ஞாயிறு, 28 ஜூன், 2020

கிழஞ்சது போ அஞ்சி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்.

என் இனிய தமிழ் மக்களே...

கொரோனாவில் தாக்கப்பட்டு உடல் ரீதியாக மன ரீதியாக பண ரீதியாக கிட்ட தட்ட பிணம் போல் வாழும் நமக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.


கடந்த சில மாதங்களாக, கொரோன என்று நாம் கேள்வி படுமுன்பே  பல நிகழ்ச்சியில் சில பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவனின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கி போய்கொண்டு இருக்கின்றது. அரசாங்கம் உடனடியாக ஏதாவது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். 

இதற்கு பதில் சொல்வதற்காக ஆளுங்கட்சியாளருக்கு ஆதரவாக தமிழ் தொலைகாட்சியில் வலது சாரி என்ற போர்வையில் சேஷாத்திரி, ஆச்சாரி ,  இன்னும் சில பொருளாதாரத்தை பற்றி கொஞ்சமும் அறிவு இல்லா பொருளாதார நிபுணர்கள்

இது எதிர் கட்சியினரின் பொய். பொருளாதாரம் சிறப்பாக இருக்கின்றது என்று சொல்லி கொண்டு உண்மைகளை மறைத்து வந்தார்கள். 

கொரோனா வந்த பின்பு கூட இந்த "ஆஹா.. ஓ ஹோ.. பேஷ் பேஷ் .. தொடர்ந்து கொண்டு வந்தது.

அது மட்டும் மல்லாமல் இந்த காலத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தொகையில் 176 லட்சம் கோடியை எடுத்து தனியார்களுக்கு தாரை வார்த்து விட்டது மட்டுமல்லாமல், LIC யில் இருக்கும் பணத்திற்கு ஆட்டையை போடும் திட்டத்தில் இருக்கையில் தான் கொரோனா வந்தது.
 
இந்த வலது சாரிகளுக்கு மனசாட்சியே இல்லையா? இப்படி பொய் சொல்லுகிறார்களே, கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

சென்ற வாரத்தில் இவர்களின் பேச்சே  மாறி விட்டது.

அரசாங்கத்திடம் பணம் இல்லை.

கொரோனா.. 

உலகமே பாதிக்க பட்டுவிட்டது.

இதுல கிளைமாக்ஸ் என்ன தெரியுமா? 
நேத்து சேஷாத்திரி ஒரு போடு போட்டார் பாருங்க..

"கீழ் மட்டத்தில் இருந்த குடும்பங்கள் கடந்த சில  வருடங்களில் மிகவும் சிரமப்பட்டு உழைத்து நடுத்தர வர்க்கத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் மீண்டும் கீழ்மட்டத்திற்கே போய் விட்டனர். அவர்களின் பொருளாதார நிலை பத்துவருடங்களுக்கு பின்னால் போய்விட்டது."


இன்று ஒரு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் சேஷாத்திரி, மத்திய அரசாங்கம் இன்னும் ஏன் உதவி செய்ய மறுகின்றது என்று கேட்ட கேள்விக்கு..

"நிலைமை இன்னும் மோசமாக போக வாய்ப்புள்ளது. அப்போது உதவி செய்யலாம் என்று காத்து கொண்டு இருக்கின்றார்கள்"

 என்று ஒரு  செம்ம பதில் சொன்னார்.

சரி.. கஜானாவில் ஒன்று இல்லாத நிலையில் என்ன செய்ய போகின்றார்கள் என்று நினைக்கையில், இன்று..

கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் வரும் என்று ஒரு அறிக்கை. 

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். 

ஆட்டை கடிச்சி மாட்டை கடிசிச்  கடைசியில் அடி மடிக்கு வந்துட்டானுங்க.

என் இனிய தமிழ் மக்களே.. ஒவ்வொரு பைசாவையும் கவனமாக செலவு செய்யுயுங்கள். எந்த ஒரு செலவு செய்யும் போதும் இது அவசியமா என்று நினைத்து பார்த்து செயல் படுங்கள்.

சங்கிகளே நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இனிவரும் காலம் மிகவும் மோசமாக இருக்கும்.

பின் குறிப்பு :

அது என்னடா?  தடி எடுத்தவன் எல்லாம் தண்டால் காரன் போல, கொண்டவனும் பொருளாதார நிபுணர் ஆயிட்டான்.

+2 வில் ரெண்டு வருஷம், இளங்கலையில் மூணு வருஷம், முத்துகலையில் ரெண்டு வருஷம் அப்புறம் தணிக்கையாளர் படிப்பில் என்று பலவகையான பொருளாதாரம் படித்து வந்த நமக்கே எவனாவது .. பொருளாதாரத்தை பத்தி ஏதாவது கேள்வி கேட்டா.. 

"ஐயா.. பொருளாதாரம் அது நம்ம சப்ஜெக்ட் இல்ல. அதுக்கு பொருளாதாரத்தை முழுசா படிச்சவங்களிடம் கேளுங்கன்னு சொல்றோம். இந்த அப்பிரன்டிஸ்ங்க என்ன கேள்வி கேட்டாலும் ஆதாம் ஸ்மித் (அவரு தாங்கோ பொருளாதார தந்தை) லெவெலுக்கு அள்ளி விடுறானுங்க,..."

5 கருத்துகள்:

  1. இந்தியா அபரிதமான வளர்ச்சிபாதையில் செல்கிறது ஆனால் அதை வெளியே தெரியாமல் மூடி மறைத்து கொண்டு இருக்கிறார் மோடி காரணம் அது வெளியே தெரிந்தால் உலக நாடுகளின் கண்பட்டு வளர்ச்சி குறைந்துவிடும் இது தெரியாமல் நீங்க என்னனென்னவோ சொல்லுறீங்க விசு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுர...

      திரும்பவும் ஒரு முறை படிச்சி பாரு. நான் ஒன்னுமே சொல்லல..இன்னும் சொல்ல போனால் எனக்கு பொருளாதாரத்தை பத்தி பேசுற அளவுக்கு ஞானம் இல்லைன்னு தான் சொல்லி இருக்கேன்... :)

      நான் சொல்ல வந்தது..

      பொருளாதாரம் ஆஹா ஓஹோ ன்னு சொல்லுன்னு இருந்த சங்கிங்க ஒரு வாரமா "பொருளாதாரம் கதை கந்தலுனு சொல்லுன்னு இருக்குறாங்க..

      நீ எதுக்கும் ஊருல இருக்க அம்புட்டு சொத்தையும் நைசா கிழக்கு சீமைக்கு எடுத்துனு வந்துடு.

      நீக்கு
  2. திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்... அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த சங்கிகள் நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு இருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு ஜெயரஞ்சன்...

      அவர் பொருளாதாரத்துக்கு வந்து இருக்க நோயை பத்தியும் அதற்கான கசப்பான மருந்தை பத்தி தான் பேசுவார். அவரை தான் அர்பன் நக்சல் ஆன்டி நேஷனல் ன்னு சொல்லிட்டாங்களே..

      நீக்கு
  3. ஒலகத்துலயெெங்கல மாதிறி பொய் சொல்ல புதுசா
    ஒருத்தன் பிறந்து தான் வரனும் .............

    பதிலளிநீக்கு