வெள்ளி, 18 ஜூலை, 2014

மாங்கா ஓகே, சாம்பல் எதுக்கு விசு?

ரிங்.. ரிங்... மறுபடியும்  தொலை பேசி ரிங்கியது...

விசு பேசுறன்...

ஹலோ ... விசு பிள்ளை, நான் சுந்தரம் பிள்ளை பேசுறேன்.

சொல்லுங்க பிள்ளைவாள், ரொம்ப நாள் ஆச்சி, என்ன விஷயம்.
ஒன்னும் இல்ல விசு பிள்ளை, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்

ஒன்னும் இல்ல, ஆனால் முக்கியமான விஷயம், புதிரா இருக்கே, பிள்ளைவாள்

விசு பிள்ளை..

சுந்தரம், நான் பிள்ளைவாள் அல்ல, நீ என்னை பிள்ளை என்று அழைப்பது பிழை.

விசு ... என்ன சொல்லுற.. என் பெயர் சுந்தரம் பிள்ளை, உன் தொழிலோ கணக்கு பிள்ளை, அதனால்  தானே நாம் ஒருவரை ஒருவர் பிள்ளை என்று அழைக்கிறோம்.

சுந்தரம் ஒரு காரியம் பண்ணு, இனி நீ என்னை விசு என்று அழை, நான் உன்னை சுந்தரம் என்று அழைக்கிறேன், சொல்ல வந்த  விஷயத்த சொல்லு.

வாழ்த்துக்கள் விசு, நீ பெரியப்பா ஆகா போகின்றாய்.

நன்றி சுந்தரம், நீ அப்பா ஆகபோற விஷயத்தை எவ்வளவு நாசூக்கா சொல்லி
வைச்ச பாத்தியா? சரி, இனிமேல் தான் நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.

என்ன விசு பயமுறுத்திர?

பயமுருத்துல சுந்தரம், உண்மையா தான் சொல்றேன்.

நீ எதுக்கும் உன் மாமியார்ட்ட சொல்லி வாரத்திற்கு ரெண்டு முறை நெஞ்சி எலும்பு சூப் குடி

ஏன் விசு ?.

மாப்பு, இப்ப உன் வீட்டம்மா முழுகாம இருக்காங்க இல்ல, அவங்களுக்கு உடல் ரீதியா பல மாற்றங்கள் ஏற்படும், அந்த நேரத்தில் நிறைய கோவம் வரும். அப்ப யார கத்துவாங்க.

விசு, என்னை தான்...

அதுதாண்டா சொல்லுறேன்.. கொஞ்சம் உடம்ப தேத்திக்கோ

அடுத்த 9 மாதம், அவங்க புள்ளைய மட்டும் தான் சுமப்பங்கோ..மவனே நீ அவங்க உலகத்தையே சுமக்கனும்.

என்னப்பா, இவ்வளவு பெரிய விஷயத்தை கொஞ்சம் தாமதமாக சொல்லிட்டே..

நீ மட்டும் சந்தோசமா இருக்க கூடாது அல்லவா? அதுதான் மறைச்சிட்டேன்.

சரி மேல சொல்லு, விசு.

சுந்தரம், இந்த நேரத்தில் அவங்க என்ன பேசினாலும் நீ காதுல ஈயத்த ஊத்தினவன் மாதிரி கம்முன்னு கேட்டுக்கோனும். மவனே நீ எதனா பதில் சொன்னே, போறவங்க வரவங்க எல்லாம் உன்னை..... 'அறிவு இருக்கா உனக்கு, புள்ளதாச்சியா இப்படியா நடத்துவன்னு ஒரு திட்டு".

விசு.. இப்ப என்னை ஏன்னா பண்ண சொல்லுற?

ஒன்னும் பண்றதுக்கு இல்ல.

அவங்களுக்கு பிடிச்சத வாங்கி கொடு, அவங்க தின்னு மீதி வைச்சத நீ சாப்பிட்டுக்கோ

முடிஞ்சா வரைக்கும் நீயா பேச்சு கொடுக்காதே... அவங்க கேட்க்கிற கேள்விக்கு மட்டும் அவங்களுக்கு புடிச்ச பதிலா சொல்லு.

இது   எவ்வளவு நாட்களுக்கு விசு..ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே.

ஒரு வாரத்திற்கு தான் சுந்தரம்

விசு,என் வயித்தில பால வார்த்த, ஒரு வாரம் எப்படியாவது கஷ்டப்பட்டு தள்ளிடுவேன்.

அட பாவி, சொல்லுறத முழுசா கேளு.

ஒருவாரம் தான் இந்த கஷ்டம், அப்புறமா பழகிடும்

அப்ப எவ்வளவு நாளுக்கு தான் இந்த மாதிரி இருக்கனும்..

வாழ்க்கை முழுக்க சுந்தரம் வாழ்க்கை முழுக்க.. போ, போய் அவங்களுக்கு
பிடிச்ச மாங்காய், இல்லாட்டி சாம்பால் வாங்கி வா.

மாங்கா ஓகே, சாம்பல் எதுக்கு விசு?

சாம்பல் அவங்களுக்கு பிடிக்கும்னு சொல்லுவாங்க, மீதி இருந்தா உன் நெத்தியில் பட்டையா நாமத்த போட்டுக்கோ     போ..

4 கருத்துகள்: