புதன், 30 ஜூலை, 2014

இளையராஜாவிடம் சுட்டியா?....நல்லா இருக்கே!

பாடல் பிறந்த கதை : அண்ணே அண்ணே (கோழி கூவுது)


அண்ணே இசைஞானி அண்ணே,வணக்கம் அண்ணே..

சொல்லு அமரா, "கோழி கூவுது" படம் எப்படி வந்துன்னு இருக்கு?

இதுவரை ஓகே அண்ணே, கதை,திரை கதை நல்லா அமைஞ்சிடிச்சு. கதாநாயகி கூட புதுசா தான் அறிமுக படுத்துரோம். எல்லாம் நல்லா அமைந்து வருது அண்ணே.

ரொம்ப சந்தோசம் அமரன், உன் முதல் படம், கவனமா செய். நீ பாட்ட எல்லாம் கேட்டியா? எப்படி இருந்தது?

அண்ணே, அந்த  "எதோ மோகம் எதோ ராகம்",அட்டகாசம் அண்ணே, ஒருமுறை தான் கேட்டேன், பாட்டும் சரி, வார்த்தைகளும் சரி, மனப்பாடம் ஆகிவிட்டது.

சரி, நீ போய் ஷூட்டிங் வேலைய கவனி,

அண்ணே ..

என்னப்பா சும்மா "அண்ணே, அண்ணே".. ன்னு

அந்த "பூவே, இளைய பூவே" பாட்டு, ரொம்ப வித்தியாசமா இருக்கு அண்ணே, இந்த பாட்டை இசை கல்லூரிக்கு கூட பாடமா அனுப்பலாம். அது சரி அண்ணே, அதுக்கு ஏன் யேசுதாஸ், இல்லாட்டி பாலசுப்ரமணிய போடலே. மலேசியா கொஞ்சம் "நக்கல்" பாட்டுக்கு தான நல்ல இருப்பார். இது ஒரு கர்னாடிக் மாதிரி இருக்கே...

இல்ல அமரா, மலேசியா எல்லாம் நல்லா பாடுவார். அது மட்டும் இல்லாமால் கிராமத்தில் இருந்து மிலிடரியில் இருக்கிற கதாநாயகனை "சில்க் ஸ்மிதா" நினைத்து பாடுவது போல். அதனால் மலேசியா குரல் நல்லா இருக்கும்ன்னு நான் யோசித்தேன். நீ வேணும்னா பாரு, இன்னும் 25 -30 வருஷம் கழித்து கூட இந்த பாட்டை இளையராஜா ஏன் மலேசியாவிடம் கொடுத்தார்னு பேசுவாங்க.

அண்ணே, இசையில் உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை, இருந்தாலும் சொல்லுறேன்... அந்த பாட்டில் " இனிக்கும் தேனே, எனக்கு தானே" என்ற இடத்தில் மலேசியா ஒவ்வொரு முறையும் கொஞ்சம் தடுமாருற மாதிரி தெரியுது.

அமரா, நானும் அதை யோசித்தேன், அது சரி, இவ்வளவு நுண்ணியமா இசைய தெரிஞ்சு வைச்சு இருக்கியே. நீயும் இசை அமைப்பாளரா தொடரலாமே, ஏன் அதை விட்டுட.

அட போங்க அண்ணே...கஷ்டப்பட்டு பாக்கியராஜின் "மௌன கீதங்கள்" படத்துக்கு இசை அமைத்தால், என்னப்பா,. பாட்டு நல்லா இருக்கே, அண்ணனிடம் இருந்து சுட்டியானு, எல்லாம் கேக்குறாங்க.அதனால் இனி மேல் இசை அமைப்பாளர் ஆகா போவது இல்லை என்று முடிவு பண்ணிவிட்டேன். அண்ணே ஒர் வேண்டுகோள்.

சொல்லு அமரா,

"அலைகள் ஓய்வதில்லை"யில் அத்தனை காதல் பாட்டு இருந்த போதிலும் நீங்க பாடின "வாடி என் கெப்ப கிழங்கு"   அந்த பாட்டுக்குன்னு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அந்த பாணியில் இதிலும் ஒரு பாட்டு வேணும் அண்ணே.

அப்படியா சொல்லுற, சரி போட்டுடலாம்.

அண்ணே, அத நீங்க தான் பாடனும்.

இல்ல அமரா, "வாடி என் கெப்ப கிழங்கு"  பாட்டை நான் ஒரு பள்ளிகூடத்து வயசு பையனுக்கு பாடினேன். இப்ப அதே பாணி பாட்டை ஒரு நடுத்தர வயது கதாநாயகனுக்கு பாடினா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க.

அண்ணே, அப்பா அந்த பாட்டை நாயகனுக்கு பதிலா  , நாயகனுடைய நாலு நண்பர்கள் பாடுற மாதிரி வைச்சா.

அது சரி, "சிட்ச்சுவேசன்" சொல்லு, நான் ராகத்தை போடுறன்.

மிலிடரியில் இருந்து நாயகன் விடுமுறைக்கு வரார், "சொன்னா தப்பா நினைக்ககூடாது, கையில பாட்டிலோட"!. அதை நண்பர்களிடம் கொடுத்து விட அவர்கள் குடித்து விட்டு வந்து ஒரு "நகைசுவை கலாட்டா" பாடல் போல.

நல்லா இருக்கு அமரா? போட்டுடலாம்.

அண்ணே...

என்னப்பா, நான் தான் சொன்னேனே போடுடலாம்ன்னு.. பின்ன ஏன் சும்மா
"அண்ணே அண்ணே ன்னு"

ஒன்னும் இல்ல, இந்த பாட்டை நானே எழுதி வச்சி இருக்கேன்.. நீங்க தயார்னா இப்ப ராகம் போட்டுடலாம்.

சரி பாட்டை சொல்லு...

அண்ணே.. அண்ணே...

சரி அமரா, பாட்டை சொல்லு..

பாட்டே  அதுதான், அண்ணே..

புரியில அமரா.

"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு, நல்ல ஊரு இப்ப ரொம்ப கேட்டு போச்சின்னே"
.
நல்லது... இந்தா கேட்டுக்க ராகத்தை.

அண்ணே,, இந்த பாட்டு நாலு பேர் பாடும்படிய இருக்கிறனால SPB - யேசுதாஸ் - நீங்க - மலேசியா  நாலு பெரும் சேர்ந்து பாடனம்னு எனக்கு ஒரு ஆசை.

அமரா, பாட்ட மத்தும் நீ சொல்லு, பாடறத யார்ன்னு நான் சொல்றேன்.. இது கிராமத்தில் வாழும் நாலு இசை தெரியாத நண்பர்கள் பாடுவது.  இத வந்து புதுசா யாரையாவது வச்சி பாட வைக்காலாம். நீ ஒரு காரியம் பண்ணு. மெட்ராசிலே ரொம்ப "அடிக்கட்டை" குரல் யாருதுன்னு கண்டு பிடி, அவங்கள வச்சி பாடலாம். நல்ல வித்தியாசமா இருக்கும்.

அடிக்கட்டை குரல்.. அது டாக்டர். சாம்வேல் தான் அண்ணே, இப்ப தான் பக்கத்துக்கு ரூமில் எதோ ரெகார்டிங்ல பார்த்தேன்.

ஓடி போய் அவரை கூட்டின்னு வா. மலேசியா இங்க தான் இருக்கார், அவரை வேணும்னா, கொஞ்சம் குரலை மாற்றி நடுவில் ரெண்டு மூணு வரிய பாட சொல்லலாம். அந்த பையன் மனோ காலையில் இங்க இருந்தாரே  , போய்ட்டாரா?

இல்ல அண்ணே, இன்னும் இங்க தான் இருக்கார்.

அவரையும் கூப்பிடு, நடுவில் ரெண்டு வரி பாட சொல்லலாம்?

நாலாவது ஆளுக்கு வேணும்னா  நான் பாடடும்மா அண்ணே?

உனக்கு தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்கும், நேரம் இருந்தா வா, நடுவில் ஒரு ரெண்டு வரியில் உன்னையும் சேர்த்துடறேன். சரி, அங்கே போறது யார், ஆச்சி மனோரமாவா?

ஆமா அண்ணே, அவங்களே தான்.

அவங்கள கொஞ்சம் கூப்பிடு.

இதோ இப்பவே அண்ணே.

மனோரமா அக்கா, "முத்து குளிக்க வாரிகளா" பாட்டுக்கு அப்புறம் வேற ஏதாவது பாடினீங்களா?

அங்கே இங்கேன்னு ரெண்டு மூணு படத்தில் பாடி  இருக்கேன் தம்பி.

நீங்க எனக்கு ஒரு பாட்டு பாடனுமே,

தம்பி, என்னை வச்சி "காமடி கீமடி" எதுவும் பண்ணலையே?

இல்ல அக்கா, கிராமத்து காட்சி. நாலு பேர் பாடுகின்ற பாட்டு.. நீங்களும் சேர்ந்து ரெண்டு வரி பாடினீர்கள்  என்றால், படம் பார்கின்றவன் எல்லாம்.. யாரு பாடுனதுன்னு, தலைய பிச்சிப்பான். சரின்னு சொல்லுங்க...

சரி ...சரி ... "சரிகமபதநீச" , எப்ப "ரேகார்டிங்க்"ன்னு சொல்லுங்க, வந்துடறேன்.

இப்ப தான் அக்கா  , எல்லாம் தயார், இன்னும் அஞ்சி நிமிஷத்தில் ஆரம்பிச்சிடலாம்..

ரெடி..1- 2 - 3.

அண்ணே ... அண்ணே.....  ( கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்)

பின் குறிப்பு: இசை ஞானி இளையராஜா ஒரு மேதை. அவர் எந்த காரியம் செய்தாலும் அதில் ஒரு "ஞானியின் நினைப்பு" இருக்கும். இந்த பாடல் வந்த கதை இப்படிதான் இருக்கும்ன்னு நானே நினைத்து எழுதியது இது. முற்றிலும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல!

6 கருத்துகள்:

  1. வணக்கம்
    தங்களின் நினைவில் மலர்ந்த கற்பனைக்கதை நன்றாக உள்ளது... காணொளியையும் இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி... ரூபன் அவர்களே...

      நீக்கு
  2. "பூவே இளைய பூவே" பாடல் இளையராஜாவின் வைரமுத்துக்களில் ஒன்று. இன்னும் 25 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவே இளைய பூவே... பாடும் போதே... மெய் சிலிர்க்கும்...வருகைக்கும் பின்னோடதிர்க்கும் நன்றி மாடிப்படி மது அவர்களே...

      நீக்கு
  3. "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு, நல்ல ஊரு இப்ப ரொம்ப கேட்டு போச்சின்னே" என்ற பாடல்
    இன்றைய நம்ம சூழலுக்கு
    நல்ல பொருத்தமண்ணே!

    பதிலளிநீக்கு
  4. கற்பனையா! நிஜமான உரையாடல் போலவே சிறப்பாக இருந்தது! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு