வியாழன், 4 ஜூன், 2020

நெஞ்சில் ஒரு ராகமும் அதற்கு ஒரு இடமும்! !

நம் வாழ்வில் நாம் எத்தனையோ இடங்களில் வாழ்ந்து இருந்தாலும் அதில் சில இடங்கள் மட்டும் எப்போதுமே நம்மில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். என்ன ஒரு அழகு.. என்ன ஒரு உணர்வு என்ன ஒரு மகிழ்ச்சி. பல நினைவுகளை நம்மில் கொண்டு வந்து.
அமிர்தி காடு
அடே.. அடே.. இந்த இடம் தான் என்ன ஒரு அருமையான இடம்  இந்நாள் தான் என்ன பொன்னாள் என்று நம்மை நிறுத்தும்.
இருண்டு உருண்டு ...

இன்றைய  எந்திர வாழ்க்கையில் இவ்வாறான இடங்கள் நம் மனதில் எங்கேயோ  உறங்கி கிடைக்கும். நேற்று மாலை இல்லத்தின் எதிரில் இருந்த ஒரு பூ இப்படி தான் உறங்கி கொண்டு இருந்தது.

என்னடா இது, பகல் வேளையில் அவ்வளவு நன்றாக பரந்து விரிந்து இருந்ததே என்று நினைக்கையில் இந்த பூ போலவே மனதில் உறங்கி கொண்டு இருந்த வேலூர் நகரை சார்ந்த அமிர்தி காடு நினைவில் வந்தது.

என்ன ஒரு அருமையான இடம். சிறிய மலை, அருவி, பாறை, பறவைகள்..நீரோடை என்று .. படிக்கும் காலத்தில் மகிழ்ச்சி சோகம் அனைத்திற்கும் இந்த இடம் தானே இதை எப்படி மறந்தோம் என்று நினைத்து  கொண்டே உறங்கினேன்.


அமிர்தி காடு


சற்றே பரந்து ...

உதய சூரியன் உதித்தவுடன் ஒரு காபியை எடுத்து கொண்டு இல்லத்தின் எதிரில் செல்கையில்.. நேற்று மாலை  சுருண்டு உருண்டு கிடந்த அந்த பூ சற்றே விரிந்திருந்தது.  அதன் கூடவே அம்ரிதியின் நினைவும் விரிந்தது என்று தான் சொல்லவேண்டும்.


நடுப்பகலில் பூ எப்படி தான் இருக்கின்றது என்று ஆவலோடு பார்க்கையில்  முழுவதுமாக திறந்து ஒளித்து கொண்டு இருந்தது, மனதில் அமிர்தி காட்டை போல்.
முழுதாக மலர்ந்து ...
சும்மா இருக்க முடியுமா?

பல வருடங்களுக்கு முன்னாள் ..1965 போல் அமெரிக்காவின் Fats Domino என்றவர் தனக்கு மிகவும் பிடித்த இடமான Blue Berry Hill என்ற இடத்தை வைத்து ஒரு மெகா ஹிட் பாடலை தந்தார். அந்த பாடலை "Blue  Berry  Hill " என்பதை மட்டும் "Amirthi  Hill " என்று நான் மாற்றி பாடினேன்.



நீங்களும் கேட்டு ரசித்து தங்கள் மனதிற்கு பிடித்த அந்த இடத்திற்கு சில நிமிடங்கள் செல்லுங்கள்.



பாடலின் வரிகள், ஆங்கிலத்தில்...

I found my thrill
On Blue Berry Hill
On Amirthi Hill
When I found you
The moon stood still
On Amirthi Hill
And lingered until
My dream came true
The wind in the willow played
Love's sweet melody
But all of those vows you made
Were never to be
Though we're apart
You're part of me still
For you were my thrill
On Amirthi Hill

I found my thrill
On Amirthi Hill
On Amirthi Hill
When I found you









3 கருத்துகள்:

  1. அழகான மலர்...

    இசையும் பாடலும் அருமை...

    அடுத்து "என் இனிய பொன் நிலவே..." தானே...?

    பதிலளிநீக்கு
  2. அமிர்தி காடு -இத்வரை பார்த்ததில்லை கட்டாயம் பார்க்க வேண்டும், ரசித்துப் பாடிய பாடல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. ஓ விசு அமிர்தி காடு நான் சென்றிருக்கிறேன் எனக்கு மிக மிகப் பிடித்த இடம். கீழிருந்து மேலே செல்ல செல்ல வாவ். அமிர்தி அந்த ஜூ அந்தப் பாதையில் இடப்புறம் ஆறு. ஜூ ஒட்டி உள்ளே ஒன்றரை கிலோமீட்டர் நடந்தால் அமிர்தி அருவி...அப்புறம் மேலே ஜவ்வாது மலையில் ஏற ஏற அந்தக் காட்சி செமையா இருக்கும்...அப்புறம் ஜமுனாமரத்தூர் அங்கு பீமன்மடுவு ஃபால்ஸ் நினைவுகளை மீட்டிவிட்டீங்க

    பூ ரொம்ப அழகா இருக்கு. அது போல உங்கள் பாட்டும் நீங்க எப்பவுமே ரசித்துப் பாடுவீங்க சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு