வியாழன், 31 ஜூலை, 2014

பின்லாந்தில் பின்லேடன் :



ஒவ்வொரு முறையும் என் இடுகையின் பக்கம் போகும் போதும், அதன் அருகில் யார் எந்த நாட்டில் இருந்து வந்து படிகின்றார்கள் என்று வரும். அது பார்க்கும் போது மனதில் ஒரு சந்தோசம். அடேடே, உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து நாம் எழுதும் எழுத்துக்களை பல்லாயிர கணக்கான மைல்களுக்கு அப்பார்ப்பட்டு வசிக்கும் தமிழர்கள்  படிக்கின்றார்கள் என்பதை நினைத்தாலே மீண்டும் மீண்டும் எழுத தோன்றும்.

இப்படி இருக்கையில் சில நேரங்களில் சில ஊர்களின் பெயர்கள், சில நாடுகளின் பெயர்கள் வரும். இந்த நாடுகளுக்கு, ஊர்களுக்கு நமக்கும் செல்ல ஆசை தான். இருந்தாலும், போக முடியவில்லையே என்ற ஏக்கம்.

நாம் எழுதும் இந்த இடுகைகளை படித்து விட்டு, நமக்கு அறிமுகமே இல்லாத தமிழர் ஒருவர், பின்னோட்டம் இடும் போது வருகிறதே... அதன் சுகமே தனி. அதுவும், அந்த பின்னோட்டத்தில்... நம் எழுத்தை ரசித்து பாராட்டினால், எதோ நாம் பெற்ற குழைந்தைகள் பெரிய பரிசு வாங்குவது போல் ஒரு உணர்ச்சி.

ஏன் இருக்காது...? ஒவ்வொரு இடுகையும், ஒரு பிள்ளை அல்லவா? அதை யோசித்து, எடுத்து வளர்த்து மற்றவர்கள் பார்த்து ரசித்து பாராட்ட எந்த தகப்பன்-தாய்க்கு தான் பிடிக்காது.

சென்ற மாதம், நண்பர் பரதேசி (பேருதாங்க பரதேசி, இவர் பெரிய தேசி...) என்னை அழைத்து, விசு, "இங்கே என் நகரத்தில், எனக்கு அறிமுகமான ஒருவர் உன் இடுகையை படித்து ரசிக்கிறார்" என்று சொன்னவுடன். அது எனக்கு " விசு, உன் மூத்த பிள்ளை இங்கே நடந்த போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றாள்" என்று தானே கேட்டது.

பல நண்பர்கள் பின்னோட்டம் இட்டு பிறகு மின்னஞ்சல்   - தொலை பேசி மூலம் பேசி பழகி, இடுகை நட்பு, ஒரு படி தாண்டி பேச்சு நட்ப்பாகி   உள்ளது.

அது எல்லாம் சரி, இந்த தலைப்பிற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா? சொல்கிறேன்...இங்கே பெயர் தெரியாத நண்பர்கள் வந்து என் இடுகையை படிக்கும் போது நானே அவர்களுக்கு ஒரு பெயர் வைத்து அவர்கள் வருகைக்காக ஒரு நன்றி சொல்வேன்..

அப்படி வைத்ததுதான்..

செனெகல் சிநேகிதன்
பொலிவிய புகழ்
சில்லி சம்பந்தி
ஆஸ்ட்ராலியா ஆசாமி
நியூசிலாந்து நகரத்தான்
நைஜீரியா  நம்பாளு
கடைசியாக..

பின்லாந்த் பின்லேடன்...

எனக்கே.. "பக்கத்து இலைக்கு பாயாசமா...."



விசு... இந்த வாரம் சனி,  என்ன பிளான் வைச்சி இருக்க?

தண்டபாணியின் தொலைபேசி அழைப்பது வந்தது. 

ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல, தண்டம். நீங்க எல்லாம் என்ன பண்றீங்க?

 சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல, சும்மா தானே இருக்கீங்க, பிள்ளை குட்டிகளை கூட்டி கொண்டு இங்க வந்துடுங்க, நான் மற்ற சில நண்பர்களையும் கூப்பிடுறேன். உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆச்சி. என்ன சொல்ற விசு?

புதன், 30 ஜூலை, 2014

இளையராஜாவிடம் சுட்டியா?....நல்லா இருக்கே!

பாடல் பிறந்த கதை : அண்ணே அண்ணே (கோழி கூவுது)


அண்ணே இசைஞானி அண்ணே,வணக்கம் அண்ணே..

சொல்லு அமரா, "கோழி கூவுது" படம் எப்படி வந்துன்னு இருக்கு?

இதுவரை ஓகே அண்ணே, கதை,திரை கதை நல்லா அமைஞ்சிடிச்சு. கதாநாயகி கூட புதுசா தான் அறிமுக படுத்துரோம். எல்லாம் நல்லா அமைந்து வருது அண்ணே.

ரொம்ப சந்தோசம் அமரன், உன் முதல் படம், கவனமா செய். நீ பாட்ட எல்லாம் கேட்டியா? எப்படி இருந்தது?

அண்ணே, அந்த  "எதோ மோகம் எதோ ராகம்",அட்டகாசம் அண்ணே, ஒருமுறை தான் கேட்டேன், பாட்டும் சரி, வார்த்தைகளும் சரி, மனப்பாடம் ஆகிவிட்டது.

சரி, நீ போய் ஷூட்டிங் வேலைய கவனி,

அண்ணே ..

என்னப்பா சும்மா "அண்ணே, அண்ணே".. ன்னு

அந்த "பூவே, இளைய பூவே" பாட்டு, ரொம்ப வித்தியாசமா இருக்கு அண்ணே, இந்த பாட்டை இசை கல்லூரிக்கு கூட பாடமா அனுப்பலாம். அது சரி அண்ணே, அதுக்கு ஏன் யேசுதாஸ், இல்லாட்டி பாலசுப்ரமணிய போடலே. மலேசியா கொஞ்சம் "நக்கல்" பாட்டுக்கு தான நல்ல இருப்பார். இது ஒரு கர்னாடிக் மாதிரி இருக்கே...

இல்ல அமரா, மலேசியா எல்லாம் நல்லா பாடுவார். அது மட்டும் இல்லாமால் கிராமத்தில் இருந்து மிலிடரியில் இருக்கிற கதாநாயகனை "சில்க் ஸ்மிதா" நினைத்து பாடுவது போல். அதனால் மலேசியா குரல் நல்லா இருக்கும்ன்னு நான் யோசித்தேன். நீ வேணும்னா பாரு, இன்னும் 25 -30 வருஷம் கழித்து கூட இந்த பாட்டை இளையராஜா ஏன் மலேசியாவிடம் கொடுத்தார்னு பேசுவாங்க.

அண்ணே, இசையில் உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை, இருந்தாலும் சொல்லுறேன்... அந்த பாட்டில் " இனிக்கும் தேனே, எனக்கு தானே" என்ற இடத்தில் மலேசியா ஒவ்வொரு முறையும் கொஞ்சம் தடுமாருற மாதிரி தெரியுது.

அமரா, நானும் அதை யோசித்தேன், அது சரி, இவ்வளவு நுண்ணியமா இசைய தெரிஞ்சு வைச்சு இருக்கியே. நீயும் இசை அமைப்பாளரா தொடரலாமே, ஏன் அதை விட்டுட.

அட போங்க அண்ணே...கஷ்டப்பட்டு பாக்கியராஜின் "மௌன கீதங்கள்" படத்துக்கு இசை அமைத்தால், என்னப்பா,. பாட்டு நல்லா இருக்கே, அண்ணனிடம் இருந்து சுட்டியானு, எல்லாம் கேக்குறாங்க.அதனால் இனி மேல் இசை அமைப்பாளர் ஆகா போவது இல்லை என்று முடிவு பண்ணிவிட்டேன். அண்ணே ஒர் வேண்டுகோள்.

சொல்லு அமரா,

"அலைகள் ஓய்வதில்லை"யில் அத்தனை காதல் பாட்டு இருந்த போதிலும் நீங்க பாடின "வாடி என் கெப்ப கிழங்கு"   அந்த பாட்டுக்குன்னு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அந்த பாணியில் இதிலும் ஒரு பாட்டு வேணும் அண்ணே.

அப்படியா சொல்லுற, சரி போட்டுடலாம்.

அண்ணே, அத நீங்க தான் பாடனும்.

இல்ல அமரா, "வாடி என் கெப்ப கிழங்கு"  பாட்டை நான் ஒரு பள்ளிகூடத்து வயசு பையனுக்கு பாடினேன். இப்ப அதே பாணி பாட்டை ஒரு நடுத்தர வயது கதாநாயகனுக்கு பாடினா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க.

அண்ணே, அப்பா அந்த பாட்டை நாயகனுக்கு பதிலா  , நாயகனுடைய நாலு நண்பர்கள் பாடுற மாதிரி வைச்சா.

அது சரி, "சிட்ச்சுவேசன்" சொல்லு, நான் ராகத்தை போடுறன்.

மிலிடரியில் இருந்து நாயகன் விடுமுறைக்கு வரார், "சொன்னா தப்பா நினைக்ககூடாது, கையில பாட்டிலோட"!. அதை நண்பர்களிடம் கொடுத்து விட அவர்கள் குடித்து விட்டு வந்து ஒரு "நகைசுவை கலாட்டா" பாடல் போல.

நல்லா இருக்கு அமரா? போட்டுடலாம்.

அண்ணே...

என்னப்பா, நான் தான் சொன்னேனே போடுடலாம்ன்னு.. பின்ன ஏன் சும்மா
"அண்ணே அண்ணே ன்னு"

ஒன்னும் இல்ல, இந்த பாட்டை நானே எழுதி வச்சி இருக்கேன்.. நீங்க தயார்னா இப்ப ராகம் போட்டுடலாம்.

சரி பாட்டை சொல்லு...

அண்ணே.. அண்ணே...

சரி அமரா, பாட்டை சொல்லு..

பாட்டே  அதுதான், அண்ணே..

புரியில அமரா.

"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு, நல்ல ஊரு இப்ப ரொம்ப கேட்டு போச்சின்னே"
.
நல்லது... இந்தா கேட்டுக்க ராகத்தை.

அண்ணே,, இந்த பாட்டு நாலு பேர் பாடும்படிய இருக்கிறனால SPB - யேசுதாஸ் - நீங்க - மலேசியா  நாலு பெரும் சேர்ந்து பாடனம்னு எனக்கு ஒரு ஆசை.

அமரா, பாட்ட மத்தும் நீ சொல்லு, பாடறத யார்ன்னு நான் சொல்றேன்.. இது கிராமத்தில் வாழும் நாலு இசை தெரியாத நண்பர்கள் பாடுவது.  இத வந்து புதுசா யாரையாவது வச்சி பாட வைக்காலாம். நீ ஒரு காரியம் பண்ணு. மெட்ராசிலே ரொம்ப "அடிக்கட்டை" குரல் யாருதுன்னு கண்டு பிடி, அவங்கள வச்சி பாடலாம். நல்ல வித்தியாசமா இருக்கும்.

அடிக்கட்டை குரல்.. அது டாக்டர். சாம்வேல் தான் அண்ணே, இப்ப தான் பக்கத்துக்கு ரூமில் எதோ ரெகார்டிங்ல பார்த்தேன்.

ஓடி போய் அவரை கூட்டின்னு வா. மலேசியா இங்க தான் இருக்கார், அவரை வேணும்னா, கொஞ்சம் குரலை மாற்றி நடுவில் ரெண்டு மூணு வரிய பாட சொல்லலாம். அந்த பையன் மனோ காலையில் இங்க இருந்தாரே  , போய்ட்டாரா?

இல்ல அண்ணே, இன்னும் இங்க தான் இருக்கார்.

அவரையும் கூப்பிடு, நடுவில் ரெண்டு வரி பாட சொல்லலாம்?

நாலாவது ஆளுக்கு வேணும்னா  நான் பாடடும்மா அண்ணே?

உனக்கு தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கும், நேரம் இருந்தா வா, நடுவில் ஒரு ரெண்டு வரியில் உன்னையும் சேர்த்துடறேன். சரி, அங்கே போறது யார், ஆச்சி மனோரமாவா?

ஆமா அண்ணே, அவங்களே தான்.

அவங்கள கொஞ்சம் கூப்பிடு.

இதோ இப்பவே அண்ணே.

மனோரமா அக்கா, "முத்து குளிக்க வாரிகளா" பாட்டுக்கு அப்புறம் வேற ஏதாவது பாடினீங்களா?

அங்கே இங்கேன்னு ரெண்டு மூணு படத்தில் பாடி  இருக்கேன் தம்பி.

நீங்க எனக்கு ஒரு பாட்டு பாடனுமே,

தம்பி, என்னை வச்சி "காமடி கீமடி" எதுவும் பண்ணலையே?

இல்ல அக்கா, கிராமத்து காட்சி. நாலு பேர் பாடுகின்ற பாட்டு.. நீங்களும் சேர்ந்து ரெண்டு வரி பாடினீர்கள்  என்றால், படம் பார்கின்றவன் எல்லாம்.. யாரு பாடுனதுன்னு, தலைய பிச்சிப்பான். சரின்னு சொல்லுங்க...

சரி ...சரி ... "சரிகமபதநீச" , எப்ப "ரேகார்டிங்க்"ன்னு சொல்லுங்க, வந்துடறேன்.

இப்ப தான் அக்கா  , எல்லாம் தயார், இன்னும் அஞ்சி நிமிஷத்தில் ஆரம்பிச்சிடலாம்..

ரெடி..1- 2 - 3.

அண்ணே ... அண்ணே.....  ( கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்)

பின் குறிப்பு: இசை ஞானி இளையராஜா ஒரு மேதை. அவர் எந்த காரியம் செய்தாலும் அதில் ஒரு "ஞானியின் நினைப்பு" இருக்கும். இந்த பாடல் வந்த கதை இப்படிதான் இருக்கும்ன்னு நானே நினைத்து எழுதியது இது. முற்றிலும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல!

செவ்வாய், 29 ஜூலை, 2014

ரஜினியின் "நல்லவனுக்கு கெட்டவன்"


என்ன விசு.. எதோ பொண்ணு பாக்க போற மாதிரி தயார் ஆகா இவ்வளவு நேரம் எடுக்கறே? சீக்கிரம் கிளம்பு, நம்ப வகுப்பு மாணவர்கள் எல்லாம் அங்கே "டார்லிங் " ஹோடேலில் காத்து கொண்டு இருப்பார்கள்.

"இளையராஜா - கங்கை அமரன்"...புரியாத புதிர்.

"ஆகாயகங்கை" என்ற ஒரு  திரைப்படம். கார்த்திக் - சுஹாசினி நடித்து இளையராஜா   இசையில்  வெளி வந்தது. படத்தின் கதை, மற்ற எதுவும் நினைவில் இல்லை.

திங்கள், 28 ஜூலை, 2014

ஒரு பைசா வரி இல்லாமல் வெளிநாட்டு கார் இறக்குமதி... எப்படி?

மிஸ்டர் விசு. 

ஹொவ் ஆர் யு ? பைன், தேந்க் யு வா?

 என்று அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லி கொண்டே என் அலுவலகத்தில் நுழைந்தார்  என்னுடன் பணி புரியும்  என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்"(என்ன பெயர் வித்தியாசமாய் இருக்கேன்னு பாக்கறீங்களா, அந்த கதையை இங்க படியுங்கள்).


சொல்லுங்க மிஸ்டர் மத்தாய். நீங்க எப்படி இருக்கீங்க.

நல்லா இருக்கோம் விசு. எனக்கு ஒரு உதவி வேணுமே.

செய்யலாமே, என்னால் முடிந்தால். என்ன சொல்லுங்க.

நாளைக்கு புதுசா ஒரு டொயோடா கேம்ரி வாங்குறேன். அதை எடுக்கணும். கொஞ்சம் என்னை அந்த ஷோ ரூம் வரை டிராப் பண்ண முடியுமா?

சரி மிஸ்டர். மத்தாய். கண்டிப்பா செய்யலாம்.

அடுத்த நாள் காலையில்.. மிஸ்டர் அந்த ஷோ ரூம் செல்லும் வழியில், 

மிஸ்டர் மத்தாய். இது இரு நல்ல முடிவு. நானே சொல்லனும்னு இருந்தேன். உங்களுடைய அந்த ஹுண்டாய் வண்டி ரொம்ப பழயதா தெரியுது. இந்த வெயிலில் சில நேரங்களில் நீங்கள் வேர்த்து விருவிருக்க உள்ள வரும் போது உங்க வண்டியில் ஏசி  கூட வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

எஸ், மிஸ்டர் விசு. அது ஒரு 15 வருஷம் பழைய கார்தான். ஓடுற வரை ஓடட்டுமே நான் வைச்சி இருக்கேன்.

ஷோ ரூமில் போய் புதிய வண்டிய நண்பர் எடுத்தவுடன் நான் என் வீட்டுக்கு  கிளம்பினேன்.

அடுத்த நாள் காலை ஆபிசில்:

என்ன மிஸ்டர் மத்தாய், மீண்டும் வேர்த்து கொட்டி கொண்டே வரீங்க. புது வண்டியில் ஏசி  எப்படி போடணும்னு தெரியவில்லையா?

மிஸ்டர் விசு.. நான் அந்த வண்டிய வீட்டில வச்சிட்டேன். இன்னும் ஒரு நாலு வருஷத்துக்கு இந்த ஹுண்டாய் தான் ஓட்டுவேன்.

அதுக்கு ஏன் மிஸ்டர் மத்தாய் இந்த புது வண்டி வாங்கினீர்கள்.

அது ஒரு "லாங் டெர்ம் பிளான்" மிஸ்டர் விசு. இந்த புது வண்டிய 4 வருஷம் வீட்டில் கவர் போட்டு புதுசா வைப்பேன். நாலு வருஷம் கழித்து இந்தியாவிற்கு ஒரேடியா போயிடலாம்ன்னு ஒரு பிளான். அப்ப நாலு வருஷ பழைய வண்டின்னா வரி கிடையாது. இந்த பிளான் ஓகே ஆச்சினா, எனக்கு புது டொயோடா.. வரி இல்லாமல்.அதுனால தான் இப்ப வாங்கினேன்.

மிஸ்டர் மத்தாய்.. "பைவ் இயர் பிளான்" என்று இந்தியாவில் கேள்வி பட்டு இருக்கேன். இது" நாலு வருஷ பிளான்"  புதுசா இருக்கு.. ஆல் தி பெஸ்ட்.

நான்கு வருடம் கழித்து...

என்ன மிஸ்டர் மத்தாய்..20 வருஷம் இங்க குப்பையை கொட்டிட்டு கடைசியா இந்தியா போக தயார் ஆகி விட்டீர்கள் போல இருக்கு..

எஸ் மிஸ்டர் விசு... இப்ப இந்த ஹுண்டாய் காரை விக்க வேண்டும், அதுக்குதான் நல்ல ஒரு ஆளை தேடிக்கொண்டு இருக்கேன்.

அந்த ஹுண்டாய் காரையா? ஆல் தி பெஸ்ட். சரி.. கார்ன்னு சொன்னவுடன் தான் நினைவிற்கு வருது. அந்த டோயோடாவ இந்தியாவிற்கு அனுப்பி விட்டீர்களா?... வரி எதுவும் இருக்காதே..

இல்ல மிஸ்டர் விசு.. இப்ப இங்க இருந்து "போர்டி"ற்கு தான் போக போகிறேன். அதோ எதிரில் நிக்கிதே அது தான் அந்த கார்.

மிஸ்டர் மத்தாய். நம்பவே முடியில்ல. நாலு வருஷ காரா அது? அப்படியே புதுசா இருக்கே..

மிஸ்டர் விசு, மொத்தமே 250 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்கும் விசு. 6  மாசத்திற்கு ஒருமுறை சர்வீஸ் எடுத்துன்னு போய் பண்ணிட்டு வந்து வீட்டில் வைச்சிடுவேன்.  இன்னும் ஒரு 15 நாட்களில் இந்தியாவில் இருக்கும். நான் இந்தியா போய் சேரும் போது இது அங்கே இருக்கும்.

செம்ம பிளான் மிஸ்டர் மத்தாய்.. செம பிளான்.. ஆல் தி பெஸ்ட்.

அன்று இரவு...

மிஸ்டர் விசு... கொஞ்சம் அவசரமா "போர்ட்" வரைக்கும் வர முடியுமா?

என்ன அவசரம் மிஸ்டர் மத்தாய்?
வாங்க சொல்லுறேன்.

ஒரு 10 நிமிடம் கழித்து..

என்ன ஆச்சி மிஸ்டர் மத்தாய்..?

மிஸ்டர் விசு, இங்கே இந்த வண்டிய ஏற்றுமதி பண்ண வர வழியில் எதிரில் வந்தவனோடு நேருக்கு நேர் மோதி வண்டி "டோட்டல் டேமேஜ்" ஆயிடிச்சி.

சரி, விடுங்க மிஸ்டர் மத்தாய், இன்சுரன்ஸ் எல்லாம் இருக்கு இல்ல..

இன்சுரன்ஸ் இருக்கு விசு, ஆனால் அதுல ஒரு பிரச்சனை.

அதுல என்ன பிரச்சனை மிஸ்டர் மத்தாய்?

இந்த வண்டி 4 வருஷம் பழைய வண்டின்னு கூட்டி கழிச்சு பார்த்து கையிலே அஞ்சோ பத்தோ தான் தருவேன்னு இன்சுரன்ஸ் காரன் சொல்லுறான்.

நீங்க இது மொத்தமே 250 கிலோ மீட்டர் தான் ஓடி இருக்குன்னு சொன்னீங்களா?

சொன்னேன், மிஸ்டர் விசு... அதுக்கு என்னை கேவலமா பாத்துட்டு " அது உன்னுடை முட்டாள் தனம்ன்னு" எனக்கே அறிவுரை சொல்லுறான்.

ரொம்ப சாரி மிஸ்டர்.மாத்தாய், புது கார் வாங்கி அத ஓட்ட கொடுத்து வைக்கலையே...ரொம்ப சாரி...



பின் குறிப்பு ;

இதில் எங்கே தவறு நடந்தது? அருமையானா பிளான் தான் "மிஸ்டர். குஞ்சு குஞ்சு" (மிஸ்டர் மத்தாய் உடைய சொந்த பெயர் குஞ்சு குஞ்சு, அந்த கதையை படிக்க இங்கே சொடுக்கவும்) பண்ணார்.  இது எப்படி மிஸ் ஆச்சி..
Man proposes God disposes.... ah ...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.. அவன் நாலாறு மாசாமாய் குயவன வேண்டி......

(4)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : 'நூலகம் - புத்தக கடைகள்"

 'நூலகம் - புத்தக கடைகள்"

அமெரிக்காவிற்கு வந்த புதிது. முழ நேர வேலை - அதற்க்கும் மேலே படிப்பு. மூச்சு விட நேரம் கிடையாது. அந்த நேரத்தில் சோகமாக சுத்தி கொண்டு இருந்த என்னை பார்த்து இந்திய நண்பன் ஒருவன் கேட்டார் :

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்;


கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் எனக்கு பிடித்தது என்ற தலைப்பில் சில இடுகைகளை எழுதி வருகிறேன்.

முதல் இடுகை : பள்ளிக்கூடம்

இரண்டாம் இடுகை : ஹார்ன்

மூன்றாம் இடுகை : போக்குவர போலிஸ்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

(6)பிள்ளை வளர்ப்பு: பெண்களிடம் எனக்கு பிடித்தது


பிள்ளை வளர்ப்பு

நான் இங்கே சொல்ல வருவது பெண்களின் பிள்ளை வளர்ப்பு திறமை பற்றி. பிள்ளை வளர்ப்பு என்றவுடன்  பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தம் தம் பிள்ளைகளை நன்றாக தானே வளர்ப்பார்கள், இது ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள்.  நான் சொல்ல வருவது... கணவனை பிள்ளையாக  இருக்கும் போது எப்படி வளர்க்க தவறி விட்டார்கள் என்பதை அழகாக சுட்டி காட்டுவார்கள்..

வெள்ளி, 25 ஜூலை, 2014

(5)உடனடி வைத்தியம் : பெண்களிடம் எனக்கு பிடித்தது

உடனடி வைத்தியம் 

கொஞ்சம் லேசா தலை வலி மாதிரி இருக்கு..எதுக்கும்  மருத்துவரிடம் போகலாம் என்று இருக்கேன்.

இதுக்கு எல்லாம் யாராவது மருத்துவரிடம் போவாங்கள? நிறைய தண்ணி குடிச்சிட்டு, நேரத்திற்கு போய் படுங்க. எல்லாம் சரியா ஆகிவிடும்,

அது எப்படி? தலைவலின்னு சொன்னவுடனே  சரியா ஏன் வந்துச்சி எப்படி வந்துச்சின்னு சொல்லிட்டியே? சூப்பர். உடனே நம்ம இன்சுரன்சை கன்சல் பண்ணு. காசாவது மிச்சம் ஆகும்.

கிண்டலா... தினமும் ராத்திரி 11 வரை தமிழில் ஏதாவது டைப் பண்ணினே இருங்க. அப்புறம் காலையில் எழுந்து தலைவலின்னு சொல்லுங்க.. நேரத்திற்கு படுத்து எழுந்தா பாதி நோய் தான போகும்.

சரிங்க டாக்டர்.

இருந்தாலும்... மருத்துவரிடம் சென்று கொஞ்சம் கேட்டு பாக்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.



ரீப்போர்ட்ஸ்  எல்லாம் நார்மலா டாக்டர்?

எஸ், விசு. தே ஆர் நார்மல்.

பின்ன ஏன் டாக்டர், காலையில் எழுந்தவுடன் தலை வலிக்குது.

நீங்க நேரத்திற்கு தூங்க போகணும் விசு.. அடிகடி நிறைய தண்ணீரும் குடிங்க. எல்லாம் சரிஆகிவிடும். முன்னாலே போய் உங்க பீஸ் கட்டிட்டு ரசீது வாங்கிகோங்க.

சற்று நேரம் கழித்து வீட்டில்;

ஏங்க, டாகடர் ஆபீஸ் போனீங்களா? பாங்க்ல காசு எடுத்து இருக்காங்கோ.

ஆமா, சும்மா எதுக்கும், ஏன் தலைவலின்னு கேட்டுக்கலாம்னு போனேன் .

என்ன சொன்னார்?

அடிக்கடி நெஞ்செலும்பு சூப்பும், காலையில் குழி பணியாரமும் கண்டிப்பா சாப்பிடுன்னு சொன்னார்.

கிண்டல் பண்ணாதீங்கோ, நான் கூப்பிட்டு கேட்ப்பேன்.

 "நேரத்திற்கு தூங்க போகணும் . அடிகடி நிறைய தண்ணீரும் குடிக்கனும்"ன்னு சொன்னார்.

அததான் நான் காலையிலேயே சொன்னேனே, பின்ன ஏன் அவர்கிட்ட போய் காசை வீசிட்டு வந்தீங்க. "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..."

ஏம்மா, ரொம்ப நாளா உன்னிடம் ஒரு கேள்வி கேட்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. கேக்கட்டா?

முட்டாள் தனமான கேள்விக்கு முட்டாள்தனமான பதில் தான் வரும், கேளுங்கோ..

இந்த நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்லுறிங்களே... அதுதான் நல்ல மாடு ஆச்சே... அதுக்கு ஏன் ஒரு சூடு கூட போடணும்?

கூழுக்கே வலி இல்லையாம்..."கூகிள் மாப்" கேட்டுச்சாம், போய் வேலையை பாருங்க...

(3)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : "போக்குவர போலீஸ்'

போக்குவர  போலீஸ்..

 என்னாது? உங்களுக்கு பிடித்த விஷயத்தில் போக்குவர காவலுமா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆம். உண்மையைதான் சொல்லுகிறேன், இந்நாட்டை சேர்ந்த  "போக்குவர காவல்" துறை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.

இந்நாட்டில் நான் வருடக்கணக்கில் வண்டி ஒட்டி வருகிறேன். இந்த பல வருடங்களில் நான் மூன்று முறை காவல் துறையினால் நிருத்தபட்டுளேன்.

மூன்று முறையும், என்னை நிறுத்திய  போலீஸ், "ஸ்பீக்கரில்", வண்டியை அணைத்து விட்டு, கைகளை "ஸ்டீரிங்" மேல் வையுங்கள் என்றார். பணிந்தேன். அருகில் வந்து, சன்னல் கண்ணாடியை கீழிறக்க சொன்னார். செய்தேன்.

"நான் இப்போது உங்களை ஏன் நிறுத்தினேன் என்று தெரியுமா" (மூன்று முறையும் அதே கேள்வி) என்று கேட்டார்.

முதல் இரு முறை,. மன்னிக்கவேண்டும், நான் அதிக அளவு வேகத்தில் வந்து விட்டேன் என்று நினைக்றேன் என்றேன்.

முதல் முறை, என்னுடைய தகவலை பெற்று கொண்டு, தன வாகனத்திற்கு சென்று, அங்கே இருந்த கணினியில் என்னை பற்றி விசாரித்தார், சில நிமிடங்கள் கழித்து  வந்தார். உன்னுடைய "வண்டி ஓட்டும் வரலாறு" மிகவும்  சுத்தமாக உள்ளது. இந்த  முறை உன்னை மன்னிக்கிறேன், தயவு செய்து உன் நன்மைக்கும் மற்றவர்களின் நன்மைக்கும் சற்று ஜாக்கிரதையாக வண்டியை ஒட்டவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இரண்டாம் முறை நிறுத்திய வேறொரு அதிகாரி, அதே கேள்வியை கேட்டு, அதே வரலாறை, பரிசீலித்து விட்டு என்னிடம் வந்தார். என்னிடம் வந்து, ஏன் இவ்வளவு வேகமாக போகிறாய் என்றார்? அசடு வழிந்து 'மன்னிக்க வேண்டும் - அதிகாரி' என்றேன். அது சரி, இந்த இடத்தில அதிகபட்சம் எவ்வளவு வேகமாய் போகவேண்டும் என்று தெரியுமா என்றார். மீண்டு அசடு வழிந்தேன். எனக்கு ஓர் சீட்டு கொடுத்து விட்டு, நீதிமன்றத்தில் போய் இதை சரி பண்ணி கொள் என்றார்.

மூன்றாம் முறை, நான் ஒரு இடத்தில, "நோ ரைட் ஆன் ரெட்" என்ற இடத்தில் ரைட் எடுத்துவிட்டேன். அதற்கான சீட்டு, அபராத தொகை.,
இந்த மூன்று முறையுமே, நான் செய்த தவறுக்காக என்னை நிறுத்தி கண்டித்து - மன்னித்து - தண்டித்து அனுப்பினார்கள்.


இங்கே காவல் துறை அதிகாரிகள் தவறுகள் நடக்க கூடாது என்று வருமுன் காப்போம் என்ற மொழிகேற்றாற்போல் செயல் படுவார்கள். நானும் சரி, நான் அறிந்தவர்களும் சரி, இதுவரையில் ஒருவராவது "போக்குவரத்து காவல் துறையினருக்கு' லஞ்சம் கொடுத்ததாக கேள்வி பட்டதே இல்லை.

"செய்த தவறிற்கு தண்டனை"  அந்த அபராதம் கூட நேராக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும்.

இதுவும் மிகவும் சின்ன காரியமாக தெரியலாம். ஆனால், எனக்கு பிடித்த சின்ன காரியங்களில் ஒன்று.

"மவம்பர் மீசை'

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் இங்கே  "மொவெம்பெர் மீசை"  என்ற ஒரு காரியம் நடைபெறும் (இந்தியாவில் இந்த பழக்கம் உண்டா என்று தெரியவில்லை).  இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய் விழிப்புணர்வுக்காக நடத்த படும். இந்த நாட்களில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் முகத்தில் மீசை வைத்து கொள்வார்கள். தவறாக நினைக்க வேண்டாம். மீசை உள்ள ஆண்கள் அந்த பழக்கத்தை தொடர்வார்கள். மீசை இல்லாத ஆண்கள் (என் போல் திருமணம் ஆன பின் மீசை எதற்கு என்று நினைபவர்கள்) மற்றும் பெண்கள் ஒரு ஒட்டு மீசை வைத்துகொள்வார்கள். இது "நவம்பர் மாதம் மீசை " என்பதால் " Movember  Mustache  ' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் .

(4)உள்ளதை உள்ளதென்று ;பெண்களிடம் எனக்கு பிடித்தது

உள்ளதை உள்ளதென்று சொல்வார்கள்.

பெண்களுக்கு மட்டும் "சர்வதேச  பெண்கள் தினம்" என்று ஒன்று வைக்கப்பட்டு மார்ச் 8 அன்று நீங்கள் எல்லாம் கொண்டாடுகிறீர்களே,நாங்கள் ஆண்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களுக்கு ஏன் இவ்வாறாக ஒரு நாள் "சர்வதேச  ஆண்கள் தினம்" என்று வைக்கப்படவில்லை?


வாய் கூசாமல் பொய் சொல்வதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே.  ஆண்களுக்கு  "சர்வதேச ஆண்கள் தினம்" என்று பல்லாயிரம் வருடங்களாக கொண்டாடுகிறார்களே அது உங்களுக்கு    மட்டும் எப்படி தெரியாமல் போனது?


என்னது? "சர்வதேச ஆண்கள் தினமா"? நான் கேள்வி பட்டதே இல்லையே? அதை எந்த நாளில் கொண்டாடுகிறார்கள்?





அதுவா? ஏப்ரல் 1 அன்று.

வியாழன், 24 ஜூலை, 2014

(3)தரம்பிரித்தல் : பெண்களிடம் எனக்கு பிடித்தது



25-30 வருடமாக நாம் பழகி வரும் நண்பர்கள், உறவினர்களை, திருமணம் ஆகி மூன்றே நாட்களில் தரம் பிரித்து விடுவார்கள். இத்தனை  வருடமாக இவர்களை பற்றிய  நமக்கு தெரியாத விசயங்களை மூன்றே நாட்களில் "சட்டு புட்டு" என்று புட்டு புட்டு வைப்பார்கள்.





பின் குறிப்பு;
இவர்களின் இந்த பழக்கம் ஆண்களுக்கு பொதுவாகவே எரிச்சலை மூட்டும்.

இதில் மற்றொரு கசப்பான உண்மை என்னவென்றால், அவர்கள் கூறியது எல்லாம், சரியாகவே இருக்கும்.

"இவ்வளவு நாட்களாக நமக்கு தெரியவில்லையே" என்று ஆண்களுக்கு ஓர் குற்ற சுபாவம் வந்து விடும்.

(2)எதிர்பார்ப்பார்கள். : பெண்களிடம் எனக்கு பிடித்தது



அந்த ரூமில் போய் அந்த பெட்டியில் இருந்து அங்கே இருக்கும் அதை அப்படியே எடுத்துன்னு வா என்று சொல்வார்கள். அதை நாம் சரியாக எடுத்து கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.




பின் குறிப்பு:

இந்த விஷயத்தில் நாம் எப்போதும் தடுமாறி தவறாக தான் செய்வோம். "சமையல் அறையில் போய் அங்குள்ள சர்க்கரை டப்பாவை எடுத்து கொண்டு வா" என்று விளக்கி சொல்லும்போதே தவறாக உப்பை எடுத்து வரும் ஜென்மங்கள் தானே ஆண்கள்.  ஆதலால், இவ்வாறாக மனைவி சொல்லும்போது, கோபபடாமல், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அவர்களுக்கு வேண்டியதை என்னவென்று கேட்டு எடுத்து வரவும்.

இதில் மற்றொரு விஷயம். அவர்களை பரிசோதிக்க நானும் ஒரு முறை "அங்கே சென்று, அங்கேயுள்ள அதை எடுத்து கொண்டு வா" என்று சொன்னேன். அவர்கள் ஒரு மறு கேள்வியும் கேட்காமல்  நான் எதிர்பார்த்ததை சரியாக எடுத்து வந்து கொடுத்து விட்டு... "இது தானே.. இதற்க்கு ஏன் அவ்வளவு பெரிய விளக்கம்" என்றார்கள். 

(1)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : பள்ளிக்கூடம்


இந்நாட்டில் (அமெரிக்காவில்) எனக்கு பிடித்த சின்ன சின்ன விஷயம் -1

இன்றுமுதல் எனக்கு இங்கே பிடித்த விஷயத்தை எண்ணிக்கையிட்டு சொல்ல போகிறேன். இவைகள் மற்றவர்கள் கண்ணுக்கு மிகவும் சிரியவைகளாக  தெரியலாம். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தவை.

1. பிள்ளைகளின் பள்ளிக்கூடம்: 

எனக்கு தெரிந்தவரை, என் பிள்ளைகளும் சரி, என் உறவினர் மற்றும் நண்பர்கள் பிள்ளைகளும் சரி, அவரவர் இல்லத்தின் அருகே உள்ள அரசு பள்ளிக்கு தான் செல்கின்றார்கள்.  "இந்த இந்த" விலாசத்திற்கு "இந்த இந்த" பள்ளி என்று விதி முறைகள் வரையரைக்க பட்டு உள்ளது. சில வேளைகளில் பெற்றோர்களின் அலுவலக விலாசம் மற்றும் வேறு சில காரணங்களினால் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு சேர்க்க வாய்   ப்புகள் உண்டு. சில பெற்றோர்கள் (மொத்த மக்கள் தொகையில் 5% மட்டும்) தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகூடத்திற்கு அனுப்புவார்கள்.

இது என்ன பெரிய விஷயாமா என்று கேட்கலாம்? ஆம் பெரிய விஷயம்தான்.

முதலாவதாக,  பிள்ளைகள் அவர் அவர்  இல்லத்தின் அருகே உள்ள பள்ளிக்கு செல்வதினால், பள்ளிகூட போக்குவர நேரமே மொத்தம் 5-10 நிமிடம் தான் ஆகும். நிறைய பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுடன் நடந்து வருவார்கள்.  சென்ற வருடம் நான் இந்தியா வந்த இருந்தபோது, என் உறவினர் சிலருடைய பிள்ளைகள்  தம் பள்ளிக்கோ - கல்லூரிக்கோ சென்று வர ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 2 மணி நேரம் போல் ஆகிறது என்று கேள்வி பட்டு நொந்து போய்விட்டேன்.
என் மூத்த மகளின் பள்ளிகூட (Golf) அணி! 
(இதில் உங்கள் மகள் எது என்று கேட்டு "லொள்ளு" பண்ண கூடாது.)


அரசு பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதில் ஏன் இங்கே தயக்கம் காட்டுவதில்லை என்று சற்று நினைத்து பார்த்தேன்.  என் அறிவிற்கு எட்டிய பதில்.

இந்தியாவிலும் சரி, மேலும் சில வளரும் நாடுகளிலும் சரி அரசு பள்ளியை "இலவச பள்ளி" என்று ஏளனமாக பார்க்கின்றார்கள்.   அவ்வாறு பார்ப்பதால் அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவது எதோ தங்கள் குடும்பத்திற்கு அவமானம் போல் கருதுகின்றார்கள். ஆனால், இங்கே, அரசு பள்ளி நம்முடைய "வரி பணத்தில்" தான் நடத்த படுகின்றது என்ற எண்ணம் இருப்பதினால் அந்த பிரச்னை இல்லை.

சில நேரங்களில் அரசு சார்பான வேலைகள் (நூலகம் கட்டுதல், தெரு அமைத்தல் போன்றவை) நடக்கும் இடத்தில உங்கள் "வரி பணம் வேலை செய்கின்றது" என்ற பலகை மாட்ட பட்டு இருக்கும். அதை பார்க்கையில் மனதில் ஒரு நிம்மதி. நாம் கட்டும் வரி நமக்காகத்தான் செலவு செய்ய படுகின்றது என்று. அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மக்கள் என்று "இலவசம்" என்று பார்க்காமல் " நமது வரி பணத்தினால் வரும் உரிமை" என்று பார்க்கின்றோமோ, அன்று தான் அந்த நாட்டுக்கு விடிவு காலம்.



இந்த காரியங்கள் மட்டும் இல்லாமல் மற்றொரு முக்கியமான காரியம். பிள்ளைகளின் மத்தியில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை இல்லை.

உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம் :

நான் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். எனக்கு அதிகாரிகள் உண்டு. எனக்கு கீழே வேலை செய்பவர்களும் உண்டு. எங்கள் அனைவருடைய பிள்ளைகளும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று அருகருகே அமர்ந்து தான் படித்து வருகிறார்கள். பெற்றோர்களின் படிப்பிலும், வருமானத்திலும், வாழ்க்கை நடையிலும் வித்தியாசங்கள் இருந்தாலும், பிள்ளைகள் ஒன்றாக ஒரே பள்ளியில் படிப்பது என்னை பொறுத்தவரை ஒரு நல்ல காரியம் என்பேன்.

பின் குறிப்பு: 

இந்த தொடர் இங்கே எனக்கு என்ன என்ன படிக்கும் என்பதற்கே. தயவு செய்து யாரும் என்னை தாய்நாட்டை பற்றி தவறாக எழு துகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் தாய் நாட்டை பற்றி தவறாக நினைப்பவன் என்றால் இங்கே உங்களிடம் "தமிழில்" எழுதி இருக்க வாய்ப்பே இல்லை. நன்றி.

புதன், 23 ஜூலை, 2014

(1)மன்னிக்கும் பெருந்தன்மை : பெண்களிடம் எனக்கு பிடித்தது



தான் செய்த தவறுக்கும், மிகவும் பெரிய மனது பண்ணி மற்றவர்களை மன்னிக்கும் "பெரிய தங்கமான" மனதை கொண்டவர்கள் தான் பெண்கள்.




இந்த அற்புதமான குணம், ஆண்களில் யாருக்காவது உண்டா? ஆண்கள் ஆகிய நாம், இதுவரை நம் செய்த தவறுகளுக்கு மற்றவர்களை மன்னித்து இருப்போமா? நினைத்து பார்த்து செயல் படுங்கள் நண்பர்களே.


"நான் ஒரு குமாஸ்தா"



இன்று காலை என்னுடன் பணிபுரியும் மெக்சிக்கன் நண்பன் பெர்னாண்டோவை கடைவீதியில் சந்தித்தேன். அவன் என்னை பார்த்தவுடன் ஒரு புன்சிரிப்புடன் "குமாஸ்தா விசு" என்றான். நானும் பதிலுக்கு "ஆர்கிடெக்ட் பெர்னாண்டோ" என்று கூறிவிட்டு கூடவே ஒரு சிரிப்பையும் அள்ளி வீசிவிட்டு என் வழியில் சென்றேன். 


என் மனதிலே ஒரு சின்ன சந்தோஷம். அடடே.. "திரை கடல் ஓடி திரவியம் தேடு" என்று இங்கு வந்த போதிலும் "யாம் அறிந்த மொழிகளிலே" என்ற பாரதியாரின் பாடல்கள் நினைவிற்கு வந்தது.  மெக்சிக்கன் பேசும் ஸ்பானிஷ் மொழியிலும் கணக்குபிள்ளைக்கு குமஸ்தாவா? தமிழ் என்ன ஒரு அழகு மொழி என்று யோசித்து "நான் ஒரு குமாஸ்தா" என்ற அந்த கால பாடல் ஒன்றை முணுமுணுத்து கொண்டே இல்லத்தை அடைந்தேன்.

முயல் பிடிக்கும் நாயை மூஞ்சை பார்த்தால் தெரியும் அல்லவா? என் மூத்த மகள் என்னை பார்த்து, உங்கள் முகத்தில் ஒரு இனம் புரியாத சந்தோசம் தெரிகிறதே.. திருமணத்திற்கு முன்பான நாட்களை யோசித்து கொண்டு இருகின்றீர்களா என்றாள்? உடனே முகத்தை சற்று சோகமாக மாற்றி கொண்டு, இல்லை, இல்லை, அப்படி எது இல்லை என்று அமர்ந்தேன்.

சிறிது நேரம் களித்து என் மூத்த மகள் தன்னுடைய ஸ்பானிஷ் பாடத்தை படித்து கொண்டு இருந்தாள். அவளிடம் சென்று காலையில் நடந்த விஷயத்தை கூறி குமாஸ்தா என்றால் ஸ்பானிஷ் மொழியிலேயும் கணக்கு பிள்ளை என்று அர்த்தமா என்று கேட்டதற்கு அவள் சிரிக்க ஆரம்பித்தாள். 


பிறகுதான் தெரிந்தது காலையில் அந்த மெக்சிக்கன் நண்பன் கூறியது " cómo estás"? ஸ்பானிஷ் மொழியில் அதற்கு நீ எப்படி இருக்கிறாய்? How are you? என்று அர்த்தமாம்.

பின் குறிப்பு :
தயவு செய்து யாரும் "குமாஸ்தா" என்ற வார்த்தையே தமிழ் வார்த்தை இல்லை என்று என் வயிற்றில் நெருப்பை அள்ளி போடாதீர்கள். 

"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும்


தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.


நேற்று என் வலைபதிவில் நண்பர் திண்டுகல் தனபாலனின் கருத்து ஒன்று இருந்தது. நான் இட்ட  "கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி" என்ற இடுகையை படித்து வாழ்த்துக்கள் கூறி இருந்தார். அவருக்கு ஒரு பதில் கருத்து அனுப்பிவிட்டு, நண்பரை பற்றி மேலும் அறிந்து "கொள்ள(ல்ல)லாம்" என்று அவரின் வலைபதிர்வுக்கு சென்று சற்று மேய்ந்தேன்.

 அருமையான பல இடுகைகள்.அடுத்த இரண்டு மாதத்திற்கு நான் பிஸி. இவ்வளவு அழகாக எழுதி இருக்கிறாரே, இவர் யார் என்று அறிய அவரின் சுய விவரம் காண சென்ற எனக்கு அதிர்ச்சி. ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? இவர் மட்டும் என்ன விதி விலக்கா?

சற்று பொறுங்கள். ஒவ்வொன்றாக பாப்போம். முதலில் இவர் பெயர். பெயருடனே ஊரை சேர்த்துள்ளார். நல்ல பண்பு, தவறே இல்லை. அதை தொடர்ந்து ஒரு தத்துவம் "தீதும் நன்றும் பிறர் தர வரா, வழிகளை ஏற்றுகொள், இதுவும் கடந்து போகும்" அட்டகாசமான தத்துவம், நானும் பின்பற்றுவேன், தவறே இல்லை.

தொடர்ந்து இவருக்கு பிடித்த சில விடயங்களையும் எழுதியுள்ளார்? பிறகு எங்கே சறுக்கினார் என்று கேட்பீர்கள்? சொல்லுகிறேன். 
ஆர்வங்கள் என்ற இடத்தில   "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு".". என்று எழுதியுள்ளார். சருகி விட்டாரே ஐயா சருகி விட்டாரே. இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். "விளக்குமாறை" யாரும் எடுக்கும் முன் என்னிலையை "விளக்குமாறு" ஒரு நிமிடம்.

நான் ஒரு கணக்கு பிள்ளை. எந்த ஒரு விஷயம் என்னிடம் வந்தாலும் நான் கூட்டி பெருக்கி பார்ப்பவன். இந்த "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு"." என்ற சொற்தொடரில் சொல் குற்றம் இல்லை ஆனாலும் பொருள் குற்றம் உண்டு. இங்கே இவர் சிவனும் இல்லை நான் ஒன்றும் நக்கீரனும் இல்லை, சொல்ல போனால் நான் தருமியை போல ஒருவன். தருமி என்றாலும், நெற்றி கண் இல்லாவிடினும், குற்றத்தை சொல்ல வேண்டும் அல்லவா. 

ஏற்கனவே சொல்லியதை போல இங்கே சொல் குற்றம் இல்லை. நான்குமே அருமையான தமிழ் சொற்கள். இதை சொற்களை தனியாக சொன்னால், அது ஒரு பூ, கோர்த்து சொன்னால் அதுவே மாலை. அருமையான வாக்கியம். 

பொருள் குற்றம் எப்படி? இவ்வாக்கியத்தை கணக்கின் அடிப்படையில் பார்த்தல் இதற்கான விடை தவறு.   "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு". விளக்குகிறேன் கேளுங்கள். "கற்றது கைமண் அளவு" அது சரி, "கல்லாதது உலகளவு" இங்கேதான் அந்த பொருள் குற்றம். கல்லாதது எப்படி உலகளவு ஆகும்? நாம் தான் ஏற்கனவே கைமண் அளவு கற்று விட்டோமே? அதனால் இந்த ஆர்வத்தை நண்பர் தனபால் உடனடியாக  "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு மைனஸ் கைமண்ணளவு" என்று மாற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதை படிக்க நீங்கள் வேஸ்ட் பண்ணிய இந்த 5 நிமிடங்கள் "should not come in my maths"? அதாவது என் கணக்கில் வர கூடாது என்று கேட்டு கொள்(ல்)கிறேன்.

செவ்வாய், 22 ஜூலை, 2014

கோபத்தில் மனைவி கத்தியை கையில் எடுத்தால்....


கணவன்மார்களே  ("ஜாக்கிரதை" - வெண்ணிறாடை மூர்த்தி ஸ்டைல்). எப்போதுமே வீட்டில் பேச்சு- வாக்குவாதம் என்று   வரும் போது உடனடியாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்து விடுவது புத்திசாலித்தனம். இதனால் பல நன்மைகள் உண்டு.

"கொத்தும் கிளி"....அன்றும் இன்றும்...


அன்று:

கொத்தும் கிளி இங்கிருக்க, கோவை பழம் அங்கிருக்க, தத்தி வரும் வேளையிலே நீ போய் தூது சொல்ல மாட்டாயா?



இன்று:

கொத்துக்கறி அங்கிருக்க, கோவை தம்பி இங்கிருக்க, தட்டு வரும் வேளையிலே நீ போய் சூடு பண்ண மாட்டாயா?

அமெரிக்காவில் CPA ( இந்திய CAக்கு சமம்) படிப்பது எப்படி?



ஏன் விசு? உன் இடுகையில் எப்ப பாரு சொந்த கதை சோக கதையாகவே போடுறியே? நாலு பேருக்கு உதவற மாதிரி ஒரு நல்ல காரியம் ஒன்னு போடு என்று நண்பன் "தண்டபாணி" சொன்னதால் இட்ட இடுகை இது.

இந்த இடுகையில் உங்களுக்கு நன்மை கிடைத்தால் அதற்க்கு சொந்தகாரன் "தண்டமே" , நான் இல்லை.

இந்தியர்களும் சரி, மற்ற சர்வதேச நாட்டு மாணவர்களும் சரி, அமெரிக்காவில்  படிப்பது எப்படி?

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும் இந்த படிப்புக்கான விதிமுறைகளை தனக்கு என்று ஒரு அமைப்பை வைத்து நடத்தி கொண்டு வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்தின் விதிமுறைகளும் சற்று வித்தியாசமாக இருக்கும்.


ஆனால், இந்த தேர்வு என்பது பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். இந்த படிப்பை முடிக்க ஒருவர் நான்கு தேர்வுகளை சந்திக்க வேண்டும். இந்த தேர்வுகளை பொதுவாக அமெரிக்காவில்தான் எழுத முடியும். சில வருடங்களாக துபாய், பிரேசில் மற்றும் சில நாடுகளில் எழுதலாம் என்று கேள்வி பட்டேன், அனால் அதற்கு அந்நாட்டின் குடியுரிமை அவசியம் என்று யாரோ சொன்னதாக நினைவு.

சரி இப்போது எப்படி இந்த தேர்விற்கு தகுதி ஆகலாம் என்று பார்ப்போம்.

நான் வாழும் கலிபோர்னியா மாகணத்தில் ஒருவர் இந்திய முதுகலை (M.COM) பட்டதாரியாக இருந்தால் அனுமதிக்க படுவார். இளநிலை பட்டதாரிகளும் (B.COM) சில வேலை அனுபவத்துடன் தகுதி ஆகலாம்.

TO LEARN MORE ABOUT TO GET ELIGIBLE FOR STATE OF CALIFORNIA, CLICK HERE..



இன்னும் சில மாநிலங்களில் இந்திய (CA) நேராக இந்த பரிட்சையை எழுதலாம்.

இங்கே இந்த பரிட்சையை சந்திக்கும் முன் எந்த ஒரு தணிக்கையாலரிடமும் வருட கணக்கில் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேர்ச்சி பெற்ற பின், நம் செய்ய போகும் வேலையே, போதும்.

உங்களில் யாருக்காவது இந்த படிப்பை பற்றி மேலும் அறிய விருப்பம் இருந்தால், இங்கே பின்னோட்டத்தில் உங்கள் மின் அஞ்சலை தரவும். நான் உங்களுக்கு என்னால் முடிந்ததை செய்வேன்.

பின் குறிப்பு: இப்ப சந்தோசமா , தண்டபாணி?





திங்கள், 21 ஜூலை, 2014

சின்ன மாமியே ..... உன் சின்ன மகள் எங்கே.?



"சின்ன மாமியே ..... உன் சின்ன மகள் எங்கே."?   இந்த பாடலை ரசிக்காத தமிழ் இசை பிரியர்கள் இருக்க முடியாது. இந்த பாடல் மட்டும் இல்லாமால் மற்றும் பல பாப்பிசை பாடல்களை எழுதி இசையமைத்து கொடுத்தவர், எனக்கு மிகவும் பிரியமான அண்ணன் "நித்தி கனகரத்தினம்". இவருக்கு பாப்பிசை பிதா என்ற பட்டமும் உண்டு.

அன்புள்ள வருமான துறை அதிகாரிகளுக்கு....






அன்புள்ள வருமான துறை அதிகாரிகளுக்கு,

சில வருடங்களுக்கு முன் வருமான வரி கட்டும் போது தவறுதலாக குறைத்து கட்டிவிட்டேன். அந்த காரியத்தை செய்ததில் இருந்து உங்களை ஏமாற்றி விட்டோமே என்ற எண்ணத்தில் என் தூக்கத்தை இழந்தேன். இந்த கடிதத்துடன் ரூபாய் 6,036.50 காசோலையாக அனுப்பிவைக்கிறேன். தயவு செய்து ஏற்று கொள்ளவும்.

இதற்கு பிறகும் தூக்கம் வரவில்லை என்றால் மீதி தொகையையும் அனுப்பி வைக்கிறேன்.


பின் குறிப்பு:

என்னுடைய இந்த மடலுக்கு உங்களில் யாராவது ஒருவர் வருமான துறை சார்பாக பதில் எழுதுங்களேன். 

ஞாயிறு, 20 ஜூலை, 2014

முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும்...




முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும் உள்ள ஒற்றுமையும் வித்தியாசமும்...

ஒற்றுமை..

இரண்டு பேருக்குமே ஒரு டம்பளர் "பால்" தான்.

வித்தியாசம்.

முதலிரவு கணவனுக்கு "கொடுப்பாங்க". பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தவனுக்கு "ஊத்துவாங்க"...



"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை."

ரிங்.. ரிங்...தொலைபேசி ரிங்கியது....

விசு பேசுறேன்..

வாத்தியாரே.. தண்டம், ஐ  மீன் தண்டபாணி பேசுறேன்.

சொல்லு பாணி, பொதுவா சனி தான கூப்புடுவ  , இன்னைக்கு என்ன அவசரம்?

வாத்தியாரே, இப்பதான் கதிர் வீட்டில இருந்து வரன், உன்னையும் எதிர்பார்த்தேன், நீ எங்க காணோம்?

சனி, 19 ஜூலை, 2014

கொடியிலே மல்லியபூ .....அடி ராசாத்தி

ஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் "வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்"என்றார்கள்.




அவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டி கொண்டு இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன்.  இரண்டு நிமிடத்தில் வீட்டு அழைப்பு மணி அலறியது. கதவை திறந்து வெளியே பார்த்தால் ஒரு 13-14 வயது பெண், தலையில் மல்லிகை பூ கூடையோடு. நான் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவளே ஆரம்பித்தாள். இப்ப போனாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும், உன்னை 4 முழம் வாங்கி வீட்டிலே கைக்குட்டை ஈரமாக்கி அதிலே சுத்தி வைக்க சொன்னாங்க. முழம் 2 ருபீஸ் என்று சொல்லி என்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொண்டாள். மீண்டும் ஒருமுறை மறக்காமல் ஈர துணில சுத்தி வை என்று சொல்லிவிட்டு போனாள்.



நானும் அவள் சொன்ன மாதிரியே, உள்ளே சென்று ஒரு துணியை எடுத்து ஈரமாக்கி அந்த பூவை சுத்தி வைத்து மீண்டும் இளையராவிடம் செல்லும் போது ஒலித்தது "கொடியிலே மல்லியப்பூ". அருமையான அந்த பாடலை ரசித்து விட்டு, மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்கலாம் என்று கிளம்பும் போது வந்தார்கள் என் அருமை அம்மாவும், அக்காவும். நான் தயாராக வெளியே கிளம்ப இருப்பதை பார்த்ததும் எங்கே கிளம்பி விட்டாய் என்றார்கள், நானும் நண்பர்களிடம் என்று சொன்னேன்.

அப்போது தான் என் அம்மா கேட்டார்கள். அது சரி, மல்லிப்பூ யாருக்கு வாங்கி கொண்டு போகிறாய் என்று. நான் சிரித்து விட்டு நான் யாருக்கும் வாங்கி போகவில்லை, உங்களுக்கும் அக்காவிற்கும் வேண்டும் என்று தான் வாங்கி வைத்தேன் என்றேன். இருவரும் சத்தமாக சிரித்து விட்டு, இது எத்தனை நாளாக என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவர்களிடம் நடந்த விஷயத்தை விவரித்து சொன்னேன். இருவரும் ஒன்றாக சேர்ந்து, இந்த கதையை எங்களிடம் சொல்வதற்கு பதிலாக இந்த பூவில் பாதியாக பிரித்து எங்கள் காதில் சுத்திவிடு என்றார்கள். நான்எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என் கதையை நம்ப வில்லை.அவர்களுக்கு தேவையானது எல்லாம், யார் அந்த பெண்? இவன் மல்லிப்பூ வாங்கி கொடுக்கும் வரை அவ்வளவு முக்கியமானவள்?  கடைசியில் எப்படியோ அவர்களை நம்பவைத்தவுடன் அவர்கள் என்னை, உனக்கு எல்லாம் யாரு, டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று.

சிறிது நேரம் கழித்து தான் எனக்கு புரிந்தது, அந்த பூக்கார பெண், எனக்கு ஆட்டையை போட்டுவிட்டாள் என்று. வணிகவியல், மார்கெடிங், அட்வர்டைசிங் ஆகிய அனைத்தையும் அத்துவேராக படித்து மட்டும் அல்லாமல் அடுத்தவர்களுக்கும் படித்து கொடுத்து கொண்டு இருக்கும் எனக்கே முழம் போட்டு விட்டாளே ஒரு சிறு பெண் என்று அவளை மனதிற்குள் பாராட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன்.

வெளியே வந்தவுடன் என் பக்கத்து வீட்டில் பஞ்சாயத்து சத்தம் கேட்டது. என் நண்பன் சேகரின் அம்மா அவனை சத்தம் போட்டு திட்டி கொண்டுஇருந்தார்கள். நமக்கு எனத்தான் நடந்தாலும் அடுத்தவன் திட்டு வாங்கினால் அதுவும் ஒரு சுகமே என்று அங்கே சிறிது நேரம் நின்றேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து சேகர் வெளியே வந்தான். அவன் முகமோ பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) மாறி இருந்தது. மெதுவாக அவனை அருகே அழைத்து என்ன நடந்தது என்றேன்.

ஒன்றும் இல்லை, ஒரு சிறு தவறு நடந்து விட்டது, அதுக்கு என் அம்மா நீ எல்லாம் கல்லூரி படிப்பு முடித்தவனா இல்லை "கல்லூலி மங்கனா" என்று சத்தம் போடுகிறார்கள் என்றான். சரி, விஷயத்தை சொல் என்றேன். சிறிது நேரம் முன் என் அம்மா வெளியே சென்று இருந்தார்கள் என்று அவன் சொன்னவுடன், அடடே, இதுவும் நம் கதை போல் தான் ஆரம்பிக்கிறதே என்று மனதிற்குள் நினைத்து, மேலே சொல் என்றேன்.

அம்மா வெளியே சென்ற இரண்டே நிமிடத்தில் எங்கள் வீடு அழைப்பு மணி அலறியது. நான் திறந்து பார்த்தால் ஒரு பூக்கார பெண் தலையில் மல்லிகை பூ கூடையோடு நின்றுகொண்டு இருந்தாள். அவள் என்னிடம் இப்ப போறாங்களே அந்த அம்மா 4 முழம் பூ வாங்கினாங்கோ, உன்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொள் என்றார்கள். சேகர் இதை சொன்னதும் நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டு, இல்லையே, நாலு முழம் வாங்கி வை என்றுதானே  சொல்லி இருப்பாள் என்றவுடன், அவன் நானே குழம்பி போய் இருக்கின்றேன், இதில் நீ வேறு என்று என்னை சத்தம் போட்டான்.

நான் நாக்கை கடித்து கொண்டு, கொங்கு தமிழ் பாணியில் "பொறவு" (நன்றி சண்முக வடிவு, அவர்களே) என்றேன். என் அம்மா திரும்பி வந்தவுடன், நான் அவர்களிடம் பூ வேண்டும் என்றால் நீங்களே காசு கொடுத்து வாங்குவது தானே என்னை ஏன் காசு கொடுக்க சொன்னீர்கள், என்னிடம் பணம் இல்லாமால் இருந்து இருந்தால் என் மானம் போய் இருக்குமே என்றேன். அதற்கு அம்மா, நான் யாரிடமும் பூ வாங்கவில்லை, உன்னை காசும் கொடுக்க சொல்லவில்லை என்றதுமட்டும் அல்லாமல் எனக்கு யார் டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் என்றான்.


எனக்கோ மனதிற்குள் ஒரு சிரிப்பு, நானாவது பரவாயில்லை, 8 ருபீஸ் கொடுத்து 4 முழம் பூவாவது வாங்கினேன், இவன் என்னைவிட மோசம் என்று எனக்கே ஒரு ஆறுதல் சொல்லி அவனிடம், இனிமேல் இப்படி முட்டாளாக இருக்காதே, கொஞ்சம் ஸ்மார்டாக இரு என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.

இரவு 8:30 மணி போல் வீடு திரும்பி சாப்படை முடித்து விட்டு மீண்டும் இளையராஜாவை அணுகினால், மாலை பாதியில் நின்ற "கொடியிலே மல்லியப்பூ" பாட்டு விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தது. அதை கேட்டவுடன் என் அக்கா, அது சரி நீ வாங்கி வைத்தாயே அந்த 4 முழம் பூ, அது எங்கே காணவில்லை என்று கத்தினாள், எனக்கு தெரியாது என்று  ஒரு பொய்யை சொல்லிவிட்டு அடுத்த பாட்டான ' அடி ராசாத்தி ஒரு மனசொன்னு ரக்கை கட்டினு" பாடி கொண்டே தூங்க போனேன்.

மீண்டும் ஒரு கா(த)ல் கதை...

"என்னோடு வா துபாய் ஏராளம் தான் ருபாய்" என்ற பாட்டுகேற்ப துபாய் நாடு சென்ற நான் என் ஆத்தா செய்த புண்ணியத்தினால்  டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு பல நாட்டு நிறுவனத்தின் தணிக்கையாளராக பொறுப்பேற்றேன். அருமையான வேலை, அட்டகாசமான வரியற்ற சம்பளம், அதற்க்கும் மேல் நல்ல வாகனம். சிவாஜி கணேசன் பாடியது போல் ஆண்டவன் படைத்தான் என்கிட்ட கொடுத்தான் என்ற வாழ்க்கை.

 அந்த நேரத்தில் வந்தது தான் உலக கோப்பை கால்பந்து போட்டி. நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த போட்டி இந்த முறை அமெரிக்காவில் நடந்தது. உலக கோப்பை கால்பந்து என்றவுடனே நானும் சரி, என் ஒன்று விட்ட சகோதர்களும் சரி (கசின்ஸ்) மற்றும் பல நண்பர்களும் சேர்ந்து கொண்டாடிவிடுவோம். இந்த உலக கோப்பை போட்டியை இவர்களுடன் கண்டு ரசிக்க நான் ஒருமாதம் விடுமுறை போட்டு விட்டு இந்தியா சென்றேன்.

 பங்களூரில் எங்கள் சித்தி வீடு. நான் மற்றும் என் சித்தி பையன் அருண் மற்றும் பல நண்பர்கள் சேர்ந்து ஒரு அட்டவணையை தயார் பண்ணி சுவற்றில் மாட்டி அதற்க்கான பந்தயங்களையும் கட்டி ரசிக்க ஆரம்பித்தோம்.போட்டி அமெரிக்காவில் நடந்ததால் இந்தியாவில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும். இரவு தோறும் மூன்று போட்டி. முதல் போட்டி இரவு 10 மணிக்கு ஆரம்பித்து கடைசி போட்டி காலை 5 போல் முடியும்.

 இரவு தோறும் இந்த போட்டிகளை காபி, தேநீர், சோமபானம் சுறா பானம் போன்ற அவரவருக்கேற்ற பானத்தை பருகி "என்சாய் மாடுவோம்." ஒருவாரம் சென்றது. பிரச்னை ஆரம்பித்தது. எங்கள் அனைவரிலும் நான் ஒருவன் தான் விடுமுறையில் இருப்பவன். மற்றவர்கள் அனைவரும் இரவு முழுவதும் ஆட்டத்தை பார்த்தாலும் காலை எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். என் சித்தி மகன் அருண் இரவு முழுவதும் விழித்து இருந்து பகலில் வேலைக்கு செல்வதை பார்த்த என் சித்தி சற்று அவனை கண்டித்து கொண்டார்கள்.  தினமும் இரவு முதல் ஆட்டம் ஆரம்பிக்கையில் அவர்கள் வந்து அவனை தூங்க சொல்லி சத்தம் போடுவார்கள். இவ்வாரக இரவு முழுவதும் விழித்து இருந்து பகலில் வேலைக்கு செல்வது உடம்புக்கு ஆகாது என்று அவர்கள் போடும் சத்தம் எனக்கும் சரியாகத்தான் தென்பட்டது ஆனாலும் வேலைக்கு போவது நான் இல்லை என்று நான் நாள் ஒரு தூக்கம் இரவு பந்து ஆட்டம் என்று இருந்தேன்.

10 நாட்கள் முடிந்தது. ஒரு நாள் அருண் வேளையில் இருந்து வந்தான். நேராக சித்தியிடம் சென்று, அம்மா, நீங்கள் சொன்ன அறிவுரை இன்று தான் எனக்கு புரிந்தது. அலுவலகத்தில் வேலை நேரத்தில் தூங்கி விழுந்துவிட்டேன், அதனால் அங்கு பிரச்சனை ஆகிவிட்டது. எனக்கு இரவு முழுவதும் விழித்து இருந்து விட்டு பகலில் வேலை செய்ய முடியவில்லை. உங்கள் பேச்சை கேட்க முடிவு செய்து விட்டேன் என்றான். என் சித்தி உடனடியாக "வாடா நான் பெத்த ராசனு"அவனை பாராட்டி அன்று இரவு காடா வெட்டினார்கள். அவன் சொன்ன காரியம் எனக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் (அருண் கால்பந்து ஆட்டத்தை நன்கு அறிந்தவன், அவனோடு சேர்ந்து பேசி கொண்டே பார்ப்பதே ஒரு சுகம்) அவன் உடல் நலத்தை கருதி என்னை திட படுத்தி கொண்டேன். 

இரவு 10 மணி முதல் ஆட்டம் துவங்கியது. அருண் வழக்கம் போல் வந்து அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த சித்தி, "நீ படுக்கவில்லையா? இன்று மாலை தானே சொன்னாய், உன் பேச்சை கேட்பேன் என்று, ஏன் இன்னும் விழித்து கொண்டு இருக்கிறாய் என்றார்கள். அதற்க்கு அவன், அம்மா, இந்த போட்டி நான்கு வருடதிர்க்கு  ஒரு முறை தான் வருகிறது. இதை என்னால் தவிக்கமுடியாது, அதனால் தான் இரவு முழுவதும் இதை பார்த்து விட்டு வேலைக்கு போக இயலாது என்ற உங்கள் பேச்சை கேட்டு வேலையை ராஜினமா பண்ணிவிட்டேன் என்றதும் சித்தி பேய் அறைந்ததை போல் ஆனார்கள் (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்)
அவர்கள் உடனடியாக சுதாரித்து பரவாயில்லை ஒரு மாதம் தானே எப்படியும் சமாளித்து விடலாம் என்றவுடன் அருண் , அம்மா இரண்டும் செய்ய கூடாது என்று நீங்கள் தான் சொன்னிர்கள் இப்படி நாளுக்கொரு வார்த்தையை மாற்றி பேசுவது ஒரு அன்னைக்கு நல்லது அல்ல என்றான்.

 சரி இந்த நிகழ்ச்சிக்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று பார்கின்றீர்களா? வெயிட் எ நிமிட் பார் டூ நிமிட்ஸ்.
இவ்வாறாக பேசி கொண்டு இருக்கையில் எங்கள் தகப்பன் வழி தாத்தா வாழ்ந்த ஆம்பூரில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. என் ஒன்று விட்ட மற்ற சகோ சேகரிடம் இருந்து. மாப்பு எப்ப வந்த என்று கேட்டவனுக்கு நான் இரண்டு வாரத்திற்கு முன்பு என்று சொன்னவுடன் கோபமே வந்து விட்டது. இரண்டு வாரம் ஆகிவிட்டதே என்னை அழைக்க தோன்றவில்லையா என்று அதை பெண் கோபிப்பதை போல் கோபித்து கொண்டான் . "சரி சரி பீல் ஆகாதே" என்று அவனை தேற்றிய பின் அவன் கால் பந்து போட்டி நடந்து கொண்டு உள்ளதே, நம் உடன் பிறப்பாகிய 40 பேரும் விடுமுறை போட்டு இங்கே தான் இருகின்றோம். அலிபாபா நீ அங்கே என்ன பண்ணி கொண்டு இருக்கிறாய்? நீயும் அருணும் உடனே புறப்பட்டு வரவேண்டும் என்றான். 

அடடே.. கரும்பு தின்ன கூலியா? அடுத்த நாள் காலையில் பிருந்தாவான் ட்ரெயினில் போக உத்தேசம். இரவே பைகளை அடுக்கி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் சித்தி வீட்டில் தங்கி இருந்த மற்றொரு உறவினர் எங்கே கிளம்பி கொண்டு இருகின்றீர்கள் என்றார்? அவருக்கு பதிலாக நாளை காலை 6:40 ற்கு பிருந்தாவன் வண்டியில் ஆம்பூர் போகிறோம் என்றோம். அவர் உடனே தானும் காலை 6:25 வண்டியில் கோவை செல்வதாகவும், அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்ல காலை 5:30க்கு டாக்ஸி வரும் என்றும் சொல்லி நாங்கள் தயாராக இருந்தால் எங்களையும் ரயில்நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும் சொன்னார். அன்று இரவும் 3 போட்டி பார்த்து விட்டு நாங்கள் காலை 5 மணிக்கு தான் தூங்க சென்றோம். ஒரு 5:30 போல அவர் எங்களை எழுப்ப ஆரம்பித்தார்.நாங்கள் இன்னும் ஒரு  5 நிமிடம் என்று பல முறை சொன்னது அவருக்கு எரிச்சலை மூடியது போல்.

உங்கள் ரயில் எதனை மணிக்கு என்று கேட்டவருக்கு அருண் பதிலாக , அது சரியாக தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் ரயிலை "ஜஸ்ட் மிஸ்" பண்ணால் எங்களுக்கு சரியாக இருக்கும் என்றான்.

பிறகு எழுந்து கிளம்பி ரயில் நிலையம் சென்றோம். அங்கே முதலில் வந்த கோவை வண்டியில் அவரை ஏற்றி விட்டு அதன் பின்னாலே வந்த பிருந்தாவன் வண்டி வந்ததும் ஏறி கொண்டம். கூட்டம் அதிகம். இருந்தாலும் எங்கள் கை வசம் தான் எங்கள் "ரயில் மந்திரம்" உள்ளதே!
எங்கள் ரயில் மந்திரத்தை படிக்க இங்கே சொடுக்கவும் ...
http://vishcornelius.blogspot.com/2014/03/blog-post_10.html

அதை பின் பற்றி ஜன்னல் அருகே எதிரும் புதிருமாய் இரு இருக்கை பார்த்து அமர்ந்தோம். இரவு முழுவதும் தூக்கம் இல்லை அதனால் வண்டி புறப்படவுடனே தூங்க ஆரம்பித்தோம். ஜோலார்பேட் வந்தது. அங்கே இறங்கி "டுட்டி ப்ரீ ஷாப்பில்" சில வகையறாக்கள் வாங்கி கொண்டு ஆம்புரை நோக்கி கிளம்பினோம். நாங்கள் சென்ற அந்த பேருந்தில் வந்த சில கிராமத்து வாலிபர்கள் "ஒரு மரத்து கள்" என்று பேசி கொண்டு வந்தனர். "ஒரு மரத்து கள்"உடம்பிற்கு எவ்வளவு நல்லது என்றும் அது எங்கே கிடைக்கும் என்று பேசி கொண்டே வந்தார்கள். ஆம்பூர் வந்த சேருகையில் மதியம் 1 மணி.


 சரியான பசி. ஆம்பூர் என்றாலே பிரியாணி அல்லவா? அருகே இருந்த சலாம் ஹோட்டல் சென்று அமர்ந்தோம். அங்கே வந்த சர்வரிடம், " ஆளுக்கொரு பிரியாணி சொல்லிவிட்டு மூளை இருகிறதா என்று கேட்டோம்". அவன் அதற்க்கு, " உங்களுக்கு முன் வந்தவர்களுக்கு கூட இருந்தது ஆனால் உங்களுக்கு இல்லை என்று சொன்னவுடன் அருகில் இருந்த சிலர் சிரித்து விட்டனர். அதை பார்த்தவுடன் மனதில் சற்று கோவம். இருந்தாலும் "ஏரி மேல் கோவித்து கொண்டு"என்ற பழமொழி போல் எதுவும் செய்யாமல் அமைதியாக பிரியாணிக்காக அமர்ந்து கொண்டு இருக்கையில் அந்த மெனு பலகையில் இருந்த "ஆட்டு கால் பாயா" என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. 

சர்வரை மீண்டும் அழைத்து, மூளை இல்லாவிடிலும் பரவாயில்லை, ஆட்டு கால் பாயா கிடைக்குமா என்றேன்? ஆம் என்று சென்று சில நிமிடங்களுக்கு பிறகு 4 கால் கொண்ட பாயா   எடுத்து வந்தான். சிறிது தூக்க கலக்கம் , சிறிது பசி மயக்கம், சிறிது கோவம் (மூளை இல்லை என்று சொன்னவிதத்திற்காக) எல்லாம் என் கண்ணை மூடி மறைதததால் அந்த சர்வரை மீண்டும் அழைத்து "இந்த நாலும் ஒரு ஆட்டு கால்கள் தானே என்றேன் மூளைக்கு சிரித்த அனைவரும் இதற்கும் சிரிக்க அங்கு இருந்த கல்லா பெட்டி சிங்காரம் எங்கள் மேசைக்கு வந்து அந்த காலை எடுத்து கொண்டு உங்களுக்கு இன்று எதுவும் இல்லை என்றார்.


அடேடே..மீண்டும் என் பாட்டி சொன்னதுதான் நினைவிற்கு வந்தது.. "விசு உனக்கு வாயில் தான் கண்டம், சாப்பாட்டை தவிற வேறு எதற்கும் திறக்காதே என்றார்களே" இப்போது சாப்பிட கூட திறக்க முடியவில்லையே என்று நொந்து கொண்டே கிளம்பினோம்.  அருகில் இருந்த ஆட்டோவை நிறுத்தி விலாசத்தை கொடுத்தவுடன் அவர் 40 ரூபாய் என்றார். 50 தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்றேன். நீ பின்னால் அமர வேண்டும் என்று சொல்லி கையால் ஸ்டார்ட் பண்ணி வண்டியை .. "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன்" என்று பாடிகொண்டே விட்டேன்...

வெள்ளி, 18 ஜூலை, 2014

மாங்கா ஓகே, சாம்பல் எதுக்கு விசு?

ரிங்.. ரிங்... மறுபடியும்  தொலை பேசி ரிங்கியது...

விசு பேசுறன்...

ஹலோ ... விசு பிள்ளை, நான் சுந்தரம் பிள்ளை பேசுறேன்.

சொல்லுங்க பிள்ளைவாள், ரொம்ப நாள் ஆச்சி, என்ன விஷயம்.
ஒன்னும் இல்ல விசு பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்

ஒன்னும் இல்ல, ஆனால் முக்கியமான விஷயம், புதிரா இருக்கே, பிள்ளைவாள்

விசு பிள்ளை..

சுந்தரம், நான் பிள்ளைவாள் அல்ல, நீ என்னை பிள்ளை என்று அழைப்பது பிழை.

விசு ... என்ன சொல்லுற.. என் பெயர் சுந்தரம் பிள்ளை, உன் தொழிலோ கணக்கு பிள்ளை, அதனால்  தானே நாம் ஒருவரை ஒருவர் பிள்ளை என்று அழைக்கிறோம்.

சுந்தரம் ஒரு காரியம் பண்ணு, இனி நீ என்னை விசு என்று அழை, நான் உன்னை சுந்தரம் என்று அழைக்கிறேன், சொல்ல வந்த  விஷயத்த சொல்லு.

வாழ்த்துக்கள் விசு, நீ பெரியப்பா ஆகா போகின்றாய்.

நன்றி சுந்தரம், நீ அப்பா ஆகபோற விஷயத்தை எவ்வளவு நாசூக்கா சொல்லி
வைச்ச பாத்தியா? சரி, இனிமேல் தான் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.

என்ன விசு பயமுறுத்திர?

பயமுருத்துல சுந்தரம், உண்மையா தான் சொல்றேன்.

நீ எதுக்கும் உன் மாமியார்ட்ட சொல்லி வாரத்திற்கு ரெண்டு முறை நெஞ்சி எலும்பு சூப் குடி

ஏன் விசு ?.

மாப்பு, இப்ப உன் வீட்டம்மா முழுகாம இருக்காங்க இல்ல, அவங்களுக்கு உடல் ரீதியா பல மாற்றங்கள் ஏற்படும், அந்த நேரத்தில் நிறைய கோவம் வரும். அப்ப யார கத்துவாங்க.

விசு, என்னை தான்...

அதுதாண்டா சொல்லுறேன்.. கொஞ்சம் உடம்ப தேத்திக்கோ

அடுத்த 9 மாதம், அவங்க புள்ளைய மட்டும் தான் சுமப்பங்கோ..மவனே நீ அவங்க உலகத்தையே சுமக்கனும்.

என்னப்பா, இவ்வளவு பெரிய விஷயத்தை கொஞ்சம் தாமதமாக சொல்லிட்டே..

நீ மட்டும் சந்தோசமா இருக்க கூடாது அல்லவா? அதுதான் மறைச்சிட்டேன்.

சரி மேல சொல்லு, விசு.

சுந்தரம், இந்த நேரத்தில் அவங்க என்ன பேசினாலும் நீ காதுல ஈயத்த ஊத்தினவன் மாதிரி கம்முன்னு கேட்டுக்கோனும். மவனே நீ எதனா பதில் சொன்னே, போறவங்க வரவங்க எல்லாம் உன்னை..... 'அறிவு இருக்கா உனக்கு, புள்ளதாச்சியா இப்படியா நடத்துவன்னு ஒரு திட்டு".

விசு.. இப்ப என்னை ஏன்னா பண்ண சொல்லுற?

ஒன்னும் பண்றதுக்கு இல்ல.

அவங்களுக்கு பிடிச்சத வாங்கி கொடு, அவங்க தின்னு மீதி வைச்சத நீ சாப்பிட்டுக்கோ

முடிஞ்சா வரைக்கும் நீயா பேச்சு கொடுக்காதே... அவங்க கேட்க்கிற கேள்விக்கு மட்டும் அவங்களுக்கு புடிச்ச பதிலா சொல்லு.

இது   எவ்வளவு நாட்களுக்கு விசு..ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே.

ஒரு வாரத்திற்கு தான் சுந்தரம்

விசு,என் வயித்தில பால வார்த்த, ஒரு வாரம் எப்படியாவது கஷ்டப்பட்டு தள்ளிடுவேன்.

அட பாவி, சொல்லுறத முழுசா கேளு.

ஒருவாரம் தான் இந்த கஷ்டம், அப்புறமா பழகிடும்

அப்ப எவ்வளவு நாளுக்கு தான் இந்த மாதிரி இருக்கனும்..

வாழ்க்கை முழுக்க சுந்தரம் வாழ்க்கை முழுக்க.. போ, போய் அவங்களுக்கு
பிடிச்ச மாங்காய், இல்லாட்டி சாம்பால் வாங்கி வா.

மாங்கா ஓகே, சாம்பல் எதுக்கு விசு?

சாம்பல் அவங்களுக்கு பிடிக்கும்னு சொல்லுவாங்க, மீதி இருந்தா உன் நெத்தியில் பட்டையா நாமத்த போட்டுக்கோ     போ..

வேட்டிய மடிச்சு கட்டு..

ரிங்.. ரிங்.... போன் ரிங்கியது..

விசு பேசறேன்..

வாத்தியாரே... தண்டம்...

யாருடா நீ "பேமானி" , சனியும் அதுவுமா காலையில் என்ன தண்டம்னு கூப்பிடறது? (("தண்டம்'என்றதை கேட்டவுடன், நான் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டேன்- பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)

இல்ல, வாத்தியாரே, நான் தண்டபாணி பேசுறேன்.

9000 மைல் தாண்டி வந்த....மனைவி அமைவதெல்லாம்!


இன்னும் மூணு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். நேரத்திற்கு போங்க..

சரீங்க. மொத்த பயணமே 22 மணி நேரம் ஆச்சே, அதனால தான் கடைசியா நல்ல ஒரு "Bangalore பிரியாணி"  நானும் ராசாதிகளும் சாப்பிட்டு கொண்டு இருக்கோம்.

ஹ்ம்ம்ம்ம்... "Bangalore பிரியாணியா"?...கொடுத்து வைச்சவங்க.

நீங்க என்ன சாபிப்டீங்க?

காஞ்சி போன ரொட்டி துண்டும், காப்பி தண்ணியும்,

சரி சரி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க,
நாங்க நாளைக்கு மதியம் இருப்போம் இல்ல, அப்ப ஏதாவது சமைக்கலாம்.

சரி, அந்த பிரியாணி எப்படி சுவை?


உங்கள வெறுப்பு ஏத கூடாதுன்னு தான் நான் சொல்லவில்லை, ரொம்ப சூப்பர்.

ஹ்ம்ம்... எனக்கு இல்லை.. எனக்கு இல்லை..சரி நேரத்திற்கு கிளம்பி வந்து சேருங்க, நான் விமான நிலையத்தில் சந்திக்கிறேன். "Bon Voyage"!

அடுத்த நாள் மதியம், லாஸ் அன்ஜெல்ஸ் விமான நிலையத்தில்; 

வெல்கம் பேக், லேடீஸ்...பயணம் எப்படி இருந்தது?

கொஞ்சம்கஷ்டம் தான்.. இரண்டாவது விமானத்தில் 16 மணி நேரம் அமர்ந்தே இருந்தது கொஞ்சம் சிரமம் தான்.

நீங்க எப்படி இருக்கீங்க.

எதோ சௌக்கியம் பரவாயில்லை.

சரி போற வழியிலேயே ஏதாவது சாப்பிட்டு போலாமா? வீட்டிற்கு போய் சமைக்க நேரம் ஆகி விடும்.

இல்லங்க, வீட்டிற்கு நேராக போகலாம்.

சரி..

வீட்டை அடைந்தவுடன்.

எங்க இந்த பையை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், முதலில் சாப்பிட வாங்க?

வந்து 5 நிமிஷம் ஆகவில்லை, எப்படி சாப்பாடு?

இங்க மேசைக்கு வாங்க.

மேசையில்.. 

இது ஏன்னா, சூப்பர் பிரியாணி?

இல்லங்க, நாங்க சாப்பிடும் போது தானே நீங்க கூப்பிடீங்க, உடனே ஒரு டப்பாவில் போட்டு பிரீஸ் பண்ணிவிட்டேன். விமானநிலையத்தில்
என்னான்னு கேட்டாங்கோ, சாப்பாடு, எனக்கு தான் சொன்னேன், விட்டுடாங்கோ.

அவ்வளவு நேரம் விமானத்தில் எப்படி கெடாம இருந்தது.

இல்ல, அந்த பணிபெண்ணிடம், குளிர்பெட்டியில் வைக்க முடியுமான்னு கேட்டேன், சரின்னு சொன்னாங்க.

இங்க வந்து வெளிய வரும் போது எதுவும்  கேட்கவில்லையா?

அந்த "சீட்டி"ல உணவு ஏதாவது இருக்கான்னு கேட்டு இருந்தது, ஆமாம்னு போட்டேன்,சரி போன்னு அனுப்பி வச்சிடாங்க.

உங்க நல்ல காலம், உங்களுக்கும் பிரியாணி...

ஹ்ம்ம்.... மனைவி அமைவதெல்லாம்.....கணவன் செய்த புண்ணியம்..

வியாழன், 17 ஜூலை, 2014

எனக்கு வடிவு யாருன்னே தெரியாது (இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பு)


ஏங்க...இந்த புடைவை "வடிவா" இருக்க?

எனக்கு "வடிவ" பத்தி தெரியாதுமா, ஆனால், இந்த புடவை உனக்கு நல்லா இருக்கும்.

அதத்தாங்க நானும் கேட்கிறேன், "வடிவா" தானே இருக்கு..

சத்தியமா சொல்றேன், அந்த "வடிவு" யாருனே எனக்கு தெரியாது, ஆனால் உனக்கு நல்லா இருக்கும்

தூறல் நின்னு போகல..

இன்னொரு வார இறுதி, காலை சீக்கிரமே எழுந்து 3:30 மணிக்கு எங்க ஊர் காசிமேடானா "நியூ போர்ட்" பீச்சிற்கு மீன் வாங்க நண்பன் ஒருவரோடு சென்றேன். அந்த மீன் சந்தையை நாங்கள் அடையும் போது மணி 4 போல் இருக்கும். எங்கள் வாகனத்தை கடலுக்கும் ஒரு 100 மீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு வெளியே சில் என்ற மழை காற்று அடித்ததால்   சந்தை திறக்கும் வரை   வண்டியிலேயே அமர்ந்து இருந்தோம்.


பொற்காலம் டு கற்காலம்.

விசு, செம்ம சாப்பாடு விசு. அட்டகாசம் போ. எப்படி விசு , காசிமேட்டில் கிடைக்காத மீனை கூட கலிபொர்னியாவில வாங்குற. சூப்பர், என்று சில நண்பர்கள் கூறும் போது மணி இரவு 8:30.

இங்கே, நானும் சரி, மற்ற என் நண்பர்களும் சரி, மாதம் ஒருமுறை யாராவது ஒருவர் இல்லத்தில் சந்தித்து உண்டு களிப்போம். இன்று எங்கள் இல்லத்தில்.
எல்லாம் முடிந்தது. இரவு ஒரு 9 மணி போல், நண்பர் ஒருவர் கூறினார். நாளை விடுமுறை தானே, நாம் எல்லோரும் சேர்ந்து "சிங்கம் 2" போகலாமே. இன்றுதான் வெளி வந்து இருக்கின்றது என்று கூறினார். நாங்கள் மொத்தம் ஒரு 40 பேர் (பிள்ளைகளையும் சேர்த்து) இருந்து இருப்போம்.
நீங்கள் எல்லோரும் போங்கள், எனக்கும் என் மனைவிக்கும் இந்த படம் போவதில் விருப்பமில்லை என்றோம்.  அதற்க்கு ஒரு நண்பன், என்ன விசு, சிறிய வயதில் எல்லா படத்தையும் பார்த்துவிடுவாய், இப்போது சுத்தமாக நிறுத்திவிட்டாயே என்ன காரணம் என்றான்.



எதுவும் முக்கியமான காரணம் இல்லை,"முன் தனி காட்டு ராஜா ", ஆனால் இப்போது " பிள்ளை குட்டி காரன் அல்லவா" அதனால் என்று சொல்லி, ஏன் நான் சினிமாவை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று ஒரு அசை போட்டேன்.
காரணம் கிடைத்தது.

அந்த காரணத்தை சொல்வதற்குள் கடந்த சில வருடங்களில் நான் விமானத்தில் இந்தியா செல்லும் போது 4 அல்லது 5 படங்களை பார்த்தேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நான் பார்த்த படங்கள், கில்லி, மொழி, சந்திரமுகி (முதல் 10 நிமிடம்) மற்றும் சிங்கம்.


சரி இப்போது ஏன் படங்களை பாப்பதை விட்டுவிட்டேன் என்று சொல்கிறேன். தனி காட்டு ராஜவாக இருக்கும் போது நான் ஒரு தமிழ் பட பரம ரசிகன். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லும்படியான 'பாலசந்தர்-பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி" அவர்களோடு வளர்ந்தவன் நான். எங்கள் காலத்தில் ஒருவனிடம் சரக்கு இருந்தால் தான் முன்னேற முடியும். சினிமா என்பது "பரம்பரை சொத்து" என்று ஆகுவதற்கு முன்னான, பொன்னான காலம்.

மூன்றாம் பிறையில் "அட்ரா ராமா, அட்ரா ராமா"என்று நாயகன் கூறும்போது, அழுதவன் நான்.

டார்லிங்-டார்லிங்-டார்லிங்கில் "ஏங்க 10-15 வருஷமா வேற வேலையே எதுவும் செய்யம்மா, உங்கள மட்டும் மனசில வைச்சு காதல் பண்ணிட்டேன். ப்ளீஸ், கொஞ்சம் ட்ரை பண்ணி என்ன லவ் பண்ணுங்களேன்" என்று சொல்லும் போது.. நானும் நாயகனோடு சேர்ந்து "ப்ளீஸ்" என்று சொன்னவன் நான்.

மயிலு ஆத்தாக்கு தாவணி கட்டினாகூட நல்லா இருக்கும்டா என்றவுடன், பரட்டையையும் முந்தி..."இது எப்படி இருக்கு?" என்று கேட்டவன் நான்.

அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.. "எனக்கு உண்மையாகவே தெரிந்தது".

மூன்றாவது முறையாக எங்கடா அந்த வாழை பழம் என்று கேட்ட போது.. "யோ, கவுண்டரே, அது தான்யா இது, எத்தன முறை கேட்பே? " என்று நான் அல்லவா கத்தினேன்.


இந்த காலத்தில் வளர்ந்தவன் நான். சரி, ஏன் நிறுத்திவிட்டேன். நல்ல கேள்வி. படையப்பா பார்த்த பின் அடடா.. .சூப்பர்! என்ன ஒரு இயக்குனர் KSR , நம்ம தலைவரை வைத்து இப்படி ஓர் சூப்பர் படம் பண்ணி விட்டாரே என்று ரசித்து விட்டு, தலைவரின் அடுத்த படத்திற்கு ஆவலாக காத்து இருந்தேன்.

வந்தது "பாபா". எங்கேயும் "பாபா" எதிலேயும் "பாபா"! படம் வெளி வந்ததும் முதல் நாளும் அதுவுமாய், துபாய் அருகில் உள்ள தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி. படம் முடிந்து வெளியே வந்த என்னை பார்த்த நண்பர்கள் ஏன் விசு பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டாய் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் கூறுகிறேன்) ஏன்றார்கள். 

அன்று தான் உணர்ந்தேன்,அறிந்தேன் . இந்த "பாலசந்தர்-பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி" மற்றும் சிலர் என்  எதிர்ப்பார்ப்புகளை எங்கேயோ தூக்கி கொண்டு போய் வைத்து விட்டார்கள்.  இனி வரும் படங்கள் நம்மை திருப்தி படுத்தாது என்று. 

இந்த விஷயத்தை நான் கூறுகையில் பல நண்பர்கள் "நல்ல முடிவு" என்பார்கள், மற்றும் பல நண்பர்கள் " கெட்ட முடிவு" என்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை, தமிழ் சினிமாவின் பொற்காலம் முடிந்து, இது கற்காலத்திற்கு சென்று விட்டதை போல் ஓர் எண்ணம். சரியோ தவறோ தெரியவில்லை.

சரி, இப்போது, சிங்கம் 2க்கு வருவோம், என்ன படம், என்ன கதை, யார் ஹீரோயின் என்ன இழவோ என்று புரியவில்லை. நான் கொஞ்சம் காமடி விரும்பி. இந்த படத்தில் விவேக்-சந்தானம் இருவரும் நடிகின்றார்கள் என்று அருகில் இருப்பவர் சொல்ல, சிரிக்கலாம் என்று அமர்ந்து இருந்தேன். சிரிப்பு ம் வரவில்லை.

இதை பார்த்தவுடன் ,சரி சரி, நாம் எடுத்த முடிவு சரி தான் என்று என்னை நானே பாராட்டி கொண்டேன்.

சரி.. பொழுது போக்கு என்ன என்று கேட்கின்றீர்களா? இருக்கவே இருக்கு.. " யு டுப்" தட்டினால் வருகின்றார்கள் ... " பாலசந்தர்- பாரதிராஜா-பாக்யராஜ்-பாலுமகேந்திரா- இளையராஜா-வைரமுத்து-கவுண்டமணி"


பேக் டு பொற்காலம்...

http://www.visuawesome.com/

கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்!


ஏன் சொல்லுறன்? நிதானமா கேளுங்கோ. இயக்குனர் சிகரத்தின் பரம ரசிகனாக இருந்த நான், நடுவில் சில நாட்கள் அவர் எடுத்த படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். ஏன் தெரியுமா? வீட்டில் உள்ள பெண்களிடம் வாங்கும் திட்டே தாங்கமுடியாது, அதை மறக்க படம் பார்க்க போகலாம் என்றால், இவர் சரிதாவையும், சுகாசினியையும் வைத்து நம்மை நம் சொந்த செலவிலே திட்டி வைப்பார். சரி, அதற்க்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்? நிதானம் ப்ளீஸ்..

நான் இங்கே எழுத போவது "நினைத்தாலே இனிக்கும்" என்ற படம் தான். அது விஸ்வநாதன் அவர்களின் 1000மாவது படம் என்று கூட நினைக்கிறேன்   (எங்கேயோ, எப்போதோ படித்த நினைவு, ஆனால் கண்டிப்பாக கூறமுடியாது). அருமையான கதை, அட்டகாசமான நடிகர்கள், வெளி நாட்டு ஷூட்டிங், சூப்பர் காமடி, இதை எல்லாம் விட அருமையான இசை.

சில நாட்களுக்கு முன்னால் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை காணும் வாய்ப்பு கிடைத்தது.  அதை பார்த்து முடித்தவுடன் வந்தது தான் இந்த நினைப்பு " கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்"!சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த படம் இந்நாளில் எடுக்க பட்டு இருந்தால் இது ரீலீசே ஆகி இருக்காது என்று நான் நினைத்தேன். ஏன் என்று சில கருத்துக்களை அலசி எடுப்போம்.

 இந்த படத்தின் மிக சிறந்த காமடியே, ரஜினி காந்த், பூர்ணம் விஸ்வநாதனிடம் சவால் விட்டு சிகரெட்டை  பத்து முறை தூக்கி போட்டு வாயில் பிடிக்க முயல்வது. வெறும் வாயில் மெல்லும் இக்கால அரசியல் வாதிகளுக்கு இந்த காட்சி.. அவல் அல்ல, பபிள் கம் போட்டது போல்...இந்த காட்சியை வைத்தே ஒரு 6 தடை வாங்கி இருப்பார்கள். இந்த காட்சி படம் பார்ப்பவர்களை சிகரெட் பிடிக்க ஊக்குவிக்கும் மற்றும், சிகரெட் மட்டும் இல்லாமல் மற்றும் பிஸ்கட், பீடா, வாழைபழம் எல்லாவற்றையும் மக்கள் இந்த மாதிரி தூக்கி போட்டு பிடித்தால் நம் தமிழ் கலாச்சாரம் என்ன ஆகும் என்பாடு தான் இவர்களின் விவாதம்.

அடுத்து, இந்த சாவலுக்கான பரிசே டொயோடா கார். இந்த டொயோடா காரை பூரணம் விஸ்வநாதன் மீண்டும் மீண்டும் சொல்வதால், அவர் அந்நிய நாட்டு சாதனங்களை மறைமுறமாக ஆதரிக்கிறார் என்று அடுத்த கூட்டம் கிளம்பி அடுத்த தடை.

"முக்கா பாட்டில் விஸ்கி, அரை பிராண்டி, கொட்டர் ரம் எல்லாம் கலக்கி காக்டைல்" இந்த வசனத்திற்கு அடுத்த கட்சி மற்றும்  பல தடைகள். பள்ளிகூட கல்லூரி மாணவர்  இந்த காட்சியை பார்த்தால் தவறான வழியில் செல்வார்கள். இதனால் அடுத்த பரம்பரைக்கே கேடு என்ற அடுத்த வாதம்.

"குடிச்சிட்டு பேசறன்னு நினைக்காத? கல்யாணம் மட்டும் பண்ணிக்காத..' இந்த காட்சி -  வசனத்தின் மூலம் தமிழ் கலாசார பரம்பாரியமான திருமணம் வேண்டாம் என்றும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் இல்லாமல் வாழலாம் என்று வாலிபரை உற்சாக படுத்துவதால் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்திய நாட்டில் பல நல்ல இடங்கள் இருக்க சிங்கப்பூரில் இதை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை, இதனால் அந்நிய செலவாணி மதிப்பு குறைந்து நாட்டின் பொருளாதாரமே சீர் குலைய வாய்ப்புள்ளது என்று மற்றொரு கட்சியின் வாதம்.

தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை பார்த்தவுடன் ரஜினி, "சிங்கப்பூரில் வந்து நான் சாமியாராக வேண்டுமா" ? என்ற கேள்வி சாமியார்களின் பெயரையே கெடுத்து விட்டது. சாமீர்யார்கள் என்றால் என்ன "எடுப்பார் கை பிள்ளையா"? அவர்கள் என்ன அழகான பெண்களிடம் தான் பழகுவார்கள் என்ற தவறனா கருத்தை இது மக்களின் மேல் புகுத்துகிறது என்று அடுத்த குற்ற சாட்டு..மேலும் பல குற்ற சாட்டுகள்.

அதனால் தான் சொல்லுகிறன்,  ரொம்ப ராசியானவர் K.Balachander. இந்த படம் இந்த காலத்தில் எடுத்து இருந்தால் " பிரேமாலய பிலிம்ஸ் " போண்டி ஆகி இருக்கும்.

இந்த படத்தை பார்த்த மற்ற இடுகையர்கள், மற்ற குற்றசாட்டுக்களை பின்னோட்டத்தில் போட்டால் மகிழ்வேன்.

பின் குறிப்பு:

என் வாலிப வயதிலே இந்த படத்தை பார்த்து ரசித்தவன் நான். அன்றும் ரசித்தேன், இன்றும் ரசிக்கிறேன். ஆனால்  புகை-குடி-குட்டி என்று என்று இந்த படத்தை பார்த்து என் வாழ்கையை அழித்துகொள்ளவில்லை. ரசித்தேன்..அவ்வளவு தான்!

புதன், 16 ஜூலை, 2014

அந்த நிலாவ தான்....

சிலவருடங்களுக்கு முன்  என் மகளோடு  (அவளுக்கு அப்போது  5வயது  இருக்கும், ஆங்கிலத்தில் நடந்த உரையாடல், அதை தமிழாக்கம் செய்து அளிக்கிறேன்) வெளியே எங்கோ செல்லும் பொது பகலில் வானில் தெரிந்த வெண்ணிலவை பார்த்தவுடன்  நடந்த உரையாடல்

அப்பா, வானத்தில் உருண்டையாக வெள்ளையாக இருகின்றதே, அது என்ன?

அது நிலவு, மகளே.


அப்பா, நிலவு என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும், அது மட்டும் இல்லாமல் இரவில் தானே வரும், இது வெள்ளை நிறத்தில் பகலில் வந்து உள்ளதே?


இல்லை மகளே, சில நாட்களில் மேகமில்லாத வானில் நிலவு வெள்ளையாக நம் கண்ணுக்கு தெரியும், இன்று அவ்வாறான நாள், மேல அதிக மேகமூட்டம் இல்லாததினால், நிலவு தெரிகிறது.


அப்பா நான் அங்கே செல்ல வேண்டும். செல்ல முடியுமா?

கண்டிப்பாக முடியும். அதற்கு நீ சில காரியங்கள் செய்யவேண்டும்.

நான் என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன், ஆனால் எனக்கு அங்கே போக வேண்டும்.

மகளே, அதற்கு, நீ சிறிய வயதில் இருந்தே நன்றாக படிக்க வேண்டும், உடலை வலிமையாக வைத்து கொள்ள வேண்டும், பெற்றோரின் பேச்சை ( நல்ல வாய்ப்பு இல்லையா, அங்க அங்க பிட்ட போட்டுடனும்) கேட்டு நடந்தால் அந்த ஆண்டவன் அருளால் NASA என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிலவிற்கு செல்லலாம்.

அப்பா, நீங்கள் அந்த நிலவிற்கு சென்றதுண்டா?

இல்லை மகளே,

அப்படியானால், இப்போது எனக்கு சொன்னீர்களே, அதில் எதுவுமே நீங்கள் செய்யவில்லையா?

இதை அவள் கேட்ட வுடன் நான் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டேன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்).

அப்படியில்லையடி  ஏன் ராசாத்தி,

பிறகு நீங்கள் ஏன் அங்கெ செல்லவில்லை,

ஒன்னும் இல்லடா கண்மணி, அப்பாக்கு "உயரம்ன்னா" பயம் அதுதான்...

http://www.visuawesome.com/