வெள்ளி, 25 ஜூலை, 2014

(3)இந்நாட்டில் (அமெரிக்காவில்) பிடித்தவை : "போக்குவர போலீஸ்'

போக்குவர  போலீஸ்..

 என்னாது? உங்களுக்கு பிடித்த விஷயத்தில் போக்குவர காவலுமா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆம். உண்மையைதான் சொல்லுகிறேன், இந்நாட்டை சேர்ந்த  "போக்குவர காவல்" துறை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.

இந்நாட்டில் நான் வருடக்கணக்கில் வண்டி ஒட்டி வருகிறேன். இந்த பல வருடங்களில் நான் மூன்று முறை காவல் துறையினால் நிருத்தபட்டுளேன்.

மூன்று முறையும், என்னை நிறுத்திய  போலீஸ், "ஸ்பீக்கரில்", வண்டியை அணைத்து விட்டு, கைகளை "ஸ்டீரிங்" மேல் வையுங்கள் என்றார். பணிந்தேன். அருகில் வந்து, சன்னல் கண்ணாடியை கீழிறக்க சொன்னார். செய்தேன்.

"நான் இப்போது உங்களை ஏன் நிறுத்தினேன் என்று தெரியுமா" (மூன்று முறையும் அதே கேள்வி) என்று கேட்டார்.

முதல் இரு முறை,. மன்னிக்கவேண்டும், நான் அதிக அளவு வேகத்தில் வந்து விட்டேன் என்று நினைக்றேன் என்றேன்.

முதல் முறை, என்னுடைய தகவலை பெற்று கொண்டு, தன வாகனத்திற்கு சென்று, அங்கே இருந்த கணினியில் என்னை பற்றி விசாரித்தார், சில நிமிடங்கள் கழித்து  வந்தார். உன்னுடைய "வண்டி ஓட்டும் வரலாறு" மிகவும்  சுத்தமாக உள்ளது. இந்த  முறை உன்னை மன்னிக்கிறேன், தயவு செய்து உன் நன்மைக்கும் மற்றவர்களின் நன்மைக்கும் சற்று ஜாக்கிரதையாக வண்டியை ஒட்டவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இரண்டாம் முறை நிறுத்திய வேறொரு அதிகாரி, அதே கேள்வியை கேட்டு, அதே வரலாறை, பரிசீலித்து விட்டு என்னிடம் வந்தார். என்னிடம் வந்து, ஏன் இவ்வளவு வேகமாக போகிறாய் என்றார்? அசடு வழிந்து 'மன்னிக்க வேண்டும் - அதிகாரி' என்றேன். அது சரி, இந்த இடத்தில அதிகபட்சம் எவ்வளவு வேகமாய் போகவேண்டும் என்று தெரியுமா என்றார். மீண்டு அசடு வழிந்தேன். எனக்கு ஓர் சீட்டு கொடுத்து விட்டு, நீதிமன்றத்தில் போய் இதை சரி பண்ணி கொள் என்றார்.

மூன்றாம் முறை, நான் ஒரு இடத்தில, "நோ ரைட் ஆன் ரெட்" என்ற இடத்தில் ரைட் எடுத்துவிட்டேன். அதற்கான சீட்டு, அபராத தொகை.,
இந்த மூன்று முறையுமே, நான் செய்த தவறுக்காக என்னை நிறுத்தி கண்டித்து - மன்னித்து - தண்டித்து அனுப்பினார்கள்.


இங்கே காவல் துறை அதிகாரிகள் தவறுகள் நடக்க கூடாது என்று வருமுன் காப்போம் என்ற மொழிகேற்றாற்போல் செயல் படுவார்கள். நானும் சரி, நான் அறிந்தவர்களும் சரி, இதுவரையில் ஒருவராவது "போக்குவரத்து காவல் துறையினருக்கு' லஞ்சம் கொடுத்ததாக கேள்வி பட்டதே இல்லை.

"செய்த தவறிற்கு தண்டனை"  அந்த அபராதம் கூட நேராக செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடும்.

இதுவும் மிகவும் சின்ன காரியமாக தெரியலாம். ஆனால், எனக்கு பிடித்த சின்ன காரியங்களில் ஒன்று.

8 கருத்துகள்:

  1. இங்குள்ள நிலை - ம்... பெருமூச்சு தான் வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு நிலைமை என்னை பாதிக்கா விட்டாலும், தம்மை போல் நண்பர்களிடம் அறிந்து கொள்கிறேன். வருத்தமாக இருக்கிறது.

      நீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு


  3. yoove poiya pooo pullai kutti pattikkavai; america over rated u say; why gun culture; tell tell;oooohhhhooo

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பாக்கி கலாச்சாரம்... எனக்கு பிடிக்காதது தான். இப்போது பிடித்ததை இப்போது எழுதி கொண்டு இருக்கின்றேன். அது முடிந்தவுடன் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள், இப்போது ... " tell, tell" என்று சொன்னதால் இந்த வாரத்திலேயே கண்டிப்பாக எழுதுகிறேன், வருகைக்கும், பின்னோட்டதிற்கும் நன்றி.

      நீக்கு
  4. This is the attitude of indians - pointing out gun culture in US while you are talking about traffice police, no bribes, etc. Gun culture is wrong and is a separate issue, that does not in any way take away all that is wrong in india. 2 wrongs dont make a right ! Sujatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well, thanks for dropping by. Since Ms. Meena has asked for an explanation, I have written another blog covering that topic. you may read it here.. it is titled " அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம்";

      http://vishcornelius.blogspot.com/2014/07/blog-post_28.html

      நீக்கு