சனி, 19 ஜூலை, 2014

மீண்டும் ஒரு கா(த)ல் கதை...

"என்னோடு வா துபாய் ஏராளம் தான் ருபாய்" என்ற பாட்டுகேற்ப துபாய் நாடு சென்ற நான் என் ஆத்தா செய்த புண்ணியத்தினால்  டென்மார்க் நாட்டை சேர்ந்த ஒரு பல நாட்டு நிறுவனத்தின் தணிக்கையாளராக பொறுப்பேற்றேன். அருமையான வேலை, அட்டகாசமான வரியற்ற சம்பளம், அதற்க்கும் மேல் நல்ல வாகனம். சிவாஜி கணேசன் பாடியது போல் ஆண்டவன் படைத்தான் என்கிட்ட கொடுத்தான் என்ற வாழ்க்கை.

 அந்த நேரத்தில் வந்தது தான் உலக கோப்பை கால்பந்து போட்டி. நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த போட்டி இந்த முறை அமெரிக்காவில் நடந்தது. உலக கோப்பை கால்பந்து என்றவுடனே நானும் சரி, என் ஒன்று விட்ட சகோதர்களும் சரி (கசின்ஸ்) மற்றும் பல நண்பர்களும் சேர்ந்து கொண்டாடிவிடுவோம். இந்த உலக கோப்பை போட்டியை இவர்களுடன் கண்டு ரசிக்க நான் ஒருமாதம் விடுமுறை போட்டு விட்டு இந்தியா சென்றேன்.

 பங்களூரில் எங்கள் சித்தி வீடு. நான் மற்றும் என் சித்தி பையன் அருண் மற்றும் பல நண்பர்கள் சேர்ந்து ஒரு அட்டவணையை தயார் பண்ணி சுவற்றில் மாட்டி அதற்க்கான பந்தயங்களையும் கட்டி ரசிக்க ஆரம்பித்தோம்.போட்டி அமெரிக்காவில் நடந்ததால் இந்தியாவில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும். இரவு தோறும் மூன்று போட்டி. முதல் போட்டி இரவு 10 மணிக்கு ஆரம்பித்து கடைசி போட்டி காலை 5 போல் முடியும்.

 இரவு தோறும் இந்த போட்டிகளை காபி, தேநீர், சோமபானம் சுறா பானம் போன்ற அவரவருக்கேற்ற பானத்தை பருகி "என்சாய் மாடுவோம்." ஒருவாரம் சென்றது. பிரச்னை ஆரம்பித்தது. எங்கள் அனைவரிலும் நான் ஒருவன் தான் விடுமுறையில் இருப்பவன். மற்றவர்கள் அனைவரும் இரவு முழுவதும் ஆட்டத்தை பார்த்தாலும் காலை எழுந்து வேலைக்கு செல்ல வேண்டும். என் சித்தி மகன் அருண் இரவு முழுவதும் விழித்து இருந்து பகலில் வேலைக்கு செல்வதை பார்த்த என் சித்தி சற்று அவனை கண்டித்து கொண்டார்கள்.  தினமும் இரவு முதல் ஆட்டம் ஆரம்பிக்கையில் அவர்கள் வந்து அவனை தூங்க சொல்லி சத்தம் போடுவார்கள். இவ்வாரக இரவு முழுவதும் விழித்து இருந்து பகலில் வேலைக்கு செல்வது உடம்புக்கு ஆகாது என்று அவர்கள் போடும் சத்தம் எனக்கும் சரியாகத்தான் தென்பட்டது ஆனாலும் வேலைக்கு போவது நான் இல்லை என்று நான் நாள் ஒரு தூக்கம் இரவு பந்து ஆட்டம் என்று இருந்தேன்.

10 நாட்கள் முடிந்தது. ஒரு நாள் அருண் வேளையில் இருந்து வந்தான். நேராக சித்தியிடம் சென்று, அம்மா, நீங்கள் சொன்ன அறிவுரை இன்று தான் எனக்கு புரிந்தது. அலுவலகத்தில் வேலை நேரத்தில் தூங்கி விழுந்துவிட்டேன், அதனால் அங்கு பிரச்சனை ஆகிவிட்டது. எனக்கு இரவு முழுவதும் விழித்து இருந்து விட்டு பகலில் வேலை செய்ய முடியவில்லை. உங்கள் பேச்சை கேட்க முடிவு செய்து விட்டேன் என்றான். என் சித்தி உடனடியாக "வாடா நான் பெத்த ராசனு"அவனை பாராட்டி அன்று இரவு காடா வெட்டினார்கள். அவன் சொன்ன காரியம் எனக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் (அருண் கால்பந்து ஆட்டத்தை நன்கு அறிந்தவன், அவனோடு சேர்ந்து பேசி கொண்டே பார்ப்பதே ஒரு சுகம்) அவன் உடல் நலத்தை கருதி என்னை திட படுத்தி கொண்டேன். 

இரவு 10 மணி முதல் ஆட்டம் துவங்கியது. அருண் வழக்கம் போல் வந்து அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த சித்தி, "நீ படுக்கவில்லையா? இன்று மாலை தானே சொன்னாய், உன் பேச்சை கேட்பேன் என்று, ஏன் இன்னும் விழித்து கொண்டு இருக்கிறாய் என்றார்கள். அதற்க்கு அவன், அம்மா, இந்த போட்டி நான்கு வருடதிர்க்கு  ஒரு முறை தான் வருகிறது. இதை என்னால் தவிக்கமுடியாது, அதனால் தான் இரவு முழுவதும் இதை பார்த்து விட்டு வேலைக்கு போக இயலாது என்ற உங்கள் பேச்சை கேட்டு வேலையை ராஜினமா பண்ணிவிட்டேன் என்றதும் சித்தி பேய் அறைந்ததை போல் ஆனார்கள் (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்)
அவர்கள் உடனடியாக சுதாரித்து பரவாயில்லை ஒரு மாதம் தானே எப்படியும் சமாளித்து விடலாம் என்றவுடன் அருண் , அம்மா இரண்டும் செய்ய கூடாது என்று நீங்கள் தான் சொன்னிர்கள் இப்படி நாளுக்கொரு வார்த்தையை மாற்றி பேசுவது ஒரு அன்னைக்கு நல்லது அல்ல என்றான்.

 சரி இந்த நிகழ்ச்சிக்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று பார்கின்றீர்களா? வெயிட் எ நிமிட் பார் டூ நிமிட்ஸ்.
இவ்வாறாக பேசி கொண்டு இருக்கையில் எங்கள் தகப்பன் வழி தாத்தா வாழ்ந்த ஆம்பூரில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. என் ஒன்று விட்ட மற்ற சகோ சேகரிடம் இருந்து. மாப்பு எப்ப வந்த என்று கேட்டவனுக்கு நான் இரண்டு வாரத்திற்கு முன்பு என்று சொன்னவுடன் கோபமே வந்து விட்டது. இரண்டு வாரம் ஆகிவிட்டதே என்னை அழைக்க தோன்றவில்லையா என்று அதை பெண் கோபிப்பதை போல் கோபித்து கொண்டான் . "சரி சரி பீல் ஆகாதே" என்று அவனை தேற்றிய பின் அவன் கால் பந்து போட்டி நடந்து கொண்டு உள்ளதே, நம் உடன் பிறப்பாகிய 40 பேரும் விடுமுறை போட்டு இங்கே தான் இருகின்றோம். அலிபாபா நீ அங்கே என்ன பண்ணி கொண்டு இருக்கிறாய்? நீயும் அருணும் உடனே புறப்பட்டு வரவேண்டும் என்றான். 

அடடே.. கரும்பு தின்ன கூலியா? அடுத்த நாள் காலையில் பிருந்தாவான் ட்ரெயினில் போக உத்தேசம். இரவே பைகளை அடுக்கி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் சித்தி வீட்டில் தங்கி இருந்த மற்றொரு உறவினர் எங்கே கிளம்பி கொண்டு இருகின்றீர்கள் என்றார்? அவருக்கு பதிலாக நாளை காலை 6:40 ற்கு பிருந்தாவன் வண்டியில் ஆம்பூர் போகிறோம் என்றோம். அவர் உடனே தானும் காலை 6:25 வண்டியில் கோவை செல்வதாகவும், அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்ல காலை 5:30க்கு டாக்ஸி வரும் என்றும் சொல்லி நாங்கள் தயாராக இருந்தால் எங்களையும் ரயில்நிலையத்திற்கு அழைத்து செல்வதாகவும் சொன்னார். அன்று இரவும் 3 போட்டி பார்த்து விட்டு நாங்கள் காலை 5 மணிக்கு தான் தூங்க சென்றோம். ஒரு 5:30 போல அவர் எங்களை எழுப்ப ஆரம்பித்தார்.நாங்கள் இன்னும் ஒரு  5 நிமிடம் என்று பல முறை சொன்னது அவருக்கு எரிச்சலை மூடியது போல்.

உங்கள் ரயில் எதனை மணிக்கு என்று கேட்டவருக்கு அருண் பதிலாக , அது சரியாக தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் ரயிலை "ஜஸ்ட் மிஸ்" பண்ணால் எங்களுக்கு சரியாக இருக்கும் என்றான்.

பிறகு எழுந்து கிளம்பி ரயில் நிலையம் சென்றோம். அங்கே முதலில் வந்த கோவை வண்டியில் அவரை ஏற்றி விட்டு அதன் பின்னாலே வந்த பிருந்தாவன் வண்டி வந்ததும் ஏறி கொண்டம். கூட்டம் அதிகம். இருந்தாலும் எங்கள் கை வசம் தான் எங்கள் "ரயில் மந்திரம்" உள்ளதே!
எங்கள் ரயில் மந்திரத்தை படிக்க இங்கே சொடுக்கவும் ...
http://vishcornelius.blogspot.com/2014/03/blog-post_10.html

அதை பின் பற்றி ஜன்னல் அருகே எதிரும் புதிருமாய் இரு இருக்கை பார்த்து அமர்ந்தோம். இரவு முழுவதும் தூக்கம் இல்லை அதனால் வண்டி புறப்படவுடனே தூங்க ஆரம்பித்தோம். ஜோலார்பேட் வந்தது. அங்கே இறங்கி "டுட்டி ப்ரீ ஷாப்பில்" சில வகையறாக்கள் வாங்கி கொண்டு ஆம்புரை நோக்கி கிளம்பினோம். நாங்கள் சென்ற அந்த பேருந்தில் வந்த சில கிராமத்து வாலிபர்கள் "ஒரு மரத்து கள்" என்று பேசி கொண்டு வந்தனர். "ஒரு மரத்து கள்"உடம்பிற்கு எவ்வளவு நல்லது என்றும் அது எங்கே கிடைக்கும் என்று பேசி கொண்டே வந்தார்கள். ஆம்பூர் வந்த சேருகையில் மதியம் 1 மணி.


 சரியான பசி. ஆம்பூர் என்றாலே பிரியாணி அல்லவா? அருகே இருந்த சலாம் ஹோட்டல் சென்று அமர்ந்தோம். அங்கே வந்த சர்வரிடம், " ஆளுக்கொரு பிரியாணி சொல்லிவிட்டு மூளை இருகிறதா என்று கேட்டோம்". அவன் அதற்க்கு, " உங்களுக்கு முன் வந்தவர்களுக்கு கூட இருந்தது ஆனால் உங்களுக்கு இல்லை என்று சொன்னவுடன் அருகில் இருந்த சிலர் சிரித்து விட்டனர். அதை பார்த்தவுடன் மனதில் சற்று கோவம். இருந்தாலும் "ஏரி மேல் கோவித்து கொண்டு"என்ற பழமொழி போல் எதுவும் செய்யாமல் அமைதியாக பிரியாணிக்காக அமர்ந்து கொண்டு இருக்கையில் அந்த மெனு பலகையில் இருந்த "ஆட்டு கால் பாயா" என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. 

சர்வரை மீண்டும் அழைத்து, மூளை இல்லாவிடிலும் பரவாயில்லை, ஆட்டு கால் பாயா கிடைக்குமா என்றேன்? ஆம் என்று சென்று சில நிமிடங்களுக்கு பிறகு 4 கால் கொண்ட பாயா   எடுத்து வந்தான். சிறிது தூக்க கலக்கம் , சிறிது பசி மயக்கம், சிறிது கோவம் (மூளை இல்லை என்று சொன்னவிதத்திற்காக) எல்லாம் என் கண்ணை மூடி மறைதததால் அந்த சர்வரை மீண்டும் அழைத்து "இந்த நாலும் ஒரு ஆட்டு கால்கள் தானே என்றேன் மூளைக்கு சிரித்த அனைவரும் இதற்கும் சிரிக்க அங்கு இருந்த கல்லா பெட்டி சிங்காரம் எங்கள் மேசைக்கு வந்து அந்த காலை எடுத்து கொண்டு உங்களுக்கு இன்று எதுவும் இல்லை என்றார்.


அடேடே..மீண்டும் என் பாட்டி சொன்னதுதான் நினைவிற்கு வந்தது.. "விசு உனக்கு வாயில் தான் கண்டம், சாப்பாட்டை தவிற வேறு எதற்கும் திறக்காதே என்றார்களே" இப்போது சாப்பிட கூட திறக்க முடியவில்லையே என்று நொந்து கொண்டே கிளம்பினோம்.  அருகில் இருந்த ஆட்டோவை நிறுத்தி விலாசத்தை கொடுத்தவுடன் அவர் 40 ரூபாய் என்றார். 50 தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்றேன். நீ பின்னால் அமர வேண்டும் என்று சொல்லி கையால் ஸ்டார்ட் பண்ணி வண்டியை .. "நான் ஆட்டோ காரன் ஆட்டோ காரன்" என்று பாடிகொண்டே விட்டேன்...

18 கருத்துகள்:

  1. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகப்படுத்தியவர்-மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை


    பார்வையிட முகவரி-வலைச்சரம்

    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி ரூபன் அவர்களே, தங்களை பற்று அருமை நண்பர் தனபாலன் மூலம் நிறைய நல்ல சங்கதிகள் தெரிந்து கொண்டேம். தொடருங்கள் உங்கள் பணியை.

      நீக்கு
  2. சிலாக்கியம்... பாக்கியம்... நன்றி..

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் ஊக்கம் எமது ஆக்கம்...அம்புடுதேன்!

      நீக்கு
  4. அருமையாக போனது தங்களது எழுத்துநடை வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. நல்ல ரசனையான காமெடிகலந்த அருமையான பதிவு சார் ! வாழ்த்துகள் ! தொடருங்கள் ! இனி தொடருவேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஜெயசீலன்.

      நீக்கு
  8. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். நல்ல ரசனையாக இருந்தது பதிவு. ஆனால் கொஞ்சம் நீளமோன்னு தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி. தங்கள் கருத்தை மனதில் வைத்து கொள்கிறேன்.

      நீக்கு
  9. வருகைக்கும் வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரம் வாயிலாக வந்தேன் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு