செவ்வாய், 30 டிசம்பர், 2014

பொறுமையின் நிறம் சிவப்பு !

டிசம்பர் 30, மாலை 6:30க்கு...

டாடி...

எப்ப  வீட்டுக்கு வருவிங்க..?

தெரியவில்லை மகளே, அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கு, என்ன விஷயம்?

நாளைக்கு இரவு புத்தாண்டிற்கு கோயிலுக்கு போக வேண்டும் அல்லவா அதற்கு நான் ஒரு டிரஸ் வாங்க வேண்டும்.. எப்ப வருவிங்க?

திங்கள், 29 டிசம்பர், 2014

நலம் தானா? நலம் தானா? ....உடலும் உள்ளமும்....!

வளைகுடா நாட்டின் நாட்கள்....அலுவலத்தில் இன்னொரு நாள்...

மிஸ்டர் விசு...

சொல்லுங்க மிஸ்டர் குஞ்சு குஞ்சு...
(என்னடா இவர் பெயர் வித்தியாசமாக இருகின்றதே என்று நீங்கள் பார்ப்பது புரிங்கின்றது... அதில் பெரிய கதையே உண்டு... அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்)

இந்த அரசு அலுவலத்தில் இருந்து நம்ம போன மாச "பில்" இன்னும்  டெபொசிட் பண்ணவில்லை. நான் எத்தனை முறை போன் பண்ணியும் சரியான பதில் கிடைக்கவில்லை, நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

ஓகே ... குஞ்சு குஞ்சு.. ஐ வில் டேக் கேர் ஆப் இட். தேங்க்ஸ்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி!


சென்ற வாரம் தாய்க்கு பின் தாரம் என்ற ஒரு பதிவிட்டு இருந்தேன், அதன் தொடர்ச்சி தான் இது. அந்த பதிவை படித்து விட்டு இதை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். அதை படிக்க இங்கே சொடுக்கவும்...தாய்க்கு பின் தாரம்


என்னங்க .... சின்னவ குரல் கொஞ்சம் வித்யாசமா இருக்கே, நீங்க கவனித்தீர்களா?

இல்லையே, அப்படி ஒன்னும் தெரியவில்லையே...

உங்க காதுல... ஈயத்த ....

காலையில் ஈர துணிய தான் நானே காய வச்சிட்டேன்...

ரொம்ப சந்தோசம்ங்க ...சரி, சின்னவளிடம் கொஞ்சம் பேச்சி கொடுத்து குரலில் உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா பாருங்க!

ஐந்து நிமிடம் கழித்து....

சனி, 27 டிசம்பர், 2014

புதன் கிழமை சைவம் !

நண்பர்களே, இந்த வாரம் முழுவதும் எழுத சிறிது கூட நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் நண்பன் கோயில் பிள்ளை இருக்கையில் எனக்கென கவலை.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

"பாட்டுக்கு (பாட்டு) பூட்டு"

பண்டிகை நாட்கள். குடும்பம்-உறவினர்கள்-நட்ப்புகள் என்று ஓடு ஆடி திரிந்து கொண்டு இருக்கையில், பதிவு எழுத நேரம் இல்லையே என்று வருந்தி கொண்டே .. .சரி எழுதாவிட்டாலும் பரவாயில்லை, சில பதிவுகளை படிக்கலாமே என்று நினைத்தேன்.

மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி...

நேரம் இல்லாத காரணத்தினால்  ஓர் மீள் பதிவு.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. "திருமணமான இந்திய தம்பதியருக்கான அறிவுரை" நிகழ்ச்சி. இந்த அறிவுரையை வழங்கியவர் நன்கு படித்த ஓர் பேச்சாளார்.
வெளி நாட்டு ஆட்களை பற்றி தெரியும். கொழம்பில் உப்பு இல்லாவிட்டால் கூட மனைவியும் - புருஷனும், வக்கீல், கௌன்செலர் என்று செல்வார்கள். ஆனால் நாம் இந்தியன் ஆயிற்றே. அதிலும் தமிழன் ஆயிற்றே. நம் வீட்டில் நடப்பது நாலு சுவற்றில் தான் நடக்க வேண்டும் அது வெளியே தெரிய கூடாது என்று நினைப்பவர்கள் ஆயிற்றே.



இந்த அழைப்பு வந்தவுடன், நான் சற்றும் யோசிக்காமல் எங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த அறிவுரை எல்லாம் எனக்கு தேவை இல்லை என்று சொன்னேன். இருந்தாலும், அது சாத்தியமாகது என்று அவர்கள் சில கேள்வி கேட்க்க ஆரம்பித்தனர். அதில் சில கேள்விகள்.

கடைசியாக எப்போது மனைவியிடம் " I love you " என்று சொன்னாய்?

அட பாவிங்களா! எங்கள் தலைமுறையில் ... நாங்கள் அன்பை செயலில் காட்டுவோம் ஆனால் வார்த்தைகளில் சொல்ல மாட்டோம், அதனால் நான் என் மனைவியிடம் இதுவரை... " I love you" என்று சொன்னது இல்லை.

ஒரு மனைவியிடம் " I love you" என்று சொல்லாத நீ எல்லாம் ஒரு மனிதனா?
இப்படி வாழும் உனக்கு தான் இந்த அறிவுரை தேவை.

நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க. இது வரை அவர்களும் என்னிடம் " I love you" என்று சொன்னது இல்லை. ஆனாலும், அவர்கள் என் மேல் உயிரே வைத்து உள்ளார்கள் என்று எனக்கு தெரியும் என்றேன்.

இருக்கவே முடியாது .. எங்கே உன் மனைவியை எங்கள் எதிரில் தொலை பேசியில் அழைத்து (ஸ்பிகரில்) அவர்களிடம்  " I love you" என்று சொல்.

வேண்டாங்க, அவர்களுக்கு இது எல்லாம் பிடிக்காது.

அது எப்படி அவங்களுக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்?

அட பாவிங்களே, அவங்களோடு 15 வருஷம் குப்பை கொட்டுறனே, இது கூடவா தெரியாது.

இல்லை, எங்களுக்காக ஒரு முறை சொல்லு.


 ரிங்.. ரிங் .. .ரிங்கியது..


ஹலோ..

ஹலோ மா! எங்க இருக்க?

எதனா அவசரமா பேசணுமா? நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்.

அது ஒன்னும் இல்ல...உன்னிடம் " I love you" சொல்லாம்னு தான் போன் பண்ணேன்.

போன் கீழே விழுந்த சத்தம் கேட்டது.

என்ன சொன்னீங்க..

ஒன்னும் இல்ல, நீ பிசிதானே, நான் அப்புறமா கூப்பிடுறன்.

பிசியும் இல்ல, ஒரு இழவும் இல்ல...நீங்க என்ன சொன்னீங்க. எனக்கு சரியா புரியில.

ஒன்னும் இல்ல மா... " I love you" சொல்லாம்னு கூப்பிட்டான்.

நானும் அதை தான் சொன்னீங்கனு நினைச்சேன். என்ன ஆச்சிங்க உங்களுக்கு, எந்த தப்பா இருந்தாலும் சொல்லுங்க நான் மன்னிச்சிடுறேன். ஆனால், உண்மையை மட்டும் சொல்லீடுங்க.

ஐயோ, நான் எந்த தப்பும் பண்ணுல.. சும்மா உன்னிடம் " I love you" சொல்லி என் அன்பை காட்டலாம்னு யோசித்தேன். தயவு செய்து என்னை நம்பு. நான் எந்த தப்பும் பண்ணல.

இல்லங்க. போன வருஷம் நம்ம பக்கத்து தெரு வாசகம் இல்ல... திருவாசகம், இந்த மாதிரி தான் அவர் மனைவிகிட்ட மூணு நாள் தொடர்ந்து " I love you"னு சொல்லி வந்தாராம். நாலாவது நாள் தான் அவருக்கும் அவர் கூட வேலை செய்யற இடத்தில இருக்க யாரோ ஒரு அம்மணிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி அதை மறைக்க தான் இந்த மாதிரி " I love you" னு சொன்னாருன்னு தெரிய வந்தது.

நான் போய் அப்படி எல்லாம் செய்வேனா? சும்மா தான் தெரியாம சொல்லிட்டேன்.

அது எல்லாம் எனக்கு தெரியாது, இன்னிக்கு எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகணும். ஏன் என்னை பார்த்து "I love you"னு சொன்னீங்க.

ஐயோ.. நீ என் மனைவி தானே, அது தான் சொன்னேன். தயவு செய்து என்னை மன்னிச்சிடு. இனிமேல் அந்த மாதிரி சொல்ல மாட்டேன்.

நானும் அதே தான் சொல்லுறேன்..நான் உங்க மனைவி தானே, எந்த ஒரு தமிழன் மனைவியிடம் " I love you" ன்னு சொன்னான். உண்மைய சொல்லுங்க.. எவ அவ?

அய்யோ.. சத்தியமா அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.

எனக்கு உண்மை தெரியனும். இல்லாட்டி, பிள்ளைகளிடம் சொல்லிடுவேன்.

ஐயோ.. இதில் பிள்ளைகளை என் சேக்குற..நான் உண்மையை இப்பவே சொல்றேன். இங்க 2-3 பேர் வந்து நம்ப ரெண்டு பேரையும் "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை நிகழ்ச்சிக்கு" கூப்பிடாங்க. நான் அவர்களிடம் எனக்கு இது எல்லாம் தேவை இல்லை, வாழ்க்கை நல்லா ஓடுதுன்னு சொன்னேன். அதற்க்கு, நீ எப்ப கடைசியா உன் மனைவியிடம் " I love you" சொன்னாய் என்றார்கள். நான் இதுவரை இல்லை என்றேன், அதற்க்கு என்னை ரொம்ப "போர்ஸ்" பண்ணி உன்னிடம் சொல்ல வச்சிடாங்க. என்ன மன்னிச்சிடு.

அந்த 2-3 பேர் தமிழர்களா?

ஆமா.என் கேக்குற..?

அவங்க மூணு பேரை அவனவன் எப்ப அவனவன் மனைவியிடம் ' I love you" ன்னு சொன்னான்னு கேளுங்க...

நீயே ஸ்பீக்கரில் தான் இருக்க... நீயே கேளு.

வணக்கம்.. நீங்க தான் என் வீட்டுகாரை என்னிடம் "  I love you " சொல்ல சொன்னீங்களா?

ஆமா மேடம். நீங்க ரொம்ப சந்தோஷ படுவிங்கன்னு நினைத்தோம்.

"சும்மா கிடக்கிற சங்கை ஊதி" ஏன்யா கெடுக்குரீங்க. குடும்பத்தில் குழப்பத்த உண்டு பண்றிங்களே.

சாரி மேடம், எல்லாம் உங்க குடும்ப வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான்.

அது சரி, இப்படி ஊரானிடம் எல்லாம் போய் மனைவியிடம் " I love you" சொல்லுனு சொல்றிங்களே... நீங்க எப்ப உங்க மனைவியிடம் கடைசியா " I love you" ன்னு சொன்னீங்க..

அது வந்து.. வந்து.. வந்து...

அது வராது...ஏன்னா, உங்க ஊர் கலாச்சாரம், பழக்கம்... அன்பை செயலில் காட்டும், வார்த்தையில் சொல்லாது.

இல்ல மேடம், நாலு பேருக்கு எதிரில் கணவன் மனைவி "கை கோர்த்து கொண்டு அன்பாக இந்த மாதிரி " I love you" ன்னு சொன்னா வாழ்க்கை இனிக்கும் இல்லையா?

அட பாவிங்களா... அது வேண்டும் என்றால் வெள்ளைகாரர்கள் கலாச்சாரமாக இருக்கலாம். நம்ம ஆளுங்க.. குறிப்பா, தமிழர்கள்.. பொது இடத்தில கை கோர்த்து கொண்டு .. அன்பை அனைவருக்கு எதிரில் பகிர்ந்தார்கள் என்றால்.. அங்கே அவர்கள் வீட்டில் 4 சுவர்களின் உள்ளே செம சண்டைன்னு அர்த்தம். அவங்க போடுற சண்டை வெளியே தெரிய கூடாதுன்னு, வெளியே வரும் பொது மட்டும் கை கோர்த்து கொண்டு.. டார்லிங் டார்லிங்.. டார்லிங்.... " I love you ....னு பாடுவாங்க..உள்ள பிரச்சனை தான்.

நீங்க சரியா சொல்றீங்க மேடம். இவ்வளவு புத்திசாலிதனமா பேசுறிங்களே... இந்த "திருமணமான தம்பதிகளுக்கான அறிவுரை" நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டா நாங்க ரொம்ப பெருமை அடைவோம்.

அப்படியா? இந்த நிகழ்ச்சியினால், மனைவிகளுக்கு என்ன பயன்?

மேடம், நீங்க வந்து பாருங்க புரியும்.. போன மீடிங்கில் கூட..முரட்டு காளை மாதிரி வந்த ஆளை பசு மாடு மாதிரி மாத்தி அனுப்பி வைச்சோம்.

அப்படியா... அப்ப கண்டிப்பா வரோம்..

பின் குறிப்பு : அங்கே என்ன நடந்தது என்பதை இங்கே படியுங்கள்.

http://www.visuawesome.com/

புதன், 24 டிசம்பர், 2014

என் கிறிஸ்மஸ் கதை !

பல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:

இன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம்.  நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா? அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

சொல்லி முடித்தார், எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பர். அவர் வளைகுடா பகுதியில் பல வருடங்கள் வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருப்பவர். அதனால் அவர் தம் குடும்பத்தோடு அங்கே வாழ்ந்து வந்தார் . இவ்வாறான நல்ல நாட்களில் அவர் தன் சக பணியாளர்களையும் நண்பர்களையும் தன் இல்லத்தில் அழைத்து விருந்து வைத்து உபசரிப்பார்.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

கோழி கூவுது .... கொக்கர "கோ"

சென்ற வாரம் நான் எழுதிய பதிவில் "அச்சச்சோ புன்னகை" என்ற பதிவில் அருமை நண்பன் சம்பத் என்னிடம்,

"என்ன விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?"

கேட்டதாக எழுதி இருந்தேன். இதை படித்த என் கல்லூரி தோழனும் சக பதிவருமாகிய கோயில்பிள்ளை அவர்கள் (இவர் ஒரு தமிழ் விரும்பி, அருமையான பதிவாளர். இவரின் படைப்புக்களை படிக்க இங்கே சொடுக்கவும்), இப்படி பொதுவாக சொன்னால் எப்படி? கோழி கூவுற நேரத்தையும் மற்றும் கோழி கொழம்பு கொதிக்கும் நேரத்தையும் சற்று விவரித்தால் தானே நீ எத்தனை மணிக்கு எழுவாய் என்பது படிப்பவர்களுக்கு புரியும் என்றார். அதனால் தான் இந்த பதிவு.

இயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.

இரவு படுக்கைக்கு போகும் முன் செய்தியில் " கூத்தபிரான் அவர்கள் மறைவு" என்பதை படித்து விட்டு அவருக்கு ஒரு அஞ்சலி பதிவை போட்டு விட்டு தான் படுக்கைக்கு சென்றேன். படுக்கையில் தூக்கம் தழுவும் முன் அவரின் கிரிக்கெட் வர்ணனை நினைவில் வர எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

திங்கள், 22 டிசம்பர், 2014

நன்றி கூத்தபிரான் அவர்களே...

"இதோ வருகிறார், மால்கம் மார்ஷல், விக்கடிற்க்கும் மேல் அரபு நாட்டு குதிரை போல் நளினமாக ஓடி வந்து வேகமாக வீசுகிறார். மார்பளவு உயரத்தில் குதித்து விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்தை வெங்கசர்க்கார் தொட்டு விட அந்த மட்டையின் விளிம்பில் பட்டு  ஸ்லிப் திசையை நோக்கி பறக்க, செல்லாமாக தான் வளர்த்த பச்சை கிளியை தன கையினால் அள்ளி அணைத்து வாரி கொள்வதை போல் சிறித்து கொண்டே பிடித்து கொண்டார் ஹார்ப்பர். இது விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்து. இதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை விட்டு விட்டு தொட்டு விட்டார் வெங்க்சர்கார். வெளியில் போகும் பாம்பை ஏன் அடிக்க வேண்டும் அது நம்மை சீண்ட வேண்டும் நாம் இறக்க வேண்டும்? "

மனைவிக்கு "கிப்ட்" வாங்குவதெல்லாம்...இறைவன்,!

அலை பேசி அலறியது...

ஹலோ ... விசு பேசுறேன்..

வாத்தியாரே ... பிள்ளை பேசுறேன்.

சொல்லு மாப்பு.. எங்கயா? ஆளையே காணோம்..

கழுதை கெட்டா குட்டி சுவர், இங்கதான் பொண்டாட்டி பிள்ளைங்கள சந்தோசமா வச்சிக்க பாடு பட்டுன்னு இருக்கிறேன்.

என்ன பிள்ளை? என்னமோ உலகத்திலேயே நீ தான் பொண்டாட்டி   புள்ளைங்கள சந்தோசமா வச்ச்சிக்க பாடு பற்ற மாதிரி பேசுற? ஆம்பிளையா பொறந்த எல்லா அப்பாவிகளும் இதை தானே செய்கிறோம்.

சனி, 20 டிசம்பர், 2014

மின்சாரம் அது சம்சாரம்

விசு ... வீட்டு சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சி.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோடு வாயேன், இங்கே இருக்க இந்தியன் ஹோட்டல் எங்கேயாவது போய்  சாப்பிட்டு வரலாம்.

தண்ட பாணி! உனக்கு பேரு வைச்சவங்க வாய்க்கு சக்கரை தாண்ட போடணும். பாவி மவனே, மெதுவா பேசு. எங்க வீட்டு அம்மாவிற்கு நீ இப்ப சொன்னது கேட்டுச்சி ... எனக்கு பால் தான் !

என்ன விசு , ஆள்மட்டும் ஆறு அடி ரெண்டு அங்குலம், ஆத்துகாரிட்ட மட்டும் இவ்வளவு பயம் !

வெள்ளி, 19 டிசம்பர், 2014

நம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்.

கல்லூரி நாட்களில் விரும்பி பார்த்த மற்றொரு படம் பாரதிராஜா - கமல் - இளையராஜா கூட்டணியில் வந்த "ஒரு கைதியின் டைரி". இந்த படத்தின் கதை - திரைகதை பாக்யராஜ் என்று போட்டு இருந்தாலும், இந்த படத்தின் திரை கதைமட்டுமே பாக்யராஜ் ஆவார். இப்படத்தின் கதை  Alexandre Dumas     அவர்கள் எழுதிய  The Count of Monte Christo (  இது முதலில் நாவலாக வந்து பிறகு அதே பெயரில் திரை படம் ஆகியது ) கதையின் தமிழாக்கம்.
சரி, நான் சொல்ல வந்த விஷயமே வேறு. அதற்க்கு போகலாமா?

புதன், 17 டிசம்பர், 2014

அச்சச்சோ புன்னகை ....

என்னா விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?

அது எல்லாம் ஒன்னும் இல்ல? நான் எப்போதும் போல தான் காலையில் ஐந்து மணிக்கு தான் எழுறேன்.

டேய், எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சி, இதில் நீ வேற..
உண்மைய சொல்லு..

மச்சி, இந்த மாதிரி பொதுவா "உண்மைய சொல்லுன்னு" யாராவது கேட்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா பதில் சொல்ல வேண்டும். அவங்க எதோ கேட்க போய் நம்ப நம்மை பற்றிய தேவையில்லாத விஷயத்தை எல்லாம் போட்டு உடைச்சிடுவோம்.

சரி, நீ விஷயத்திற்கு வா, என்ன விஷயம்? இப்ப எல்லாம் காலையில் 5 மணிக்கு எழுந்து வெளிய போற?

சம்பத்து.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..அதில் உனக்கு என்ன பிரச்சனை?



இல்ல நானும் ஒரு மாதமா பார்கின்றேன், நீ காலையில் எழுந்து உமா படிக்கின்றாளே அதே டைப்பிங் வகுப்பு நடக்கும் இடத்திற்கு போற. என்ன விஷயம்?

செவ்வாய், 16 டிசம்பர், 2014

கிறிஸ்மஸ் .. "உன் கண்ணில் நீர் வழிந்தால்..."

பள்ளி காலத்தின் இறுதி ஆண்டு ....என் அருமை தங்கை புற்றுநோயோடு நான்கு வருடங்கள் போராடி பின்னர் போராட சக்தி இல்லாமல் இறைவனடி சேர்ந்த வருடம்...

குடியரசு தினமான ஜன 26ம் தேதி பிறந்து  சுதந்திர நாளானா ஆகஸ்ட் 15ம் தேதி தன் 14ம் வயதில் உயிர் நீத்த நாள்.  அவள் பிரிந்து 4 மாதம் தானே ஆகின்றது. கிறிஸ்மஸ் எப்படி கொண்டாட முடியும்? வீட்டில் அலங்காரமும் இல்லை, தின்பண்டங்களும் இல்லை, சிரிப்பும் இல்லை மற்றும் வழக்கமாக இருக்கும் உறவினர் வருகையும் இல்லை.

சென்ற வருடம் இருந்த மகள் - தங்கை இப்போது இல்லையே என்று ஏங்கி அழுது கொண்டே வீட்டில் உள்ள அனைவரும்  டிசம்பர் 24ம் தேதி இரவு உறங்க சென்றோம்.

திங்கள், 15 டிசம்பர், 2014

இடஞ்சூட்டி பொருள் விளக்கு ..

நண்பர்கள் சிலர் சேர்ந்து மகிழ்வாக இருக்கும் போது எடுத்த படம். 

1.இந்த படம் எடுத்த நாள் - நிகழ்ச்சி எதுவாய் இருக்கும்? 

2. இவர்களின் நட்ப்பு எத்தனை நாட்கள் நட்ப்பு? 

3.இவர்களின் இந்த சிரிப்போடு கலந்த பேச்சின் "மையம்" எதுவாக இருக்கும்?

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எனக்கு ஒரு மகன் பிறப்பான்...

என்ன விசு... எப்பவும் ரொம்ப ஜாலியா இருப்ப.. சில  நாளாவே கொஞ்சம் "பீலிங்கா" இருக்க மாதிரி தெரியுதே..

அப்படியெல்லாம் இல்ல சாரதி.. அப்படியே தான் இருக்கேன்...

வாத்தியாரே... நானும் கேட்கவேண்டும் என்று யோசித்தேன்... நீ கொஞ்சம் "பீலிங்கா" தான் இருக்க.. இந்த மாதிரி நேரத்தில் நண்பர்களிடம் மனம் திறந்து பேசவேண்டும்.. சொல்லு வாத்தியாரே..

டேய்.. தண்டபாணி...நம்ம எல்லாம் தமிழன்கள். மனம் திறந்து பேசுன்னு சொல்லுவோம். பேசிய ரெண்டு நிமிஷத்தில்... கதை கந்தல் ஆகிடும்... ஆளை விடுங்க.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தாய்க்கு பின் தாரம்!

அலை பேசி அலறியது...

ஹலோ.. விசு பேசுறேன்..

வாத்தியாரே .. தண்டபாணி பேசறேன். உன்னிடம் ஓர் முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா? இல்லை அப்புறம் கூப்பிட்டா?

இப்ப கொஞ்சம் பிசி தான் தண்டம், இருந்தாலும் இப்பவே சொல்லு. அப்புறம்ன்னு சொல்லுன்னு போனாலும்...மனசெல்லாம் நீ என்ன பேச வந்தே என்ற எண்ணத்திலேயே இருக்கும் .. விஷயத்தை சொல்லு.

வியாழன், 11 டிசம்பர், 2014

லிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..

ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வீட்டிற்க்கு வரும் வழியில்...அலை பேசி அலறியது..

விசு...

சொல்லு பாணி..

என்ன பண்ற?

ஒன்னும் இல்ல பாணி...மாடு கட்டி போரடித்தா பத்தாதுன்னு யானை வாங்கலாமான்னு யோசித்து கொண்டு இருக்கேன். நீ என்னா நினைக்கிற? மாடே போதுமா ? இல்ல யானை வாங்கலாமா? இல்லை உங்க ஊர் ஸ்டைலில் ரோட்டில் போட்டு விட்டு போற வர வண்டியை வச்சி இலவசமா போரடிக்கலாமா?

புதன், 10 டிசம்பர், 2014

ரஜினிகாந்த் படம் ரிலிஸ்! முதல் நாள்.. முதல் காட்சி...

விசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு கல்லூரிக்கு வந்து விடு, கும்பலா போய் தாக்கிடலாம்.

டேய்.. சத்தமா பேசாதா, வீட்டில் அம்மா இருக்காங்க, நீ சொன்னது மட்டும் காதில் விழுந்தது.. மவனே.. உங்க அம்மா எங்க அம்மா, மற்றும் ஊரில் இருக்கிற எல்லா அம்மாக்களும் நாளைக்கு கல்லூரிக்கு வந்து அவங்க அவங்க பிள்ளைகள் ஒழுங்கா படிக்குதா இல்ல சினிமாவிற்கு போகுதான்னு பார்க்க வந்துடுவாங்க...

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 2)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

பார்த்தால்.. விமானத்தில் ஒரே கூச்சல் குழப்பம். என்ன நடந்தது..?

தேவையான வெளிச்சமும் இல்லை, முற்றுமாக இருட்டும் இல்லாமல் ரெண்டும்கெட்டான் போல் ஒரு நிலைமை. எனக்கும் அருகில் இருந்த நபர்...

ஐயையோ..."டோன்ட் ஓபன் இட்" என்று சத்தம் போட்டு கொண்டு முன் வரிசையை நோக்கி ஓட முயற்சிகையில், அங்கே வரிசையில் அமர்ந்து இருந்த பயணியின் கால் தடுக்கி விழுந்தார்.

என்ன ஆயிற்று, என்று நான் விசாரிக்கும் முன்பு தான் அந்த 6 பயணிகளில் ஒருவர் அந்த அவசர கதவை திறக்க முயன்று கொண்டு இருந்ததை பார்த்தேன்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 1)

இது ஒரு தொடர்ச்சி பதிவு, சென்ற பதிவை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இங்கே வருமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன். சென்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.


என்னடா இது.. விமானம் ஆரம்பித்து இன்னும் 20 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் குறட்டையா என்று அந்த இருக்கையில் அமர்ந்து  இருந்தவர்களை பார்த்த நான் பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)  ஆனேன்.

விமானம் ஆரம்பித்து சில நிமிடங்கள் தான் ஆகின்றது. அதற்குள் தூக்கமா?  யார் இந்த கள்ளம் கபடம் இல்லாத ஆட்கள் என்று அவசர வழி வரிசையில் அமர்ந்து இருந்தோரை நோட்டமிட்டேன் அதில் அமர்ந்து இருந்த ஆறு பேரும் தாய்குலங்கள்.  இவர்கள் ஆறு பேருமே சராசரி மனிதர்களை விட சற்று எடை அதிகம் உள்ளவர்களாக காணப்பட்டனர்.

திங்கள், 8 டிசம்பர், 2014

அவசர வழியும் .. .வழி மேல் விழியும்

அருமை அண்ணன் அல்பி   ( பரதேசி என்னும் பெயரில் எழுதும் பதிவாளர் )  அவர்கள் அழைப்பை ஏற்று சென்ற சனிக்கிழமை நியூயார்க் நகரம் செல்ல புறப்பட்டேன்.

மனதில் ஒரு சிறிய கேள்வி. இந்த பட்டிமன்றத்தில் பேச போவது 8 நிமிடம். இந்த எட்டு நிமிட பேச்சுக்காக 12 மணி நேர விமான (போக வர இரண்டையும் சேர்த்து தான்) எடுக்க வேண்டுமா? இருந்தாலும் அண்ணன் நடுவராக உள்ள பட்டிமன்றதில் பேச வந்த வாய்ப்பு என்றால் மங்கல்யானில் ஏறி செவ்வாய்க்கு கூட போகலாம் என்று நினைத்தேன்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

கண் கெட்ட பின்னே...

மற்றொரு நாள்.. மற்றொரு செய்தி.. பொதுவாக செய்தி தாளை படித்தாலே அந்த நாள் ஓர் சோகமான நாளா மாறும். இப்படி ஆகும் என்று தெரிந்தும் ... ஏதாவது ஒரு நல்ல செய்தி வராதா என்ற நப்பாசையில் "சொந்த செலவில் சூனியம்" வைத்து கொள்வதை போல் செய்தித்தாளை படித்து விடுவேன்.

இன்றைக்கான செய்தி ....

வியாழன், 4 டிசம்பர், 2014

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...

சென்ற பதிவில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது என்றும் அதை எப்படி எங்கே கற்று கொண்டேன் என்பதையும் தெளிவாக எழுதி இருந்தேன்.

அது என்ன கெட்ட பழக்கம்?

அந்த பதிவின் முடிவில் இந்த கெட்ட பழக்கத்தினால் எனக்கு வந்த கேடை பற்றி பிறகு எழுதுகின்றேன் என்று சொன்னேன். அந்த பிறகு தான் இந்த பதிவு.

புதன், 3 டிசம்பர், 2014

நண்பேண்டா ....

சிறிய வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். என்னன்னு  நிதானமா கேளுங்க.

"எங்கே ந்த காரியத்திற்கு போனாலும் நேரத்திற்கு போய் விடுவேன்'.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த உனக்கு எப்படி இந்த கெட்ட பழக்கம் என்று நீங்கள் நிறைய பேர் கேட்பது தெளிவாக கேட்கின்றது. அது ஒன்னும் இல்லை.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

அப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆனார்கள்?

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'கேக் வேணும்மா ... கேக்கவே வேண்டாம் " என்ற பதிவை படித்து விட்டு நண்பர் மதுரை தமிழன் (அவர்கள் உண்மைகள்) பின்னூட்டம் மூலமாக :

//என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப்பாக்கள் எப்போது இளிச்சவாயர்களாக இருப்பது ஏன்? இதைப் பற்றி நீங்கள் பதிவு போடலாமே//

என்று கருத்து இட்டு இருந்தார்.

திங்கள், 1 டிசம்பர், 2014

கைக்கு எட்டியது வாய்க்கு.......

லேசாக மழைத்தூறல் பார்த்தவுடனே எல்லா தமிழனுக்கும் வரும் ஆசை தான் எனக்கும் வந்தது.

அடே டே.. இந்த நேரத்தில் மட்டும் ஒரு மிளகாய் பஜ்ஜி கிடைத்தால் ...? எவ்வளவு நன்றாக இருக்கும்..

மனைவியிடம் கேட்டு வாங்க முடியாது? ஒரு பஜ்ஜிக்காக நமக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பஜ்ஜியால் உடம்பிற்கு வரும் கேடை பற்றி விளக்கி நம்மை வாழ்க்கை முழுவதும் பஜ்ஜி சாப்பிட முடியாதவாறு செய்து விடுவார்கள்.

அழகிருக்குது உலகிலே..

கடந்த "கேக் வேணுமா, கேக்கவே வேண்டாம்" என்ற பதிவில்  விடுமுறையும் அதுவுமா கேக் வாங்க போனதை பற்றி எழுதி இருந்தேன். அந்த  ATM ல் (என்னாது கேக் வாங்க  ATM  மா என்று நினைப்பவர்கள் அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்) என் இளைய மகள் எங்களுக்கு வேண்டிய கேக் பற்றிய விவரத்தை டைப் செய்து கொண்டு இருக்கையில் அருகில் இருந்த "பெண்கள் அழகு நிலையம்" என் கண்ணை கவர்ந்தது.