செவ்வாய், 30 ஜூன், 2020

டயர் நக்கி அடிமை கேட்டான் பாரு ஒரு கேள்வி!

சாத்தான் குளத்தில் நடந்த கேவலமான கொடுமையான சம்பவத்தை பற்றி நிறைய தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை பார்க்கையில் இந்த அதிமுக அடிமைகளின்  பேச்சு நம்மை வாந்தி எடுக்கும் அளவிற்கு அருவருப்பாக இருக்கின்றது.


ஒரு பெண்மணி ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கையில்..

மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியில் என்று ஆரம்பிக்கும் போது, இதெல்லாம் ஒரு ஜென்மமா என்று நினைக்க தோன்றுகின்றது.

ஏழைமக்களின் பணத்தை கணக்கு வழக்கில்லாமல்;சேர்த்து அதற்காக Accused  1  என்று பெயர் பெற்று, தீர்ப்பிற்கு முன்பு மரணம் அடைந்த ஒரே காரணத்தினால் சிறைக்கு செல்லவேண்டிய ஒருவரை..

மாண்பு மிகு இதய தெய்வம் என்று பொது வழியில் அழைக்கின்றார்கள் அதையும் ஏற்று கொள்ளும் மக்களின் மனபாவம்.

இன்று கேள்வி நேரத்தில் புகழேந்தி என்ற ஒரு அடிமை பேசிய பேச்சு முட்டாள்தனமாக மட்டும் இல்லாமல் கொடுமையின் உச்சத்துக்கே போய்விட்டது.

நெல்சன் :

முதல் அமைச்சர் இவர்கள் உடல் நலம் குன்றி இறந்தார்கள் என்று சொல்கிறார். அமைச்சர் கடம்பூர் இது ஒரு லாக் அப் மரணம் இல்லை என்கிறார்.
இது லாக்கப் மரணமா ? அல்ல உடல் நலம் குறைந்து இறந்தார்களா? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? 

அடிமை:

இந்த நாட்டின் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி.. அன்பு அண்ணன் ஓ பி ஸ்  இருவரும்  ஒரு அறிக்கை விட்டுள்ளார் (மாண்புமிகு மற்றும் அன்பு, இங்கே ரொம்ப அவசியம், பதிலை சொல்லு அடிமை என்று சத்தம் போடாமல் இருக்க நெல்சன் பட்ட சிரமம்  புரிகின்றது.)

மேலும் பல வழ வழ கொழ கொழ ..

நெல்சன் :

இது லாக்கப் மரணமா இல்லையா?  

அடிமை :
உள்ளே அடிக்கும் போது அவர் இறக்கவில்லை!  

நெல்சன்: 
ஓ.. அப்பஅடிச்சி தூக்கி வெளிய போட்டு அங்கே இறந்த லாக் அப் மரணம் இல்லயா?

அடிமை :

லாக் அப்பில் தூக்கு போட்டு சாவுறாங்களே!! அது லாக் அப் மரணத்துல வருமா? 

நெல்சன் : 

ஓ.. லாக்அப்பில் தூக்கு போட்டு சாவுறவரைக்கும் வசதி எல்லாம் இருக்கா?


இந்த அடிமை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு லாக் அப்பில் தூக்கு எல்லாம் போட (போட்டு விட) வசதி எல்லாம் இருக்கின்றது என்று சொல்லும் அளவிற்கு கேவலமான ஜந்து.

தமிழகத்தின் நிலைமை இதற்கும் கேவலமாக கீழ்த்தரமாக போகும் என்று நினைத்தாலே மனது பதறுகிறது.  



3 கருத்துகள்:

  1. விசுவாசிகளை இந்த விசு இந்தளவிற்கு வாசிக்க கூடாது.

    பதிலளிநீக்கு
  2. அரசியல்வியாதிகளின் அளப்புகளைக் கேட்டுக்கேட்டு காதுகள் புளித்துப் போய்விட்டன.

    பதிலளிநீக்கு