செவ்வாய், 23 ஜூன், 2020

கற்க கசடற (2 of 7 )

கற்க கசடற கற்றவை கற்றப்பின் நிற்க அதற்கு தக"!

என்ற குறளையொட்டி பள்ளிக்கூடத்து நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முந்தைய பதிவில் தந்து இருந்தேன்.

அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

அந்த பதிவில் இக்குறளில் மொத்தம் ஏழு குறள் அடங்கி உள்ளது என்று  சொல்லி இருந்தேன். மீதி ஆறை சீக்கிரம் எழுது என்ற அன்பு கட்டளைக்கு அடி பணிந்து, இதோ அந்த இரண்டாம் குறள்.

அதே ஏழு வார்த்தை , வேறொரு துவக்கத்துடன்.

கசடற கற்றவை கற்றப்பின் நிற்க, அதற்கு தக, கற்க "!

கசடற என்பதின் பொருள்

அப்பழுக்கற்ற மற்றும் தவறில்லா என்றாகும். களவும் கற்று மற, என்ற மொழிகளை வழி தள்ளிவிட்டு  நல்லவைகளை மட்டும் கற்று கொள்.

இப்படியான நன்பொருள்களை கற்ற பின் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவேண்டும். ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது போலாகிவிடக்கூடாது.

இப்படி அப்பழுக்கற்றவகைளை கற்று கொண்டு அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நிறைகுடம் ததும்பாது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுவது போல் இருக்கவேண்டும்.

அதற்கு தக கற்க,

இப்படி ஒரு மேன்மையான வாழ்வை வாழ அதற்கேற்றவாறு  தொடர்ந்து மென் மேலும் கற்க வேண்டும்.

இதுதான் இரண்டாம் குறள்..

5 கருத்துகள்:

  1. மிகவம் பிடித்த குறள்...

    வலைப்பூவில் முதல்முதலாக எழுதிய குறள்...

    எப்போதோ கேட்ட ஒரு நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா அவர்கள், இந்த குறளை மாற்றி மாற்றி சொல்லி விளக்கம் தருவார்...

    பதிலளிநீக்கு
  2. கசடற கற்றவை கற்றப்பின் நிற்க, அதற்கு தக, கற்க "!//

    ஹா ஹா ஹா ஹா ஹையோ ஹையோ இதை எங்கிட்டுப் போய் சொல்லுவேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்ப புரிஞ்சு போச்சு! அடுத்த 5ம் என்னானு!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. விசு,

    கற்றவை கற்றப்பின்(கற்றவற்றையே ஏன் திரும்ப கற்கவேண்டும்?) அல்ல; கற்பவை கற்றபின் என்றுதானே வள்ளுவர் எழுதியதாக சொன்னார்கள்.

    கசடற (பிழையின்றி / ஐயம் நீங்க ) கற்கவேண்டும்.
    ஐயம் நீங்கி இருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ!

      என்ன நண்பரே கல்வி என்ன மாவா? ஒரு முறை அரைக்க? அது சந்தனம் அல்லவா?

      வருகைக்கு நன்றி!

      நீக்கு