முட்டை தோசையை டொமினிக் முடித்த பின் நாங்கள் மூவரும் புனே ரயில்நிலையம் நோக்கி நடந்தோம். நானும் ரமேசும் மிகவும் ஆவலுடன் டொமினிக்கிடம் பெண் எப்படி இருந்தது ? என்ன சொன்னார்கள் என்று கேட்டோம். பெண் எல்லாம் சரி, ஆனால் எனக்கு என்னமோ இது நடக்காது போல் உள்ளது என்றான். ஏன்,நீ ஏதாவது உன் முன் கோபத்தை காட்டிவிட்டாயா என்றோம்? இல்லை நான் சாப்பாட்டை தவிர வேறு எதற்கும் வாயை திறக்கவில்லை என்றான்.
ரயில் நிலையத்தை அடைந்த நாங்கள் அங்கே இருந்த டிக்கட் பரிசோகதரிடம் பம்பாய்க்கு மூன்று டிக்கெட் கிடைக்குமா என்றோம்? அவர் கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்று பொறி வைத்து பேசியவுடன், நாங்கள் அவரை விட்டு விலகி எங்களுக்கே உரிய ரயில் தந்திரத்தை கையாள முடுவு எடுத்தோம்.
எங்கள் தந்திரம் என்ன வென்று விளக்கி சொல்கிறேன், கவனமாக கேளுங்கள். நாம் போகவேண்டிய ரயிலில் உள்ள ரிசெரவ்ட் பெட்டியின் கதவு அருகில் அந்த பெட்டியில் செல்லும் அனைவரின் பெயரும் இருக்கை என்னும் போட்டு இருக்கும். அதில் ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்த பட்சம் 4-5 சீட் யார் பெயரும் இல்லாமல் இருக்கும். இந்த சீட்ஸ் "வைடிங்க் லிஸ்டில்" இருபவர்களுக்கு பொதுவாக வழங்க படும். அப்படி இல்லாவிடில் யார் முதலில் ஏறி அமர்கிரார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் ஒவ்வொரு பெட்டியாக பார்த்து கொண்டு போகையில் ஒரு பெட்டியில் எங்களுக்கே வைத்த மாதிரி மூன்று சீட் யார் பெயரும் இல்லாமல் இருந்தது. நாங்கள் உள்ளே சென்று அமரலாம் என்று அருகில் சென்றால் எங்களுக்கும் முன்பே மூன்று ஆசாமிகள் அதில் அமர்ந்து இருந்தனர்.
இப்போது எங்கள் தந்திரத்தின் இரண்டாம் பாகம் துவங்கியது. நண்பன் டொமினிக் நேராக அவர்களிடம் சென்று "ரிசர்வெட்" என்று ஒரே ஒரு வார்த்தையை சொன்னான்? அவன் சொல்லும் போதே அது கேள்வியை போலவும் இல்லாமல் ஒரு சந்தேகம் போல் தான் கேட்டான். உடனே அவர்கள் மூவரும் பேய் அறைந்ததை போல் முழித்து (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் எழுதுகிறேன்)அந்த சீட்டை விட்டு எழுந்தார்கள். நாங்கள் மூவரும் அமர்ந்தோம். பிறகு ஒரு 10 நிமிடம் கழித்து டொமினிக் அவர்களிடம் முன்னால் உள்ள மூன்றாவது பெட்டியில் சில சீட்கள் காலியாக இருப்பதாக கேள்வி பட்டேன் என்றான். அவர்கள் மூவரும் எங்களுக்கு நன்றி கூறிவிட்டு அந்த பெட்டியை நோக்கி சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் ரமேஸ் டொமினிக்கிடம் அது சரி, முன்னால் மூன்றாவது பெட்டியில் இடம் இருப்பதாக சொன்னாயே, நாமே அங்கு போய் இருக்கலாமே, அமர்ந்து இருப்பவர்களை ஏன் எழுப்பினாய் என்றான்? அதற்க்கு டொமினிக் அங்கே அப்படி எதுவும் இல்லை. டிக்கெட் பரிசோதகர் வரும் வேளையிலே இவர்கள் இங்கே இருந்தால் நாம் ரிசர்வ் பண்ண வில்லை என்று இவர்களுக்கு தெரிந்து விடும், அதனால் தான் அவர்களை வேறு ஒரு பெட்டிக்கு அனுப்பிவிட்டேன் என்றான். நான் அவன் அறிவை கண்டு அதிர்ந்துவிட்டேன்.
இரவு முழுவதும் நன்றாக தூங்கிவிட்டு காலை 7 மணிக்கு தாதர் நிலையத்திற்கு வந்து சேர்ந்து அங்கு இருந்து இன்னொரு வண்டி பிடித்து மட்டுங்கா வந்து சேர்ந்தோம். பெண் வீட்டில் இருந்து வரும் பதிலுக்காக நாங்கள் மூவரும் காத்து கொண்டு இருந்தோம்.
ஒரு வாரம் ஆனது, பெண் வீட்டில் இருந்து பதில் வந்தது...அதில் ...
டொமினிக் அவர்களுக்கு,
புனேவில் இருந்து நாங்கள் எழுதும் மடல். தங்கள் எங்கள் வீ ட்டு பெண்ணை பார்க்க வந்தது எங்கள் அனைவர்க்கும், மகிழ்ச்சியே. இருந்தாலும் சில "தவிர்க்க முடிந்த-தவிர்க்க வேண்டிய" காரியங்களை தாம் தவிர்க்காதலால் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று நீங்கள் கேட்காவிட்டாலும் சொல்லவேண்டியது எங்கள் கடமை அல்லவா?
நீங்கள் வரும் போதே மற்றும் இரண்டு நண்பர்களோடு வந்ததை கேள்வி பட்டதும் உங்கள் சிறு குழந்தை மனது எங்களுக்கு புரிந்தது, ஆனாலும் ஒரு பிழைக்க தெரியாத நபராக தான் நீங்கள் எங்களுக்கு தென்பட்டீர்கள். அது மட்டும் இல்லாமல் நாங்கள் "வடை பஜ்ஜி சட்டினி" வைத்தவுடன், நீங்கள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உங்கள் பாக்கெட்டில் கைவிட்டு நான்கு இட்லி எடுத்து எங்கள் வீட்டு சட்டினியை தொட்டு தொட்டு சாப்பிட்டது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. பெண் பார்க்க செல்லும் இடத்தில நீங்கள் ஏன் இட்லி எடுத்து வந்தீர்கள் என்பது எங்கள் அனைவருக்கும் புரியாத புதிர். அது கூட பரவாயில்லை, நாங்கள் அனைவரும் பிசியாக இருக்கும் நேரத்தில் நீங்கள் எங்கள் ப்ரிட்ஜை திறந்து ஒரு முட்டையை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டது எங்கள் அனைவரையும், ஒரு வேலை நீங்கள் "ஒரு முட்டை மந்திரவாதி" என்று நினைக்க வைத்தது. இந்த மூன்று காரியங்களினால் இந்த திருமணத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து கொள்கிறோம்.
மற்றும் புனே-பம்பாய் ரயிலில் உங்களுக்கு முன்னே சீட்டில் அமர்ந்து இருந்த மூன்று பேரில் இருவர் என் சகோதரியின் பிள்ளைகள். பம்பாயில் வேலைக்கான நேர்முக தேர்வில் சென்று கொண்டு இருந்தவர்களை நீங்கள் ஏமாற்றி அவர்கள் இருக்கையில் அமர்ந்தீர்கள் என்று கேள்வி பட்டோம். இவ்வாறான தவற்றை திருத்தி வாழும்படி கேட்டு கொள்கிறோம். எங்கிருந்தாலும் வாழ்க.
பின் குறிப்பு:
தாங்கள் அழைத்து வந்த நண்பர்களில் ஒருவரான அந்த "பால் வடியும் முகத்தை கொண்ட கணக்கு பிள்ளையின்" பெற்றோர்களின் விலாசம் இருந்தால் எங்களுக்கு அனுப்பவும்.
Dear Dominic,
Not a day goes without us thinking of you my friend. I keep saying, Heaven is full of laughter cos you are there. You have left too soon, RIP my friend... RIP.

அந்த மூவரும் மீண்டும் வராமல் இருந்தவரைக்கும் சரி...! ஹா... ஹா...
பதிலளிநீக்குஇப்படி ஒரு கடிதத்தை எதிர்ப்பாக்கவேயில்லை... கடிதம் வந்த பின்பாவது டொமினிக் அவர்கள் மாறினாரா...?
என்னாது பால் வடியும் முகமா ?
பதிலளிநீக்குஏய்யா, ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன் , உங்க ஊர்ல பால் என்ன கலர் ?
உண வெறி பேசும் வேளையில் நிற வெறியா?
பதிலளிநீக்குஎன்னாது நிற வெறியா , கிட்ட வா கொஞ்சம் என் நக வெறியை காண்பிக்கிறேன்
நீக்குதிரு .டொமினிக் அவர்கள் எங்கள் மனதிலும் நிறைந்து விட்டார் .......பெண் வீட்டார் எழுதிய கடிதம் உங்கள் கற்பனை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநான் ஏற்கனவே கூறியதுபோல் இடுகையில் எப்போதுமே சிறிதளவு கற்பனை என்னும் கடுகை போட்டால்தான் காரசாரமாக இருக்கும். பெண் வீட்டார் எழுதிய கடிதம் நிஜமே. அதில் உள்ள எல்லா குறிப்புகளும் உண்மையே, ஒரு விஷயத்தை தவிர...
நீக்குநீங்கள் எழுதும் சம்பவங்கள் ,பாக்யராஜ் படம் போல் logic நிறையவே இருக்கிறது. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. கடிதம் உண்மையென்றால், செம காமெடி சார் இது...... திரு டொமினிக் அவர்கள் பற்றி நிறைய எழுதுங்கள். நன்றி.
பதிலளிநீக்கு