செவ்வாய், 30 ஜூன், 2020

டயர் நக்கி அடிமை கேட்டான் பாரு ஒரு கேள்வி!

சாத்தான் குளத்தில் நடந்த கேவலமான கொடுமையான சம்பவத்தை பற்றி நிறைய தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை பார்க்கையில் இந்த அதிமுக அடிமைகளின்  பேச்சு நம்மை வாந்தி எடுக்கும் அளவிற்கு அருவருப்பாக இருக்கின்றது.


ஒரு பெண்மணி ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கையில்..

மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியில் என்று ஆரம்பிக்கும் போது, இதெல்லாம் ஒரு ஜென்மமா என்று நினைக்க தோன்றுகின்றது.

ஏழைமக்களின் பணத்தை கணக்கு வழக்கில்லாமல்;சேர்த்து அதற்காக Accused  1  என்று பெயர் பெற்று, தீர்ப்பிற்கு முன்பு மரணம் அடைந்த ஒரே காரணத்தினால் சிறைக்கு செல்லவேண்டிய ஒருவரை..

மாண்பு மிகு இதய தெய்வம் என்று பொது வழியில் அழைக்கின்றார்கள் அதையும் ஏற்று கொள்ளும் மக்களின் மனபாவம்.

சின்ன சின்ன ஆசை! சில்லறை ஆசை!

ஐந்தாவது படித்து கொண்டு இருந்த நாட்கள். பத்து வயது போல் என்று நினைக்கின்றேன். அடியேனின் தாயார் ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியாக  பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள். எங்கோ ஒரு பள்ளி விடுதியில் படித்து கொண்டு இருந்த நான் கோடை விடுமுறைக்கு அம்மாவிடம் வர...(இந்த ஊரின் பெயர்  பருகூர். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். )

வீட்டின் எதிரில் கார் ஹார்ன் சத்தம் கேட்க, வெளியே ஓடி வந்து எட்டி பார்த்தேன். ஓர் வெள்ளை நிற அம்பாஸடர் கார். மார்க் IV என்று படித்ததாக நினைவு.

வாகன ஓட்டுநர் என்னை பார்த்து..

"வண்டி ரெடின்னு அம்மாட்ட சொல்லு"

என்று சொல்ல.. நான் ஓடும் முன்பே உள்ளே இருந்து வெளிய வந்த அம்மாவின் உதவியாளர் ஓட்டுனரிடம்...

"அம்மா உங்களை உள்ள வந்து டிப்பன் சாப்பிட சொன்னாங்க.. அவங்க ரெடி, நீங்க சாப்பிட்டவுடன் கிளம்பலாம்"

என்று சொல்ல அவரும் உள்ளே செல்ல..அந்த உதவியாளர் என்னிடம் ..

"நீயும் போய் ப்ரெக்பாஸ்ட முடிச்சிடு"

திங்கள், 29 ஜூன், 2020

பழமுதிர் சோலையில் ரமதான் கிறிஸ்துமஸ் தீபாவளி

ஞாயிறு காலை ஆன் லைனினில் ஆண்டவனை வேண்டிய பின்னர் அம்மணி..

"வாங்க அப்படியே ஒரு ட்ரைவ் போகலாம்"

என்று சொல்ல...

ஆளுக்கொரு முக கவசம் எடுத்து கொண்டு வாகனத்தை கிளப்பி...

""எங்க போறோம்"

"ஒன்னரை மணி நேரம் ட்ரைவ்... ஒரு பழமுதிர் சோலை இருக்கு. அங்கே போய் நாமே பழங்கள் பிடுங்கின்னு வரலாம்."

"இவளுங்க வர மாட்டாளுங்களா?"

"கேட்டேன், இல்லைன்னு சொல்லிட்டாங்க"

மனதில்..

எங்கேயாவது போகும் போது இவளுங்க வரலைன்னு சொன்ன.. "ஓகே பை"ன்னு சொல்லிட்டு கிளம்பும் அம்மணி.. நாம்ம வரலைன்னு சொல்றதுக்கு கூட ஒரு வாய்ப்பு தர மாற்றங்களே.. சொல்லும் போதே.. கிளம்புங்கன்னு தானே சொல்றாங்க

என்று நினைத்து கொண்டே.. 

வண்டியை விட்டேன்.

ஞாயிறு, 28 ஜூன், 2020

கிழஞ்சது போ அஞ்சி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்.

என் இனிய தமிழ் மக்களே...

கொரோனாவில் தாக்கப்பட்டு உடல் ரீதியாக மன ரீதியாக பண ரீதியாக கிட்ட தட்ட பிணம் போல் வாழும் நமக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.


கடந்த சில மாதங்களாக, கொரோன என்று நாம் கேள்வி படுமுன்பே  பல நிகழ்ச்சியில் சில பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவனின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி போய்கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் உடனடியாக ஏதாவது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். 

இதற்கு பதில் சொல்வதற்காக ஆளுங்கட்சியாளருக்கு ஆதரவாக தமிழ் தொலைகாட்சியில் வலது சாரி என்ற போர்வையில் சேஷாத்திரி, ஆச்சாரி ,  இன்னும் சில பொருளாதாரத்தை பற்றி கொஞ்சமும் அறிவு இல்லா பொருளாதார நிபுணர்கள்

சனி, 27 ஜூன், 2020

சிறிய தவறால் பெரிய சோகம்!

இந்த பதிவை கோவத்தில் எழுதுகின்றேனா அல்ல சோகத்தில் எழுதுகின்றேனா என்று எனக்குள் ஒரு குழப்பம்.

சனி அதுவுமாய் காலை எழுந்து கணினியை தட்டினால் 

"ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தங்கள் வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு."

இந்த தலைப்பு செய்தியை படித்தவுடன் என்னை அறியாமல் மனதில் வந்தது.

அரசாங்கமே! காவல் துறைக்கு இனிமேலாவது சம்பளம் கொடு!

என்னமோ தெரியவில்லை. சிறிய வயதில் இருந்தே காவல் துறையினரை கண்டால் எனக்கு என்னமோ பயமோ மரியாதையோ என்று எதுவும் தோன்றுவதில்லை. 

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப பள்ளி நாட்களில் யாராவது போலீஸ் திருடன் விளையாட்டிற்கு அழைத்தால், எங்கள் பள்ளியின் அனைவரும் திருடன் ரோல் கேட்டு தான் ஆடம் பிடிப்பார்கள். போலீஸ் என்றால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற ஒரு நினைப்பு. 
காவலர்களை பார்த்தல்   ஒரு பரிதாபமும் மற்றும்.. "என்ன இவ்வளவு தாழ்ந்து போய் இருக்காங்களே." இவங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருவதில்லையா? என்ற ஒரே நினைப்பே தான் வரும்.

தற்போது நடந்த சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணம் ஒரு இலவச செல் போனுக்கு என்று  எங்கோ படித்தவுடன், கண்டிப்பாக இருக்குமென்ற  எண்ணம் மட்டுமே வந்தது.

வெள்ளி, 26 ஜூன், 2020

விஸ்வநாதா வேலை வேண்டாம் !

மார்ச் மாதம் போல் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இளைய ராசாத்தி கிட்ட தட்ட அழுதுகொண்டே என்னிடம் வர...!

"ஏன் அழுவுற..?"

"நான் அழுவுல !"

"ஏன் சோகமா இருக்க!!!?"

"ஐ ஹேட் திஸ் கொரோனா, என் வேலையே போச்சி"

ஒப்பாரி வைத்தாள்.

இங்கே பிள்ளைகளுக்கு பதினைந்தரை வயதில் வாகன ஓட்டுரிமை கிடைத்தவுடன் அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்து விடுவார்கள். பள்ளி நாட்களில் மாலையிலும் மற்றும் வார  இறுதியிலும் கிட்டத்தட்ட  20  - 30  மணி நேரம் வேலைக்கு செல்வார்கள். குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு 13 டாலர்கள் கிடைத்தாலும் வாரத்திற்கு வருமான வரியை பிடித்து மிச்சம் முன்னூறு டாலராவது கிடைக்கும்.

வியாழன், 25 ஜூன், 2020

பென்னிக்ஸ் ஜெயராஜும் ஜார்ஜ் பிலோய்ட்டும்!

அப்பா மகன் என்று இருவர், 24 மணி நேர இடைவெளியில் மரணித்து இருக்கின்றார்கள்.எங்கேயோ மருத்துவமனையில் அல்லது சாலை விபத்திலோ அல்ல.

தாம் நடத்தும் கடையை கொரோனா நேரத்தில் விதிக்கு புறம்பாக அதிக நேரம் திறந்து வைத்ததால் காவல் துறையால் விசாரிக்க அழைக்க பட்டு

அங்கே நடந்தது ஆண்டவுனுக்கே வெளிச்சம்.

விசாரணை எதுவும் நடக்கும் முன்பே தமிழக முதல்வர் அந்த மகன் நெஞ்சு வலியினாலும்  அப்பா காய்ச்சலினாலும் இறந்தார் என்று அறிக்கை விட்டு இருக்கின்றார்.

பத்திரிகைகளையும் மற்றும் காணொளிகளும் இவர்கள் உடலில் அதிக இரத்த காயங்கள் காணப்பட்டதாக தகவல்.

புதன், 24 ஜூன், 2020

கண்ணதாசன் எழுதிய பாட்டிற்கு சம்பளம் வாங்கிய வாலி (கண்ணதாசன் 7)

"சைனா டவுன்"ன்னு ஒரு ஹிந்தி படம். சக்கை போடு போடுது. படத்தின் கதையை கேட்டா என்னமோ MGR க்கே எழுதி இருக்க மாதிரியே இருக்கு என்று சொல்லி கொண்டே வந்தார் அக்காலத்து இயக்குனர் K ஷங்கர். இது நடந்த வருடம் 1968 .

அப்படி என்ன MGR க்கு ஏத்த கதை?

இரட்டை பிள்ளைகளின் அப்பா கொலை செய்ய படுகிறார். ஒரு குழந்தையை அம்மாவும் இன்னொரு குழந்தையை அந்த கொலைகாரனும் வளக்குறாங்க. அம்மா செண்டிமெண்ட்!  ஒரு குழந்தை ஹோட்டலில் நடமாடி பாடுபவர் !இன்னொருத்தார் கொள்ளைகாரார்! சண்டை பாட்டு ஆட்டம்னு..! எல்லாம் MGRக்கு சரியா அமையும்!

என்று அவர் சொல்ல ஒரு தயாரிப்பாளரும் அதற்கு மயங்கி விழ "சைனா டவுன்"  படத்தின்  தமிழ் படைப்பாக  வெளி வந்தது MGRரின் "குடியிருந்த கோயில்" 

செவ்வாய், 23 ஜூன், 2020

கற்க கசடற (2 of 7 )

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

என்ற குறளையொட்டி பள்ளிக்கூடத்து நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முந்தைய பதிவில் தந்து இருந்தேன்.

அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

அந்த பதிவில் இக்குறளில் மொத்தம் ஏழு குறள் அடங்கி உள்ளது என்று  சொல்லி இருந்தேன். மீதி ஆறை சீக்கிரம் எழுது என்ற அன்பு கட்டளைக்கு அடி பணிந்து, இதோ அந்த இரண்டாம் குறள்.

அதே ஏழு வார்த்தை , வேறொரு துவக்கத்துடன்.

கசடற கற்றவை கற்றப்பின் நிற்க, அதற்கு தக, கற்க "!

கசடற என்பதின் பொருள்

அப்பழுக்கற்ற மற்றும் தவறில்லா என்றாகும். களவும் கற்று மற, என்ற மொழிகளை வழி தள்ளிவிட்டு  நல்லவைகளை மட்டும் கற்று கொள்.

இப்படியான நன்பொருள்களை கற்ற பின் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவேண்டும். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது போலாகிவிடக்கூடாது.

இப்படி அப்பழுக்கற்றவகைளை கற்று கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நிறைகுடம் ததும்பாது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுவது போல் இருக்கவேண்டும்.

அதற்கு தக கற்க,

இப்படி ஒரு மேன்மையான வாழ்வை வாழ அதற்கேற்றவாறு  தொடர்ந்து மென் மேலும் கற்க வேண்டும்.

இதுதான் இரண்டாம் குறள்..

பொங்கும் ஆகாய கங்கை! பொங்கியது மீண்டும்!

வருடங்கள் பல ஆனாலும்  சில நினைவுகள் மனதில் நிரந்தரமாக நின்று விடும்.

80களில் நம் கல்லூரி நாட்கள் இந்நாட்கள் போன்றது அல்லவே. அன்றைய பொழுது போக்கு கிணற்று நீச்சல், நண்பர்களோடு கிரிக்கெட், பாட்டு கச்சேரி, வித விதமான புத்தகங்கள், மாலை நேரத்தில் மட்டும் வரும் தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் .. சினிமா, சினிமா, சினிமா !

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அது எப்படி இருக்கோ இல்லையோ போய் உக்கார்ந்துடுவோம். அதுவும் இளையராஜா இசையா இருந்தால் பாடல் கேட்பதற்காகவே ..

இப்படி போய் கொண்டு இருந்த காலத்தில், நண்பன் ஒருவன்..

"விசு, தாஜில் ஆகாய கங்கை பார்த்துட்டீயா?"

"போஸ்டர் பார்த்தேன், கார்த்திக் சுஹாசினி, காம்பினேஷன் சரி இல்லையே"

"யார் நடிச்சி என்ன இழவா இருந்தா என்ன, இசை இளையராஜா.. ஒரு பாட்டு கேட்டேன், சூப்பர், வா போலாம்"

திங்கள், 22 ஜூன், 2020

அனுபவி ராஜா அனுபவி - (கண்ணதாசன் 6)

"அனுபவி"

என்ன ஒரு வார்த்தை!!!!?

வாழ்வில் அனைத்து பாக்கியத்தையும் பெற்று நிம்மதியாக மகிழ்ச்சி பொங்க சுகமாக வாழ்பவனை நல்லா "அனுபவிக்கிறான்" என்று சொல்லுவோம்.
.

அதே போல, அடுத்த வேளை  உணவு கூட எப்போது எங்கே இருந்து வரும் என்று  தெரியாமல் நோய்வாய்ப்பட்டு செத்தால் போதும் என்று பரிதாபமாக இருப்பவனை கூட நல்லா "அனுபவிக்கிறான்" என்று தான் கூறுவோம்.

அனுபவி..
ஒரு வார்த்தை எதிர் புதிரான அர்த்தங்கள்.

அது சரி, இதுல கண்ணதாசன் எங்க வந்தாரா?

பொறுமை!

சும்மாவே தமிழில் நாட்டியம் ஆடும் கண்ணதாசனுக்கு "அனுபவி ராஜா அனுபவி" என்ற பட தலைப்பை கொடுத்து காலில் சலங்கையை மாட்டி விட்டார்  கே. பாலச்சந்தர்.  கூடவே கண்ணதாசனின் ஆருயிர் தோழன்   MSVயின்  இசை வேறு. சொல்லவும் வேண்டுமா?

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

திருக்குறளில் அறத்து பால் பொருட்பால் காமத்து பால் உண்டு என்று ஆசிரியர்கள் சொன்னது  நினைவிற்கு  வந்தது.

இவை மூன்று இருந்தாலும் பள்ளி காலத்தில் நமக்கு தெரிந்தது இரண்டே வகை குறள்கள் தான்..

படிச்சவுடனேயே கோனார் நோட்ஸ் கூட இல்லாம அர்த்தம் புரியும் குறள் வகை . கோனார் நோட்டுஸ்க்கே புரியாத குறள் இன்னொரு வகை .

உதாரணத்திற்கு ..

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவை கையில் எடுத்து..!!?

இதை முதல் முதலாக எங்க தமிழ் வாத்தியார் சொன்னவுடன் மலைத்தே போய்ட்டேன். இதனை சொன்ன வாத்தியார்.. முதல் வரிசையில் இருந்து ஒருஒருத்தனையா நிக்க சொல்லி ஒவ்வொரு வார்த்தைக்கா அர்த்தம் கேட்டார்.
அந்த வரிசையில் ஏழாவது ஆளு நான். எனக்கு முன்னால எழுந்து நின்ன ஆறு பசங்களுக்கும் அர்த்தம் தெரியாம திரு திருன்னு முழிக்க.. எனக்கு வந்த வார்த்தையோ.. மழை!

சனி, 20 ஜூன், 2020

அப்பா என்றழைக்காத ....

இந்த ஞாயிறு இங்கே தந்தையர் தினம் (Fathers  Day ) என்று அழைக்க படும் நாள். ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்நாள் அந்த அந்த இல்லத்தில் உள்ள தந்தையர்களை உற்சாகப்படுத்தி பரிசு கொடுத்து அன்பு காட்டி பாராட்டும் நாள்.

நானும் பொதுவாக இந்நாளை மகிழ்ச்சியாக ஏற்று எதிர்பார்த்து கொண்டாடுவேன். இருந்தாலும் இந்த வருடம் மனதில் ஒரு வெற்றிடம்.

மூன்று வாரங்களுக்கு முன் அருமை நண்பன் ஐசக் மனோகரம் (51 ) தமிழகத்தில் இருந்து அழைத்தார்.

மேலே செல்லும் முன் ஐசக் பற்றி சில வார்த்தைகள்.

வெள்ளி, 19 ஜூன், 2020

நினைத்தாலே இனிக்கும் கமலஹாசன் போல மாப்பிள்ளை

பள்ளிக்கூட நாட்களில் தமிழ் ஆங்கிலம் என்று வெளிவருகிற அம்புட்டு  நிறைய வாராந்திர மாத இதழ்கள் அனைத்தையும் வரி வரியாக படித்து விடுவேன்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழின் நாடு பக்கத்தில் யாருடைய படம்?
தினத்தந்தி  கடைசி பக்கத்தில் முழு பக்கமாக வரும் அடுத்த மெகா ரிலீஸ்!!
"தி ஹிண்டு"வின் கடைசி பக்கத்திற்கும் முன் பக்கத்தில் இருக்கும் விளையாட்டு செய்திகள்.
பிரிவோம் சந்திப்போம் தொடர் கதை.
சன் ஆங்கில இதழில் வரும் ஆங்கில பாடல்களின் வரிகள்.

இப்படி பல மனதில் நின்றவை.

இப்படி படித்ததில் எதோ ஒரு தமிழ் வார இதழில் நான் படித்த ஒரு சிறுகதை அந்த காலத்தில் என்னை வியக்க வைத்தது. என்ன ஒரு கலாச்சாரம். என்ன ஒரு பண்பாடு. வாழ்ந்தால் இந்திய கலாச்சாரத்தோடு வாழவேண்டும், அதுவும் தமிழ் கலாச்சாரம் என்று என்னை புல்லரிக்க வைத்த கதை.

வியாழன், 18 ஜூன், 2020

குஜராத்திகளின் நாட்டு பற்றும் ஏனைய இந்தியர்களின் தேச துரோகமும்!

சில நாட்களாக இந்திய சீன பிரச்சனையில் நாடு முழுக்க நிறைய கேள்விகள் சந்தேங்கங்கள் என்று கிளம்பி கொண்டு இருக்கின்ற வேளையில் சில வடஇந்திய சமூக விரோதிகள் தமிழருக்கு நாட்டு பற்று இல்லை என்று கூவி கொண்டு வருகின்றனர்!

அனைத்து வட இந்தியரையும் சொல்லவில்லை, வடஇந்தியாவை சார்ந்த சங்கிகளும் சரி மற்றும் தமிழ் நாட்டை சார்ந்த சங்கிகளும் சரி இப்படி ஒரு புரளியை கிளப்பி கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

இம்மாதிரியான சங்கிகளுக்கு நாட்டுப்பற்று மற்றும் வீரம் மற்றும் தமிழரின் குணம் வரலாறு என்று எதுவும் தெரியாது அதை தெரிந்து கொள்ள  ஆர்வமும் இல்லை. அவர்களுக்கு தேவை எல்லாம் மோடி மற்றும் பாஜாகவை  பாராட்டி கொண்டு இருப்பதே.

யாரவது மோடி மற்றும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால், உடனே அவர்கள் தேச துரோகி, ஆன்டி இந்தியன், அர்பன் நக்ஸல்ஸ், என்று வாய் கிழிய பேசுவார்கள்.

இவர்கள் மோடியின் ஆட்சியை பாராட்டி பேசுவதற்கு வைக்கும் முதல் காரணம் "குஜராத் மாடல்". இந்த மாடலை பற்றி பேசியே மக்களின் பேராதரவை பெற்றதால் , இந்தியாவில் என்ன நடந்தாலும் குஜராத்தை பற்றியும் குஜராத்திகளை பற்றியும் பேச மாட்டார்கள்.

இப்படி தமிழர்களின் நாட்டுப்பற்று மற்றும் வீரத்தை கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

1971 வருடத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் போர் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த போர் காலத்தில் இந்திய ராணுவத்தை வழி நடத்தி இந்தியாவிற்கு மகத்தான வெற்றியை பெற்று தந்தவர் Field marshall Sam Manekshaw.  போரில் இவரின் நடத்தைக்காகவே இவரின் பெயரே "Sam the Brave" என்று ராணுவத்தினரால் அழைக்கப்பட்டது.

இந்த போர் முடிந்த சில நாட்களில் சாம் ஒரு முறை குஜராத் செல்ல நேரிட்டது. அங்கே ஒரு கூட்டத்தில் பேச அவரை அழைக்க அவரும் அங்கே சென்று ஆங்கிலத்தில் பேச துவங்கினார். கூட்டத்தில் அமர்ந்து இருந்த குஜார்த்திக்கள்

"ஆங்கிலம் வேண்டாம்.. குஜராத்தியில் பேசுங்கள், குஜராத்தியில் பேசுங்கள் "

என்று கூக்குரலிட, சாம் ஆங்கிலத்திலேயே பேச்சை துவங்கினார்.

இதோ அந்த ஆங்கில பேச்சு ..

"Friends, I have fought many a battle in my long career. I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment; Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers, Hindi from the Bihar Regiment; and even Nepali from the Gurkha Regiment. Unfortunately there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati.”

தமிழாக்கம்.

நண்பர்களே, என் ராணுவ வாழ்வில் நான் நிறைய போர்களை சந்தித்து இருக்கின்றேன். இந்நாட்களில் நான் பஞ்சாபி வீரர்களிடம் இருந்து பஞ்சாபி கற்றுகொண்டேன். மராத்தியர்களிடம் இருந்து மராத்தி கற்று கொண்டேன், தமிழர்களிடம் இருந்து தமிழை கற்றுக்கொண்டேன் பெங்காளிகளிடம் இருந்து பெங்காளி கற்று கொண்டேன். பீஹாரிகளிடம் இருந்து ஹிந்தி கற்று கொண்டேன். கூர்க்காக்களிடம் இருந்து நேபாளி மொழி கற்று கொண்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக ராணுவத்தில்  குஜராத்திகள் ஒருவரும்  இல்லாதால் குஜராத்தி மொழி கற்று கொள்ளமுடியவில்லை.

இதை சொன்னது யாரோ ஒருவர் அல்ல. முந்தைய இந்திய ராணுவ தலைமை அதிகாரி.

இதை படிக்கும் சங்கிகள் கூட..

அட.. இப்படியா சொன்னார்? இவர் பெயரை பார்த்தால் கிறிஸ்துவ பெயர்  போல் இருக்கின்றதே. இவர் கண்டிப்பாக வெளிநாட்டு கிறிஸ்துவ மிசினரி கைக்கூலியாக தான் இருப்பார் என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் அவர்களின் அறிவின் அளவு அவ்வளவே.

சரி! இது அந்த காலம், இப்ப எல்லாம் மாறிடிச்சி என்று கூறுபவர்களுக்கு ஒரு  கூடுதல் தகவல். சென்ற வாரம் இந்திய சீன தகராறில் இருபது இந்திய வீரர்கள் இறந்தார்கள் அல்லவா.. அவர்களில் மாநில வாரிய கணக்கு..

1 சந்தோஷ் பாபு - ஹைதராபாத் (தெலுங்கானா)
2 நுணுரம் சோரன் - மயூர்பானிஜ் (ஒடிஷா)
3 மந்திப் சிங் - பாட்டியாலா (பஞ்சாப்)
4 சத்னம் சிங் - குருதேவ் புரதம் (பஞ்சாப்)
5 K.தங்கம் - மதுரை (தமிழ்நாடு)
6 சுனில் குமார் - பாட்னா (பீகார்)
7 பிபுல் ராய் - மிர்சா (உத்திரபிரதேசம்)
8 தீபக் குமார் - (மத்திய பிரதேசம்)
9 ராஜேஷ் முகூர்த்தி - பிர்பாம் (மேற்கு வங்காளம்)
10 சாஹிப் கஞ் (ஜார்கண்ட்)
11 கணேஷ் ராம் - கங்கின் (சத்யா)
12 சந்திரயான் பிரைம் - கந்தமால் (ஒடிஷா)
13 அன்குஷ் தாகூர் - ஹிமாச்சல் பிரதேஷ் (ஹிமாச்சல் பிரதேஷ்)
14 குர்பிந்தர் - சங்க்ருர் (பஞ்சாப்)
15 குருதேஜ் சிங் - மான்சா (பஞ்சாப்)
16 தொடர்புக்கு (பீகார்)
17 குந்தன் குமார் - சர் ' ஹாசா (பீகார்)
18 அமன் குமார் - சமஸ்டிபுரா (பீகார்)
19 ஜெய் கிஷோர் சிங் - வைனாலி (பீகார்)
20 கணேஷ் ஹன்சா - கிழக்கு சிங்பீம் (ஜார்கண்ட்)



இறந்த ஒவ்வொரு வீரருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி மற்றும்  வீரவணக்கம் அவர்தம் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.




இதில் ஒருவர் கூட குஜராத்தி அல்ல. அது சரி, அப்ப குஜராத்திகளுக்கு நாட்டு பற்று  இல்லையான்னு என்னை கேட்பவர்களுக்கு..

கண்டிப்பாக இருக்கின்றது என்று தான் நினைக்கின்றேன்..

இல்லாவிடில்..

பிரதமர்
உள்துறை மந்திரி
CBI தலைமை
RBI  தலைமை
BCCI தலைமை


என்ற பதவியில் எப்படி வந்து இருப்பார்கள்?

பார் மகளே பார்.. சாரி... Car மகளே Car !

இளையவளுக்கு தற்போது 17. இங்கே அமெரிக்கா வாழ் பிள்ளைகள் பொதுவாகவே 15 வருடம் ஆறு மாதத்தை கடக்கையில் வாகன ஓட்டுநர் உரிமை பெற்று விட்டுவார்கள்.  15வது பிறந்தநாள் கொண்டாடும் போதே அவர்களின் பேச்சு..

"எப்ப எனக்கு கார் தருவீங்க? "

என்ற கேள்வி மட்டுமே.

இங்கே ஒரு எழுதப்படாத விதி.

அப்பா அம்மா இருவரில் ஒருவரின்  காரை பிள்ளைக்கு கொடுத்துவிட்டு அப்பா அம்மாவிற்கு புதிய கார் வாங்கிவிடுவோம்.

இதற்கு சில காரணங்கள்  உண்டு.

முதல் காரணம்.

புதன், 17 ஜூன், 2020

இன்னார் பிள்ளை இன்னார் ! Nepotism!

இந்த பதிவு ஆங்கிலத்தில் "Nepotism"  (தமிழில் இதற்கு என்ன சொல் என்று தெரியவில்லை) என்பற்காக எழுத பட்டது. நேபோட்டிசம் என்றால் என்ன? "இன்னார் பிள்ளை இன்னார் அதனால் அவருக்கு மட்டும் வாய்ப்பு" என்பது தான். திறமை இருக்கின்றதோ, படிப்பு இருக்கின்றதோ, ஆர்வம் இருக்கின்றதோ இல்லையோ... இன்னாரின் பிள்ளை என்ற ஒரே ஒரு தகுதி போதும்.

இது உலகின் அனைத்துநாடுகளிலும் இருக்கின்றது. இந்தியாவில் சற்றே தூக்கலாக.

உதாரணத்திற்கு.

செவ்வாய், 16 ஜூன், 2020

அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க?!

நேரு ஒரு மீம்ஸ் பார்த்தேன். மீம்ஸ் என்றாலே பொதுவாக சிரிப்பு தான் என்றாலும் "Every joke has got some truth" என்ற சொல்லுக்கேற்ப அதனுள் உள்ள உண்மை சற்றே சிந்திக்க வைத்தது.

இந்த மீம்ஸ் பிரதமர் மோடியை பற்றியது.

If you see any boy below 14 years of age selling chai "PLEASE DO NOT buy chai from him. We cannot afford to risk another Chaiwala becoming our PM in the future. Please Educate, send him to school, and save our Country.

(பதினான்கு வயது சிறுவன் யாராவது டீ விற்பதை கண்டால் அவனிடம் டீ வாங்காதீர்கள். இம்மாதிரியான ஒருவர் மீண்டும் பிரதமரானால் இந்நாடு தாங்காது. அதற்கு பதில் தயவே செய்து அந்த சிறுவனை பள்ளிக்கு அனுப்பி படிக்கவையுங்கள்)

சில வார்தைகளிலே நாட்டு நடப்பையும், சமூக சிந்தனையையும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை பற்றியும் படிப்பின் முக்கியதுவத்தையும் இந்த மீம்ஸ் எவ்வளவு அழகாக காட்டி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

திங்கள், 15 ஜூன், 2020

போன ஜென்மத்து பாவமும் புண்ணியமும்...

சென்ற வாரம் ஒரு காணொளியை  பார்க்க நேரிட்டது. அதில் ஒரு நபர் புல பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலையை பற்றி பேசுகையில்..

"அவனை பாக்கவே பரிதாபமா இருக்கு. தலையில் குழந்தை கையில் ஒரு மூட்டை. பின்னால் மனைவி அவர்கள் கையில் இரண்டு மூட்டை... இதை எல்லாம் சுமந்து கொண்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து கொண்டு..

பாவம், அவன் மனதில் ..

"நான் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ!!!!?"

என்று ஒரே எண்ணம் தான் இருக்கும்...

என்று பேசியுள்ளார்.

இதை கேட்டவுடன் மனதே சற்று விரக்தி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும்.

அவன் போன ஜென்மத்தில் நாயோ நரியா சிங்கமோ புலியோ ராஜாவோ ஆண்டியோ.. போன ஜென்மன்னு ஒன்னு இருக்குதோ இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த ஜென்மத்தில் இந்த மாதிரி அவனை பார்த்து சொல்ற அறிவிலிகளுக்கு நடுவுல பிறந்தான் பாரு... அவன் பாவம் தானு நினைக்க தோணுச்சு.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கண்ணதாசனின் பக்தி முத்தி போய் (கண்ணதாசன் 5 )

கண்ணதாசன் ஏற்று கொண்ட கொள்கையில் ஆழமாக இருந்ததே இல்லை என்பதை விளக்க  கலைஞர் விலகிய உண்மை சம்பவம்.

சேலத்தில் இருந்து நான் பேருந்து மூலம் கோவைக்கு சென்று பின்னர் கோவையில் இருந்து இன்னொரு பேருந்தை பிடித்து பொள்ளாச்சி கூட்டத்திற்கு செல்லவேண்டும். நான் கோவையிலே பேருந்தில் சென்று இறங்கி  கடைத்தெருவில் சென்று  கொண்டு இருக்கும் போது ஒரு வீட்டிற்குள் இருந்து "கருணாநிதி, கருணாநிதி" என்ற குரல் கேட்டது .

யார் என்று திரும்பி பார்த்தேன், "கண்ணதாசன்"!

பட்டை பட்டையாக விபூதி குங்குமம் இவைகளோடு அமர்ந்து இருந்தார். இறங்கி  ஓடிவந்தார் தெருவிற்கு, இல்லத்திற்கு அழைத்து போனார். அங்கே அமர்ந்து தேநீர் அருந்தினோம்.

வெள்ளி, 12 ஜூன், 2020

என்னை மன்னித்துவிடு பார்த்திபா!

மீள் பதிவு 

நண்பர் ஒருவர் ... பார்வையற்றவருக்கு  பரீட்சை எழுதுவதை பற்றிய பதிவு ஒன்றை போட்டார்..

படித்தவுடன் நினைவு கடந்த காலத்திற்க்கு சென்றது..

சில நேரங்களில்  நாம் செய்யும் ஒரே காரியம்  நம்மை எல்லையில்லா இன்பத்திற்கும் மன நிம்மதிக்கும்.. அதே நேரத்தில் அதே காரியம் நம்மை சில நாட்களிலே எண்ணற்ற துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளும்

 உதாரணம்..ஒரே காரியம்..

அடியேனின் அம்மா நடத்தி கொண்டு இருந்த பார்வையற்ற பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு பத்தாவது பொது தேர்வு எழுத உதவி தேவை என்று அழைப்பு வர..

நானும் சென்றேன்..   நான் தான் பள்ளி தலைமை ஆசிரியையின் பிள்ளையாயிற்றே.. அது மட்டும் இல்லாமல், படிப்பிலும் நான் ரொம்ப  கெட்டி என்று எனக்கு நானே ஏற்றி வைத்த  ரெப்புட்டேஷனும்   சேர்ந்து கொள்ள...

அந்த பார்வையற்ற பள்ளி மாணவர்களில் மிகவும் அறிவான மாணவனுக்கு பரீட்சை எழுத என்னை அழைத்தார்கள்.

விசு.. பார்த்திபன்.. நல்லா படிப்பான்.. ரொம்ப சமத்து... அவனுக்காக நீ பரீட்சை எழுதினா.. அவன் சொல்ற பதிலை நீ எழுதினா.. அவன் பள்ளி கூட முதல் மதிப்பெண் வர கூட வாய்ப்புள்ளது.. அதுவும் கணக்குல.. அவன் பிரில்லியண்ட்.. எதிர் காலத்தில் வங்கியில் தான் வேலை செய்யனும்ம்னு  அவன் கனவு.. ஆல் தி பெஸ்ட்.

கலைஞரை கலாய்த்த கண்ணதாசன் ! (கண்ணதாசன் 4 )

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் )பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.



ஒரு முறை சேலம் அருகே ஒரு இடத்தில் பேசுவதற்காக கலைஞர் கருணாநிதியும் கவியரசு  கண்ணதாசன் அவர்களும் சென்று இருந்தார்கள் . கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய பேச்சை முடித்து கொண்டு ஒரு அவசர “குடி” போகும் விஷயமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று விட்டார் .

வியாழன், 11 ஜூன், 2020

என் கண்ணுக்குள் நூறு நிலவு... !

ரவிசந்திரன், முருகன், மஹாலிங்கம், பார்த்திபன், ரகு, சீனு, பார்த்திபன், எலிசபெத், ஆல்ப்ரெட், செல்வராஜ், G  குணசேகரன், M குணசேகரன், லட்சுமி, மோசஸ், சிவராஜ், ஷாமா, காளிமுத்து, அண்ணாமலை,பார்வதி, புவனேஸ்வரி, மேரி  மற்றும் பலர்..

ஓடியாடி வளர்ந்த இடம், தற்போது அம்மாவின் பெயரோடு...
யார் இவர்கள் .. இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?

ஒற்றுமைகள் பல உண்டு!

இவர்கள் அனைவரும் என் பால்ய வயது நட்ப்புக்கள்.

பண்பானவர்கள். அன்பானவர்கள், தம் தம் திறமைக்கேற்ப முதுகலை வரை படித்தவர்கள்.

அரசாங்க உத்தியோகம், தலைமை ஆசிரியர், பேராசிரியர், வங்கி அதிகாரி, வியாபாரம், இசை ஆசிரியர் என்று பல துறைகளில் பணிபுரிகின்றார்கள்.

நான் பெரிய அப்பாடக்கர் என்று இவர்கள் யாரிடமும் நான் பீலா காட்ட முடியாது. ஏன் என்றால் நம்முடைய அம்புட்டு வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும். நம் அனைத்தையும் அறிந்தவர்கள் இவர்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒற்றுமை! இவர்களை நான் எப்போதாவது பல வருடங்களுக்கு பின்னர் சந்தித்தால் கூட, என் குரலை வைத்தே ..

"அட பாவி... விசு.. எப்ப ஊருக்கு வந்த?"

என்று என்னை அடையாளம் கண்டு  உறவாடுபவர்கள்.

"இதுல என்ன விசேஷம் விசு?"  என்று உங்களில் அனைவரும் கேட்பது காதில் விழுகின்றது..

இவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள்.

கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் நண்பர் மகேஷ் அவர்களின் உந்துதலால் அபி, நவீன் மற்றும் பெர்னாண்டோ போன்ற பார்வையற்றோர் பதிவுகள் எழுதி வருவதை பார்த்து, மகிழ்ந்து படித்து பின்பற்றி வருகிறேன்.  இவர்களின் பதிவை படிக்கையில் எனக்குள் இருக்கும் என் பார்வையற்ற நட்ப்புக்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மேலே சொன்ன பெயர்கள் சில மட்டுமே. இன்னும் நூற்றுக்கணக்கான பார்வையற்றோரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

ஸ்ரீதர் - MSV - கண்ணதாசன் " சொர்க்கத்தில் கொண்டாட்டம்" (கண்ணதாசன் 3)

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் )பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.


 "நெஞ்சில் ஒரு ஆலயம்"  என்ற திரைப்படம் ஸ்ரீதர் – MSV – கண்ணதாசன் மூவரும் இணைந்து வழங்கிய படம். எனக்கே 7 கழுதை வயசு ஆக போகுது, இந்த படம் நான் பிறப்பதற்கும் நான்கு வருடங்கள் முன்னதாக  வந்து உள்ளது.


இரண்டு நாயகர்கள் ஒரு நாயகி. படத்தின் கதை – திரை கதை அமைப்பு பாடல்கள் இசை எல்லாம் நன்றாக அமைய இது ஒரு காவியம் ஆகிவிட்டது.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த படம் அந்த காலத்திலேயே நான்கே வாரங்களில் எடுத்து முடிக்க பட்டது (வெளி நாட்டு கூத்து பாடல் இல்லை என்று நினைக்கின்றேன்).

புதன், 10 ஜூன், 2020

கொத்தடிமைகளுக்கு நன்றி, 2021 ல் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சி!


நடக்கும் என்பார் நடக்காது என்பதை விடுங்கள்.. நடக்காதென்பார் நடந்துவிடும் என்பது தான் நடக்கப்போகிறது.

குளம் இல்லாமலே.. தண்ணீர் இல்லாமலே.. தேர்தல் இல்லாமலே மக்களின் ஆதரவு இல்லாமலே தமிழகத்தில் தாமரை மலரபோகின்றது.

Mark My Words..

கொரோனாவினால் தமிழகம் குறிப்பாக சென்னை படும் அவஸ்தை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவை நான் எழுதும் நாள் ஜூன் 10  . ஆகஸ்ட்  மற்றும் செப்டம்பர் மாதம் போல் தமிழகத்தில் கொரோனாவின் கொடுமையான விளைவுகள் நான்கு மடங்காக மாறும் என்பது தான் அனைவரின் பயமும்.

தமிழக அரசு என்னதான் தான் சாக்குபோக்கு சொல்லி கொண்டு இருந்தாலும், எத்தனை பேருக்கு கொரோனா எத்தனை பேர் கொரோனாவினால் இறந்தார்கள் என்று கணக்கு கொடுத்தாலும்.. இந்த எண்களை யாரும் நம்புவதற்கு இல்லை.

நட்பிற்கும் நகைச்சுவைக்கும் - கண்ணதாசன் ஒரு இலக்கணம்! (கண்ணதாசன் 2)


இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசனை  பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை (மீள் ) பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

கண்ணதாசன் அவர்கள் ஒரு முறை நண்பர் ஒருவருடன் ஒரு வெளிநாட்டு பயணம் போய் இருந்தார். அங்கே அவருக்கும் அவர் நண்பருக்கும் நடந்த சில நிகழ்ச்சிகள் …. கவுண்டமணியின் பாணியை பல வருடங்களுக்கு முன்பே கண்ணதாசன் பண்ணி விட்டாரே என்ற எண்ணத்தை தருகின்றது.
பயணம் ஆரம்பம் … விமானத்தில்…


"அண்ணே .. கண்ணதாசன் அண்ணே…"
"சொல்லு …"
"என்ன அண்ணே .. விமானத்துல பயணிக்கிரதுக்கு தான் சீட் தருவாங்கன்னு நினைச்சேன் .. இங்கே பார்த்தா ரூமை எல்லாம் வாடகை விடுவாங்க போல இருக்கே .."
"என்ன சொல்ற .. ?”
"அங்கே பாருங்க அண்ணே … “tolet ” போர்ட் போட்டு இருக்கே…!!"
"அது tolet லேட் இல்ல, Toilet , நல்ல கூர்ந்து படித்து பாரு.."
"அண்ணே, இப்ப நம்ம எங்கே அண்ணே போறோம் ..?"
"எங்கே போறோம்ன்னு கூட தெரியாம விமானத்தில ஏறிட்டியா? சமத்து …"
"சொல்லுங்க அண்ணே … இப்ப எங்கே போறோம் …?"
"ஆப்கானிஸ்தான் …!!!"
"அப்படினா …!!?"

செவ்வாய், 9 ஜூன், 2020

சோஃபியாவும் வரதராஜனும்...

"சொல்க சொல்லை தைரியமாக சொன்னபின்
சொன்னதற்கு ஏற்க நட "

இந்த காலத்தில் நாம் என்ன சொன்னாலும் எங்கே போனாலும் எதை செய்தாலும் யாரோ ஒருவர் எங்கேயோ எதோ ஒரு கேமராவிலோ பார்த்து கொண்டும் கேட்டு கொண்டும் கவனித்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அதனால் நாம் பொதுவெளியிலும் சரி தனிமையிலும் சரி சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இன்றைய தெலுங்கானா  கவர்னர் அன்றைய பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவர்களோடு விமானத்தில் பயணம் செய்த சோஃபியாஎன்ற மாணவி..

"பாசிச பாஜக ஒழிக' என்று சொன்னதற்காக, தமிழிசை அவர்கள் விமான நிலையத்திலேயே காவல் துறையை அழைத்து சோஃபியா  மீது நடவடிக்கை எடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த நிகழ்ச்சியின் போது பலர் சோஃபியாவிடம் ,

தெரியாமல் சொல்லிவிட்டேன்,

திங்கள், 8 ஜூன், 2020

காலாவிற்கு கண்ணதாசன் எழுதிய ஹிந்தி பாடல். (கண்ணதாசன் 1)

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசாசானி பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

மும்பை நாட்கள், இன்னொரு நாள்!

அதிகாலை எழுந்து அடித்து பிடித்து கிளம்பி.. மெயின் லைனில் அமைந்துள்ள மாட்டுங்கா ரயில் நிலையம் சென்று அங்கு வரும் மின்சார ரயிலை பிடித்து அடுத்த நிலையமான "டாடரில்" இறங்கி அங்கு வெஸ்டர்ன் லைனில்  வரும்  துரித மின்சார ரயிலில் ஏறி, இன்னும் ஒரு முக்கால் மணிநேரம் பயணித்து "சர்ச்கேட்" நிலையத்தில் இறங்கி வேலைக்கு செல்லவேண்டும்.

இந்த இரண்டு ரயில்களுக்குமே சொன்ன நிமிடத்திற்கு மட்டுமல்ல, சொன்ன நொடிக்கு கூட தவறாமல் வந்துவிடும்.

தமிழகத்தில் இருக்கையில் "பெங்களூரு செல்லும் நம்பர் 40 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் நாற்பது நிமிடம் தாமதமாக வரும்" என்று கேட்டு பழகி போன எனக்கு பாம்பாய் சென்றவுடன், அங்கே ரயில்களின் அட்டகாசமான நேரம் கடைபிடிப்பு மிக்க ஆச்சர்யம் தான்.

இங்கே நான் சொன்ன இரண்டாவது ரயில், "டாடர் டு சர்ச்கேட்" வண்டி, வெகு தொலைவில் உள்ள "வீரார்" என்ற ஊரில் இருந்து தன் பயணத்தை துவங்கும். விராரில் இருந்து சர்ச்கேட் ஒன்னரை மணிநேரத்துக்கும் மேல் என்று நினைக்கின்றேன்.

காலுக்கு சீத்தா, அரைக்கு சுக்கு, இறுதிக்கு மா!

எங்கள் பள்ளிக்கூட நாட்களில் காலாண்டு தேர்வு முறைகள் இருந்தது. பள்ளி பொதுவாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் ஜூன் - செப் வரை கற்றுக்கொண்ட பாடங்களுக்கான தேர்வுகளை தான் காலாண்டு தேர்வுகள் என்று நடத்துவார்கள்.

வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, அதாவது முதல் மூன்று ரேங்க் வரும் மாணவர் மாணவியர்களுக்கு இந்த காலாண்டு தேர்வுகள் அமிர்தமாய்  இருக்கும்.

கடந்த வருட இறுதி ஆண்டு பரீட்சை ஏப்ரல் மாதம் போல் முடிந்து நாளாகிவிட்டது. நான் உன்னோடு பெஸ்ட் என்று சகா மாணவ மாணவியர்களுக்கு மீண்டும் நிரூபிக்க துடிதுடித்து கொண்டு இருப்பார்கள்.

நன்றாக படிக்காத மாணவர்களுக்கோ.. அட என்னடா இது? இப்ப தான் ஏப்ரல் மாசத்துல இறுதி தேர்வுன்னு வைச்சாங்க.. அதுக்குள்ள காலாண்டா?  என்று புலம்பும் நாட்கள்.

என்னை போன்றவர்களுக்கோ.. காலாண்டு தேர்வு வந்தால் கொண்டாட்டம் தான். பரீட்சைக்காகவோ அல்ல நான் தான் பெஸ்ட் என்று நிரூபிக்கவோ அல்ல.

ஞாயிறு, 7 ஜூன், 2020

என் அருகே நீ இருந்தால்..ஆங்கில பாடல் !

இரவு வந்து உலகே இருட்டாக
நிலவின் ஒளி
ஒன்று மட்டுமே நாம்
காண்கையில்..

நான் அச்சப்படமாட்டேன்..
நான் அச்சப்படவே மாட்டேன்..
என் அருகே நீ இருந்தால்..

நாம்  மேல்நோக்கி பார்க்கும்
அந்த  வானமே  நொறுங்கி வீழ்ந்தாலும்
மலைகள் இடம்பெயர்ந்து
சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்
நான் அழமாட்டேன், கண்ணீர் விடமாட்டேன்..
என் அருகே நீ இருந்தால்..


வெள்ளி, 5 ஜூன், 2020

மனைவி ஜோக்ஸ் - சரியா தவறா?

மனைவி ஜோக்ஸ் என்பது  உலகின் அனைத்து சாராரிடமும்  பொதுவாகவே இருக்கும் ஒன்று.

மனைவியின் சமையல் பற்றி...

மனைவியின் செலவு பற்றி ...

மனைவியின் தோழிகளை பற்றி..

மனைவியின் பெற்றோரை பற்றி...

மனைவியின் கண்டிப்பாய் பற்றி ...

மனைவியின் பேச்சை பற்றி ...

என்று ...

உலகின் அனைத்து ஆண்களும் மனைவி ஜோக்ஸ் அடித்து கொண்டு இருப்பார்கள்.

வியாழன், 4 ஜூன், 2020

நெஞ்சில் ஒரு ராகமும் அதற்கு ஒரு இடமும்! !

நம் வாழ்வில் நாம் எத்தனையோ இடங்களில் வாழ்ந்து இருந்தாலும் அதில் சில இடங்கள் மட்டும் எப்போதுமே நம்மில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். என்ன ஒரு அழகு.. என்ன ஒரு உணர்வு என்ன ஒரு மகிழ்ச்சி. பல நினைவுகளை நம்மில் கொண்டு வந்து.
அமிர்தி காடு
அடே.. அடே.. இந்த இடம் தான் என்ன ஒரு அருமையான இடம்  இந்நாள் தான் என்ன பொன்னாள் என்று நம்மை நிறுத்தும்.
இருண்டு உருண்டு ...

இன்றைய  எந்திர வாழ்க்கையில் இவ்வாறான இடங்கள் நம் மனதில் எங்கேயோ  உறங்கி கிடைக்கும். நேற்று மாலை இல்லத்தின் எதிரில் இருந்த ஒரு பூ இப்படி தான் உறங்கி கொண்டு இருந்தது.

முந்தானை முடிச்சு காலத்தின் மீ டூ!

யு டுயூப் வந்தாலும் வந்தது, நேரம் போகலைன்னு அந்த காலத்து பாடல் ஒன்னு கேக்கலாம் போயிட்டு வந்தா, அடுத்த நாளே அந்த பாடல் வந்த காலத்து அம்புட்டு விஷயங்களும் ஸ்கிரீனில் வந்துடுது.

அப்படி வந்ததுல ஒன்னு தான் முந்தானை முடிச்சி படத்துல ஒரு காட்சி.

ஊருக்கு கைக்குழந்தையோடு வந்த வாத்தியார் பாக்யராஜ் மேல முதலில் வம்பு பண்ணி பிறகு பரிதாபப்பட்டு அதுக்கு அப்புறம் காதல் வயப்பட்டு அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ..

"வாத்தியார் என்னை கெடுத்துட்டாருன்னு"

ஊரையே கூட்டி ..அதுக்கு ரெண்டு பொடிசுங்கள சாட்சிக்கு வைச்சிட்டு, அதுமட்டும் இல்லாம ஒரு குழந்தை மேல துண்டு போட்டு தாண்டிடு அவரை கல்யாணம் பண்ணி அப்புறம் "Happily lived ever after"

இதே படம் இந்த காலத்துல ரிலீஸ் ஆனா யோசிச்சி பாருங்க.... மவனே..

பாடம் சொல்லிக்கொடுக்குறேன்னு ஊருக்கு வந்துட்டு, பரிதாபத்துக்காக யாருடைய குழந்தையையோ கையோட எடுத்துன்னு வந்து ..ஊருல்ல இருக்க வயசுக்கு வந்த சின்ன பொண்ணை கற்பழிச்சிட்டாருன்னு மாதர் சங்கங்கள்  டின் கட்டி இருப்பாங்க.

புதன், 3 ஜூன், 2020

பூக்கள், இறைவனின் ஆறுதல் பரிசோ...

சிறிய வயதில் இருந்தே பூக்கள் என்றால் எனக்கு மயக்கம் என்று தான் சொல்ல வேண்டும். பூக்களின் நிறம் மனம் குணம் என்று ஒவ்வொரு பூவையும் நின்று நிதானமாய் ரசிப்பவன்.

பள்ளிக்கூட வயதில், ஒரு பூவை பார்த்து மணிநேர கணக்கில் நான் ரசித்துக்கொண்டு இருக்க.. ஊரோ கண் காது மூக்கு வைத்து ஏதேதோ கதை பின்னி ..

"பாவம் விசு.. ! இன்னைக்கு ரிசல்ட் வர போது.. அவனை
 கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கோங்க.. "

பூவை ரசித்து கொண்டு  இருந்த என்னை பார்த்து பரிதாபமாக வர, நானோ இவங்களுக்கு என்ன ஆச்சி என்ற குழம்ப..

"ஏன் விசு, காலையில் இருந்து அரளி காயை பாத்துன்னு இருக்க.. இந்த முறை பாஸாகட்டி என்ன!!? அடுத்த முறை எழுதலாமே "

ன்னு  ஒருவன் சொல்ல..
அரளி 

"அட பாவி.. இந்த செடியில் அரளி காய் இருக்குறதையே நீ சொன்னவுடன் தான் பாத்தேன், அந்த பூவை பாருடா என்ன அழகு"என்று சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.

அடுத்து என்னை கவர்ந்தது ..

வைச்சி தாக்குவது மாமிச வகையாக இருந்தாலும், சைவ உணவில் எனக்கென்று பிடித்தததில் முதல் மூன்று இடத்தில் இருப்பது அவரைகாய்.

அவரை

ஒழுங்காய் சமைத்தால் என்ன ஒரு சுவை. சுவையை விடுங்கள், அவரை பூவின் அழகிற்கு அளவே இல்லை. அந்த ஊதா நிறத்தில் தான் எத்தனை காவியங்கள் வாழ்கின்றன!  அவரை கொடியின் கீழ் அடியேனை கண்டால் அவசரப்படத்தாதீர்கள்.

செவ்வாய், 2 ஜூன், 2020

விராட் கோலி அனுஸ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டுமாம்!

நேற்று ஒரு செய்தி படித்தேன். படிக்கும் போது அது இன்றைய நாட்களுக்கு  முட்டாள் தனமாக இருந்தாலும் அதில் பல விபரீதங்கள் எதிரி காலத்தில் இருக்கும் என்று தான் ஒரு பயம்.

கோலியின் மனைவி அனுஷ்கா "பாதல் லோக் " என்ற ஒரு வெப்சீரிஸை தயாரடித்தார்களாம். அதில் ஒரு குறிப்பிட்ட இனத்தோரை அவமான படுத்திவிட்டார்களாம். அதனால் கோலி அனுஷ்க்காவை உடனடியாக  விவாகரத்து   செய்யவேண்டும் என்று ஒருவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளாராம்.

அது சரி, 140 கோடி (குத்துமதிப்பா) மக்கள் வாழும் நாட்டில் இந்த மாதிரி  புகார் கொடுக்கும் முட்டாள்கள் சிலராவது இருப்பாங்க தானே என்று நினைத்து கொண்டே படிக்கையில் இந்த நபர் உத்திரப்பிரதேசத்தின்  பாஜக எம் ல் ஏ ஒருவராம்.

சரி, இவரு தான் முட்டாள் தனமான புகார் கொடுத்துள்ளார், இதுல என்ன எதிர்காலத்தில் விபரீதம்ன்னு கேட்போருக்கு...

ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ யார் மனதையோ புண் படுத்தினால், அதற்கு எதிர்வினையாற்ற ஜனநாயக முறையில் எத்தனையோ வழிகள் உண்டு. அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு .. "விவாகரத்து "என்று சொல்லுவது .  அதுவும்  ஆளுங்கட்சியின் நடப்பு MLA  ஒருவரிடம் இருந்து  புகார் வருமேயானால், அது இந்த ஜனநாயகத்திற்க்கே ஆபத்து.

திங்கள், 1 ஜூன், 2020

பொன்மகள் வந்தாளா?

எப்ப பாரு அந்த மானிட்டரையே பார்த்துன்னு இருக்கீங்களே, அதை ஆப் பண்ணிட்டு டிவியில் ஏதாவது ஒரு படம் போடுங்க என்று அம்மணி கேட்க..

அலறினேன்.

அம்மணி வாழ்க்கையிலே இதுவரை அதிகபட்சம் பத்து படங்கள் கூட பார்த்து  இருக்க மாட்டார்கள். அவங்களே கேக்குறாங்களே என்று உடனே கூகுளை தட்டி, எந்த படம் என்று விசாரிக்கையில்..

OTTயில் நேற்று தான் வெளி வந்து இருக்கின்றது என்று "பொன்மகள் வந்தாள்" படம் என்ற செய்தியை படித்து சில ரிவியூ பார்க்க, ஜோதிகா பெண்களுக்காக போராடும் வக்கீலாக வருகின்றார் என்று அறிந்து  அமேசானை தட்டுகையில்  நான்கு நட்சத்திரம் இருக்க, படத்தை ஆரம்பித்தோம்.

முதல் காட்சியில் துப்பாக்கி சூடு - சத்தம் என்று ஆரம்பிக்க அம்மணியோ..

"ஏதாவது பாக்குற மாதிரி போடுங்க,, இது என்ன துப்பாக்கி சூடு.. இந்த ஹீரோ நாப்பது பேரை அடிச்சி பொண்ணை காப்பாத்தி காதல் பண்ணி கல்யாணம் ஒரே பாட்டில் கோட்டீஸ்வரனாகி பழி வாங்குறது  எல்லாம் வேணாங்க.."