புதன், 10 ஜூன், 2020

கொத்தடிமைகளுக்கு நன்றி, 2021 ல் தமிழ் நாட்டில் பாஜக ஆட்சி!


நடக்கும் என்பார் நடக்காது என்பதை விடுங்கள்.. நடக்காதென்பார் நடந்துவிடும் என்பது தான் நடக்கப்போகிறது.

குளம் இல்லாமலே.. தண்ணீர் இல்லாமலே.. தேர்தல் இல்லாமலே மக்களின் ஆதரவு இல்லாமலே தமிழகத்தில் தாமரை மலரபோகின்றது.

Mark My Words..

கொரோனாவினால் தமிழகம் குறிப்பாக சென்னை படும் அவஸ்தை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவை நான் எழுதும் நாள் ஜூன் 10  . ஆகஸ்ட்  மற்றும் செப்டம்பர் மாதம் போல் தமிழகத்தில் கொரோனாவின் கொடுமையான விளைவுகள் நான்கு மடங்காக மாறும் என்பது தான் அனைவரின் பயமும்.

தமிழக அரசு என்னதான் தான் சாக்குபோக்கு சொல்லி கொண்டு இருந்தாலும், எத்தனை பேருக்கு கொரோனா எத்தனை பேர் கொரோனாவினால் இறந்தார்கள் என்று கணக்கு கொடுத்தாலும்.. இந்த எண்களை யாரும் நம்புவதற்கு இல்லை.



அதுமட்டும்மல்லாமல் இன்னும் சில வாரங்களில் யார் மரித்தார்கள் எத்தனை பேர் பிழைத்தார்கள் என்பதை விட.. அவனவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடும் நாள் வரும் என்பதும் சாத்தியமே.

இந்த மாதிரி நேரத்தில் அடுத்த வருடம் தமிழகத்திற்கான தேர்தல் வரப்போகின்றது. இந்த தேர்தல் நேரத்தில் அரசின் கஜானா மற்றும் தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் கொரோனா (அடுத்த வருசமும்மா  ? இதற்கான வாக்சைன் வரும்வரை இப்படி தான்) எல்லாம் கோவிந்தா கோவிந்தா என்ற நிலையில் தான் இருக்கும்.

வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்வாய்பட்டு இருந்தவர்கள் மட்டும் தான் இறந்தார்கள் என்று சொல்லிவந்த காலம் போய் வாலிப வயதில் உள்ளவர்கள் மட்டும் நல்ல சுகத்தோடு வாழ்ந்தவர்கள் கூட மரிக்கின்றார்கள் என்ற செய்தி வந்து கொண்டு இருக்கின்றது.

மற்றும், கோயில் குளம் மார்க்கெட் மால்  டாஸ்மாக் என்று அனைத்தையும் ஆரம்பித்து கொரோனாவின் சமூக பரவல் என்னை பார் என் அழகை பார் என்று தலைவிரித்தாடி கொண்டு இருக்கின்றது.

இப்படியான நிலைமையில் தமிழகத்தில் தேர்தல் வைக்க இயலாதென்று மத்திய அரசு முடிவெடுத்து ஒரு கவர்னரை நியமித்து தமிழகத்தில் அடுத்த சில ஆண்டுகளை கடத்தும் என்று தான் நான் நினைக்கின்றேன்.

செத்தாண்டா தமிழன்.

கொத்தடிமைகளை கோபுரத்தில் வைத்ததற்கு நல்ல சன்மானம்!

அது சரி.. தமிழகத்தை பத்தி இம்புட்டு பேசுரையே.. உங்க ஊர் நிலைமை என்னன்னு சொல்லுன்னு நீங்க கேப்பது காது கிழிய கேக்குது.

இங்கேயும் கொரோனாவின் நிலைமை அப்படி தான்.சென்ற வாரத்தில் இந்த  சற்று குறைந்து வந்த நேரத்தில், இனவெறிக்கு எதிராக நடந்த அந்த போராட்டத்தில் "சமூக விலகல்' காணாமல் போனதால் இங்கே அம்புட்டும் தலை கீழ் போகும் நிலைமை தான் இருக்கு. இந்த போராட்டத்தில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருந்து இருக்கும்,, எத்தனை பேருக்கு பரவி இருக்கும் என்று இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

என்ன ஒன்னு.. இதை காரணமா வைச்சி இங்கே தேர்தலை தள்ளி வைக்க மாட்டாங்க.. நவம்பரில் எப்படியும் தேர்தல் வைப்பாங்க

வருங்காலம் வசந்தகாலம் இல்லீங்கோ!

3 கருத்துகள்:

  1. எல்லாம் அவன் செயல் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. இதற்கு தமிழ்நாடு அழியப் போகிறது என்று சொல்லி விடலாம்...

    பதிலளிநீக்கு
  3. கொரொனா, எல்லைகளில் போர்சூழல் மற்றும் மோசமாகும் அரசியல் என எதுவுமே நல்ல அறிகுறியாக ில்லை. வசந்த காலம்கூட வேண்டாம், கடும் வறட்சியான காலமாகாவிட்டால்போதும். கடவுள்தான் வழி.

    பதிலளிநீக்கு