புதன், 17 ஜூன், 2020

இன்னார் பிள்ளை இன்னார் ! Nepotism!

இந்த பதிவு ஆங்கிலத்தில் "Nepotism"  (தமிழில் இதற்கு என்ன சொல் என்று தெரியவில்லை) என்பற்காக எழுத பட்டது. நேபோட்டிசம் என்றால் என்ன? "இன்னார் பிள்ளை இன்னார் அதனால் அவருக்கு மட்டும் வாய்ப்பு" என்பது தான். திறமை இருக்கின்றதோ, படிப்பு இருக்கின்றதோ, ஆர்வம் இருக்கின்றதோ இல்லையோ... இன்னாரின் பிள்ளை என்ற ஒரே ஒரு தகுதி போதும்.

இது உலகின் அனைத்துநாடுகளிலும் இருக்கின்றது. இந்தியாவில் சற்றே தூக்கலாக.

உதாரணத்திற்கு.



இந்திய கிரிக்கெட் மற்றும் தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன். இவரை மீறி தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்  தளத்திலே இரு அணுவும் அசையாது. சில வருடங்களுக்கு முன் இவரின் மருமகன் மெய்யப்பன் கிரிக்கெட் தழுவிய சூதாட்டத்தில் இறங்க அவரை கிரிக்கெட் உலகம் தள்ளி வைத்தது. அவரை மட்டும் தான் தள்ள முடியும். இன்று தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் யார் தெரியுமா?  பல டெஸ்ட் மேட்ச் ஆடி கிரிக்கெட் ஆட்டத்திற்காக தன்னை தானே அர்ப்பணித்தவர் யாரும் அல்ல. இந்த மெய்யப்பன் மனைவி சீனிவாசனின் புதல்வி. இது தான் நேபோட்டிசம். இதே சீனிவாசனின் சகோதரன் தான் ஒன்றுக்கும் உதவாத இந்திய ஒலிம்பிக் கமிட்டினியின் தலைவர்.

விளையாட்டு வீரர்களுக்கு வருவோம். கடந்த சில வருடங்களில் கவாஸ்கர் ஸ்ரீகாந்த் பின்னி ஷிவலால் யாதவ் டெண்டுல்கர் போன்றோர்களின் பிள்ளைகளின் பெயர்களை அங்கும் இங்கும் பார்த்து இருப்போம். இவர்கள் அனைவரும் எப்படி தான் இந்திய அணிக்கு (டெண்டுல்கர் ஜூனியர் அணிக்குபி) தேர்வு பெற்றார்கள் என்பது அதிசயமே. இவர்களை விட சிறந்த எத்தனையோ வீரர்கள் இருக்கையில் இவர்கள் எப்படி, அதுதான் நேபோட்டிசம்.  ஆனால் விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமே. சரக்கு இல்லாததினால் இவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், ஒரு டெஸ்ட் மேட்ச் அல்லது ஒன்டே மேட்ச் அல்ல ரஞ்சி மேட்ச் ஆகிவிட்டாலும் சாவும் வரை பென்ஷன் தானே. அதனால் இவர்களுக்கு வாய்ப்பு.

அடுத்து பள்ளி மற்றும் மதவாரியான நிர்வாகம்.

எந்த மதத்தினர் நடத்தும் எந்த மதம் சார்ந்த  நிறுவனமானாலும் சரி, அதற்கு அவர்களின் அடுத்த வாரிசே தலைமை.

தனியார் நிறுவனத்தில் இன்னும் கொடுமை. உதாரணத்திற்கு 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி என்று சொன்ன மதுவந்தி அவர்கள் பாட்டி  ஆரம்பித்த பள்ளிக்கூடத்திற்கு தலைமையாம்.

இந்த அம்மணியின் அறிவாற்றலுக்கும் வகிக்கும் பதவிக்கும் ஏதாவது பொருத்தம் உண்டா? இன்னாரின் பிள்ளை என்பதாலே.

அடுத்து ஐக்கிய நாட்டு சபை. இந்த சபையினால் கடந்த ஐம்பது வருட காலங்களில் ஒரு உருப்புடியான காரியம் நடந்து இருக்காது. இருந்தாலும் இங்கே வேலை செய்பவர்களை விசாரித்து பாருங்கள். அம்புட்டு பேரும் இன்னாரின் பிள்ளை என்று தான் இருக்கும். இங்கே வேலை கிடைத்து விட்டால் போதும், வாழ் நல்ல முழுக்க கால் மேல் கால் போட்டு கொண்டு ஜாம் ஜாம்னு இருக்கலாம். வேலை செய்வதை விடுங்க, இவங்க நடுவுல சில  பேரை பிரதிநிதின்னு நியமிப்பாங்க. அதுக்கு ரஜினிகாந்த் மகள் போன்ற அட்டக்கல் தான் தகுதி. சரி இவங்கள தேர்ந்தெடுத்தாங்க சரி, அதுக்குன்னு இவங்களையேவா பரதநாட்டியம் ஆட வைப்பாங்க?

சரி, நடிகர்களுக்கு மட்டும் தான் இந்த வாரிசா? ஏன்.. இயக்குனர், கதாசிரியர் , இசை அமைப்பாளர் இவங்க துறையில் நேபோஸ்டிசம் ஏன் வரலை?  எப்படி வரும்? அதுக்கு திறமை வேணுமே. இளையராஜாவிடம் திறமை இருந்தது, கோலோச்சினார். பிள்ளைகளினால் அவரை மாதிரி ஜொலிக்க முடியலையே.  இளையராஜாவின் வாரிசுகள் இத்தனைக்கும் பிரேத்தியேகமான இசை பள்ளியில் கற்றவர்கள்.

அடுத்து .. ஆடிட்டர் மவன் ஆடிட்டர், வக்கீல் மகன் வக்கீல் , டாக்டர் மகன் டாக்டர்.. இதற்கு கொஞ்சம் படிப்பு தேவை.. இருந்தாலும் திறமை அவசியம் இல்லை.தனி  டியூஷன் வச்சி குறைத்த மதிப்பெண் எடுத்து பாஸ்  மட்டும் போதும், அப்பாவோட கம்பெனிக்கு ப்ரெசிடெண்டாக அமர்ந்திடலாம்.

கடைசியாக  அரசியலில், அதுவும் இந்திய அரசியலில் சொல்லவும் வேண்டுமா? அனைத்து கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை நேபோட்டிசம் மட்டுமே. யாராவது ஒரு தலைவரின் பிள்ளைகள் அந்த கட்சியில் நல்ல பதவியில் இல்லாவிடில் அந்த தலைவருக்கு பிள்ளைகள் இல்லை என்று தான் அர்த்தம். சரி கட்சிக்கு தான் இவர்கள் பிள்ளைகளை அனுப்பிவைப்பார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். இந்த கட்சி தலைவரின் பிள்ளைகள் மற்ற துறைகளுக்கும் தலைவராக நியமிக்க படுவார்கள். சம்மேபதிய உதாரணம் , அமித் ஷா மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிக பெரிய பொறுப்பாளர். அன்பு மணி ராமதாஸ் தமிழக பாட்மிண்டன் சங்க தலைவர். மீண்டும் நேபோட்டிசம் !

"Nepotism is not fair. period!"

சென்ற வாரம் பாம்பயில் சுசித் சிங் ராஜ்புட் என்ற  ஒரு நல்ல நடிகர் தற்கொலை செய்து மாண்டு கொண்டார் என்று கேள்வி பட்டோம். அதற்கான காரணம், தான் என்ன தான் நல்ல நடிகராக இருந்தாலும் திறமை இருந்தாலும் இந்த நேபோட்டிசம் காரணத்தினால் சாதிக்க இயலவில்லை என்பதே.  தற்கொலை என்பது ஒரு தவறான முடிவே. அதற்க்கு மாற்று கருத்தே இல்லை.  ஆனால், இந்த நேபோட்டிசம் போன்ற விஷத்தினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது தற்கொலை அல்ல கொலையே.   சிறந்த நடிகராக இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு தராமல் மற்ற வாரிசு நடிகர்களுக்கு மட்டும் வாய்ப்பு என்ற எழுதா விதியின் ஈவு தான் இந்த கொலை.

சினிமா உலகில் நேபோட்டிசம் என்பது நடிகர்களுக்கு மட்டும் பொருந்தும். இன்னாரின் பிள்ளை இன்னார்., அவருக்கு திறமை இருக்கின்றதோ  இல்லையோ, அதை பற்றி யாருக்கும் கவலை இல்லை.

சுனில் தத் அவர்களின் மகன் சஞ்சய் தத். மிக பெரிய நடிகர். இவருடைய முதல் படத்தை பார்த்தால்அவரின் நடிப்பு மரக்கட்டையை விட கேவலமாக இருக்கும்.  இருந்தாலும் தத் என்ற பெயர், மீண்டும் மீண்டும் வாய்ப்பு. கபூர் குடும்பத்தை கேட்கவே தேவை இல்லை. நடிகர்களுக்கு தகுதி தேவை இல்லை, வாய்ப்பு மட்டுமே தேவை. இம்மாதிரியான வாரிசுகளுக்கு வாய்ப்புகள் ஏராளம்.

நவாப் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் தம்பதியர்களை நமக்கு தெரியும். பட்டோடி சிறந்த கிரிக்கெட் வீரர், அன்றைய இந்திய அணியின் கேப்டன். ஷ்ரமிலா பிரபல நடிகை. இவர்களின் புதல்வன் சைப் அலி கான் ஏன் கிரிக்கட்  வீரராகாமல் நடிகரானார்? கிரிக்கெட்டுக்கு தேவை திறமை, நடிப்பிற்கு தேவை வாய்ப்பு. இவரின் முதல் படங்களும்  மரக்கட்டை கரண்டியே.

இப்படி திறமை இல்லாதவர்கள் வாய்ப்பினாலே வெற்றி பெறுவதும் திறமை உள்ளவர்கள்  வாய்ப்பின்றி வாடி போவதும் ஒரு சாப கேடே!





3 கருத்துகள்:

  1. ரெண்டே விஷயம்தான் சார், திறமைகல் திருடப் படுகின்றன அல்லது புதைக்கப் படுகின்றன. Nepotism is not fare!

    பதிலளிநீக்கு
  2. இதை எழுத தான் முடியும்.
    மாற்ற முடியாது ஐய்யா.
    "சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது, பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது" என கவிஞர் அன்று சும்மாவா சொல்லிவிட்டு போனார்?
    அணைவரும் நம் சொந்த ரத்த பந்தங்களுக்கு தான் முன்னுரிமை தர முடிகிற கையரு நிலையில் உள்ளோம்.

    பதிலளிநீக்கு