வெள்ளி, 18 ஜூலை, 2014

வேட்டிய மடிச்சு கட்டு..

ரிங்.. ரிங்.... போன் ரிங்கியது..

விசு பேசறேன்..

வாத்தியாரே... தண்டம்...

யாருடா நீ "பேமானி" , சனியும் அதுவுமா காலையில் என்ன தண்டம்னு கூப்பிடறது? (("தண்டம்'என்றதை கேட்டவுடன், நான் பேய் அறைந்ததை போல் ஆகிவிட்டேன்- பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)

இல்ல, வாத்தியாரே, நான் தண்டபாணி பேசுறேன்.



சனி என்றவுடனே நீதானே ஒரு "ஐடியா" இருந்தது. சொல்லு "தண்டம்", என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல வாத்தியாரே..

சரி அப்புறம் பார்க்கலாம்.

அட இரு வாத்தியாரே? எதோ "டைட்டானிக்" கப்பலில் யாரையோ அனுப்பி வைச்ச மாதிரி ஓடுறியே?

"தண்டம்", சனியும் அதுவுமா நீ போன் பண்ண அதில உனக்கு நான் எதனா உதவி செய்யணும் ஒரு விதி. இன்னைக்கு என்ன ஆச்சி? சுந்தரி என்ன சொல்றாங்க?

சுந்தரி ஓகே , வாத்தியாரே?

சுந்தரி ஓகேனா, நீ மதவங்களிடம் பேசவே மாட்டியே, பாணி. என்ன விஷயம்.

அது ஒன்னும் இல்ல... சாரி.. இன்னைக்கு காலையில் "தின மலர்" படித்தேன் வாத்தியாரே.

பாரு "தண்டம்", 9000 மைல் தாண்டி வந்தும், உனக்கு தினமலர் படிக்கிற அளவு வசதி. கொடுத்து வைச்சவன்பா நீ..

வாத்தியாரே, சொன்ன நம்ப மாட்ட, "தினமலர்" படிக்கும் போதே நம்ப ஊரில் கிடைக்குமே "சாய்" அதையும் ஒரு "கப்" குடிச்சிக்கிட்டே தான் இருக்கேன். சும்மா சொல்ல கூடாது வாத்தியாரே, "தினமலர்-சாய்" காம்பினேசன் தூள்.

தண்டம், நீ வேனும்ம்னா, ஒரு வேலை செய்.

சொல்லு வாத்தியாரே,

உங்க மாமனார்ட்ட சொல்லி "கணேஷ் பீடி" ஒரு கட்டு பார்ஸல் அனுப்ப சொல்லு? அதையும் கொளுத்தி வச்சிக்கோ, அடையாரில் இருப்பதை போல் ஒரு பீலிங் வந்துடும்..நல்ல மனுஷன்யா நீ.. விஷயத்த சொல்லு.

ஒன்னும் இல்ல... சாரி.. இல்ல வாத்தியாரே, பேப்பரில் போட்டு இருக்கு, சென்னையில் சில இடங்களில் "வேட்டி கட்டிக்கிட்டு போனா உள்ள விடமாடாங்கலாமே, இந்த விஷயம் உனக்கு தெரியுமா"?

ஆமா "தண்டம்",  5 ஸ்டார் ஹோட்டல், கிரிக்கெட் மைதானம் ஆபிஸ், மற்றும் சில இடங்களில் இந்த ரூல் உண்டு.

சரி வாத்தியாரே,, இங்கே எல்லாம் நீ அடிக்கடி போவீயே?

அதுக்கு என்னடா இப்ப?

இல்ல, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம எப்படி வாத்தியாரே வேட்டி கூட கட்டமா, உள்ளாடையோட இங்கே எல்லாம் போன?

ஏன், தண்டம்... ரூம் எதனா போட்டியா?

இல்ல வாத்தியாரே, ஏன் அப்படி கேட்க்கிற?

பின்ன, எப்படி தண்டம் இப்படி யோசிக்க முடியுது?

இல்ல வாத்தியாரே, சும்மா தமாஸ் பண்ணேன். சரி ஓகே வாத்தியாரே, இங்கே சுந்தரி என்னமோ "குட்டி போட்ட பூனை" மாதிரி என்னையே முறைக்கிறா, நம்ப அப்புறம் பேசலாம்.

சரி பாணி.

வாத்தியாரே, போறதுக்கு முன்னால ஒரு விஷயம்...

சொல்லு பாணி..

இந்த கணேஷ் பீடி மேட்டர் சொன்னீயே ... அதை மாமனார் எடுத்துன்னு வந்தா இங்க "கஸ்டம்சில்" விடுவாங்களா?

போடாங்க...

http://www.visuawesome.com/

6 கருத்துகள்:

  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா... அடையாரில் இருப்பது போல் ஒரு பீலிங் வர வேண்டாமா...? அதற்காத்தான் கேட்கிறார் பீடி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பன்னுவேன் தனபால். சனிகிழமை ஆனால் இவர் தொல்லை தான்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பின்னோட்டத்திற்கு நன்றி, தொடர்ந்து வரவும்.

      நீக்கு