திங்கள், 21 ஜூலை, 2014

சின்ன மாமியே ..... உன் சின்ன மகள் எங்கே.?



"சின்ன மாமியே ..... உன் சின்ன மகள் எங்கே."?   இந்த பாடலை ரசிக்காத தமிழ் இசை பிரியர்கள் இருக்க முடியாது. இந்த பாடல் மட்டும் இல்லாமால் மற்றும் பல பாப்பிசை பாடல்களை எழுதி இசையமைத்து கொடுத்தவர், எனக்கு மிகவும் பிரியமான அண்ணன் "நித்தி கனகரத்தினம்". இவருக்கு பாப்பிசை பிதா என்ற பட்டமும் உண்டு.



நான் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து இருந்தாலும் சிறு வயது முதலே, "இலங்கை தமிழ்  பாப்பிசை" என்றால் ஒரு வெறி. சின்ன மாமியே, கள்ளுக்கடை பக்கம் போகாதே, ரோசி, அவள் வேண்டாம், ஊரே கேட்டு போச்சி மற்றும் பல பாடல்களை பாடியே சில  பரிசுகளையும் பல நண்பர்களையும் பெற்றேன்.

இந்த பாப்பிசைக்கும் எனக்கும், ஏதோ விட்ட குறை - தொட்ட குறை போல். எனக்கு கிடைத்த என் அருமை மனைவியும் அண்ணன் நித்தி ஊரை சேர்ந்தவள் என்பதால், அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 1980 போல் இலங்கையை விட்டு ஆஸ்திரேலியா சென்று அங்கு மிகவும் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். எப்படியோ அவரின் எண்ணை வாங்கி தொடர்பு  கொண்டேன். இந்தியாவில் தமக்கு ரசிகர் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றார்.  மற்றும் என் மனைவி அவர் ஊரை சார்ந்தவர் என்றதும் மகிழ்ச்சி ரெட்டிப்பு ஆனது . அவரும் என் மனைவியும் கதைத்து முடித்த பின் அவர் கிட்ட தட்ட என் சின்ன மாமானார் ஆகிவிட்டார்.

அவரோடு பேசுகையில் அடுத்த சில நாட்களில் கனடா வருவதாக சொன்னார்.  அண்ணே,  இவ்வளவு தூரம் வருகிறீர்கள்,  எப்படியாவது ஒரு வாரம் அருகில் உள்ள "லாஸ் அன்ஜெல்ஸ்" வந்து எங்களோடு தங்கி செல்லுங்கள் என்ற என் வேண்டுகோளை ஏற்று அவரும் அவர் துணைவியார் செல்வி அவர்களும் எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.


என் மனைவிக்கோ சந்தோசம். அவர் வீட்டில் வந்தவுடன் அவரும் என் மனைவியும் என்ன கதைத்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை. அருமையான தமிழ், அட்டகாசமான உச்சரிப்பு.  இவர் இசையில், படிப்பில் மட்டும் இல்லாமால் சமையலிலும் ஒரு திறமைசாலி. என்ன ஒரு அட்டகாசமான சமையல்.  இவர் எங்கள் இல்லத்தில் இருக்கையில் ஒரே பாட்டும் ஆட்டமும் தான்,,..

அதற்கான சாம்பிள் இங்கே (என் பேஸ் புக்கில் இருந்து)...இந்த பாடலின் ராகம் அவருடையது.. ஆனால் வரிகளை நான், எனக்கு பெண் பார்க்கும் போகும் நாட்களுக்கு தகுந்தார் போல் மாற்றி எழுதி கொண்டேன்.

இலங்கை நாடு போய் வந்தேன் மனைவி தேடியே
ஊரெலாம் விட்டு வந்தேன் உன்னை நாடியே
உண்மையதான் சொல்லி புட்டேன் மனசு தவிக்குது
உனக்கும் என்னை வேண்டாம் என்றால் நெஞ்சு பதறுது
எந்தன் ஹோஷி, நீ கொஞ்சம் யோசி
என்னை மறுத்தால், போவேன் நான் காசி.

இந்திய நாகரீகம் எனக்கு கொஞ்சமும் பிடிகல்லை
காலையின் நாகரீகம் அங்கே மாலையில் மாருது
'மேக் அப்" போட்ட பொண்ணு ஏமாத்த பாக்குது
 பொண்ணோட அம்மா என்னை மாத்த பாக்குது...

எந்தன் ஹோஷி, நீ கொஞ்சம் யோசி
என்னை மறுத்தால், போவேன் நான் காசி.


நானும் அண்ணன் நித்தியும் சேர்ந்து கலக்கிய பாடலை இங்கே பாருங்கள்...

9 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. எதோ எங்களால் முடிந்த ஒரு ராகம்.. அம்புட்டுதேன்.

      நீக்கு