புதன், 23 ஜூலை, 2014

"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும்


தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.


நேற்று என் வலைபதிவில் நண்பர் திண்டுகல் தனபாலனின் கருத்து ஒன்று இருந்தது. நான் இட்ட  "கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி" என்ற இடுகையை படித்து வாழ்த்துக்கள் கூறி இருந்தார். அவருக்கு ஒரு பதில் கருத்து அனுப்பிவிட்டு, நண்பரை பற்றி மேலும் அறிந்து "கொள்ள(ல்ல)லாம்" என்று அவரின் வலைபதிர்வுக்கு சென்று சற்று மேய்ந்தேன்.

 அருமையான பல இடுகைகள்.அடுத்த இரண்டு மாதத்திற்கு நான் பிஸி. இவ்வளவு அழகாக எழுதி இருக்கிறாரே, இவர் யார் என்று அறிய அவரின் சுய விவரம் காண சென்ற எனக்கு அதிர்ச்சி. ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? இவர் மட்டும் என்ன விதி விலக்கா?

சற்று பொறுங்கள். ஒவ்வொன்றாக பாப்போம். முதலில் இவர் பெயர். பெயருடனே ஊரை சேர்த்துள்ளார். நல்ல பண்பு, தவறே இல்லை. அதை தொடர்ந்து ஒரு தத்துவம் "தீதும் நன்றும் பிறர் தர வரா, வழிகளை ஏற்றுகொள், இதுவும் கடந்து போகும்" அட்டகாசமான தத்துவம், நானும் பின்பற்றுவேன், தவறே இல்லை.

தொடர்ந்து இவருக்கு பிடித்த சில விடயங்களையும் எழுதியுள்ளார்? பிறகு எங்கே சறுக்கினார் என்று கேட்பீர்கள்? சொல்லுகிறேன். 
ஆர்வங்கள் என்ற இடத்தில   "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு".". என்று எழுதியுள்ளார். சருகி விட்டாரே ஐயா சருகி விட்டாரே. இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். "விளக்குமாறை" யாரும் எடுக்கும் முன் என்னிலையை "விளக்குமாறு" ஒரு நிமிடம்.

நான் ஒரு கணக்கு பிள்ளை. எந்த ஒரு விஷயம் என்னிடம் வந்தாலும் நான் கூட்டி பெருக்கி பார்ப்பவன். இந்த "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு"." என்ற சொற்தொடரில் சொல் குற்றம் இல்லை ஆனாலும் பொருள் குற்றம் உண்டு. இங்கே இவர் சிவனும் இல்லை நான் ஒன்றும் நக்கீரனும் இல்லை, சொல்ல போனால் நான் தருமியை போல ஒருவன். தருமி என்றாலும், நெற்றி கண் இல்லாவிடினும், குற்றத்தை சொல்ல வேண்டும் அல்லவா. 

ஏற்கனவே சொல்லியதை போல இங்கே சொல் குற்றம் இல்லை. நான்குமே அருமையான தமிழ் சொற்கள். இதை சொற்களை தனியாக சொன்னால், அது ஒரு பூ, கோர்த்து சொன்னால் அதுவே மாலை. அருமையான வாக்கியம். 

பொருள் குற்றம் எப்படி? இவ்வாக்கியத்தை கணக்கின் அடிப்படையில் பார்த்தல் இதற்கான விடை தவறு.   "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு". விளக்குகிறேன் கேளுங்கள். "கற்றது கைமண் அளவு" அது சரி, "கல்லாதது உலகளவு" இங்கேதான் அந்த பொருள் குற்றம். கல்லாதது எப்படி உலகளவு ஆகும்? நாம் தான் ஏற்கனவே கைமண் அளவு கற்று விட்டோமே? அதனால் இந்த ஆர்வத்தை நண்பர் தனபால் உடனடியாக  "கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு மைனஸ் கைமண்ணளவு" என்று மாற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பின் குறிப்பு: இதை படிக்க நீங்கள் வேஸ்ட் பண்ணிய இந்த 5 நிமிடங்கள் "should not come in my maths"? அதாவது என் கணக்கில் வர கூடாது என்று கேட்டு கொள்(ல்)கிறேன்.

23 கருத்துகள்:

  1. நெசமாவே கொன்னுடீங்க அண்ணா! அவ்வ்வ்வ் :((((

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நீங்கள் சொல்ல வந்தது ' புளி" என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  3. கணக்கில் நீங்க ஹீரோதான்:))

    பதிலளிநீக்கு
  4. சரி தான்... நீங்கள் சொல்வதும் சரி தான்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    கணக்குப்போட்டு சரியாக சொன்னீங்கள்..... அண்ணா
    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. DD அவர்கள் கையிலே உள்ள மண் சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கு என்னிடம் சான்றுகள் நிறைய உண்டு ,அவர் சொல்வது சரிதான் !

    பதிலளிநீக்கு
  7. "திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்குமா?
    எங்கே?
    "கற்றது கைமண்அளவு கல்லாதது உலகளவு" என்பதிலேயா?
    அப்ப நீங்களும் தானே சறுக்கினீர்கள்...
    உண்மையில்
    "கற்றது கைப்பிடி மண்அளவு கல்லாதது உலகளவு" என்பதே சரி!
    கற்கும் அளவை மதிப்பிட முடியாது.
    அதனால், இப்படி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றமா? என் கூற்றிலா? சொல் குற்றமா? பொருள் குற்றமா?

      நீக்கு
  8. Really you wasted many people time ( if many people read your blog )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Oops, i am sorry, i didnt see that coming. Anyways, going forward, would post the disclaimer on top. Thanks for coming, though1

      நீக்கு
  9. அறிவுக்கு அளவுகோல் வைத்து கணக்கு போடும் வாத்தியாரா நீங்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கு வாத்தி இல்ல அருணா... கணக்கு பிள்ளை...நான் ஒரு குமாஸ்தா!

      நீக்கு
  10. எப்புடி ஐயா இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க? ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டி கழித்து பார்த்தேன் சுரேஷ் அவர்களே... கணக்கு இடித்தது!

      நீக்கு
  11. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. தயவு செய்து என் வாழ்க்கையின் ஐந்து நிமிடத்தை திருப்பிக் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு