வியாழன், 18 ஜூன், 2020

பார் மகளே பார்.. சாரி... Car மகளே Car !

இளையவளுக்கு தற்போது 17. இங்கே அமெரிக்கா வாழ் பிள்ளைகள் பொதுவாகவே 15 வருடம் ஆறு மாதத்தை கடக்கையில் வாகன ஓட்டுநர் உரிமை பெற்று விட்டுவார்கள்.  15வது பிறந்தநாள் கொண்டாடும் போதே அவர்களின் பேச்சு..

"எப்ப எனக்கு கார் தருவீங்க? "

என்ற கேள்வி மட்டுமே.

இங்கே ஒரு எழுதப்படாத விதி.

அப்பா அம்மா இருவரில் ஒருவரின்  காரை பிள்ளைக்கு கொடுத்துவிட்டு அப்பா அம்மாவிற்கு புதிய கார் வாங்கிவிடுவோம்.

இதற்கு சில காரணங்கள்  உண்டு.

முதல் காரணம்.



புதிதாக வண்டியை ஓட்டுபவர்கள் புதிய காரை எடுத்து எதுவும் விபத்து நேர்ந்தால்.. அடேஅடே .. புது கார் இப்படி ஆயிடுச்சே என்று வருத்தபட தேவை இல்லை.

அடுத்து ..

இந்த அப்பா அம்மா இரண்டு வாகனத்தில் ஒன்றை வைத்து தான் அவர்கள் ஓட்ட பழகி இருப்பார்கள். அப்படி பழகிய கார் வைத்து ஆரம்பிப்பது நல்லது தானே.

மூன்றாவது..

பதினெட்டு வயதிற்கும் கீழே உள்ள ஓட்டுனர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை மிகவும் அதிகம். அதுவும் புது  கார் என்றால் சொல்லவே வேண்டாம்.

மேலே சொன்ன மூன்று காரணங்களும் பிள்ளைகளுக்கு ஏன் பழைய கார்  கொடுத்தீர்கள் என்று கேட்டால் பெற்றோர்கள் சொல்லும் பதில்.

இதையே பிள்ளைகளிடம் கேட்டால்..

"என்னைவிட எங்க அப்பாவுக்கு அம்மாவையும் அம்மாவுக்கு அப்பாவையும் தான் ரொம்ப பிடிக்கும். அதனால ஒருத்தருக்கு மாத்தி ஒருத்தர் புது கார் வாங்கி கொடுப்பாங்க, எனக்கு பழசு தான்"

என்று சொல்லுவார்கள்.

சரி, வண்டி வாங்கி கொடுத்தாச்சு.

இப்ப செலவிற்கு வருவோம்.  நான் சொல்வது அனைத்தும் பொதுவாக நடப்பது. இதற்கு விதிவிலக்குகள் உண்டு.

பழைய  வாகனமாக இருந்தால் கூட அதற்கு மாத இன்சூரன்ஸ் பிள்ளைகளுக்கு மட்டும் 100 டாலர் மேலே வரும். அதை தவிர்த்து பெட்ரோல் செலவு மாதத்திற்கு  இன்னொரு 200 டாலர். ஆயில் மற்றும் சர்விஸ் என்று மேலும் சில செலவுகள்.

பிள்ளைகள் வாகனம் பெற்ற உடனே... வீம்பாக..

"நீங்க ஒன்னும் எனக்கு செலவு செய்ய வேண்டாம், நான் பாத்துக்குறேன்"

என்று சொல்லி வேலைக்கு சென்று முதல் இரண்டு மாதம்  அடித்து பிடித்து சமாளித்து மூன்றாம் மாதம் ..

பையன் என்றால்.... அம்மா!

பெண் என்றால் அப்பா!

என்று அன்போடு அழைத்து...

"என் சம்பளம் பத்தலை. நான் பெட்ரோல் மட்டும் சமாளிச்சிக்குறேன். நீங்க இன்சூரன்ஸ் மட்டும் மத்ததுக்கு ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ்!!"

என்று சொல்ல..

பெண்ணாய் இருந்தால் அம்மா!
பையனாய் இருந்தால் அப்பா!

"சம்பாதிக்குறதை எல்லாம் என்ன பண்ற? எல்லாம் வீணடிக்கிற, பண விஷயத்தில் ஜாக்கிரதையா இருக்கணும்!!!"

என்று அறிவுரை கொடுக்க..

பையனாய் இருந்தால் அம்மா!
பெண்ணை இருந்தால் அப்பா!

"பாவம், அந்த பிள்ளை. அந்த வயசுல எல்லாம் எங்க வீட்டில் சாப்பாடை கட்டி கொடுத்து கை செலவுக்கு காசு கொடுத்து, படிச்சா மட்டும் போதும்ம்னு அனுப்பி வைப்பாங்க. இந்த பிள்ளை தான் என்ன பாடு படுது.  நம்ம தான் புரிஞ்சிக்கினு உதவி செய்யணும் ..."

என்று சொல்ல.

பிள்ளைகளின் மொத்த கார் செலவும் நம்மையே சேர்ந்துவிடும்.

இப்படி போகையில், திடீரென்று இன்சூரன்ஸ் ஆட்களிடம் இருந்து ஒரு போன் வரும்.

"நீங்க ஏன் தனி தனி காருக்கு தனி தனி பாலிசி ஆட்சி இருக்கீறீங்க. குடும்ப பாலிசி எடுத்துடுங்க. நாலு பேரும் நாலு காரையும் ஒட்டிக்கலாம். "

என்று சொல்வதை கேட்ட ராசாதிக்கள்..

"ஐ.. இது நல்லா இருக்கே.. இப்படியே செய்யலாமே"

என்று சந்தோசப்பட..

மீண்டும் பழைய கார் பெற்றோர்களிடம் வர பிள்ளைகள் புதிய காரோடு.

இப்படி வாழ்க்கை போய் கொண்டு இருக்கையில் தான், பதினெட்டாம் பிறந்தநாள் வரும்.

பையனா இருந்தால் அம்மாவிடம் !
பெண்ணாய் இருந்தால் அப்பாவிடம்!

"எனக்கு பதினெட்டாம் பிறந்தநாளுக்கு கார் தானே வாங்கி தர போறீங்க.. ? ரொம்ப தேங்க்ஸ்"

என்று அவர்களே ஏற்கனவே முடிவு செய்த காரின் பெயரை சொல்ல..

பையன் என்றால் அம்மாவும் !
பெண் என்றால் அப்பாவும்!

நடக்கட்டும் நடக்கட்டும் என்று சொல்ல வாழக்கையும் காரும் ஓடும்!

பின் குறிப்பு :

என்னடியாம்மா.. எப்ப "டிரைவ் இன்"னில் சாப்பிட போனாலும் அம்மா கார் வேண்டாம் அப்பா காரில் போகலாம்னு சொல்றீங்களே.. ஏன்?

அம்மா காரில் தூசி பட்டாலே டென்ஷன் ஆயிடுவாங்க, உங்க காரில் குப்பையே கொட்டலாம்.. நோ டென்ஷன்..

உங்க காரிலே போகலாம்.



4 கருத்துகள்:

  1. பையன் என்றால் அம்மாவும் !
    பெண் என்றால் அப்பாவும் - True! True!!is that KFS Drumstick?

    பதிலளிநீக்கு
  2. ஒரு மில்லியனர் இப்படி புலம்பலமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வா மதுர வா !

      நீ இப்படி தான் கம்மெண்ட் போடுவேன்னு எனக்கு தெரியும். உன் வார்த்தை என்னைக்காவது பலிக்கனும்னு நான் தினந்தோறும் ஆண்டவனை வேண்டிக்குறேன்.

      அது சரி அங்கேயும் இதே நிலைமை தானே. யாருடைய பழைய வண்டிய ராசாத்தி தலையில் கட்டினீங்க?

      நீக்கு