ஞாயிறு, 7 ஜூன், 2020

என் அருகே நீ இருந்தால்..ஆங்கில பாடல் !

இரவு வந்து உலகே இருட்டாக
நிலவின் ஒளி
ஒன்று மட்டுமே நாம்
காண்கையில்..

நான் அச்சப்படமாட்டேன்..
நான் அச்சப்படவே மாட்டேன்..
என் அருகே நீ இருந்தால்..

நாம்  மேல்நோக்கி பார்க்கும்
அந்த  வானமே  நொறுங்கி வீழ்ந்தாலும்
மலைகள் இடம்பெயர்ந்து
சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்
நான் அழமாட்டேன், கண்ணீர் விடமாட்டேன்..
என் அருகே நீ இருந்தால்..




இந்த அருமையான வரிகளை 1960களில் Ben  E King  என்ற ஆஃப்ரிக்க அமெரிக்கர் இசை அமைத்து பாடினார். இந்த பாடலை சிறுவயதில் முதல் முதலில் கேட்டபோதே ராகமும் வார்த்தைகளும் பசுமரத்தாணி போல் நின்று விட்டது.

இன்று அருமை நண்பன் இல்லத்திற்கு செல்ல, (நண்பனை பல வருடங்களுக்கு முன் முதல் முதலில் சந்தித்ததில்  இருந்து இன்று வரை சந்தித்தவுடனே பாடல்கள் தான்)  ...

" கோரனாவால காஞ்சி போய் இருக்கேன்.. வா வா..கிட்டாரை எடுத்துன்னு வரல? "

என்று கூற.. இந்த  சவாலான நேரத்திற்கு இப்பாடலை தவிர வேறு எதுவும் பொருத்தமாக இருக்காது என்று  சொல்லி பாட ஆரம்பித்தோம்.


இதோ இந்த பாடலின் ஆங்கில வரிகள்..

When the night has come And the land is dark
And the moon is the only light we'll see
No I won't be afraid
Oh, I won't be afraid
Just as long as you stand, stand by me


So darlin', darlin', stand by me
Oh, stand by me
Oh, stand
Stand by me, stand by me


If the sky that we look upon
Should tumble and fall
Or the mountains should crumble to the sea
I won't cry, I won't cry
No I won't shed a tear
Just as long as you stand, stand by me

And darlin', darlin', stand by me
Oh, stand by me
Woah, stand now
Stand by me, stand by me

1 கருத்து: