வெள்ளி, 25 ஜூலை, 2014

(5)உடனடி வைத்தியம் : பெண்களிடம் எனக்கு பிடித்தது

உடனடி வைத்தியம் 

கொஞ்சம் லேசா தலை வலி மாதிரி இருக்கு..எதுக்கும்  மருத்துவரிடம் போகலாம் என்று இருக்கேன்.

இதுக்கு எல்லாம் யாராவது மருத்துவரிடம் போவாங்கள? நிறைய தண்ணி குடிச்சிட்டு, நேரத்திற்கு போய் படுங்க. எல்லாம் சரியா ஆகிவிடும்,

அது எப்படி? தலைவலின்னு சொன்னவுடனே  சரியா ஏன் வந்துச்சி எப்படி வந்துச்சின்னு சொல்லிட்டியே? சூப்பர். உடனே நம்ம இன்சுரன்சை கன்சல் பண்ணு. காசாவது மிச்சம் ஆகும்.

கிண்டலா... தினமும் ராத்திரி 11 வரை தமிழில் ஏதாவது டைப் பண்ணினே இருங்க. அப்புறம் காலையில் எழுந்து தலைவலின்னு சொல்லுங்க.. நேரத்திற்கு படுத்து எழுந்தா பாதி நோய் தான போகும்.

சரிங்க டாக்டர்.

இருந்தாலும்... மருத்துவரிடம் சென்று கொஞ்சம் கேட்டு பாக்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.



ரீப்போர்ட்ஸ்  எல்லாம் நார்மலா டாக்டர்?

எஸ், விசு. தே ஆர் நார்மல்.

பின்ன ஏன் டாக்டர், காலையில் எழுந்தவுடன் தலை வலிக்குது.

நீங்க நேரத்திற்கு தூங்க போகணும் விசு.. அடிகடி நிறைய தண்ணீரும் குடிங்க. எல்லாம் சரிஆகிவிடும். முன்னாலே போய் உங்க பீஸ் கட்டிட்டு ரசீது வாங்கிகோங்க.

சற்று நேரம் கழித்து வீட்டில்;

ஏங்க, டாகடர் ஆபீஸ் போனீங்களா? பாங்க்ல காசு எடுத்து இருக்காங்கோ.

ஆமா, சும்மா எதுக்கும், ஏன் தலைவலின்னு கேட்டுக்கலாம்னு போனேன் .

என்ன சொன்னார்?

அடிக்கடி நெஞ்செலும்பு சூப்பும், காலையில் குழி பணியாரமும் கண்டிப்பா சாப்பிடுன்னு சொன்னார்.

கிண்டல் பண்ணாதீங்கோ, நான் கூப்பிட்டு கேட்ப்பேன்.

 "நேரத்திற்கு தூங்க போகணும் . அடிகடி நிறைய தண்ணீரும் குடிக்கனும்"ன்னு சொன்னார்.

அததான் நான் காலையிலேயே சொன்னேனே, பின்ன ஏன் அவர்கிட்ட போய் காசை வீசிட்டு வந்தீங்க. "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..."

ஏம்மா, ரொம்ப நாளா உன்னிடம் ஒரு கேள்வி கேட்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. கேக்கட்டா?

முட்டாள் தனமான கேள்விக்கு முட்டாள்தனமான பதில் தான் வரும், கேளுங்கோ..

இந்த நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்லுறிங்களே... அதுதான் நல்ல மாடு ஆச்சே... அதுக்கு ஏன் ஒரு சூடு கூட போடணும்?

கூழுக்கே வலி இல்லையாம்..."கூகிள் மாப்" கேட்டுச்சாம், போய் வேலையை பாருங்க...

5 கருத்துகள்: